Shared posts

08 Feb 00:48

நான் கர்வம் பிடித்தவனா? – இசைஞானி

by BaalHanuman

சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான இசைஞானி இளையராஜாவின் நேர்காணல், மிகச் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பத்மபூஷன் விருது பெற்ற ராஜாவுக்கு மரியாதை செய்ய திருமாவளவன் போயிருந்தார். அந்த சந்திப்பில் இளையராஜா கூறியுள்ள ஒவ்வொரு பதிலும் அந்த மனிதரின் உண்மையான உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தன.

அந்த நேர்காணலில், ராஜாவின் பதில்களை மட்டும் தனியாக இங்கே தருகிறோம்…

பத்மபூஷன் விருது காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ராஜா சொல்லியிருக்கும் பதில்:

“சாதிக்காகவா விருது கொடுப்பான்? சாதிச்சதுக்காகத்தானே தருவார்கள். காலத்தால் கிடைத்த விருது, காலம் கடந்த விருது என்றெல்லாம் எதுவும் இல்லை. தருணம் ஏற்பட்டால், பரிசுகள் கிடைக்கும். உள்ளே இருக்கும் குஞ்சுக்குச் சிறகு முளைத்தால், முட்டையில் விரிசல் விழும். அதுதான் கோழியின் தருணம். அது மாதிரி இப்போது எனக்குப் பரிசு கிடைக்கும் தருணம்’.

தனது அரசியல் அனுபவத்தை இப்படிச் சொல்கிறார் இளையராஜா:

‘சின்ன வயசிலயே எனக்குக் கட்சி, அரசியல், உலகம், பிரச்னைகள் எல்லாமே தெரிய ஆரம்பிச்சது. ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு இருந்தது. ஆனா, இசை ஆர்வம் அதைவிட அதிகமா இருந் தது. ஏதோ ஒரு பொருளை வித்து 400 ரூபாய் பணத்தை என்னோட அம்மா கொடுத்தாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் சென்னைக்கு வந்தேன். இன்றைக்கு இருக்கிற இசை அனுபவம் அன்றைக்கு இருந்தா, நிச்சயமா சென்னைக்கு வந்திருக்கவே மாட்டேன்!

இசையில் ஒரு சிகரம் என்று தன்னைப் புகழ்வதைப் பற்றி ராஜா கூறியுள்ள பதில் அவரது ஆழ்ந்த புலமை மற்றும் சொல்லாட்சியின் உச்சம்…

‘நிலம் தாழ்ந்ததாக இருப்பதால் நீர் அதன் மீது ஓடுகிறது. எனவே, என் மீதுதான் நீர் ஓடுகிறது என்று நிலம் பெருமைப்பட முடியுமா? அதுபோல இசை, என்னைத் தேர்ந்தெடுத்து என் மீது ஒடுகிறது. அவ்வளவுதான். அதற்காக இசை அறிவு என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. இசை என்னும் புள்ளியை நோக்கி நான் நாட்டம் செலுத்தினேன். அது என்னைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் உங்களது நாட்டத்தை அரசியலில் செலுத்தினீர்கள். அரசியல் அறிவு உங்களைத் தேர்ந்தெடுத்தது.’

‘நான் என்னுடைய கடமையை, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன். அதனால், யார் என்னைப் புகழ்ந்தாலும் அதை நான் பெரிதாக நினைப்பது இல்லை. அதைப் பார்த்துத்தான் சிலர் என்னைக் கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்’

‘நான் புத்தகம் எதுவும் படிக்கிறது இல்லை. அதுக்கு நேரமும் இல்லை. அதில் நாட்டமும் இல்லை..’ என்று முடித்துள்ளார் ராஜா.

–நன்றி என்வழி


08 Feb 00:46

அறிவால் செய்யப்படுவது அல்ல இசை! இசைஞானி நேர்காணல்

by BaalHanuman

Andhimazhai Image

தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் துக்கத்தை, தனிமையை, மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை இவருடன் தான் கழிக்கிறார்கள். நம் காலத்தின் ராகதேவன் இவர். இசை ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத ‘ராஜா அனுபவம்’ என்று ஏதாவது அந்தரங்கமாக இருக்கும். காலத்தால் அழியாத ஏராளமான  பாடல்களைத் தந்திருக்கும் அவருடன் அந்திமழைக்காகப் பேசியதிலிருந்து…

பஞ்சு அருணாசலம்

பஞ்சு அருணாசலம் அவர்களுடனான உங்கள் அறிமுகம் பற்றிச் சொல்லுங்கள்…

இதற்காக நான் ஒரு கதையே சொல்ல வேண்டும். நாங்கள் சினிமாவில் இசையமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில்  அண்ணன் பாஸ்கர் எனக்காக நிறைய நடந்திருக்கிறார். யாராவது புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கியிருந்தால் அங்கு போய் வாய்ப்புக் கேட்டு நிற்பார் பாஸ்கர். அது போலியான கம்பெனியாகக் கூட இருக்கலாம். சார் என் தம்பி நல்லா மியூசிக் பண்ணுவான். அவனுக்கு ஒரு

சான்ஸ் கொடுங்க என்று போய்க் கேட்பார். நான் எந்த கம்பெனிக்கும் போய் வாய்ப்புக் கேட்டதில்லை.அப்போது நாங்கள் இசைக்குழு வைத்து மெல்லிசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய புதுமுக இயக்குநர்கள் வந்துகொண்டிருந்தார்கள். வி.சி.குகநாதன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன் போன்றவர்கள் வந்தநேரம் அது.

இவர்களையெல்லாம் ஒரு கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து நான் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடிக்காட்டி வாய்ப்புக் கேட்டோம். வந்தவர்கள் எல்லோரும் சரி பார்க்கலாம், பாட்டு நல்லாருக்கு, என்று சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, அந்த இயக்குநர்கள் யாருக்கும் இந்த இளையராஜாவைத் தெரியவில்லை.

அதுவும் நான் இந்தந்த பாட்டு பண்ணியிருக்கேன். லட்டு பண்ணியிருக்கேன், பூந்தி பண்ணியிருக்கேன், காரம் பண்ணியிருக்கேன்னு காட்டின பின்னாடி கூட இது நன்றாக இருக்கிறதென்று தெரியவில்லை.

ஆனால் என் நண்பன் ஆர்.செல்வராஜ், பஞ்சு அருணாசலத்திடம் ‘என் நண்பன் ஒருத்தன் ஜி.கே. வெங்கடேஷ்கிட்ட உதவியாளரா இருக்கான். நல்லா மியூசிக் பண்ணுவான். நீங்க ஒரு வாய்ப்பு தரணும்’னு கேட்டிருக்கிறான். அவர் அப்போது சின்ன படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தார். சரி வரச்சொல்லு பார்க்கலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாம்பலத்தில் ஒரு

சிறிய அறையில் லுங்கியும் பனியனும் மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தார் பஞ்சு சார். ரொம்பவும் சின்ன அறையில் ஒரே ஒரு டேபிள் மட்டும் இருந்தது. லேசான மது வாடையும் சிகரெட் வாடையும் அறையில் மிதந்தன.

‘அண்ணே நான் உங்களைப் பாத்திருக்கேன். சபதம் படத்துக்குப் பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தபோது நீங்களும் வந்தீங்க’ என்று நான் சொல்லவும் ‘ஆமாம் நானும் உன்னைப் பாத்திருக்கேன். ஆமா, நீ தனியா மியூசிக் பண்றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘எங்கே பாடிக் காட்டு’ என்றார். அங்கிருந்த டேபிளில் நான் கம்போஸ் பண்ணியிருந்த பாடல்களை அவருக்கு தாளம் போட்டு வாசித்துக்காட்டினேன். அவர், ‘நான் காமெடி படங்களுக்குத்தான் எழுதிகிட்டிருக்கேன். நீ வாசிச்ச பாடல்களுக்கென்று படம் எடுத்தால்தான் பாட்டெல்லாம் நல்லாயிருக்கும்’ என்றார். செல்வராஜ் மருத்துவச்சி என்ற கதையை எழுதினான். அந்த கதையே அன்னக்கிளி என்ற பெயர்வைத்துத் தயாரித்தார்.

பின்னணிப்பாடகர்களைப் பாடவைத்து ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக்காட்டியும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத இயக்குநர்கள் மத்தியில் வெறும் டேபிளில் தாளம்போட்டுக் காட்டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம். பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் எப்படி நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்?என்று கேட்டார்கள். ‘நான் என்ன அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன் எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார். இதை நான் மறக்கமுடியுமா?

Fazilஇயக்குநர் பாசில்

உங்கள் இசைக்காக நீண்டநாள் காத்திருந்த இயக்குநர் யார்?

பாசில். பூவே பூச்சூடவா படத்திற்குத்தான் என்னிடம் வந்தார். அதற்கு  முன் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மலையாளத்தில் ஒரு படத்தை எடுத்து அது சில்வர் ஜூப்ளியாக ஓடியிருந்தது. அந்தப் படத்தை தமிழில் எடுக்க வந்திருந்தார். மலையாளப் படத்தைப் போட்டுக் காண்பித்து,‘இந்தப் படத்துக்குத்தான் நீங்கள் இசை அமைக்கவேண்டும்’ என்றார். ‘ஏற்கெனவே நிறையப் படங்களுக்கு ஒப்புக் கொண்டிருப்பதால் இப்போது என்னால் இசையமைக்க முடியாது. வேறு யாரையாவது வெச்சி மியூசிக் பண்ணிக்குங்க” என்றேன். ‘நீங்க எவ்வளவு நாள் சொன்னாலும் நாங்க காத்திருக்கோம்’ என்று சொன்னார். இப்படி யாராவது

சொன்னால் எனக்குக் கோபம் வந்திடும்.  நீங்க இல்லாமல் இந்தப் படத்தை நான் பண்ணவே மாட்டேன்னும் யாராவது சொன்னால் சத்தியமா அந்தப் படத்துக்கு நான் மியூசிக் பண்ணவே மாட்டேன். அப்படி நிறையபேரைத் திருப்பி அனுப்பியிருக்கேன். ஆனால் பாசில் விஷயத்தில் நிஜமாகவே எனக்கு நேரம் இல்லை. அவர் எனக்காக ஒரு வருஷம் காத்திருந்தார். அப்படி இசை அமைத்த படம்தான் பூவே பூச்சூடவா. இதுதான் பாசிலோட என் அனுபவம்.

 File:Ilaiyaraja - Thiruvasakam.jpg

திருவாசகத்துக்கு இசை அமைத்ததுபோல நாயன்மார்களின் பாடல்களுக்கு இசை அமைக்கும் விருப்பம் உண்டா?

இசையிலேயே தமிழ் வளர்த்தவர்கள் நாயன்மார்கள். அவர்கள் பாடல்களெல்லாம் இசை வடிவத்திலேயே இருக்கின்றன. இதற்கு நான் தனியாக இசைஅமைக்க வேண்டியதில்லை. ‘உண்ணாமலை உமையாளுடன் உடனாகிய ஒருவன்’ என்று பத்துவயதுப் பாலகன் பாடியிருக்கிறான். அதுவே இசைத்தமிழ். நான் இசைஅமைக்கத் தேவை இல்லை.

கண்ணதாசன், வாலி இவர்களுடன் பழகிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

என்னுடைய முதல்படமான அன்னக்கிளியிலேயே கவிஞரை எழுத வைக்க வேண்டுமென நினைத்தேன். அது நடக்கவில்லை. பிறகு பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்தான் எழுதினார். ட்யூனை வாசித்த அடுத்த நொடியிலேயே படத்தின் கதைக்கும் சமூகத்துக்கும் பொருத்தமான கருத்தை உள்ளடக்கிய வரிகளை மளமளவெனச் சொல்லக்க்கூடிய ஆற்றல் கண்ணதாசன் ஒருவருக்குத்தான் உண்டு. அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க கவிஞர் ஒருமுறை பாரதிதாசனை சந்திக்கப் போயிருக்கிறார். துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ரொம்பவும் பணிவாக பாரதிதாசன் முன் நின்றிருக்கிறார். தமிழ் ஆளுமை உள்ள பெரியவர்களுக்கு எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்கு கவிஞரின் இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

அதேபோல் வாலி சார் தனித்திறமை படைத்தவர். ஒருமுறை உடுமலை நாராயண கவியை சந்திக்கப் போனபோது கவிராயர் வாலியைப் பார்த்து ‘என்ன வாலி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு எழுதியிருக்கியே.. ஆணையிட்டால் நடக்கணும். இல்லன்னா ஆணையிடக்கூடாது. என்ன பாட்டுய்யா எழுதியிருக்க’ என்று ஜாலியாகக் கேட்டிருக்கிறார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப்புறப்படுகையில், ‘அப்புறம் வீட்டில் எல்லாம் நலமாக இருக்காங்களா என்று கவிராயரிடம் விசாரித்திருக்கிறார். ‘எங்கே…  பசங்க என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறாங்க’ என்று சொல்லவும், வாலி உடனே..  ‘அப்ப ஏன் நீங்க ஆணையிடுறீங்க, ஆணையிட்டால் நடக்கவேண்டாமா?’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி தனியான ஆளுமை கொண்டவர் வாலி. கண்ணதாசன், வாலி இருவருமே யாரும் வாய்ப்புக் கொடுத்ததால சினிமாவில் வளர்ந்தவர்கள் அல்ல. படாத கஷ்டங்களைப் பட்டு முன்னேறியவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்.. அந்த அனுபவம்..

ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் சமயத்தில் கோபுரத்தின் ஒரு பகுதியைக் கட்டித்தர ஒப்புக்கொண்ட மந்த்ராலயம் அந்த பணியிலிருந்து விலகிக் கொண்டுவிட்டது. அதனால் அப்போது ஜீயராக இருந்தவர் தேசிகர் என்பவர் மூலம் பெரியவாளுக்கு திருமுகம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பெரியவாள் அதைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்து தரையில் கிராமபோன் தட்டை வரைந்து காட்டியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொரு சினிமாக்காரங்க பெயராகச் சொல்லி யிருக்கிறார்கள். யாரோ ஒருத்தர் என் பெயரைச் சொல்ல, அதுதான் என்பதுபோல பெரியவர் கையை ஆட்டியிருக்கிறார்.

இந்தத் தகவலை நண்பர் ஒருவர் மூலம் நான் கேள்விப்பட்டேன். அந்த நண்பர் பிரசாத் ஸ்டூடியோ வந்து ‘இதுபோல ஸ்ரீரங்கம் கோயில் கட்ட பெரியவர் அனுக்கிரகம் பண்ணியிருக்கா… 22 லட்சம் ஆகும். நீங்க ஆறாவது நிலை மட்டும் கட்டினால் போதும் அதுக்கு 8 லட்சம்தான் செலவாகும்’ என்று சொன்னார். நான் 22 லட்சத்தையே தருகிறேன். பெரியவாளே சொல்லிவிட்டதால இது அவர் பாரமே தவிர என் பாரம் அல்ல என்று சொல்லி அனுப்பினேன். இதன் பிறகு பெரியவாளை சந்திக்க ஆர்வம் வந்தது. நானும் ஓவியர் சில்பியும் புறப்பட்டோம். அப்போது சதாரா என்ற இடத்தில் அவர் முகாமிட்டிருந்தார். அங்கே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மஹாகாவ் என்ற கிராமத்தில் இருந்தார். அங்கு ஒரு தோட்டத்தில் மாட்டுக்கொட்டகையில் ஜமுக்காளம் விரிச்சு உட்கார்ந்திருந்தார் பெரியவாள். அது மதிய நேரம். அங்கிருந்தவர்கள் என்னை அவரிடம் அழைத்துப்போனார்கள். என்னைப் பார்த்ததும் யாரு என்பது போல் சைகை செய்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். அவரளவுக்கு ஒளிபொருந்திய கண்களை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது வரைக்கும் பார்க்கவில்லை. நான் கைகூப்பினேன். கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்தது. அவர் கையில் இருந்த மாம்பழத்தைப் பிரசாதமாக எனக்குக் கொடுத்தார்.

அன்று இரவு பெரியவாள் வேறு ஒரு கிராமத்துக்குப் போவதாக இருந்தது. எனக்காகவோ என்னவோ அவர் போகவில்லை. அன்றைக்கு பௌர்ணமி இரவு. அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்திருந்தார். வானத்தில் மேகங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. பெரியவாளின் சீடர்கள், ‘இளையராஜா பாடவிரும்புகிறார்’ என்று என் அனுமதி இல்லாமலேயே கூறிவிட்டனர். அவரும் சரி என்று தலையாட்டினார்.  சாம கான வினோதினி என்கிற செம்பை வைத்திய நாத பாகவதரின் பாடலைப் பாடினேன். ‘சாம கான.. என்று தொடங்கும்போது என்னைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையால் உணர்ச்சி வயப்பட்டு அழுதபடியே பாடி முடித்தேன். பிறகு வானத்தில் இருந்த இருபத்தியேழு நட்சத்திரங்களை அடையாள காட்டி விளக்கினார். அந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள்.

 

இது மியூசிக் சீசன். இந்த நேரத்தில் இசை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

இசை அறிவால் செய்யப்படுவது அல்ல.. இசை உணர்வுபூர்வமானது. ஒருமுறை என் வீட்டுக்கு நவராத்திரி அன்றைக்கு லால்குடி ஜெயராமன் வந்திருந்தார். அப்போது நான் ராகவர்த்தினியில் ஒரு கீர்த்தனையை அவருக்குவாசித்துக் காண்பித்தேன். ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருந்ததைக் கவனித்து ரொம்பவும் ரசித்தார். அதன்பிறகு ராகவர்த்தனியில் அவரே ஒரு கீர்த்தனையைப் போட்டிருக்கிறார். இந்த பியூரிட்டிதான் இசை. ரெண்டுமே ப்யூரிட்டியில் இருந்து வந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம். இப்படி உணர்வு பூர்வமாக உள்ளிருந்து வருவதுதான் இசை. கால்குலேட் பண்ணி இந்த ராகத்தில் இப்படிப் போடலாம்; அப்படிப்போடலாம் என்று போட்டால் நம்முடைய மனத்தின் பிரதிபலிப்புதான் தெரியும். இசை தெரியாது.

(நேர்காணல்: தேனி கண்ணன். அந்திமழை ஜனவரி 2014 இதழில் வெளியானது)


06 Feb 23:53

பெத்ரு பாராமொ - வொன் ரூல்ஃபோ

by Natarajan Venkatasubramanian




வொன் ரூல்ஃபோவின் உலகப் புகழ்பெற்ற 'பெத்ரு பாராமொ' நினைவுகளின் புத்தகம். அதன் துவக்கத்தில், மரணப்படுக்கையில் இருக்கும் தொலோரெஸ் என்ற பெண், தன் மகன் வொன்னிடம் கொமாலா என்ற ஊருக்குச் சென்று அவன் தன் தந்தை பெத்ரு பாராமொவைச் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறாள். வொன் தன் பயணத்தைத் துவக்கி, வெறிச்சோடிக் கிடக்கும் கொமாலா சென்று சேர்கிறான். வாழ்பவர்கள், இறந்தவர்கள் என்று இருவகைப்பட்ட பலரின் நினைவுகளைக் கொண்டும் தன் தந்தையை அறிந்து கொள்கிறான்.

இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.


கொமாலாவின் ஒவ்வொரு நிகழ்வாகச் சொல்லி நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பெத்ரு பாராமொவையும் கொமாலா நகரையும் தன் விவரணைகளைக் கொண்டு சித்தரித்திருக்கிறார் ரூல்ஃபோ. இவர் இதைக் கதையாகச் சொல்லும் பாணியில் ஒரு மாயத்தன்மை இருக்கிறது: ஊமைகள் பேசுகின்றனர், இறந்தவர்கள் வாழ்பவர்களோடு உரையாடுகின்றனர், ஆவிகள் தம் காதலிகளைச் சந்திக்கின்றன, இடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள் தம் கல்லறைகளில் பேசிக் கொள்கிறார்கள். காண்பதெல்லாம் உண்மையில்லை என்பது போலவும் எதுவும் சாத்தியம் என்பது போலவும் இருக்கிறது இந்தக் கதை. மாயத்தன்மை கொண்ட, நினைவுகளால் உள்ளத்தை நிறைக்கும் கலவையான சூழலை உருவாக்கி, அதன் பின்னணியில் பெத்ரு பாராமொவின் கதையைச் சொல்லியிருக்கிறார் ரூல்ஃபோ.

பெத்ரு பாராமொ போன்ற சர்வாதிகாரிகளை நாம் அறிந்திருக்கிறோம்: இதயமற்றவன், தான் நினைப்பதைச் சாதித்துக் கொள்ள மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்பவன், வசீகரமானவன். அவன் தன் வசீகரத்தைக் கொண்டு பெண்களை ஈர்க்கிறான். தன் கவர்ச்சிக்கு வசப்படாத பெண்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கிறான். இரக்கமில்லாமல் தன் எதிரிகளைக் கொல்கிறான், கொமாலாவின் அனைத்து அதிகாரங்களும் கொண்டவனாக தன்னை நிலைநிறுவிக் கொள்கிறான். பெத்ரு பாராமொவின் குணச்சித்திரம் தீமையின் வடிவம். அதன் கவர்ச்சிகளையும் ஒவ்வாமைகளையும் பிரதிபலிக்கிறான் அவன்.

அதிகாரத்தில் உள்ளவர்கள்பால் நம்மில் சிலருக்கு உள்ள ஈர்ப்பை, வேறு சிலருக்கு உள்ள விலகலை, மற்றும் பலருக்கும் உள்ள கையறு நிலையை ரூல்ஃபோ விவரிக்கிறார். தனி மனிதன் ஒருவன் எப்படி ஒரு பெரும்கூட்டத்தைத் தன் விருப்பப்படி ஆளும் நிலையை அடைகிறான் என்பது இன்றும் ஒரு கேள்வியாகதான் இருக்கிறது. இந்தப் புதிருக்கு விடை காண பல எழுத்தாளர்களும் தங்களால் இயன்ற அளவு முயன்றுள்ளனர்.

இந்தப் புத்தகத்தின் ஒரு முக்கியமான பகுதி, சர்ச் தீமைக்கு எதிராகப் போராடுவதை விவரிக்கிறது. தீமையைத் தோற்கடித்து சாதாரண மனிதர்களைக் காக்கும் அற அதிகாரம் சமயங்களுக்கு உரியது என்று எப்போதும் உணரப்பட்டிருக்கிறது. இது உண்மை போல் தோற்றம் தந்தாலும் நடைமுறை உண்மை வேறு மாதிரி இருக்கிறது என்பதே வரலாறு. சமயங்கள் எப்போதும் தீமைக்கு எதிராக நிற்பதில்லை. சிலமுறை அது அதிகாரத்தோடு முரண்பட்டிருந்தாலும் பல முறை அது ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. கொமாலா விஷயத்தில், சர்ச் அதிகாரத்தை நிராகரிப்பதுமில்லை, அதனுடன் இணைந்து இயங்குவதுமில்லை. சர்ச்சின் விழுமியங்களைக் கட்டிக் காக்கும் பதவியில் இருப்பவர் ஆற்றலற்று இருப்பதால் சர்ச்சும் அங்கே ஆற்றலின்றி இருக்கிறது.

பாதர் த்ரென்தரியா கொமாலாவில் உள்ள சர்ச்சில் இருக்கிறார். அவருக்கு பெத்ரு பாராமொவை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை - பெத்ருவின் செயல்கள் அவருக்கு நெருக்கமான சொந்தங்களைப் பாதிக்கின்றன என்றபோதும் அவர் எதுவும் செய்வதில்லை. சர்ச்சின் செயல்பாடுகளுக்குத் தேவையான பணத்தை பெத்ருவிடம் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது, அதே சமயம் தன் நிலை குறித்து அவருக்கு கோபமும் இருக்கிறது. சமய நிறுவனங்கள் அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக ஏன் இயங்க இயலுவதில்லை என்பதையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான இடத்தில் சமய அமைப்புகள் ஏன் இருக்கின்றன என்பதையும் பிரதிபலிப்பதாக இது இருக்கிறது. இங்கே த்ரென்தரியா தன் மனப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடம் ஆறுதல் தேடிச் செல்கிறார். த்ரென்தரியா தன் கடமைகளைச் சரிவர செய்வதில்லை என்று காரணம் சொல்லி அவருக்கு பாவமன்னிப்பு அளிக்க அந்தப் பாதிரியார் மறுத்து விடுகிறார்.

கொமாலாவில் நடப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், சர்ச்சின் அற அதிகாரத்தை அங்கு நிறுவவும் இயலாத தன் நிலையைச் சகித்துக் கொள்ள முடியாமல் பாதர் த்ரென்தாரியா புரட்சியில் இணைகிறார். உயிரைக் கொடுப்பது, ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும் அறப்போரைவிடக் எளிதான செயலாக இருக்கிறது. சமயங்களின் அற அதிகாரம், அதைக் கட்டிக் காப்பதை ஒரு கடமையாக ஏற்றுக் கொண்டு அதன் நிறுவன அங்கத்தினர்களாக பொறுப்பு வகிப்பவர்களைச் சார்ந்துள்ளது.

இந்த நாவல் அதிகாரத்தையும் சமய உணர்வையும் பேசினாலும், நான் முன்னர் சொன்னது போல், இது நினைவுகளின் புத்தகம். பெத்ரு, மக்களைத் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவன் - அவன் தன் சொத்துகள் அனைத்தையும் இழக்கும் நிலையிலிருந்து தப்ப ஒரு பணக்காரப் பெண்ணை மயக்கி மணம் செய்து கோள்கிறான். தனக்கு வலது கையாக இருப்பவனைக் கொன்றுவிட்டு, தன்னையும் கொலை செய்ய வரும் புரட்சிக்காரர்களுக்கு பணம் கொடுத்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவனாக இருக்கிறான். ஆனால் அவனால், தான் உண்மையாகவே நேசிக்கும் அந்த ஒரு பெண்ணின் நினைவுகளை எதுவும் செய்ய முடிவதில்லை.

சூசன்னாவுடன் தான் கழித்த இளமைக் காலத்தை அவனால் மறக்க முடிவதில்லை. அவள் ஊர் திரும்பும்போது அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறான். அவளது தந்தையை ஆள் வைத்து கொன்றுவிட்டு, ஆதரவற்ற சூசன்னாவைத் தன் பார்வையில் வைத்துக் கொள்கிறான். தன் இளமைக்கால நினைவுகளை உயிர்ப்பிக்க நினைக்கிறான்: அவனை நீங்காத நினைவுகள் அவை, சூசன்னாவின் நினைவுகள் அவனில் இன்றும் ஒரு ஏக்கத்தைக் கிளர்த்துகின்றன.

பெத்ருவை சூசன்னாவின் நினைவுகள்தான் இறுதியில் தோற்கடிக்கின்றன. சூசன்னாவிற்கு பெத்ருவைப் பற்றிய எண்ணமெல்லாம் இல்லை. அவளுக்கு அவளுடைய இளம் பிராயத்தைப் பற்றியோ பெத்ருவைப் பற்றியோ இனிய நினைவுகள் யாதொன்றும் இல்லை. அவள், ஆழமாக நேசித்து பின்னர் தொலைத்துவிட்ட காதலனின் நினைவில் தொலைந்து போய் இருக்கிறாள். தான் விரும்பிய, தன்னை மகிழ்வித்த காதலனின் நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. இன்றும் அவள் அவனையும் அவனது உடலையும் கனவுகளில் சந்திக்கிறாள் - அவனோடு இருந்தபோது அவளது புலன்கள் அடைந்த கிளர்ச்சியை மறக்க முடியாதவளாய் இருக்கிறாள். இளம் பருவத்து காதல் நினைவுகள் அவளைப் பித்தாக்குகின்றன.

பெத்ரு பழைய நினைவுகளை உயிர்ப்பித்து அவளை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறான். அவள் தன் காதலை மறப்பாள் பொறுமையாகக் காத்திருக்கிறான் அவன். ஆனால் அவள் எப்போதும் அவன் நினைவாகவே இருந்து பெத்ருவை கணப்பொழுதும் நினைத்துப் பார்க்காமல் இறந்து போகிறாள். அவளது மரணம், அவள் பற்றிக்கொண்டிருந்த அவனது நினைவுகள், இவை பெத்ருவைத் தோற்கடிக்கின்றன. முடிவில் பெத்ரு, தன் உடல் மரிக்கும்முன் தான் மரணிக்கிறான் (உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஜேம்ஸ் ஜாய்ஸின் 'Dead' என்ற கதையும் நினைவைப் பற்றியதுதான். அதை ஒரு குறுநாவல் என்றுகூட சொல்லலாம். ஜாய்ஸும் ரூல்ஃபோவும் தேர்ந்த கதைசொல்லிகள் - பலரையும் நினைவுகளே கொல்கின்றன என்பதை அறிந்திருந்தார்கள்).

பெத்ரு பாராமொ தென் அமெரிக்க இலக்கிய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மாய யதார்த்தத்தின் முன்னோடிகளில் ஒருவர் ரூல்ஃபோ என்றும் சொல்கிறார்கள். ஒளிரும் எழுத்து இவருக்குரியது, பல இடங்களில் மாயங்களை நிகழ்த்துகிறது. மார்க்வெஸ் இதை மனப்பாடமாக அறிந்திருந்தாராம் - அந்த அளவுக்கு அவரை வசீகரித்த நாவல் இது. போர்ஹெஸ், தான் வாசித்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று என்று பெத்ரு பாராமொவைச் சொல்லியிருக்கிறார். இதை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். உண்மையில், பெத்ரு பாராமொ போன்ற உயர் தரத்தில் உள்ள ஒரு நூலை நீங்கள் மிக அபூர்வமாகவே அறிவீர்கள்.
Pedro Paramo | Juan Rulfo | Various Publications | 128 Pages | Amazon.in
06 Feb 23:53

தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள்

by எழுத்தாளர் பைரவன்



இருளிலும் மஞ்சளொளி வீசும்அழகு அவள்.
ஆனால் காதலிக்கவெல்லாம் இல்லை.
அப்பா கண்டுபிடித்து தந்தவன்
இரண்டாம் நாளில் தீடீரெனபுகைபிடித்தான்.
ஒரு வாரம் கழித்துமதுநெடி கொண்டுவந்தான்.
மறுநாளே மது கொண்டுவந்தான்.
வானத்தை நோக்கி உளறத்தொடங்கியவனின்
மாத்திரை அட்டைகள்   
ரகசிய இடத்திலிருந்து
டேபிளுக்கு வந்தன.
அவன் தேன்மொழியின் தலையைஇழுத்துக்கொண்டு போய்
சுவற்றில் மோத விட்டான்.
ஒரு நாளில் தன்னையேதூக்கி கிணற்றுள்எறிந்தான்.
சரியாக அவனுக்கு முப்பதுமுடியும் காலத்தில்
கடவுள்
ஸ்கூட்டிகளை சந்தையில்இறக்கி விட்டார்.
அவள் ஒரு ஸ்கூட்டிவாங்கிக்கொண்டாள்.
அது இல்லாத இடத்திலிருந்து இருக்கும் இடமெங்கும்
அவளைக் கூட்டிப்போனது.
அவள் ஈரத்தலையுடன்
கண்ணாடி முன்னே நடனமாடத்துவங்கினாள்.

06 Feb 23:52

அடைப்புகள் ...

சமீபத்திய ஆக்கம்:  அடைப்புகள் சிறுகதைகள்
2014-02-04

                     அடைப்புகள்

                            அ.முத்துலிங்கம்

                தேசம் மிக முக்கியம். அவளை எந்த தேசத்தவள் என்று கேட்கிறார்கள். அவளுக்கே அது தெரியாது. தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர், தாய் மலையாளம். பிறந்தது துபாய், படித்தது இங்கிலாந்து, இப்போது வேலை பார்ப்பது அமெரிக்காவில்.

                அம்மாவில் அவளுக்கு எப்போதும் கோபம். அவள் யார், என்ன தேசம் என்று அவளுக்கு கற்றுத்தரவில்லை. அம்மா தொலைபேசியில் அழைப்பாள். அது ஒரு நடுச்சாமமாக இருக்கும், அல்லது ஒரு ஞாயிறு காலை ஐந்து மணியாக இருக்கும். சூரியன் கிழக்கே உதிக்கிறான். ஆகையால் கிழக்கே இருக்கும் தேசத்தவர்களுக்கு முதலில் விடிந்துவிடும். இப்படி அவள் சொல்வது அம்மாவுக்குப் புரிவதில்லை. ‘மீனுக்குட்டீ’ என்று அழைத்து தொலைபேசிக்கு கொடுத்த ஒவ்வொரு சதத்தையும் மீட்கும் விதமாக அட்லாண்டிக் இரைச்சலுக்கு மேலாக பேசிக்கொண்டே போவாள்.

                அவளுடைய வீட்டுத் தோழி அமண்டா. அவளுடைய தேசம் வியட்நாம். ஒரு மர அலங்காரியாக (Topiarist) வேலை பார்க்கிறாள். மரங்களிலே யானை, கரடி, அன்னம் என்று உருவம் செதுக்குவாள். இந்தக் கலை மிகவும் சுலபமானது, தேவையற்ற திசையில் போகும் கிளையை வெட்டிவிடுவதுதான் என்பாள். தேவையற்ற கிளையை எப்படித் தீர்மானிப்பது என்று கேட்டால் அதற்குத்தான் படிக்கவேண்டும் என்ற பதில் வரும்.

                அவளுடைய கிரேக்க காதலனுடன் வெளியே போகும் சமயங்களில் மரத்தை அலங்காரம் செய்வதுபோல தன் தலையையும் அலங்கரிப்பாள். மீனுவைப் பார்த்து ‘எப்படி? எப்படி என் தலை அலங்காரம்?’ என்பாள். ‘கிரேக்க அழகி மெடூஸாவின் தலை போல இருக்கிறது’ என்பாள் மீனு. அவளும் நன்றி கூறிவிட்டு கதவைச் சாத்தாமலே ஓடுவாள். இன்றுவரை அவளுக்கு மெடூஸாவின் தலை அலங்காரம் பற்றிய உண்மை தெரியாது என்றே நினைக்கிறாள்.

                அலுவலகத்தில் மீனுவுக்கு பக்கத்து அடைப்பில் இருப்பவள் பெயர் எஸ்தர். அவளுடைய தேசம் ஜமய்க்கா. எந்த அறையினுள் நுழையுமுன்பும் அவள் கண்கள் பார்ப்பது வாசல் கதவுகளின் அளவுகளை. நுழைந்த பிறகு பார்ப்பது இருக்கைகளின் அகலங்களை. இரண்டு முழங்கைகளின் உதவியால் மார்புகளைத் தூக்கிக்கொண்டு வருவாள். சமீபத்தில் குழந்தை பெற்றவள். அந்தக் குழந்தையுடன் பிறந்த இருபதடி தொப்புள் கொடியை தன்னிடம் கொடுக்கும்படி ஆஸ்பத்திரியில் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். அவள் நாட்டிலே செய்வதுபோல சில சடங்குகளை அவளால் செய்ய முடியவில்லை. அது பெரிய வருத்தம் அவளுக்கு.

                தினமும் அவளுடைய மூன்று மாதக் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கிறாள். குழந்தையின் இரண்டுவேளை உணவுக்கும் முலைப் பாலைக் கறந்து இரண்டு போத்தல்களில் அடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள். ஆறுமணி அடித்ததும் குழந்தையின் இரவு உணவு, முன் ஆடையை நனைக்க, குழந்தைகள் காப்பக வாசலில் வந்து நிற்கிறாள். இந்தக் குழந்தை விபத்தாகப் பிறந்தது. புத்தகங்கள் கூறிய உத்திகளை எல்லாம் அனுசரித்தும் எப்படியோ நடந்துவிட்டது. இப்பொழுது  அவளுடைய கணவன்  நாள்காட்டி குறித்த நாள்களில் மட்டுமே அவளை அணுகமுடியும்.

                எஸ்தரிடம் ஒரு றொட்வைலர் நாய் இருக்கிறது. உலகத்திலேயே உத்தமமானது. உலகத்திலேயே மோசமானது. இப்படி அதைச் சொல்வாள். கறுத்து பளபளக்கும் மேனியும், மஞ்சள் முகமும், மடிந்த செவிகளும், ஒட்டிய வாலுமாக கம்பீரமாக இருக்கும். பயிற்சி கொடுத்து கூர்மைப்படுத்தப்பட்டது. சத்தமே போடாமல் எசமானியை விசுவாசிககும் அற்புதமான காவல் நாய்.

                அதைப் பார்த்ததில் இருந்து மீனுவுக்கு ஒரு மயக்கம். றொட்வைலர் தத்து கொடுக்கும் நிறுவனத்துக்கு அவளும் விண்ணப்பம் செய்தாள். ஆறுபக்க நீளம் கொண்ட விண்ணப்பப் படிவத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு வருடக் குட்டியை அவர்களிடம் கேட்டிருந்தாள். அவள் கொடுத்த விவரங்கள் அவர்களுக்கு சம்மதமாக இருந்ததாகத் தெரிவித்தார்கள்.

                ஒருநாள் நேர்முகப் பரீட்சைக்கு அந்த நிறுவனத்தினர் வீட்டிற்கு வந்தார்கள். நாயை வளர்ப்பதற்கு ஆரோக்கியமான சூழல் உண்டா என்பதை ஆராய்வதற்காக. வீட்டை ஒட்டி இருந்த குளமும், புல் தரையும் அவர்களுக்கு பிடித்துக்கொண்டது. கேள்வி மேல் கேள்வி கேட்டு உறுதி செய்தார்கள். வீட்டுத் தோழி என்ற முறையில் அமண்டாவைப் பார்த்தும் ஒரு கேள்வி.

                “ஒரு றொட்வைலர் நாய் குட்டியை காசு கொடுத்து வாங்கலாம். ஏன் தத்து எடுக்கிறீர்கள்?”

                அமண்டா அங்கும் இங்கும் பார்த்தாள். ஒன்றும் பேசவில்லை. பிறகு தரையைப் பார்த்தாள். அங்கும் அவள் எதிர்பார்த்த பதிலை ஒருவரும் எழுதி வைக்கவில்லை. மீனு இரண்டு நாள் முழுக்க அவள் தலைமுடியைப் பற்றிப் பேசவே இல்லை.

                ஆவி பறக்கும் கப்புச்சீனோ கோப்பியை ஒழுகும் கடுதாசிக் குவளையில் வைத்து உறிஞ்சியபடி எஸ்தர் அடைப்பு வாசலில் வந்து நின்றாள். அவள் இருக்கமுடியாது. உட்காருவதென்றால் இருக்கையில் நாலாபக்கமும் சரிசமமாக தன் உடலை விநியோகிக்க வேண்டும். அதற்கு அவகாசம் இல்லை. “ஹனி, உன் றொட்வைலர் விண்ணப்பத்துக்கு பதில் வந்துவிட்டதா?” என்றாள்.

 

                “இல்லையே, ஒவ்வொரு நாளும் முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறேன்.”

 

                “மீனு டியர், என்ன பதில் வந்தாலும் கலங்காதே. என்னை இரண்டு வருடம் ஃபெயிலாக்கினார்கள்.”

 

                “எஸ்தர், எனக்கும் அதுதான் கவலை. நாள் முழுக்க வேலை செய்து விட்டு வீட்டுக்குப் போனால் விசுவாசிக்க ஒரு ஜீவன் வேண்டும் அவர்கள் நிராகரித்தால் என்னால் தாங்க முடியாது.”

 

                “இந்த வருடம் தேறாவிட்டால் அடுத்த வருடம் இருக்கிறது. உன் எசமானித்தனத்தில் அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். என்ன கவலை? ‘நீங்கள் காட்டும் ஆர்வமும், செய்த ஆயத்தங்களும் திருப்திகரமானவை. உங்களுக்கு எல்லாத் தகுதிகளும், அதற்கு அதிகமாகவும்கூட இருக்கின்றன. ஆனாலும் விண்ணப்பத்தில் கொடுத்த விவரங்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நீங்கள் இன்னும் தயாராக இல்லை என்ற துக்கமான முடிவுக்கு வந்திருக்கிறோம்.’ அநேகமாக இப்படித்தான் கடிதம் வரும்” என்றாள் எஸ்தர்.

 

                முதல்நாள் இரவு புஷ் இரண்டு முறை ஜனாதிபதியாகிவிட்டார். அல்கோர் மூன்று தடவை ஜனாதிபதி ஆகியிருந்தார். அமெரிக்காவுக்கு இரண்டு நாளில் ஐந்து ஜனாதிபதிகள். அடுத்த வாரம் முடிவதற்கிடையில் 20 ஜனாதிபதிகள் தோன்றுவார்கள் என்று சிலர் ஆருடம் சொன்னார்கள். இரவு கண் விழித்து  டிவி பார்த்ததில் மீனு முதல் முறையாக பத்து நிமிடம் அலுவலகத்துக்கு லேட்டாகிவிட்டாள்.

 

                மின்தூக்கி மூடும்போது யாரோ காற்றை எதிர்த்து நடப்பதுபோல குனிந்தபடி வருவது தெரிந்தது. ‘திற’ பட்டனை அமுக்கிப்படித்து காத்திருந்தாள். உயர்ந்த மடிப்புக் கலையாத ஆடைகள். மினுக்கிய சப்பாத்துகள். புதுசாக காட்சியளிக்கும் கழுத்துப்பட்டி. நறுமணம் ஒன்று மின்தூக்கியை நிறைத்தது. இரண்டாவது தலைமை அதிகாரி, அவளுடைய தலைவிதியை ஒரு கையெழுத்து மூலம் மாற்றக்கூடியவர். ரோஸ்டரில் முன் தீர்மானித்த சூட்டை அடைந்துவிட்ட ரொட்டிபோல அவள் துள்ளி விழுந்தாள்.

 

                பெயர் ரொனால்டு மொரிஸன், அவருடைய தேசம் அமெரிக்கா. சிநேகமாகப் பார்த்து நன்றி கூறினார். பிறகு “முதல் பறவை புழுவைப் பிடிக்கும்” என்றார் சிரிப்புடன். அவள் பிந்திவிட்டாள் என்பதை சொல்கிறாராம். இவள் ஓர் அசௌகரியமான புன்னகையை வெளியே விட்டாள். அது உதட்டை கடந்ததும் மறைந்துவிட்டது. பறவை என்றால் சரி, புழுவாக இருந்தால் முதல் புழுவாக இருக்கக் கூடாது என்று சொல்ல நினைத்தாள். சொல்லவில்லை. இரண்டாவது எலிதான் பொறியில் வைத்த வெண்ணெய்க் கட்டியைச் சாப்பிடும் என்று சொல்ல நினைத்தாள். சொல்லவில்லை, லிஃப்டின் சுவரோடு ஒட்டிக் கொண்டு 41வது மாடி வரும்வரைக்கும் மேலே தோன்றும் சிவப்பு எண்களை, அவளுடைய வாழ்க்கையே அதில்தான் தங்கியிருக்கிறது என்பதுபோல உன்னிப்பாகக் கவனித்தபடியே நின்றாள்.

 

                வாசல் கதவில் சங்கேத அட்டையை உருவியதும் அது திறந்தது. பிறகு அவளுடைய அடைப்புக்குள் புகுந்து கைப்பையை வைத்தாள். அவளுடைய உயரத்திலும் பார்க்க ஃபைல் கட்டுகள் உயரமாக வளர்ந்து விட்டன. பதினாறு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் அவை குறைவதில்லை. நின்றபடியே அன்றைய தகவல்களை கம்புயூட்டரில் படித்தாள். அவை அவளுக்கு உற்சாகத்தைத் தரவில்லை.

 

                மீனுவுக்கு உற்சாகம் தரும் ஒரே இடம் கழிவறைதான். காரணம் அங்கே கட்டை பாவாடை உடுத்திய பெண்ணின் உருவம் வரைந்த ஒரு கதவு இருந்தது. அதற்குள் நுழைந்தவுடன் அது அவளுக்குச் சொந்தமாகிவிடும். ஜன்னல் விளிம்பிலிருந்து ஆகாயம்வரைக்கும் ஒரே வெளிதான். அடைப்புகள் இல்லை.

 

                அவளுக்கு ஒரு கனவு உண்டு. அவள் பெயர் பொறித்த, கதவு மூடக்கூடிய ஒரு அறை வேண்டும். அப்பொழுதுதான் சந்திப்பு முடிந்து வெளியே போகும் ஆட்களிடம் ‘தயவுசெய்து கதவைச் சாத்தமுடியுமா?’ என்று கேட்கலாம். தொலைபேசியில் பேசும்போது கதவை அடைக்கலாம். அந்நியர்கள் உள்ளே நுழையும்போது கதவில் டக்டக் என்று தட்டிவிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கலாம். காரியதரிசியை எட்டிப் பார்த்து ‘Hold my calls’ என்று உத்தரவிடலாம். கோபமான சமயங்களில் கதவை அடித்துச் சாத்தலாம். இது எல்லாம் சாத்தியமாகும், இரண்டு முறை தவறிய  மனேஜர் பதவி அவளுக்கு கிடைக்கும்போது.

 

                அவள் எழுந்து நின்றால் மேலும் இரண்டாயிரம் அடைப்புகள் தெரிகின்றன. அப்பொழுது இன்னும் சில கோழிகளும் எழுந்து நின்று பஞ்சி முறிக்கின்றன. சும்மா போகிறவர்களும், வருகிறவர்களும் விசாரிக்கிறார்கள். வெள்ளரிக்காய் வைத்த சாண்ட்விச்சை அவள் கடிக்கும்போது என்ன என்ன என்று கேட்கிறார்கள்.

 

                எப்பொழுது கழிவறைக்குப் போனாலும் அவளுடைய தாயாரின் ஞாபகம் வந்துவிடும். ஆரோக்கியம் குறித்த இரண்டு அறிவுரைகள். மூக்கை சீறி வெளியே எறியக்கூடாது. கைக்குட்டையிலே சேமித்து வைக்கவேண்டும்.   கழிவறை சுருள்தாளை உபயோகிப்பதில் ஒரு முறை இருக்கிறது. அதற்கு அவள் தாயார் கட்டிய ஒரு ரைம்கூட உண்டு.

 

                                ‘மேலிருந்து கீழே

 

                                மீனுக்குட்டி மோளே’

 

                இப்பொழுதுகூட சுருள்தாளை பாவிக்கும்போது அவள் வாய் அவளை அறியாமல் அந்தப் பாடலை முணுமுணுக்கிறது.

 

                மார்த்தா இளம் பெண். அவளுடைய தேசம் ஸ்வீடன். பயிற்சியிலிருக்கிறாள். அவள் சருமம் வெங்காயச் சருகுபோல மெல்லியது. உற்றுப் பார்த்தால் அவள் உடம்பில் ரத்தம் ஓடுவது தெரியும். விரல்கள் முடிந்த பிறகு இன்னும் சிறிது தூரம் வளர்த்து வடிவாக்கப்பட்டு சிவப்பு பூசிய நகங்கள். கையிலே ஒரு வளையம் மாட்டி அதிலே சாவிகளைக் கோத்து வைத்திருந்தாள். கடற்கரை  நண்டுபோல நகர்ந்தபடியே கோப்புகளைச் சேகரித்துவிடுவாள். எப்போதோ ஒருத்தன் அனுப்பிய வலண்டைன் கார்டைப்  பத்திரப்படுத்தி அடைப்புச் சுவரில் ஒட்டி வைத்திருக்கிறாள்.

 

                                ‘உன் அங்கங்களை

 

                                வெளியேயும், உள்ளேயும்

 

                                அனுபவிக்க

 

                                காத்திருக்கிறேன்.’

 

                ஆண்டு நிதி அறிக்கை இரண்டாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவற்றை இரண்டாயிரம் பங்குதாரர்களுக்கு அனுப்பியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் அந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. மார்த்தா ‘ஜுன் 30’ என்பதற்கு பதிலாக ‘ஜுலை 31’ என்று பதிந்திருந்தாள். மேலாளர் 2000 பிழைகள் என்று சொன்னார். மீனுவின் மேற்பார்வை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றார். அவள் திகைத்துப் போனாள். அவருடைய அறையின் மூலையிலே, அளவான தண்ணீர் கிரமமாக ஊற்றி தொட்டியிலே பராமரித்த அக்லனீமா செடி வளர்வதைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

 

                மேலாளர் பெயர் புரூஸ். அவருடைய தேசம் கனடா, அவரிடம் அறை இருந்தது. அதற்குக் கதவு இருந்தது. ஜன்னல் இருந்தது. அவருடைய இரண்டு மகள்களும் கீறிய படங்கள் சுவரை அலங்கரித்தன. மாலையில் துப்புரவுப் பணியாளர்கள் வரும்வரை வேலை செய்வார். ஏதாவது உதவி தேவை என்றால் அவருடைய இரண்டாவது மகளைப் புகழ்ந்து ஏதாவது சொல்லவேண்டும். ஒரு விபத்தில் அவருக்கு மணக்கும் சக்தி போய்விட்டது. கண் இல்லாதவர், காது கேளாதவர், வாய் பேசாதவர், கை கால் ஊனமடைந்தவர் என்று எல்லோரையும் மீனு பார்த்திருக்கிறாள். ஆனால் இதுவே முதல் முறை மணக்க முடியாதவரை சந்திப்பது. "பழைய ஞாபகங்கள் முதலில் நினைவுக்கு வருவது மூக்கினால் நுகரும்போதுதான். மணக்கும் சக்தி போனபோது என் இளமையும் தொலைந்துவிட்டது” என்பார்.

 

                ஆனால் மீனுவுக்கு தன் இளவயது ஞாபகங்களை எவ்வளவு முயன்றும் மறக்க முடியவில்லை.

 

                அவளுக்கு வயது 13. ஐஸ்கிரீம் சாப்பிட அவன் கூட்டிப் போகிறான். அவனுடைய தேசம் இங்கிலாந்து. பிளாஸ்டிக் கத்தி கீறி அவளுக்கு காயம்பட்டுவிட்டது. அவளுடைய சருமம் திராட்சைப் பழத்தோல்போல மெல்லியது என்று அவன் வர்ணிக்கிறான். உருண்டையாக கடும் சிவப்பு ரத்தம் ஒரு துளி வந்தது. அவன் நாக்கை நீட்டி அதை உறிஞ்சினான். அந்தக் கணம் அவன் முகம் ரத்தம் குடிக்கும் நரிபோல மாறி அருவருப்பாகியது. அதற்குப் பிறகு அவள் அவனைப் பார்க்கவில்லை.

 

                அவளுக்கு வயது 16. இன்னுமொருத்தன் வீட்டிற்கு வருகிறான். அவனுடைய தேசம் தேவலோகம். அழகாகத் தலை வாரியிருந்தான். ஒழுங்கான உடை. பாலிலே போட்ட திராட்சைபோல அசையும் தொண்டை உருண்டை. இரண்டு முழங்கால்களும் ஒட்ட, ஒரு கையை மறுகை மேல் வைத்து, நாற்காலி நுனியில் இருக்கிறான். சுத்தமான விரல்கள்.

 

                முழுக்கையையும் பாவித்து சேலைத்தலைப்பை தூக்கியபடி அவள் அம்மா வருகிறாள். புட்டு அவிந்துவிட்டதா என்று ஈர்க்கினால் குத்திப் பார்ப்பதுபோல ஒரு பரீட்சை செய்வதுதான் அவள் நோக்கம். அவன் மரியாதையாக எழுந்து நிற்கிறான். “என் மகளுக்கு பதினாறு வயது தொடங்க நாட்கள் இருக்கின்றன. அவள் தனியாக வருவதற்கு இன்னும் தயாராக இல்லை.” இப்படிச் சொல்கிறாள். அந்த தேவலோகத்துக்காரனை பிறகு அவள் காணவில்லை.

 

                “நீங்கள் கூப்பிட்டீர்களா?” என்றாள். மேலாளர் கடிதத்தை நீட்டினார், அப்படிக் கொடுத்தபோது அவள் கண்களை அவர் பார்க்கவில்லை. வாங்கும்போதே நெஞ்சு பக்கென்று அடித்தது. அவளுடைய வேலை உயர்வு பற்றிய கடிதம். இப்படிப் போனது அதன் வாசகம்.

 

                “கடந்த வருடத்தில் நீங்கள் அளித்த அளப்பரிய சேவைக்கு எங்கள் நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது. இந்தக் கம்பனி மேலாண்மை சார்பில் உங்களை மனமாரப் பாராட்டுகிறோம். உங்கள் வேலைத்திறன் பற்றிய கோப்பை ஆழமாகவும், தீர்மானமாகவும் ஆராய்ந்ததில் மனேஜர் பதவியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு நீங்கள் இன்னும் தயாராகவில்லை என்றே கருதுகிறோம். எதிர்வரும் வருடங்களில் உங்கள் சேவை இன்னும் உயரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”

 

                போர்க்களத்து சைனியம்போல அவளுடைய பற்கள் மோதிக்கொண்டன.

 

                நீ தயாராக இல்லை. நீ தயாராக இல்லை.

 

                அவளுக்கு ஒரு பக்கத்து வீட்டுக்காரன். அவனுடைய தேசம் ஈரான். அவன் முகம் காரட் நிறத்தில் இருந்தது. நீண்டுபோய் இருப்பான். அவன் வீட்டில் எந்த பல்பையும் நின்றபடியே மாற்றிவிடுவான். நாற்காலியை இழுத்து வைத்து ஏறி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

 

                இரண்டு தரம் அவனைச் சந்தித்திருக்கிறாள். ஒருமுறை தவறுதலாக அவன் வீட்டுக்கு போயிருந்த கடிதத்தை கொண்டுவந்து கொடுத்தான். அது அவளுடைய வீட்டுத்தோழி அமண்டாவுக்கு வந்தது. நன்றி என்று விட்டு தன்னுடைய பெயரைச் சொல்வதற்கு வாயைத் திறந்தாள். அதற்கிடையில் அவன் திரும்பிவிட்டான்.

 

                அடுத்த தடவை குப்பைப் பையை பொது இடத்தில் போடச் சென்றபோது அவனும் வந்திருந்தான். தலை மூடி வைத்த சாம்பல் நிற அப்பியாச உடுப்பு அணிந்திருந்தான். கன்னம் மழுமழுவென்று மழித்திருந்தது. சிவந்த முகத்தில் பச்சைப் புள்ளிகள் தெளித்ததுபோல மயிர்கள் வளர்வதற்கு உத்தேசித்திருந்த இடங்கள் தெரிந்தன. அவளுடைய பையை வாங்கி இடது கையால் சுழற்றி கொள்கலனுக்குள் எறிந்தான். என்ன கை, என்ன வலிமை, என்ன லாவகம். அப்போது அந்தக் கையினுடைய மிச்சப்பகுதிகளை அறிமுகம் செய்துகொள்வதற்கு அவளுக்கு ஆவல் பிறந்தது.

 

                ‘நன்றி’ என்றாள், இன்னொரு இருதயம் நெஞ்சில் புகுந்துவிட்டது போல அவளுக்கு அடித்துக்கொண்டது.

 

                இரண்டு நாட்களாக அவனுடைய Lionel Landscaping வாசகம் எழுதிய வாகனத்தின் பின்பக்கத்தில் சிவப்பு ரோஜா பூச்செண்டு ஒன்றிருந்தது. இன்னும் ஒரு நாள் விட்டால் அது காய்ந்து கருகிவிடும். யாருக்காக வாங்கினான்? ஏன் கொடுக்கவில்லை? அன்றிரவு நடுச்சாமம் போய் அவனுடைய கதவைத் தட்டுவாள். நீண்ட ஈரானிய உடையில் ஒரு சிவப்பு முகம் தோன்றும். ‘உன்னுடைய பூச்செண்டு வாடுகிறது. நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்று அப்போது சொல்லாம். ஆனால் செய்யும் துணிவு வரவில்லை.

 

                அவள் அலுவலகத்தை விட்டு புறப்பட்டாள். அவசரமாக வீட்டுக்கு போகவேண்டும். அவளுக்கு அழுவதற்கு நிறைய இருந்தது. எட்டு வீதி மாஸ்பைக் நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருபக்கமும் நெருக்கிக் கொண்டு பறந்தன. அப்பொழுதுதான் கவனித்தாள்.                அவளுக்கு பக்கத்துக்கு பக்கமாக சிவப்பு நிற கிறைஸ்லர் காரில் ஒருத்தன் வருகிறான். மஞ்சள் வாசகம் எழுதிய கறுப்பு ரீசேர்ட் அணிந்திருக்கிறான். அவனுடைய பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு தேசம் இருந்தது. அது டூனிஸியாவாக இருக்கலாம். அல்லது துருக்கியாக இருக்கலாம். குளிர்கால ஆரம்பத்தை அவமதித்து மேல்மூடி திறந்துவிட்ட கார். அவன் சிகை பின்புறமாகப் பறக்கிறது. அவன் ஓர் இருபது டொலர் நோட்டை எடுத்து அவளை நோக்கி ஆட்டுகிறான். பார்க்காததுபோல அவள் வேகத்தை அதிகமாக்குகிறாள். அவனும் விடவில்லை. வேகத்தைக் கூட்டுகிறான். ஸ்டியரிங் வளையத்தைப் பார்த்துச் சிரிக்கிறான். இரண்டு 20 டொலர் தாள்களை எடுத்து ஆட்டுகிறான். அவள் வேகத்தை மட்டுப்படுத்த அவனும் அப்படியே செய்கிறான். மற்ற வீதிக்கு மாறுகிறாள். அவனும் எப்படியோ மாறி பக்கத்தில் வந்துவிடுகிறான். அவன் கைகளிலே இப்போது 100 டொலர் தாள் ஆடுகிறது. காரை மிகவும் லாவகமாக ஓட்டுகிறான். அவளுடைய விலை இரண்டு நிமிடத்தில் ஐந்து மடங்கு உயர்ந்துவிட்டது.

 

                நான் தயாராக இருக்கிறேன், நான் தயாராக இருக்கிறேன் என்று கத்த வேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. அவன் எங்கே கொண்டு போவான். மின் அட்டையில் திறக்கும் கதவுகள் கொண்ட, உயர்தரமான படுக்கை விரிப்புகள் சுருக்கமில்லாமல் விரித்த, நெளிந்து மெலிதாக அசையும் நீண்ட திரைச்சீலைகள் கொண்ட, குளியல் அங்கியும், துணிச்செருப்பும் இலவசமாகத் தரும் ஐந்து நட்சத்திர ஹொட்டலுக்கா, அல்லது முகம் சுருங்கிய கிழவி ஒருத்தி மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கு விடும் குளியல் தொட்டி இல்லாத அறைக்கா?

 

                எதிரே கட்டண கேட் வந்தது. அவன் தடுப்பில் நின்றபோது இவள் ‘வேக சாலை’ வழியாக புகுந்து முதலாவது திருப்பத்தை தேர்வுசெய்து  தப்பி வெளியே வந்துவிட்டாள். வேகசாலைக்கு இவளுக்கு அனுமதியில்லை. தண்டனைக் காசை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் நெடுஞ்சாலையில் போய் கலந்துகொண்டாள். அப்பொழுதும் அவள் நெஞ்சு படபடவென்று அடித்தது. மணிக்கட்டுகள் நடுங்கின். முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்தாள். அவனைக் காணவில்லை. நிம்மதி ஏற்பட்டது.

 

                அமண்டா அன்று வீட்டில் இருக்க மாட்டாள். அவளுடைய கிரேக்கக் கடவுளுடன் வெளியே போயிருப்பாள். வீடு முழுக்க அன்று மீனுவுக்கே சொந்தம். அழுவதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

 

                இவ்வளவு பெரிய ஆகாயத்தை மேலே வைத்துக்கொண்டு இரண்டு பறவைகள் நிலத்தைத் தொட்டபடி பறந்தன. காரிலே மோதுவதுபோல வந்து பிறகு விலகின. நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க பத்து மைல் கூடிய வேகத்தில் மீனு விரைந்து கொண்டிருந்தாள்.

 

                கறுப்பு நாய் படம் போட்ட கடித உறை ஒன்று அவளுக்கு வீட்டிலே காத்திருந்தது. அவளுடைய அழுகையை திறம்படச் செய்து முடிப்பதற்கு கூடுதலான ஒரு காரணம் அதனுள் இருந்தது அவளுக்குத் தெரியாது.

 

END

 

 

 


This post has been generated by Page2RSS
06 Feb 23:52

Does Satya Nadella Owe Thanks, if Any, to India (or US)?

by noreply@blogger.com (Athenaeum)
'Let the brains drain out of India lest they go down the drain'. So said I in a debate on brain drain in 1993 at a college in Coimbatore. I proceeded to point out how scientists fleeing Nazi Germany provided a turning point in US scientific supremacy. The torch of scientific supremacy decisively passed over from Europe to US only after 1945.

Indian-Americans now head two iconic American corporations, Pepsi and Microsoft, amongst a few others. Do these expatriates owe thanks to the motherland they emigrated from? Do they owe thanks to the alma maters of their homeland? And, finally, do they have any debt of gratitude to America, the land where their dreams took flight and ambitions were realized despite being immigrants from a third world country?

In a nutshell no individual owes it to any country, India or US, for where he/she is today. If anything they may owe to it to their families after themselves. They can, if they wish to, tip a hat to a country that, unlike India, gave wings to their dreams and provided an atmosphere where they flourished and in returned enriched the country that allowed them in.

Indira Nooyi studied in Madras Christian College and, I hear, has donated to the institution. An ex-professor asserted that Nooyi owes it to MCC and based his assumption on the courteous statements that Nooyi has made of MCC. I don't confuse politeness for factual evidence. Fact is Nooyi will never  go back to India, not even in her dreams would she consider sending her children or grand children to MCC to study. The number of CEO's from the portals of MCC can be counted on one hand. The only other illustrious alumnus from MCC was Sarvepalli Radhakrishnan. Established in 1837 MCC is famous for having the trees in its luscious gardens labeled with botanical names. Beyond that the few illustrious alumni, listed in wikipedia, mostly belong to a bygone era and not many in the recent past when MCC shared an intellectual decline along with most other such institutions that date from the Colonial era. MCC is not Harvard or Yale where identifying, nourishing and producing leaders is a tradition.

Satya Nadella (from Wikipedia)
When CBS 60 minutes ran a program on IITs calling them more selective than Harvard every Indian-American, barring a few like me, irrespective of whether they went to IIT or not, patted themselves and proudly proclaimed that they are from the country of IITs. Till today IIT graduates, expatriate and those who remain in India, don't count a single Nobel laureate amongst them in any discipline. We can count on one hand, possibly two, the number of revolutionary ideas in technology that have come from IIT graduates. Incidentally graduates from Osmania University hold more patents in US than expatriate graduates of all IITs (refer article in The Hindu http://www.thehindu.com/news/cities/Hyderabad/move-over-iitians-ou-grads-make-it-bigger-in-us/article5056307.ece ). The fabled selectivity of IIT is just a function of demand vs supply and has no bearing on the quality of the graduates produced. Most IIT'ians are nothing more than diligent rote learners in 12th grade and they turn out as mediocre graduates.

Being a nation of a hoary and very rich civilization, including treatises in grammar and mathematics, that predates recorded history Indians have an unfathomable inferiority complex given the near total lack of international achievement in present day. Hence at any semblance of achievement Indians rush to envelop that in the tricolor flag forgetful of the fact that Nooyi, a woman from middle class, and Nadella born to middle class parents would not have achieved what they did in US. A more pertinent question to ask would be if a middle class Afro-American choosing to study and work in India would ever become the head of any Indian company like Microsoft? I said 'like Microsoft' only as hyperbole. There is no Indian company like Microsoft or Apple. Not yet. I chose 'Afro-American' to rub in the racial barriers.

Yes, some Indian universities and colleges are more than decent compared to some community colleges in America or universities in other third world countries. That said let's not forget that at best Indian institutions can only be pipelines for the most brilliant to reach world class higher education centers mostly in US. Nadella may very well compliment his college or school but nobody need be fooled for when it comes time to recruit managers he will head to Chicago Booth or Harvard or Yale or that unpolished gem that lies buried in the crusty corridors of some Indian university.

One thing that America, more than any other country, does well is to ferret out talent, worry about identifying talent, then nourishing it, then seeing it achieve the best that that human being can be. Indian universities have no idea of what it is to identify talent. Indian universities sit back, wait for applications to pour in, select the top most scorers and rest on their palms watching the top scorers go out and ace examinations or get ahead in life. Today, more than ever, American university admissions officers worry about racial, gender and economic diversity. Ivy league universities reach out to schools in poor neighborhoods to impress upon their students that lack of money should not inhibit them from applying. The top US universities can very well, like their Indian counterparts, sit on their hands and wait for applications. But they don't. And thats the cultural difference.

The MacArthur grants, popularly called 'genius awards', showcases America's culture of excellence like nothing else can. Many of the MacArthur fellows go on to win other prestigious prizes like the Pulitzer or accomplish something of note. See my earlier blog titled "America's Geniuses:John Dabiri and a culture of nourishing excellence". Raj Chetty, economist, L. Mahadevan, mathematician, Vijay Iyer, musician have all been awarded the Mac Arthur genius awards in the recent past.

Before anyone can say "if only Indian universities had money like Harvard and Princeton" I'd add "fat chance. even with all the money in the world IIT and IISc will not produce two Nobel laureates". It is never about money. Money is secondary or even tertiary. Its the Indian culture that has a problem.

After Macaulay the only person who worried about educating Indians was Jawaharlal Nehru. Nehru was the last Indian politician who wanted his citizens to have an education like he did. Homi Bhabha was tasked with forming world class educational institutes, autonomy was enshrined by a parliamentary bill, when foreign investment was an anathema IITs were a joint venture, when foreign exchange was doled out miserly international science journals were imported tax free and yet nothing great came out.

Nobel laureate S.Chandrasekhar was groomed in Cambridge and later achieved greatness in America as an American citizen but he would show a typical Indian hypocrisy by prescribing to others, without batting an eyelid, what he had no intention of ever doing in his life. Chandra would narrate how faction ridden the scientific and educational community in India was in the 1930's when giants like Homi Bhabha, Meghnad Saha and S.N.Bose lived. Chandra, while sympathetic of Bhabha, would narrate with disgust how Bhabha enjoyed showing power. Homi Bhabha would derive joy in making people wait, including a person like S.N. Bose. Einstein impressed by Bose's paper translated it into German and had it published. And Bosons came into being.

Quoting Nehru Chandra would say that though Indians chased away the British they retained the sense of hierarchy and entitlement attitude that colonial era officers showed. His comments to his biographer, Kameshwar C Wali, show nothing but contempt for the then Indian scientific environment. He even jeers at the notion of being expected to remain in India taking a lowly position as head of an observatory after a stint at Cambridge. Yet, the same Chandra asserts, rather shamelessly, that there is nothing "wrong if a developing country like India attempts to stop this 'brain drain'. China, for instance, has been able to develop its internal resources to a point. Human beings are also internal resources". His hagiographer Wali thankfully adds, referring to US, "it is silly to talk about free right to emigrate when this (USA) country is so selective about who it wants to take. There are no open borders. The poor starving Haitian refugees, it is so inhuman to send them off". Fascist nonsense. No wonder Chandra and his wife campaigned for Adlai Stevenson, twice.

Arrant nonsense. Hypocrisy with a blindness that's appalling in a man who swore by science and could not even look at how illogical he was. Chandra justifies preventing emigration because many emigrate just for money and take even lowly positions. So what? His mother seeded him with an ambition and a dictum to keep away from C.V.Raman's 'orbit'. Each man to his own needs. Who a country chooses to allow is its own prerogative that does not mean that other countries should ban emigration. Both USSR and China banned any emigration yet they lag technologically and economically far behind US. Until 2001 China was far behind US. USSR had talent but chose to prevent free travel and emigration only to send its brilliant scientists to Gulags. When USSR collapsed its scientists were reduced to surviving on a bag of potatoes. Thanks to a closed system their scientists often re-invented the wheel not knowing somebody else had done it already.

Ever since India opened up its economy many of those who emigrated have invested back in India as entrepreneurs. The traffic of emigrants is a cash cow for India. Foreign remittances are a key source of revenue for India. The US, of course, wins hands down with its open door policy for talent. Actually the policy is less than open door and needs to become one.

It is a measure of US' openness that first generation immigrants have risen the fabled American corporate ladder to the very top. This is unique to USA. No other country does it as well as America. No other country attracts talent and the mediocre alike as much as the US does. More than 50% of Phd's in US are foreign born. The annual Nobel laureate list features many immigrants. A culture of openness, respect for talent, lack of rigid hierarchies, a culture of innovation, risk taking, rewarding risk and other key ingredients make US the place to be for immigrants, skilled and unskilled, legal and illegal, alike.

Bill Gates, the world's richest man, the founder of the iconic company that changed the world, has stepped down as Chairman and will continue to be an 'advisor' to Nadella. I cannot imagine this happening in any other part of the world. Scion of Henry Ford, another quintessential American icon, stepped aside and brought in external talent, Alan Mulally, to turn around Ford. Can we imagine any Indian business founder doing that? These are not exceptions but rather routine in US and thats the key defining feature.

All that said would I say Nadella owes a debt of gratitude to USA? No. That's cheap. If Nadella turns around Microsoft from a lumbering behemoth to a nimble competitor and in the process unleashes great revolutionary technology or products it is America that will have to thank the immigrant. The proper function of any society that desires progress, economically and otherwise, is to be an enabler for any individual to realize his/her potential to the fullest extent. When an individual succeeds if society thinks it is 'entitled' to his scalp then in the long run the society will decay. Exhibit A: USSR. Did Einstein owe his life to US? No. US owes Einstein a big thanks. If US had said no to Einstein he may have perished somewhere but the loss would have been more to US than to Einstein.

Andy Grove came to US as a penniless refugee fleeing Nazism and then communism. America and the world need to thank Andy Grove for Intel. While Americans can justifiably feel proud about being, as Reagan said, a 'city on the hill' we cannot lose sight that it was Andy Grove the individual who made himself what he became out of the millions who emigrate to US. Its always the individual that counts. The day a society becomes greedy and titular thinking that the individual is at its service that day the death knell will sound for that society.

Liberals Barack Obama and Elizabeth Warren made it fashionable to speak of the duty of an individual to society. 'Giving back', they call it. I say, 'bollocks'. The only duty of an individual is to be a law abiding citizen and work towards one's own dream. The rest is corollary and incidental. So many thousands of students attended the same school before and after Bill Gates or Steve Jobs or Alan Mulally or Indra Nooyi or Satya Nadella yet only they became what they did. So many attend Harvard and Yale yet not everyone becomes Mark Zuckerberg or, as for that matter, Obama.

American universities recognize that while they are incubators or catalysts of talent they do not fancy themselves as entitled to the achievements of their alumni. Thats why universities, recognizing the value of alumni, go to great lengths to nourish that relationship as symbiotic equals. Pushing oneself to deliver the best within himself is the greatest tribute any individual can pay a society.Without Bill Gates the capitalist Bill Gates the philanthropist would not exist. The latter is a bonus. The former is his tribute to himself and then to America.

Let me be to Indians what John Galt was to Hank Rearden. Chandra won accolades of high order in UK and USA before India gave him a paltry Padma Vibhushan. NASA has named an observatory after Chandra. Kalpana Chawla was richly remembered by a grateful America when her space mission ended in tragedy. A Congressional space medal of honor was bestowed on her, Texas university named a hall after her and an asteroid was named for her. All that for an immigrant who perished in the skies. C.K.Prahlad won an American award before India even recognized him. Indian-Americans head two of America's most prestigious schools of business, Harvard Business School and Chicago Booth School of Business. I hope Indians now don't think that they run America.

A Delhi girl was spurned admission at Delhi colleges thanks to ludicrous cutoffs at 100%.  The middle class girl, New York Times article said, was accepted at Dartmouth with scholarships (New York Times Article 'Squeezed out in India, students turn to United States' http://www.nytimes.com/2011/10/14/world/asia/squeezed-out-in-india-students-turn-to-united-states.html?_r=0 ). The key sentence of that article was that US universities are making efforts to reach out to Indian students. Its the 'reaching out' that differentiates Dartmouth from Delhi colleges. Brown University intended to open an office in Delhi to recruit Indian students. Brown had 86 Indian students in 2008. In 2011 it was 300. Indian higher education is in shambles.

Atul Gawande, born to Maharashtrian immigrants, straddles the worlds of politics, public policy making, surgery, journalism and administration. A total impossibility in the suffocating strait jacketed Indian system. Then there is Siddhartha Mukherjee who won a Pulitzer and a National Book Award for his debut book 'Emperor of Maladies'. I can bet most Indian doctors cannot read more than 10 pages of that book let alone be capable of writing one sentence in that. Another impossibility in creativity stifling Indian system. Mukherjee won a Rhodes Scholarship, a Cancer leadership award (shared with a US governor and senator), Pulitzer, Time magazine notice and then finally in 2014 a Padma Shri.

At a retreat for Governors Thomas Friedman told them to lobby for reforming the immigration mess in America. Friedman and a University President pleaded for green cards to be stapled to the graduate degrees awarded to foreign students. A Republican governor cheerfully agreed. Thats how much America recognizes and yearns to retain talent.

I'd tell every Indian to emigrate to US if opportunity presents itself. Come to America and prosper. As you prosper you will enrich this country, not just economically. I invite every Physics, Biology, Chemistry, Math, Engineering and Medical student to set his sights on MIT or Harvard Medical school or Princeton and settle down in this great country. India does not deserve you. At least not yet.
06 Feb 23:47

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38

by jeyamohan

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 4 ]

கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். கண்ணுக்குத்தெரியாமல் பெருவெளியில் வாழும் ஆற்றலின் வடிவம் அந்தர்த்தானன். வெளியில் ஒரு முடிவிலாக்கூந்தல் பெருக்காக விரவிக்கிடந்த சிகண்டினி என்னும் துணைவியில் அவனுக்கு மின்னலாக மகனொருவன் உதித்தான். அந்த மைந்தன் ஹாவிர்த்தானன் என்று அழைக்கப்பட்டான்.

விண்ணகத்தின் துகள்களையெல்லாம் அவியாக உண்டு வளர்ந்தெழுந்த ஹாவிர்த்தான பிரஜாபதி அக்கினிகுலத்தில் பிறந்தவளும் பன்னிரண்டாயிரம்கோடி யோஜனை நீளம்கொண்ட கதிராக விரிந்து பரந்தவளுமான தீஷணையை மணந்தான். விண்ணகப்பெருவெளியில் முளைத்தெழுந்த பொன்னிற தர்ப்பைபோல அவர்களில் பிராசீனபர்ஹிஸ் பிறந்தான். அவர்களுக்கு சுக்ரன், கயன், கிருஷ்ணன், விரஜன், அஜினன் என்னும் மேலும் ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் பிரம்மாவின் இச்சைப்படி வெளியை படைப்பால் நிறைத்தனர்.

பிராசீனபர்ஹிஸ் ஊழித்தொடக்கத்தில் பூமியெங்கும் பரவியிருந்த நீலக்கடல்மேல் பொன்மேகம்போல பரவிக்கிடந்தான். சூரியன் கிழக்கே எழுந்ததும் பொன்னிறம் கொண்ட கடலில் இருந்து சுவர்ணை என்னும் தேவதை எழுந்து வந்ததை அவன் கண்டான். அவள்மேல் காதல்கொண்ட பிராசீனபர்ஹிஸ் பொலிவுபெற்றான். அவனுடைய ஒளிவெள்ளம் பொன்மழைக்கதிர்களாக சுவர்ணையின் மேல் விரிந்தது. அக்கதிர்கள் சுவர்ணையின் கருவில் பத்து மைந்தர்கள் ஆயினர். அந்த பத்துபேரும் பிரசேதஸ்கள் என்றழைக்கப்பட்டனர்.

பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் மண்ணில் பட்ட இடங்களில் இருந்து தர்ப்பையும் நாணல்களும் மூங்கில்களும் உருவாகி வந்தன. பிரஜாபதிகளான பத்து பிரசேதஸ்களும் அவற்றைக்கொண்டு தங்களுக்குள் விளையாடிக்கொண்டனர். அவர்களின் கைகளிலிருந்தும் கருத்தில் இருந்தும் தனுர்வேதம் உருவாகியது. அவர்களில் இளையபிரஜாபதியான பிரசேதஸ் ஒருநாள் ஒரு மூங்கில் துளைவழியாக காற்றாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தபோது அவனையறியாமலேயே அவன் இளம் உதடுகளிலிருந்து தனுர்வேதம் பாடல்களாக ஒலித்தது.

அருகே தவத்தில் அமர்ந்திருந்த வேதரிஷியான பிரகஸ்பதி அதைக்கேட்டார். அவர் தன் கரையில்லா நினைவாற்றலால் அதை உள்வாங்கி பதித்துக்கொண்டார். பின்பு அதை ஆதிமொழியில் எட்டுலட்சம் பாடல்களில் பிரவேஸாஸ்திர பிரகாசம் என்னும் பெருநூலாக இயற்றி தன் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அவரது மாணவரான சுக்ரர் அதை வேதமொழியில்  நான்குலட்சம் பாடல்களாக ஆக்கினார். அதை ஐந்து உபவேதங்களில் ஒன்று என வியாசர் வகுத்தார். கிருஷ்ணயஜுர்வேதத்தின் அங்கமாக நிலைநிறுத்தினார்.

“புல்நுனியால் பிரபஞ்சத்தை பிரம்மத்தையும் அறியும் கலையான தனுர்வேதம் காலப்போக்கில் மெல்லமெல்லச் சுருங்கி வெறும் வில்வித்தையாகியது. அதன் ஐந்தாயிரம் பாடல்கள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. அதில் சஸ்திர பகுதியை நான் என் தந்தை பாரத்வாஜமுனிவரிடமிருந்து கற்றேன். அகத்தியமுனிவரிடமிருந்து நிசஸ்திரப்பகுதியையும் கற்றேன். இந்தமண்ணுலகில் அறத்தை நிலைநாட்டுவதற்கு சொல் முதல்தேவை. சொல்லுக்குத் துணையாக என்றுமிருப்பது வில். அதுவாழ்க!”

“ஓம்! ஓம்! ஓம்!” என்று சீடர்கள் முழங்கினர். அவர் தன் முன் இருந்த இளம் மாணவர்களை நோக்கி புன்னகை புரிந்தார். “இந்தப்புராணத்தில் இருந்து இரண்டு வினாக்களைக் கேட்கிறேன்” என்றார். “பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் சுவர்ணையில் பிரசேதஸ்களாயின. மண்ணில் தர்ப்பையாயின. அப்படியென்றால் அவை பாதாளத்தில் எவையாக வளர்ந்தன? தேவருலகில் எப்படி முளைத்தன?”மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அக்னிவேசர் “சொல்லத்தெரிந்தவர்கள் சொல்லலாம்” என்றார்.

மான்தோலாடை அணிந்து பிராமணர்களுக்குரியமுறையில் தோள்முடிச்சை இடப்பக்கமாக போட்டிருந்த, முன் சிகை களைந்த இளைஞன் எழுந்து வணங்கி “ஆசிரியரை வணங்குகிறேன். பாதாள உலகில் நாகங்களின் செம்பொன்னிற நாக்குகளாக அவை மாறின. நாகங்களின் சரங்கள் நாக்குகளே. விண்ணுலகில் தேவர்களின் பொன்னிறத்தலைமயிராக அவை மாறின” என்றார். அக்னிவேசர் புன்னகையுடன் “குருவருள் உனக்கு என்றும் உண்டு துரோணா” என்றார்.

அப்போது பாஞ்சாலத்தின் அரச ரதம் வருவதை ஒரு மாணவன் ஓடிவந்து அக்னிவேசரைப் பணிந்து அறிவித்தான். “சோமகசேனர் நோயுற்றிருக்கிறார் என்றல்லவா அறிந்தேன்” என்றபடி எழுந்த அக்னிவேசர் தன் முன்புலித்தோலாடையை வலமுடிச்சாக அணிந்து நீள்சிகையுடன் அமர்ந்திருந்த துருபதனாகிய யக்ஞசேனனிடம் “இளவரசே, உனது அரசிலிருந்து ஏதேனும் செய்தி வந்ததா?” என்றார். யக்ஞசேனன் பதற்றத்துடன் “இல்லை, நேற்றுமாலை அங்கிருந்து என் சேவகன் வந்தான். சிறியதந்தை நலத்துடனிருப்பதாகவே சொன்னான்” என்றான்.

ரதம் வந்து நின்று அதிலிருந்து ஸாரணர் இறங்குவதை அக்னிவேசர் கண்டார். அவர் பின்னால் கனத்த கரிய உடலும் மார்பிலும் தோளிலும் விழுந்த நீண்ட முடியும் இடைசுற்றி மார்பை வளைத்த நீலப்பட்டாடையும் அணிந்த இளைஞன் இறங்குவதைக் கண்டு கூர்ந்து கவனித்தபடி நின்றார். அவர்கள் தவச்சாலை வளைப்பில் இறங்கி நேராக அவரை நோக்கி வந்தனர். அருகே நெருங்கியதும் அந்த இளைஞனிடமிருந்த வேறுபாட்டை அக்னிவேசர் புரிந்துகொண்டார். அவன் முலைகள் சிறுநொங்குபோல கனத்து உருண்டு நின்றன. கூந்தலிழை இரு முலைகள் நடுவே வழிந்தது. மீசையும் தாடியும் இணைந்து தேனிக்கூடு போல ஆகிவிட்டிருந்தன.

மேற்கொண்டு அவனை பாராமலிருக்கும்பொருட்டு அக்னிவேசர் பார்வையைத் திருப்பி தன் மாணவர்களைப் பார்த்தார். அவர்கள் கண்களில் எல்லாம் அருவருப்பும் ஏளனமும் தெரிந்தன. யக்ஞசேனன் கசப்புடன் தலைகுனிந்துகொண்டான். “யக்ஞசேனா, உன் சிறியதந்தையின் ஆயுதசாலை அதிபரல்லவா அது?” என்றார் அக்னிவேசர். “ஆம், ஆசிரியரே. அவர் பெயர் ஸாரணர்” என்றான் யக்ஞசேனன் . “உடன் வருபவன் யார்?”

யக்ஞசேனன் தலைகுனிந்து “சென்ற வாரம் அவன் என் சிறியதந்தையை வந்து சந்தித்தான் என்று ஒற்றன் சொன்னான். அவனை பாஞ்சாலத்தின் இளவரசனாகவும் எனக்குத் தம்பியாகவும் உத்தர பாஞ்சால மன்னர் அறிவித்திருக்கிறார்.”

ஒருவன் “அவனா அவளா?” என்றான். மற்ற மாணவர்கள் மெல்ல நகைத்தனர். “ஏளனம் தேவையில்லை” என்று அக்னிவேசர் உரத்தகுரலில் சொன்னார். “இளையவர்களே, படைப்பில் அழகு அழகற்றது, நல்லது கெட்டது, தேவையானது தேவையற்றது என்ற அனைத்துப்பிரிவினைகளும் நாம் செய்துகொள்வதென்று அறியுங்கள். அதைச்செய்யும் ஒவ்வொருமுறையும் பிரம்மனிடம் மன்னிப்பு கோருங்கள். அவற்றை பிரம்மனின் விதி என எண்ணிக்கொள்ளும் மூடன் அந்த ஒவ்வொரு எண்ணத்துக்கும் என்றோ பதில்சொல்லக் கடமைப்பட்டவன்.”

“அவனை உத்தரபாஞ்சாலத்தின் மீட்பனாக சோமகசேனர் நினைக்கிறார்” என்று யக்ஞசேனன் சொன்னான். “என்னை என் தந்தை தங்கள் குருகுலத்துக்கு அனுப்பியதுமே அவர் அச்சம் கொண்டிருந்தார். இப்போது என்னைத் தடுக்கும் ஆற்றலென அவனை நினைத்து அனுப்பியிருக்கிறார்” என்றான். அக்னிவேசர் “அவனை ஏன் இங்கே என்னிடம் அனுப்பியிருக்கிறார் உன் சிறியதந்தை?” என்றார். யக்ஞசேனன் பேசாமல் நின்றான்.

அருகே வந்த ஸாரணர் வணங்கி “பாரத்வாஜரின் குருகுலத் தோன்றலும் தனுர்வேதநாதருமாகிய அக்னிவேசமுனிவரை வணங்குகிறேன்” என்றார். “இவர் எங்கள் இளவரசர், சிகண்டி என்று அழைக்கப்படுகிறார். உத்தர பாஞ்சாலத்தின் அனைத்து அரசத்தகுதிகளும் இவருக்கு எங்கள் மன்னரால் அளிக்கப்பட்டுள்ளன.”

தலைவணங்கிய சிகண்டி “ஆசிரியருக்கு வணக்கம்” என்றான். அக்னிவேசர் சிகண்டியை கூர்ந்து சிலகணங்கள் நோக்கி “உன் பெயரையும் உடையையும் தவறாக அணிந்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றார். “மேலும் நான் உன் ஆசிரியனும் அல்ல.”

சிகண்டி “நான் எப்படி இருக்கவேண்டுமென நானே முடிவெடுத்தேன்” என்றான். அக்னிவேசர் அவனை சிலகணங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அவனை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. “உன் தேவை என்ன?” என்றார். “நான் உங்கள் மாணவனாக ஆகவேண்டும். தனுர்வேதத்தை கற்றுத்தெளியவேண்டும்.”

VENMURASU_EPI_38

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“இங்கே நான் ஆண்களான பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் மட்டுமே வில்வித்தை கற்றுத்தருகிறேன்” என்றார் அக்னிவேசர். “அவ்விரு வர்ணத்தவர் மட்டுமே முறைப்படி குருமுகத்தில் இருந்து ஆயுதவித்தை கற்கமுடியுமென்பது நூல்விதியாகும். வைசியர் தேவையென்றால் வில்வித்தை கற்ற ஷத்ரியனை தனக்குக் காவலாக அமைத்துக்கொள்ளலாம். சூத்திரர்கள் உயிராபத்து நேரவிருக்கையில் மட்டும் ஆயுதங்களை கையிலெடுக்கலாம் என்று சுக்ர ஸ்மிருதி வகுத்துள்ளது.”

“அறிதலை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்றான் சிகண்டி. “ஆம், அது உண்மை. ஆனால் நதி தடைகளால்தான் பாசனத்துக்கு வருகிறது. தடைகள் மூலமே சமூகமும் உருவாக்கப்படுகிறது. தடைகளை விதிக்காத சமூகம் என ஏதும் இப்புவியில் இல்லை. தடைகளின் விதங்கள் மாறலாம், விதிகள் மாறுபடலாம், அவ்வளவுதான். தடைகளை மீறுதலே குற்றமென சமூகத்தால் கருதப்படுகிறது. குற்றங்களை தண்டிக்கும் அதிகாரத்தையே அரசு என்கின்றன நூல்கள்” என்றார் அக்னிவேசர்.

“அறிவை ஏன் தடுக்கவேண்டும்?” என்று சிகண்டி சினத்துடன் கேட்டான். “ஏனென்றால் அறிவு என்பது அதிகாரம். அதிகாரம் பொறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். எப்பொறுப்பை ஒருவன் வகிக்கிறானோ அப்பொறுப்புக்குரிய அறிவு மட்டுமே அவனுக்கு அளிக்கப்படவேண்டும். பொறுப்புடன் இணையாத அதிகாரம் அழிவை உருவாக்கும். அதுவே சமூகத்தை உருவாக்கும் முறையாக உருவாகிவந்துள்ளது” என்றார் அக்னிவேசர்.

சிகண்டி சினத்துடன் தலையை அசைத்தபடி ஏதோ சொல்லவந்தான். “நீ அறிவுடையவன் என்று காண்கிறேன். இந்த வினாவுக்கு பதில் சொல். ஓர் அடர் கானகத்தில் ஐந்து திருடர்கள் பயணி ஒருவனைத் தாக்கி அவன் பொருளைத் திருடி அவன் மனைவியையும் குழந்தையையும் கவர்ந்துசெல்ல முயல்கிறார்கள். அப்போது அவ்வழியாக ஒருவர்பின் ஒருவராக ஒரு சூத்திரனும் வைசியனும் ஷத்ரியனும் பிராமணனும் வருகிறார்கள். அக்கொடுமையை கண்ணால் கண்டபின்னரும் ஐவரை தனியாக எதிர்க்கமுடியாதென என்ணி அஞ்சி அவர்கள் நால்வருமே உயிர்தப்பி ஓடிவிட்டனர். சுக்ர ஸ்மிருதியின்படி அந்நால்வருக்கும் மன்னன் அளிக்கவேண்டிய தண்டனை என்ன?”

சிகண்டி பேசாமல் பார்த்து நின்றான். “சூத்திரனை ஒருநாள் அரசனுக்கோ குலத்துக்கோ கொடையுழைப்புக்கு விதிக்கவேண்டும், அவ்வளவுதான். ஏனென்றால் வீரம் அவன் கடமையும் இயல்பும் அல்ல. வைசியனுடைய சொத்தில் நான்கில் ஒருபங்கை அரசுக்கோ குலத்துக்கோ பறிமுதல் செய்யவேண்டும். ஏனென்றால் அவன் தேடியசெல்வம் அறமுடையதாக இருக்க வாய்ப்பில்லை. அவன் அந்நால்வரையும் எதிர்த்திருக்கவேண்டும். தன் சொத்துக்கள் அனைத்தையும் அத்திருடர்களுக்கு அளிப்பதாகச் சொல்லி மன்றாடியிருக்கவேண்டும்” என்றார்.

“சிகண்டியே சுக்ர ஸ்மிருதியின்படி அப்பிராமணன் அங்கே சென்று அவர்களை தர்ப்பையைக் கையில் பற்றியபடி தீச்சொல் இட்டிருக்கவேண்டும். அவன் நெறிமீறாதவன் என்றால் அச்சொல் எரியாகியிருக்கும். அது நிகழாமையால் அவனை ஒருவருடம் வேள்வி விலக்குக்கு தண்டிக்கவேண்டும். அவன் தன் நெறிகளில் நிற்கிறானா என அவன் ஆசிரியன் கண்காணித்துச் சொன்னபின்னரே விலக்கு நீக்கிக் கொள்ளப்படவேண்டும். ஆனால் ஷத்ரியனுக்கு என்ன தண்டனை தெரியுமா? அதுவே பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.”

அக்னிவேசர் சொன்னார் “அந்த ஷத்ரியன் அங்கேயே போரிட்டு மடிந்திருக்கவேண்டும். கையில் ஆயுதமில்லாவிட்டால் கற்களாலும் கைகளாலும் போரிட்டிருக்கவேண்டும். அநீதியின் முன் போரிட்டு உயிர்விடாதிருந்த பெருங்குற்றத்துக்காக அவனையும் அவனுடைய மொத்தக்குலத்தையும் அந்நாட்டு மன்னன் கொன்றுவிடவேண்டும். அக்குலத்தில் ஒருவன் அறம்பிழைக்கிறான் என்றால் அது அக்குலத்தில் குருதியில் இருக்கும் குணமேயாகும். அதை வாழவிடலாகாது. அக்குலத்தின் குருதியிலிருந்து பிறிதொரு குழந்தை மண்ணுக்கு வரக்கூடாது.”

திகைத்து நின்ற சிகண்டியை நோக்கி அக்னிவேசர் “அந்தப்பொறுப்பு உனக்கு தேசத்தாலும் சமூகத்தாலும் மரபாலும் அளிக்கப்படாதபோது ஆயுதவித்தையை நீ கற்பது பொறுப்பற்ற அதிகாரம் என்றே பொருள். எந்த நெறிநூலுக்கும் நீ கட்டுப்பட்டவனல்ல. நீ ஆணுமல்ல பெண்ணுமல்ல. உன் கை வில் இச்சமூகத்துக்கோ தேசத்துக்கோ காவல் அல்ல. நீ மொத்த மனிதர்களுக்கும் எதிர்தரப்பாகக் கூட இருக்கலாம். உனக்குக் கற்றுக்கொடுக்கப்படும் வித்தையால் நாளை நாடும் குடிகளும் தொல்லைப்படலாம். ஆகவேதான் உனக்கு தனுர்வித்தை மறுக்கப்பட்டுள்ளது. விலகிச்செல்” என்றார்.

கண்கள் சற்றே விரிய உறுமலின் ஒலியில் சிகண்டி சொன்னான் “என் அன்னையின் சொல்லன்றி எனக்கு எக்கடமையும் இல்லை.” “அப்படியென்றால் பாரதவர்ஷத்தில் எந்த குருகுலத்திலும் உனக்கு கல்விகிடைக்காது” என்றார் அக்னிவேசர். “என்னை நீங்கள் ஏற்கவேண்டும். அல்லது கொல்லவேண்டும்” சிகண்டி சொன்னான். “அதற்கு நான் மறுத்தால்?” என்றார் அக்னிவேசர்.

“அறைகூவும் எதிரியை எதிர்கொண்டேயாகவேண்டியவன் ஷத்ரியன். எடுங்கள் உங்கள் வில்லை” என்றான் சிகண்டி. நாணேற்றிய வில்லைத் தூக்கி சுண்டியபடி “இங்கே இப்போதே முடிவுசெய்வோம்.”

அக்னிவேசர் வியப்புடன் “என்னிடம் போர்புரிய வருகிறாயா?” என்றார். “என்னுடன் போர்புரிய இன்று இப்பாரதத்தில் மூவரே உள்ளனர். பரத்வாஜரும் பரசுராமரும் பீஷ்மருமன்றி எவரும் என் முன் அரைக்கணம்கூட நிற்கமுடியாது” என்றார். “ஆம், அறிவேன். ஆனால் உங்களிடமிருந்து கற்கவில்லை என்றால் உங்கள் கைகளால் மடிவேன்” என்றான் சிகண்டி.

அக்னிவேசர் கைநீட்ட ஒரு மாணவன் வில்லை அவரிடம் அளித்தான். அம்பறாத்தூணியை தோளில்மாட்டிய மறுகணம் மெல்லிய பறவை சிறகடித்து எழுந்து அமர்வதுபோல அக்னிவேசர் பின்வாங்கி கால்நீட்டி மடிந்தார். நடனம்போல மெல்லிய கரம் பின்னால் பறந்து வில்லின் நாணை பூங்கொடி போல வளைத்தது. நாணேறியதை வில் விடுபட்டதை எவரும் காணவில்லை. ஆடித்துண்டில் இருந்து ஒளிக்கதிர் எழுவதுபோல அவரிடமிருந்து கிளம்பிய அம்பு சிகண்டியின் சிகையை வெட்டிவீசியது.

உரக்க உறுமியபடி நாணொலி விம்ம சிகண்டி திரும்ப அம்புகளால் அவரைத் தாக்கினான். அவனுடைய கனத்த கால்களில் அப்பகுதியின் புற்களும் வேர்களும் சிதைந்தன. கூழாங்கற்கள் சிதறிப் பறந்தன. ஆனால் அக்னிவேசர் நின்ற இடத்தில் அவர் சென்றபின் புற்கள் தென்றல்பட்டு மடிந்தவை போல மெல்ல நிமிர்ந்தன. அவரது அம்புகள் அவன் ஆடையைக் கிழித்து வீசின. அவன் தோளிலும் தொடையிலும் பாய்ந்து இறங்கி இறகுநடுங்கி நின்றன. ஆனால் அவன் சற்றும் திரும்பவில்லை. அவன் அம்புகள் அக்னிவேசரை உரசிச்சென்றன. அவருக்கு சுற்றும் மண்ணில் பாய்ந்து நின்றன. ஒரு அம்பு அவரது புஜத்தை கீறிச்சென்றது.

“போதும், போய்விடு. நான் உன்னைக்கொல்ல விரும்பவில்லை” என்றார் அக்னிவேசர். “இந்தப்போரில் இரு முடிவுகள்தான்” என்றபடி மூர்க்கமாக முன்னால் பாய்ந்தான் சிகண்டி. அவன் அம்புகள் பட்டு அருகில் நின்ற மரங்களின் கிளைகள் வெட்டுப்பட்டு விழுந்தன. பாறை ஒன்றை அறைந்த அம்பு நெருப்பெழ ஒலித்து உதிர்ந்தது. உறுமியபடி அவன் மேலும் மேலும் என முன்னால் பாய்ந்தான். அவன் மார்பைக் கீறிய அம்பு அவனை நிலத்தில் வீழ்த்தியது. அக்கணமே மேலும் மூர்க்கத்துடன் கூவியபடி நிலத்தை கையாலறைந்து அவன் எழுந்தான். அவன் வில்லை அக்னிவேசர் ஒடித்தார். அவன் கையில் வெறும் அம்புடன் அவரை நோக்கிப்பாய்ந்துவந்தான்.

அக்னிவேசர் தன் பிறையம்பை எடுத்து அவன் தலையைத் துண்டிப்பதற்காக எய்தார். அது நாண்விட்டெழுந்த அதேகணத்தில் மேலெ நின்றமரத்திலிருந்து உதிர்ந்த காய் அதில்பட்டு அதைத் திசைமாறச்செய்தது. தன் கழுத்தை மின்னலெனக் கடந்துசென்ற அந்த அம்பைக்கண்டு முகத்தில் சிறு சலனம்கூட இல்லாமல் அம்பை அவரை நோக்கி வீசினான் சிகண்டி

அக்னிவேசர் கையைத் தூக்கியபடி நின்றார். “நில்! நீ இப்பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர்களில் ஒருவனாகப்போகிறவன்’ என்றார். ‘அத்துடன் உன்னை மகத்தான ஆசி ஒன்று காத்து நிற்கிறது’

‘அது என் அன்னையின் ஆசி. நான் அவள் ஆணைக்காகவே வாழ்கிறேன்’ என்றான் சிகண்டி. அக்னிவேசர் அவனைக் கூர்ந்து நோக்கி ‘உனக்கு அனைத்து ஆசிகளையும் அளிக்கிறேன். உனக்கு என் தனுர்வித்தையை கற்பிக்கிறேன். ஆனால் எனக்கு நீ மூன்று உறுதிகளை அளிக்கவேண்டும்” என்றார். சிகண்டி “நான் எந்த உறுதியையும் அளிக்கமுடியாது. தங்களுக்கு மட்டும் அல்ல, மண்ணில் எவருக்கும் நான் எச்சொல்லையும் கொடுக்கமாட்டேன். நான் ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டவன்” என்றான்.

அக்னிவேசர் தாடியை நீவியபடி மேலும் கூர்மையடைந்த கண்களுடன் “சரி, முறைப்படி நான் உன்னிடம் குருதட்சிணை கோரமுடியும்…” என்றார். சிகண்டி “அதையும் நான் அளிக்கமுடியாது. என் ஏழுபிறப்புகளும் என் அன்னைக்குரியவை” என்றான்.

அக்னிவேசர் “உன் அன்னை…” என்று சொல்லவந்த கணமே அனைத்தையும்புரிந்துகொண்டார். நடுங்கியபடி தன் இரு கரங்களையும் விரித்தார். “குழந்தை, என் அருகே வா. என்னுடன் சேர்ந்து நில்!” என்றார். சிகண்டி அருகே வந்ததும் அவனை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று அவன் தலையில் கையை வைத்தார்.

கண்கள் கலங்க நடுங்கும் கையுடன் அக்னிவேசர் சொன்னார் “பிறரை வாழ்த்துவதுபோல செல்வம், போகம், மைந்தர், அரசு, புகழ், ஞானம், முக்தி எதையும் நீ அடையும்படி நான் வாழ்த்தமுடியாது என்பதை நான் அறிவேன் மகனே. உன் அன்னையின் பொருட்டு காலகால மடிப்புகள் தோறும் அவமதிப்பையும், வெறுப்பையும், பழியையும் மட்டுமே பெறுபவனாக வந்து நிற்கிறாய். மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

06 Feb 03:40

சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .

by சுகா
’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.

மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.

‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார்.

என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.

’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.



’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’.

முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.

’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்
அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்
தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்
விழிக்கிறோம், நானும் யேசுவும்’.

‘உறங்கியபின்
போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு
விசும்பலைப் போர்த்திக் கொண்டு
தூங்கிப் போனாள்.
விடிந்தும் தீராவலி எனக்கு’.

இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.

கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.

மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.

‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’

’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.

மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.

நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.

‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா'.

‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.



அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.

தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.



அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.




புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.


மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.


அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.


அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.

‘என்ன படிக்கிறீங்க?

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.

சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.

‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.

‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.



திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?

ஒன்று மட்டும் தோன்றுகிறது.

‘சமதளப்படிகளில் இறங்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்’
என்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.

06 Feb 03:39

Senthil Nathan on Corruption with Politics in India

by Bala Subra
Senthil Nathan:



ஊழல் - மிக முக்கியமான தமிழ்த்தேசிய பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான சாதிய பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான மனித உரிமை பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான தலித் பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான சுற்று்சூழல் பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான பெண்ணிய பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான மொழி பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான ஈழ பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான கலாச்சார பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான சமூக பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான கல்வி பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான சுகாதாரப் பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான பொருளாதார பிரச்சனை
ஊழல் - மிக முக்கியமான கலை, இலக்கிய பிரச்சனை
ஊழல் - ஒவ்வொரு முக்கியமான பிரச்சனைக்கும் ஆதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான பிரச்சனை.
06 Feb 03:32

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37

by jeyamohan

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 3 ]

செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ என ஆணையிட்டான். பன்றி உறுமல் என எழுந்த அக்குரலைக் கேட்டதும் பூசகன் அவனை அறிந்துகொண்டான். “தேவி எங்கள் சிற்றாலயத்தில் எழுந்தருளுங்கள். எங்க நிலங்கள் வளம் கொழிக்கட்டும். எங்கள் குழந்தைகள் பெருகட்டும்” என்று வணங்கினான்.

ஊரின் தெற்குமூலையில் கட்டப்பட்டிருந்த வராஹியன்னையின் ஆலயமுற்றத்தில் அமர்ந்து அவன் முன் ஊரார் படைத்த உணவுக்குவையை கடைசி பருக்கை வரை அள்ளிவழித்து உண்டான். உண்ணும்போது சருகை எரித்து எழும் நெருப்பு போன்ற ஒலி அவனிடமிருந்து எழுவதையும் அவன் கைகளும் நாக்கும் உதடுகளும் தீயின் தழலாகவே நெளிவதையும் ஊரார் கண்டனர். அவன் கையை உதறிவிட்டு எழுந்து ஊரைவிட்டு நீங்கியபோது அவன் காலடிபட்ட மண்ணை அள்ளிக்கொண்டுசென்று வயல்களில் தூவ வேளாண்மக்கள் முட்டிமோதினர்.

நாற்பத்தெட்டுநாள் நடந்து சிகண்டி பாஞ்சாலத்தைச் சென்றடைந்தான். சத்ராவதி நகரின் விரிந்த கோட்டைவாயில் முன்னால் எரிவிழி அம்பையின் சிற்றாலயம் இருந்தது. அதற்குள் வராகி மேல் ஆரோகணித்தவளாக ஒருகையில் நெருப்பும் மறுகையில் அருள்முத்திரையுமாக எரிவிழியன்னை அமர்ந்திருந்தாள். அவள் கூந்தல் நெருப்பாக எழுந்து அலையடித்து நின்றது. சிறுவிளக்கில் நெய்ச்சுடர் அதிர புதிய செங்காந்தள் மலர்மாலை சூடி அமர்ந்திருந்த அன்னையின் ஆலயத்துக்குள் நுழைந்த சிகண்டி அந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டான்.

அதைக்கண்டு கோட்டைமுன் நின்ற காவலன் சீறிச்சினந்து வேல்தூக்கி ஓடிவந்தான். அவன் எழுப்பிய ஒலி கேட்டு நடந்தவை என்ன என்று ஊகித்த பிறரும் வேல்களும் வாள்களுமாக ஓடிவந்தனர். கோட்டைமுகப்பில் சென்றுவந்துகொண்டிருந்தவர்கள் திகைத்து ஒருபக்கம் கூடினர். முன்னால்வந்த நூற்றுவர்தலைவன் ஓங்கிய ஈட்டியுடன் சிகண்டியைக்கண்டு அஞ்சி செயலிழந்து நின்றான். மின்னிச் சேர்ந்தெழுந்த ஆயுதங்களைக் கண்டும் அரைக்கணம் அவன் கைகள் வில்லைநாடவில்லை. அவன் விழிகள் இமைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக பின்னடைந்தனர்.

“நான் அம்பை அன்னையின் மகன்” சிகண்டி சொன்னான். “என்னை பாஞ்சால மன்னனிடம் அழைத்துச் செல்லுங்கள்!” நூற்றுக்குடையவன் வணங்கி “பாஞ்சாலத்தின் இறைவி, இதோ இந்நகரம் பதினாறாண்டுகளாக தங்கள் பாதங்கள் படுவதற்காகக் காத்திருக்கிறது. எங்களுக்கு அருளுங்கள்” என்றான். வீரர்கள் புடைசூழ சிகண்டி பாஞ்சாலனின் அரண்மனை நோக்கிச் சென்றான்.

உத்தரபாஞ்சாலத்தின் தலைநகரமான சத்ராவதி கங்கையில் இருந்து வெட்டி துணைநதிகளுடன் இணைக்கப்பட்ட ஓடைகள் நரம்புகளாகப் பரவிய நிலத்தின் மகுடம்போலிருந்தது. கோட்டைகளை மீறி உள்ளே சென்ற அந்த ஓடைகள் நகரமெங்கும் பரவி களஞ்சியங்களின் பின்பகுதிகளை இணைத்தன. அவற்றினூடாக கோதுமை மூட்டைகளுடன் வந்த கனத்தபடகுகளை தோணிப்போகிகள் மூங்கில் கழிகளினால் தள்ளியபோது அவை மெல்ல ஒழுகிச்சென்று களஞ்சியங்களின் அருகே ஒதுங்கி உள்ளே நுழைந்தன. அவற்றை நோக்கி பலகைகளைப் போட்டு அதன் வழியாக இறங்கி பொதிகளை உள்ளே எடுத்து அடுக்கினர் வினைவலர்.

படகுகளின் மேல் வளைந்து வளைந்தெழுந்த மரப்பாலங்கள் மீது பொதிவண்டிகள் சகடங்கள் அதிர, மாடுகளின் தொடைத்தசைகள் இறுகி நெகிழ, ஏறி மறுபக்கம் சென்றன. சாலைகளும் ஓடைகளும் ஊடும்பாவுமாக பின்னி விரிந்த அந்நகரில் சாலைகளுக்கு இருபக்கமும் சுதைவீடுகளும் ஓடைகளுக்கு இருபக்கமும் மரவீடுகளும் இருந்தன.

பாஞ்சாலத்தின் வயல்களெல்லாம் அறுவடை முடிந்திருந்த பருவம். நான்குதிசைகளிலிருந்து நகருக்குள் வந்த கோதுமைவண்டிகள் தெருக்களெங்கும் தேங்கி நின்றன. கோட்டைமதில்கள் போல மாளிகை முகடுகள் போல அடுக்கப்பட்ட தானியப்பொதிகளைச் சுற்றி வினைவலரின் வேலைக்கூவல்கள் எழுந்து நிறைந்திருந்தன. வண்டிச்சகடங்கள் ஓய்விலாது ஒலித்துக்கொண்டிருந்தன. சிகண்டி அவ்வழியாகச் சென்றபோது வியர்த்த பளிங்குமேல் விரலால் இழுத்ததுபோல அமைதியாலான வழியொன்று உருவாகி வந்தது. கூலப்புழுதி நிறைந்திருந்த தெருக்களிலும் தானியமணம் நிறைந்திருந்த வீடுகளிலும் இருந்து மக்கள் எழுந்து விழிவிரிய அவனை நோக்கி நின்றனர்.

சிகண்டி அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவன் வரும் தகவல் அறிந்து அரண்மனைமுகப்பில் பாஞ்சாலத்தின் அமைச்சர் பார்க்கவர் வந்து காத்திருந்தார். சுதைத்தூண்களின் மேல் பெரிய மரத்தாலான‌ கட்டிடம் அமர்ந்திருந்தது. அரண்மனைக்கு அடியில் நீரோடைகள் சென்றன. அவற்றில் மிதந்தபடகுகளிலும் காவல்வீரர்கள் இருந்தனர். பார்க்கவர் நிலைகொள்ளாமல் சாலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஓடைமேல் சென்ற மரப்பாலத்தில் காலடி ஓசை ஒலிக்க ஏறி மறுபக்கம் சென்றான் சிகண்டி. அரண்மனை முகப்பில் மண்படிந்த உடலுடன் முலைகுலுங்க அவன் வந்து நின்றதும் பார்க்கவர் செய்வதறியாமல் சிலகணங்கள் நின்றுவிட்டார். அக்கணம் வரை அவருக்குள் குழம்பிச்சுழன்ற ஐயங்களும் அச்சங்களும் மறைந்தன. மலைப்பன்றி வீட்டுமுகப்பில் வந்து நிற்பது வளத்தை அளிக்கும் என நம்பிய வேளிர்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இவன் எம்மொழியிலேனும் பேசுவானா என அவர் மனம் ஐயுற்றது.

வணங்கியபடி முன்னகர்ந்து “அம்பாதேவி நகர்நுழைந்ததை வணங்கி வரவேற்கிறேன். நான் பாஞ்சாலத்தின் பேரமைச்சன் பார்க்கவன். தங்களுக்கு இவ்வரண்மனை காத்திருக்கிறது” என்றார். சிகண்டி அவரது கண்களை நோக்கி “நான் மன்னரைப் பார்க்கவேண்டும்” என்றான். அவன் கழுத்தில் குருதிவழியும் குடல் போல அந்தக்காந்தள் மாலை கிடந்தது.

பார்க்கவர் “மன்னர் சிலகாலமாகவே உடல்நலமற்றிருக்கிறார்” என்றார். “நான் அவரைப் பார்த்தாகவேண்டும்” என்றான் சிகண்டி. பார்க்கவர் அவன் சொல் கூடாதவன் என்பதைக் கண்டுகொண்டார். “ஆம், அவ்வாறு ஆகட்டும்” என்று தலைவணங்கினார்.

மரத்தாலான படிக்கட்டுகளில் சிகண்டி ஏறியபோது மொத்த அரண்மனையிலும் அவன் காலடியோசை எதிரொலித்தது. அரண்மனையெங்கும் தொங்கியிருந்த செம்பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிய தீபூத்த வனம்போலிருந்தது அது. மூன்றாவது மாடியில் உத்தரபாஞ்சாலத்தை ஆண்ட மன்னர் சோமகசேனரின் ஆதுரசாலை இருந்தது.

பாரதவர்ஷம் உருவான நாளில் கிருவிகுலம், துர்வாசகுலம், கேசினிகுலம், சிருஞ்சயகுலம், சோமககுலம் என்னும் ஐம்பெரும் குலங்களால் ஆளப்பட்ட கங்கைச்சதுப்பு பின்னாளில் பாஞ்சாலம் என்னும் ஒற்றைநாடாக ஆகியது. ஆயிரமாண்டுகாலம் கழித்து சோமக குலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தபோது அது இருநாடுகளாகியது. தட்சிண பாஞ்சாலத்தின் தலைநகரமாக காம்பில்யம் உருவாகி வந்தது. அதை சிருஞ்சயகுலத்து பிருஷதன் ஆண்டுவந்தான்.

உத்தரபாஞ்சாலத்தின் சத்ராவதியிலிருந்துகொண்டு ஆட்சிசெய்த சோமகவம்சத்து மன்னன் சோமகசேனன் முதுமையும் நோயும் கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு மைந்தர்கள் இருக்கவில்லை. அமைச்சர் பார்க்கவரின் பொறுப்பில் இருந்த உத்தரபாஞ்சாலத்தை வென்று கைப்பற்ற பிருஷதன் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாஞ்சாலத்தை ஒன்றாக்கி தன் மைந்தன் யக்ஞசேனனை மன்னனாக்க பிருஷதன் எண்ணியிருந்தான்.

VENMURASU_EPI_37_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஆதுரசாலையில் மூலிகைமெத்தைமேல் படுத்திருந்த சோமகசேனர் காம்பில்யத்தில் இருந்து அன்று காலை வந்த ஒற்றுச்செய்தியைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தார். அவரது மரணம் அடுத்த இருள்நிலவுநாளுக்குள் நிகழும் என்று நிமித்திகர் கூறியிருந்தனர். மருத்துவர்கள் அதை மௌனமாக அங்கீகரித்திருந்தனர்.அவர் மறைந்து நாற்பத்தொன்றாம்நாள் நீர்க்கடன்கள் முடிந்ததும் நகரில் ஒரு தீவிபத்து நிகழும் என்றனர் ஒற்றர்கள். அந்தத் தீவிபத்துக்குக் காரணம் வேள்விக்குறை என்றும், முறையான அரசன் இல்லாத நிலையின் விளைவு அது என்றும் குற்றம்சாட்ட வைதிகர்களை அமர்த்தியிருந்தனர் தட்சிண பாஞ்சாலத்தினர். அதைக் காரணம் காட்டி பிருஷதன் உத்தரபாஞ்சாலம் மீது படைகொண்டுவந்து பாஞ்சாலத்தை ஒன்றாக்கி அரசமைக்க திட்டமிட்டிருந்தான்.

வெளுத்த தாடி மார்பில் படிந்திருக்க தூவித்தலையணைமேல் தலைவைத்து மெலிந்த கைகால்கள் சேக்கையில் சேர்ந்திருக்க கிடந்த சோமகசேனர் சேவகன் அறிவித்ததை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. வரச்சொல் என கையசைத்தபின் சாளரம் வழியாக கீழே ஓடைகளில் கொடிபறக்க வந்துகொண்டிருந்த பெரும்படகுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். கதவு திறந்து உள்ளே வந்த வராகரூபனைக் கண்டதும் அவர் உடல் அதிர்ந்தது. சிகண்டி கழுத்திலணிந்திருப்பதென்ன என்பதை அவர் சித்தம் புரிந்துகொண்டதும் “தேவி!” என்றார்.

“நான்…” என சிகண்டி பேசத்தொடங்கியதுமே “நீ தேவியின் தோன்றல். இந்த அரண்மனையும் தேசமும் என் நெஞ்சமும் உன் சேவைக்குரியவை” என்றார் சோமகசேனர். சிகண்டி அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்தான். “நீங்கள் என் தந்தை என அன்னை சொன்னாள்” என்றான். செயலிழந்து கிடந்த சோமகசேனர் கைகள் அதிர்ந்தன. ஒரே உந்தலில் வலக்கையைத் தூக்கி சிகண்டியின் தலையில் வைத்து “ஆம், இன்றுமுதல் நீ பாஞ்சாலத்தின் இளவரசன்” என்றார். அப்பால் நின்றிருந்த பார்க்கவர் தலைவணங்கினார்.

“நீ என் மகன்.. இங்கே இரு. உனக்கென அரண்மனை ஒன்றை ஒருக்கச் சொல்கிறேன்” என்றார் சோமகசேனர். “என் பணி ஒன்றே” என்றான் சிகண்டி . சோமகசேனர் புன்னகையுடன் “காட்டில் வளர்ந்த வராகராஜன் போலிருக்கிறாய். ஆனால் உன் இலக்கு கூர்மை கொண்டிருக்கின்றது” என்றார்.  ”உன் பணி என்ன?”

“நான் பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று சிகண்டி சொன்னான். சோமகசேனர் அதிர்ந்து அறியாமல் உயிர்பெற்ற கைகளை மார்பின்மேல் கோர்த்துக்கொண்டார். “நீ சொல்வதென்னவென்று தெரிந்துதான் இருக்கிறாயா? பீஷ்மரைக் கொல்வதென்பது பாரதவர்ஷத்தையே வெல்வதற்குச் சமம்” என்றார்.

மாற்றமில்லாத குரலில் “அவர் எவரோ ஆகட்டும். அது என் அன்னையின் ஆணை” என்றான் சிகண்டி. சோமகசேனர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகளை அழுத்தியபடி “இக்கணம் நான் பீஷ்மரை எண்ணி பொறாமைகொள்கிறேன். மகத்தான எதிரியைக் கொண்டவன் விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறான்” என்றார். பார்க்கவரிடம் “இவனுக்கு மறுசொல் என ஒன்று இங்கே ஒலிக்கலாகாது” என்றார். “ஆணை” என்றார் பார்க்கவர்.

சிகண்டி செல்வதைப் பார்த்தபோது சாளரத்திரைச்சீலைகளை அசைத்து உள்ளே வந்த காற்றை உணர்வதுபோல அவர் நிம்மதியை அறிந்தார். அவருள் இருந்த புகைமேகங்களெல்லாம் அள்ளி அகற்றப்பட்டு ஒவ்வொன்றும் ஒளியுடன் துலங்கி எழுந்தன.”இவன் இருக்கும் வரை இந்த மண்மீது எதிரிகள் நினைப்பையும் வைக்கமுடியாது” என்று சொல்லிக்கொண்டபோது முகம் மலர்ந்து சிரிக்கத் தொடங்கினார்.

சிகண்டியை அரண்மனைக்குள் அழைத்துச்செல்லும்போது பார்க்கவர் “இளவரசே, இந்த அரண்மனையில் தங்களுக்குத் தேவையானவை என்ன?” என்றார். சிகண்டி “உணவு” என்றான். பார்க்கவர் சற்று திகைத்தபின், “அதுவல்ல… இங்கே வசதிகள்…” என இழுத்தார். “இங்கு ஆயுதசாலை எங்கே?”

பார்க்கவர் “வடமேற்குமூலையில்…” என பார்க்கவர் முடிப்பதற்குள் சிகண்டி “நான் அங்கேயே தங்குகிறேன்” என்றான். “அங்கே தங்களுக்கு ஏவலர்கள்…” என பார்க்கவர் தொடங்கியதும் “தேவையில்லை. பயிற்சித்துணைவர்கள் மட்டும் போதும்” என்றான் சிகண்டி.

நேராக ஆயுதசாலைக்கே சிகண்டியை இட்டுச்சென்றார் பார்க்கவர். ஆயுதசாலைப் பயிற்சியாளரான ஸாரணர் சிகண்டியைக் கண்டதும் ஒருகணம் முகம் சிறுத்தார். “ஸாரணரே, இவர் பாஞ்சாலத்தின் இளவரசர் என்பது மன்னரின் ஆணை” என்றதும் தலைவணங்கி “வருக இளவரசே” என்றார்.

சிகண்டி “நாம் பயிற்சியைத் தொடங்குவோம்” என்றான். ஸாரணர் அதைக்கேட்டு சற்றுத் திகைத்து “தாங்கள் சற்று இளைப்பாறிவிட்டு…” என்று சொல்லத் தொடங்கவும் சிகண்டி “நான் இளைப்பாறுவதில்லை” என்றான்.

அப்போதே அவனுக்கு பயிற்சி அளிக்கத்தொடங்கினார் ஸாரணர். அவனை விற்கூடத்துக்கு அழைத்துச்சென்றார். மூங்கில்வில்லைப் பற்றிப்பழகியிருந்த சிகண்டி அதன் நடுவே பிடித்து இடைக்குமேல் தூக்கி எய்யும் பயிற்சியை அடைந்திருந்தான். இரும்பாலான போர் வில்லை அங்குதான் முதலில் அவன் கண்டான்.

வில்லாளியைவிட இருமடங்கு நீளமுள்ள கனத்த இரும்புவில்லின் கீழ்நுனியை மண்ணில் நட்டு மேல்நுனி தலைக்குமேல் எழ நின்று எய்யும்போது இடக்கையின் பிடி வில்லின் மூன்றில் ஒருபங்கு கீழே இருக்கவேண்டும் என ஸாரணர் சொன்னார்.

“இளவரசே, மூங்கில்வில்லை நீங்கள் முழுத் தோள்பலத்தால் பின்னாலிழுத்து நாணேற்றுவீர்கள். ரதத்தில் இருந்து எய்யப்படும் இந்த இரும்புவில் மும்மடங்கு பெரியது. எட்டுமடங்கு கனமுடையது. அம்புகள் பத்துமடங்கு நீளமானவை. எருமைத்தோல் திரித்துச் செய்யப்பட்ட இதன் நாண் பன்னிரு மடங்கு உறுதியானது. இதைப்பற்றி கால்கட்டைவிரலால் நிலத்தில் நிறுத்தி நாணைப்பற்றி ஒரே கணத்தில் முழு உடல் எடையாலும் இழுத்து தண்டை வளைக்கவேண்டும்.”

கரியநாகம்போல வளைந்த வில்லை கையில் எடுத்தபடி ஸாரணர் சொன்னார். “நாண் பின்னிழுக்கப்ப‌ட்டு வில் வளைந்த அதேகணத்தில் அம்பு தொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையேல் நாணின் விசை உங்கள் முதுகிலும் கையிலும் அடிக்கும். தசை பிய்ந்து தெறிக்கும். அம்பு நாணேறிய மறுகணமே அது எய்யப்பட்டு வானிலெழவும் வேண்டும். இல்லையேல் இழுபட்ட வில் நிலைகுலைந்து சரியும். அம்புசென்ற மறுகணமே விம்மியபடி முன்னால் வரும் நாணில் இருந்து உங்கள் கைகளும் தோளும் விலகிக் கொள்ளவேண்டும். நிமிரும் வில் தெறித்தெழும்போது உங்கள் கால்விரல்களும் கைப்பிடியும் அதை நிறுத்தவேண்டும்…அனைத்தும் ஒரேசமயம் ஒரே கணத்தில் நிகழ்ந்தாக வேண்டியவை.”

“ஒருமுறை நீங்கள் செய்யுங்கள்” என்று சிகண்டி சொன்னான். ஸாரணர் பெருவில்லை மண்ணில் கால்விரலால் பற்றி ஒருகணத்தில் எம்பி நாணேற்றி அம்பைத்தொடுத்து எய்து எதிரே இருந்த மரப்பலகையை இரண்டாகப்பிளந்து தள்ளினார். அனைத்தும் ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிய சற்று முன்னால் குனிந்து இறுகிய உதடுகளுடன் அதைப்பார்த்துக்கொண்டிருந்தான் சிகண்டி. அம்பு பலகையை உடைத்தபோது அவனுடைய வாயில் இரு பன்றித்தேற்றைகள் வெண்ணிறமாக வந்து மறைந்தன. அவன் புன்னகைசெய்ததுபோலிருந்தது.

“எட்டாண்டுக்காலப் பயிற்சியால் அடையப்படும் வித்தை இது” என்றபடி ஸாரணர் வில்லை சாய்த்து வைத்தார். “முறையாக எய்யப்படும் பெருவில்லின் அம்பு நான்குநாழிகைதூரம் சென்று தாக்குமென்பார்கள். இதன் நுனியில் சுளுந்து கட்டி எரியம்பாக எய்வதுண்டு. வெட்டவும் உடைக்கவும் சிதைக்கவும் இச்சரங்களால் முடியும்.”

சிகண்டி அந்த வில்லை குனிந்து எடுத்தபோது “அதை கையாளக் கற்றுக்கொள்வதில் எட்டு படிகள் உள்ளன. முதலில் நாண் இல்லாமல் அதன் தண்டை மட்டும் ஏந்திக்கொள்ளப் பழக வேண்டும்” என்றார் ஸாரணர். அவர் அவனுக்கான வில்லை காட்டுவதற்காகத் திரும்பினார்.

சிகண்டி அந்த இரும்புவில்லை தன் இடக்கையில் தூக்கி காலைநீட்டி கட்டைவிரலிடுக்கில் அதன் நுனியை நிற்கச்செய்து தண்டைப்பிடித்து நின்றான். ஸாரணர் அதைக்கண்டு வியந்து நின்றுவிட்டார். நீள்சரத்தை எடுத்தவேகத்திலேயே முழு உடலாலும் வில்லைவளைத்து நாணை ஏற்றி எய்துவிட்டான். அம்பு திசைகோணலாக எழுந்து ஆயுதசாலையின் கூரையைப் பிய்த்துமேலே சென்றது. கூடிநின்ற மாணவர்கள் அனைவரும் ஓடி வந்து சிகண்டியைச்சுற்றிக் கூடினார்கள்.

“இளவரசே, தாங்கள் எவரிடம் நிலைவில்லைக் கற்றீர்கள்?” என்றார் ஸாரணர். “இப்போது, சற்றுமுன் தங்களிடம்” என்று சொன்ன சிகண்டி “நான் பயிற்சி செய்யவேண்டியிருக்கிறது. என் இலக்குகள் இதுவரை பிழைத்ததில்லை” என்றான். அவர்களிடம் விலகும்படி கைகாட்டியபடி அடுத்த அம்பை எடுத்தான்.

அதன்பின் அவன் ஒருகணமும் திரும்பவில்லை. ஒவ்வொரு அம்பாக எடுத்து தொடுக்கத் தொடங்கினான். அன்றுபகல் முழுக்க அவன் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தான். உணவுண்ணவில்லை, அமரவும் இல்லை.

மாலையில் சூரியன் அணைந்தபோது ஸாரணர் “இளவரசே, ஆயுதசாலையை மூடவிருக்கிறோம். தாங்கள் ஓய்வெடுங்கள்” என்றார். சிகண்டி அவரை திரும்பிப்பார்க்கவில்லை. “இளவரசே, நாங்கள்…” என ஸாரணர் தொடங்க “நீங்களெல்லாம் செல்லலாம். நான் இரவில் துயில்வதில்லை” என்றான் சிகண்டி .

சற்று திகைத்தபின்பு “ஆயுதசாலையை அந்தியில் மூடுவதென்பது மரபு. பூசகர்கள் வந்து  ஆயுதங்களுக்குரிய தேவதைகளுக்கு குருதிபலி கொடுத்து பூசையிட்டு நடைமூடினால் உள்ளே அந்த தேவதைகள் வந்து பலிகொள்ளும் என்பார்கள்” என்றார். “நான் வெளியே சென்று பயிற்சி செய்கிறேன்” என வில்லையும் அம்புக்குவியலையும் கையில் எடுத்துக்கொண்டு சிகண்டி சொன்னான்.

நள்ளிரவில் ஸாரணர் ஆயுதசாலைக்கு முன்னாலிருந்த களத்துக்கு வந்து பார்த்தார். இருளில் சிகண்டி பயிற்சி செய்துகொண்டிருந்தான். அம்புகளைத் தீட்டுவதையும் அடுக்குவதையும் மட்டுமே அவன் ஓய்வாகக் கொள்கிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவன் ஒரு மனிதனல்ல, மனிதவேடமிட்டு வந்த பிடாரி என்ற எண்ணம் அவருக்குள் உருவாகியது.

மறுநாள் சிகண்டி அம்பால் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தினான். பறக்கும் அம்பை இன்னொரு அம்பால் துண்டித்தான். அவன் கையில் கரியவில் பெருங்காதல் கொண்ட பெதும்பைப்பெண் என நின்று வளைந்தது. அவன் யாழின் தந்தியைத் தொடும் சூதனின் மென்மையுடன் நாணைத்தொட்டபோது குகைவிட்டெழும் சிம்மம் போல அது உறுமியது. வில்குலைத்துநாணேற்றி அவன் அம்புவிடுவதை மீன் துள்ளி விழும் அசைவைப்போலவே காணமுடிந்தது.

ஏழுநாட்கள் சிகண்டி ஆயுதசாலையிலேயே வாழ்ந்தான். அங்கே சேவகர் கொண்டுவந்து அவன்முன் கொட்டிய உணவை உண்ணும் நேரமும், தனியாக அமர்ந்து தன்னுள் ஆழ்ந்து வான்நோக்கி வெறித்திருக்கும் கணங்களும் தவிர முழுப்பொழுதும் ஆயுதங்களுடன் இருந்தான். ஏழாம் நாள் அவன் ஸாரணரிடம் “நான் இனிமேல் தங்களிடம் கற்பதற்கு ஏதும் இருக்கிறதா ஸாரணரே?” என்றான்.

ஸாரணர் “இல்லை இளவரசே. இனிமேல் பாரதவர்ஷத்தின் எந்த ஆயுதசாலையிலும் எதையும் கற்கவேண்டியதில்லை. தங்களுக்கு ஆசிரியராக வில்வித்தையை மெய்ஞானமாக ஆக்கிக்கொண்ட ஒரு ஞானி மட்டுமே தேவை” என்றார். “அவர் பெயரைச் சொல்லுங்கள்” என்றான் சிகண்டி.

“இளவரசே, பிரஜாபதியான பிரசேதஸ் இயற்றி தன் மாணவர்களுக்குக் கற்பித்த பிரவேஸாஸ்திரபிரகாசம் என்ற நூலில் இருந்து வில்வித்தை மானுடருக்கு வந்துசேர்ந்தது. அது ஐந்து உபவேதங்களில் ஒன்று. கிருஷ்ணயஜுர்வேதத்தின் கிளை” என்றார் ஸாரணர். “அந்த மரபில் வந்த ஆயிரம் தனுவேத ரிஷிகள் இன்றிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களில் இருவரே அனைவரும் அறிந்தவர்கள். பிராமண ரிஷியான பரசுராமன் இப்போது சதசிருங்கத்தில் தவம்செய்கிறார். அவரைக் காண்பது அரிது. ஷத்ரிய ரிஷியான அக்னிவேச மாமுனிவர் விஸ்வாமித்திரரின் வழிவந்தவர். அகத்தியரிடம் ஆயுதவித்தை கற்றவர். இப்போது கங்கைக்கரையில் தன் தவச்சாலையில் இருக்கிறார். அவரிடம்தான் தட்சிண பாஞ்சாலநாட்டின் பட்டத்து இளவரசரும் பிருஷதரின் மைந்தருமான யக்ஞசேனர் வில்வித்தை கற்கிறார்.”

“அவரிடம் நானும் கற்கிறேன்” என்று சிகண்டி எழுந்தான். “இன்றே நானும் கிளம்பிச்செல்கிறேன்.” ஸாரணர் அவன் பின்னால் வந்து “ஆனால் அக்னிவேசர் தங்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை” என்றார். அவர் சொல்லவந்தது கண்களில் இருந்தது. சிகண்டி பன்றியின் உறுமல்போன்ற தாழ்ந்த குரலில் “ஏற்றுக்கொண்டாகவேண்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

04 Feb 23:37

ஆறாம் கயல் – 1

by ரா.கிரிதரன்

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

அம்மா எப்போதும்போல சகஜமாக எங்களுடன் வந்தாள்.

`இனி நாம பயமில்லாம வான்குடிகள் எல்லைக்கு வரலாம் இல்லியா?`, என்னைப் பார்த்துக் கேட்டாள்.

பச்சை நிற மலைச்சரிவில் ஆங்காங்கு தெரிந்த கரிய தரைப்பகுதியைப் பார்த்தபடி மையமாகத் தலையாட்டினேன்.

`ஏன் பயமில்லை சொல்லு?`

`அவங்களை நாம அழிச்சிட்டோம்`, கிளம்பும்போது பலமுறை என்னிடம் சொல்லப்பட்ட பதிலை நான் முடிப்பதற்குள் அவசர அவசரமாக மறுத்தாள்.

`இல்லை. நம்முடைய நிலங்களை மீட்டுவிட்டோம்.`, சிறிது இடைவெளிக்குப் பின்னர், `அது தான் உண்மை`, என்றாள்.

நான் அப்பாவின் முகத்தை ஒரு முறை பார்த்தேன். இறுகிய மண் போல அவரது முகத்திலிருந்து எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

`சரி, உன்னுடைய அப்பா என்ன தொழில் செய்பவர் சொல்லு?`

அம்மோம்மா பலமுறை நினைவூட்டியதுதான், `மண்குடி பொதுநலத் தாதன். மூத்தகுடி ஆயியான நமது தாய் அரியின் மருத்துவன்`

அம்மா முகத்தில் பெருமிதம் வழிந்தது. இதைச் சொல்லிக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிற்கூசும்படியான கர்வம் அவளிடம் குவியும்.

நேற்று நடந்து வந்த பாதையிலிருந்து இந்த நிலம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சதுப்பு நிலப்பகுதி. கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடந்த சண்டையின் அழிவுகள் ஆங்காங்கு தெரிந்தன.

‘ஆறாவது சுழற்சி முடிவடையும் நிமித்தங்கள் எழும்பிவிட்டன. இனி வான்குடி அழியும்; விண்ணேறி சரியும்; காலம் திசையறியும்’, அவள் மனதில் எழுந்த பூரிப்பின் வீச்சு கண்களில் பளபளத்தது.

சற்று தொலைவில் கழிவுகளையும் குரேம்பாக்களையும் அடித்துசென்றபடி நதி ஓட்டம் தெரிந்தது. ஊதா நிற இறகுகள் கொண்ட கழுகுகள் நிழலற்ற நதி வண்டலில் இறங்கின.

`விலங்குகளைப் பார்த்து சத்தம்போடக்கூடாது, சொன்னது நினைப்பிருக்கு இல்லியா?`

மையமாகத் தலையாட்டினேன்.

*

முன்னை ஒரு நாளில் – சம்பா எனும் எளியவள்.

ஒவ்வொரு கூரான கல்லைப் பிடித்து ஏறும்போதும் என் விரல்கள் நடுங்கின. விரல்களின் பிடியில் கற்கள் சிறு துகள்களாகச் சிதறி கீழே விழுவதைப் நடுக்கத்துடன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஏறிவிட்டால் தூரத்தில் விண்ணேறியின் தளங்கள் பார்வைக்கு வந்துவிடும். ஆயி சொன்னது மட்டும் உண்மையாக இருந்தால் விண்ணேறி என் கண்ணில் படுவதற்கு முன்னால் அதிலிருந்து வரும் புகை தெரிந்தாக வேண்டும். ஹூம். நான் ஏறிக்கொண்டிருந்த குன்றின் உச்சிக்குச் செல்ல வேண்டும். நிற்காதே. ஏறு, ஏறு. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும். கீழே இறங்குவது எப்படி எனத் திட்டம் போடாததைப்பற்றி எண்ணுவதற்கு மனம் மறுத்தது. விண்ணேறி உடைந்ததா என முதலில் பார்க்க வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்.

Tall-Tower-1

தூரத்தில் மண்ணைப் பிளந்து முளைந்த பெரு நகரம் மேகங்களுக்கு இடையே மறைந்திருந்தது. விண்ணேறி நின்ற உருவம் ஒரு நகரத்தையே தனக்குள் அடக்கியிருந்தது. வான்குடியின் தலைமையகம் என அமையக்கூடிய எல்லாவிதமான தன்மைகளையும் விண்ணேறி கொண்டிருந்தது. வெளிப்புறம் கரும் பாறையால் செய்தது கரடுமுரடாக இருந்தது. அமானுஷம் எனும் குணம் யுகயுகமாகத் திரண்டு மலைமுகடுகளையும் தாண்டி பீறிட்டுச் செல்வது போன்றதொரு அமைப்பு. இத்தனை அகலமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மண்குடி சதுக்கத்தில் இருக்கும் நடுமரம் போல ஒல்லியாக நீண்டிருக்கும் என நினைத்திருந்தேன். மூன்று பெரு நகரங்களை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போன்ற பெருத்த சுற்றளவு. வானத்தைத் துளைக்கும் வாய் இருக்குமென கற்பனை செய்திருந்தேன். நகரமே வாயாக மண்ணிலிருந்து எழும்பி நின்றது. ஆ என என்னை எதிர்பாராமல் ஒரு சத்தம் போட்டேன். நினைவு வந்துவிட்டது. ஆயி தனது குலக்கதை எனச் சொல்லும் போது நெருப்பு உமிழும் பெரு மலைகளைப் பற்றி கூறியிருந்தாளே. அதைப் போன்ற ஒன்றாக விண்ணேறியை கற்பனை செய்திருந்தேன்.

இருட்டும் வரை உற்றுப்பார்த்தேன். எத்தனை நிதானமாகப் பார்த்தும் அதன் சுழற்சி கண்ணுக்குத் தெரியவில்லை. எனது விரலைக் கண்முன்னே வைத்துப்பார்த்தேன். கட்டைவிரலால் விண்ணேறி நகரத்தை மறைந்துவிட முடிந்தது. மறைவதும் தெரிவதுமான விளையாட்டை பல முறை செய்து பார்த்தேன். விண்ணேறி இல்லாத செளந்தர்ய உலகம் எப்படி இருக்கும்? எவ்வளவு யோசித்தும் அப்படி ஒரு உலகை கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி ஒரு உலகம் அமைதியாக, நிறைவாக இருக்கும் எனத் தோன்றியது. எனது குன்றிலிருந்து விண்ணேறி நகரம் எத்தனை தூரம் என கணிக்கப் பார்த்தேன். சதா சுழலும் விண்ணேறியை தூரங்களாலும் உயரங்களாலும் அளக்க முடியாது என ஆயி சொன்னது நினைவுக்கு வந்தது.

*

முதலில் வாசனை வந்தது. கூடவே காதுகளைக் கூசச்செய்யும் தொடர் ஒலி, முறிந்துவிழும் மூத்த மரங்கள் போல. இரவு முழுவதும் எனக்குத் தெளிவற்ற தூக்கம். சத்தம் கேட்டு அதிகாலை விழித்தபோது சுயநினைவு தெளிவதற்கு சில நொடிகள் ஆயின. வாசனை உறைத்ததும் சுய ஞாபகம் வந்தது. நேற்று முழுவதாக இறக்கிவைக்காததில் மார்புகள் கனத்த மூட்டை போல பெருத்திருந்தன. சகல உறுப்புகளும் பிய்ந்து விழுவது போலொரு வலி. சிறிது நேரத்தில் எல்லாம் நிதானத்துக்கு வந்தபோது மீண்டும் கடும் வாசனை என் நாசியை நிறைத்தது.

மெல்ல வெளியே எட்டிப்பார்த்தேன். குரேம்பாக்கள் அருகில் இல்லை. விடுவிடுவென வெளியேறினேன். வான்குடி பள்ளத்தாக்குக்கு அருகே சிறு சுனை உண்டு. அங்கு சென்றால் மட்டுமே மலைப்பகுதியை முழுவதுமாகப் பார்க்கமுடியும். மண்குடியில் சத்தமே இல்லை. எல்லாரும் வாசனையைத் தேடி போயிருக்க வேண்டும். மண்குடிகளின் உலகில் பிற உயிர்கள் கிடையாது. பல கதைகள் மூலம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட யுத்தக்காலம் இப்போதும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. துறவெளி எனும் பள்ளத்தாக்கில் யுத்தகாலத்தில் வான்குடிக்கும் மண்குடிக்கும் நடந்த சண்டையின் கதை மட்டுமே நாங்கள் அறிந்தது. சிறு வயது முதல் மூத்தோர்குடிக்குச் செல்லும்வரை ஒரே கதை பல முறை எங்களுக்குச் சொல்லப்படும். இப்போது வரும் வாசனை வான்குடிகளுக்கே உரியது என எனக்குத் தோன்றியது ஒரு சிறு தள்ளாட்டம் ஏற்பட்டது. மலை ஒரு முறை சுழன்றது போல ஒரு மின்னல் வெட்டு. வாசனை மேலும் தீவிரமடைய என் நடையில் வேகம் கூட்டினேன்.

தானியமடத்துக்கு அருகே கூட்டம் கூட்டமான மண்குடிகள் நின்றிருந்தனர். பெருத்த சத்தம் அந்த இடத்தை நிரப்பியது. தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்கள் அனைவரும் ஒரே உடல்பரப்பைக் கொண்டது போலத்தோன்றியது. அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் குரேம்பாக்கள் நின்றிருந்தனர். மண்குடிகளின் இடமல்ல தானியமடம். என்ன நடக்கிறது! தானியமடத்துக்கு அரி மட்டுமே வர இயலும். மண்குடிகளுக்குத் தேவையான விலங்குகள் பாதி மயக்க நிலையில் தானியமடத்தில் வைக்கப்பட்டிருக்கும். விடியலுக்குள் குரேம்பாக்கள் அவற்றைச் சேகரித்து மண்குடி சதுக்கத்தில் வைத்துவிடுவர்.

தானியமடத்தைத் தாண்டியதும் வான்குடி பள்ளத்தாக்கு ஆரம்பமாகிவிடும். கரிய உடலும், அரைகுறையாக வெந்திருந்த கைகால்களும், செம்மஞ்சள் விழிக்குழிகளும் உள்ள மனிதர்கள் அங்கு நடமாடுவதாக எங்கள் கதைகள் சொல்லும். மண்குடிகளை அழிக்கக்கூடிய வெறிபிடித்த மிருகங்களுக்கான பள்ளத்தாக்கு. குரேம்பாக்களின் கண்காணிப்பில் யாருமே வர இயலாத இடத்தில் இன்று பெரும் கூட்டம்.

யம்மே என்னை உடனடியாக கண்டுகொண்டாள். `வேணாம் போயிடலாம்..பயம்மாயிருக்கு`, என என் கையைப்பிடித்து இழுத்தாள்

எங்கிருந்தோ பெரும் சத்தம், இதுவரை நான் பார்த்திராத உருவில் பெரும் பாறை வடிவில் ஒரு குரேம்பா வேகமாக ஓடிவந்தது.

*

யாரோ கூப்பிடுவதைப் போலிருந்ததில் கண்ணைத்திறந்து பார்த்தபோது அந்த விபரீதம் புரிந்தது. ரப்பர் முகத்தோடு ஒரு உருவம் என் மூக்கைத் தொடும் தூரத்தில் கிடந்தது. அதன் கண்கள் முழுவதும் திறந்திருந்தன. திடீரெனத் தாக்கப்பட்டவன் போல அவனது பார்வை திகிலின் உறைகணமாக இருந்தது. ஜில்லிட்டுப்போன அழுகிய மூக்குநுனி கூரான ஊசி குத்தல் போலிருந்தது.

எப்படியேனும் எழுந்துவிடவேண்டும் என காலால் எழும்பப் பார்த்தேன். என் முன்னே கிடந்தவனின் மேலே அடுக்கடுக்காகப் பிணங்கள் கிடந்தன. அவற்றைத் தாண்டித் தெரிந்த கதவின் கைப்பிடி துருபிடித்திருந்தது. திமிறித் தவித்த போதும் மண்டை ஓடுகளும், செம்பட்டை மயிர் கற்றைகளும் விழுந்தவண்ணம் இருந்தன. சுற்றிலும் கடுமையான அமிலக் காற்று. கதவு துளையிட்டு தெறிக்கும்படி கத்தினேன். அலறினேன். யம்மே, சம்பா, யதி, பெருங்கிழன் என தனது குல மூத்தார் வரை எல்லாரையும் துணைக்கு அழைத்தேன். ஒவ்வொரு சத்தமும் எனக்குள்ளேயே ஒடுங்குவது போலிருந்தது. மண்ணுக்கடியே புதைந்துபோன பழங்கதைகளோடு மக்கிப்போய்விடுவேனோ என பயமாக இருந்தது. ஐயோ கதவைத் திறங்க. உதவி உதவி. பிணங்கள் ஒவ்வொன்றும் பழங்கனவை உண்டு செறித்துக் கிடப்பது போல அசைவற்றுக்கிடந்தன. நேரம் மட்டும் நகர்ந்துகொண்டிருக்க பிற பரிமாணங்கள் உறைந்திருந்தன. வெளியிலிருந்து உதவி வரப்போவதில்லை. நானே இங்கிருந்து வெளியே வந்தாக வேண்டும். உடலற்று உயிரற்று கிடப்பது போலிருந்தால் சில நாட்களைக் கடத்த முடியும். ஒரே நேரத்தில் புலன்கள் அனைத்தும் முழு உயிர்ப்போடும் சுரணையற்றும் கிடக்க வேண்டும். என்னைச் சுற்றியிருந்த பிணங்களின் கனவுகளில் நிலமற்ற நிலங்களும், ஈரமற்ற நீர்வீழ்ச்சிகளும், மணலற்ற பாலைவனங்களும் இருக்கக்கூடும். இங்கு எதுவும் மாறாது. என்னுடைய இடமல்ல இது. படபடவென அடிக்கத் தொடங்கிய இதயத்தை முதலில் ஒரு நிலைக்குக் கொண்டுவரவேண்டும். நான் இங்கு எப்படி வந்தேன், இங்கிருந்து எப்படி தப்பிப்பேன் என நினைப்பதை விடுத்து என் சிறுவயது விளையாட்டுகளை ஞாபகப்படுத்திக்கொண்டேன். வயது பின்னே போகப் போக இந்த மண்புதையலுக்கு உள்ளே முழுமையாக வாழத் தொடங்கியது போலத் தோன்றியது.

சிறு வயதில் அரி சொன்னது நினைவுக்கு வந்தது.

`வாழ்க்கை உனக்கு எள்ளைக் கொடுத்தால், அதிலிருந்து எண்ணெய் எடுக்கப் பார்`

`அரி, நீ சொல்வது எதுவும் விளங்கவில்லை. எள்னா என்ன?`

`ரொம்பவும் யோசிக்காதே. விடமாட்டார்கள். நானே சொல்கிறேன் கேட்டுக்கொள். உன் காலத்தில் அது ஒரு சாதனையாக இருக்கலாம்`

மீளாமல் போய்விடக்கூடிய பயணத்தின் எல்லையைத் தொட்டுவிட்டது போல பெருமூச்சு. சக்தி அனைத்தையும் இழந்துவிட்டதுபோல சூன்யமான உலகத்திலிருந்து திடீர் விழிப்பு நிலை; பெரும் சத்தம் காதை அடைத்தது.

முகம் முழுவதும் வியர்த்திருக்க விழிப்பு தட்டியது.

என்ன ஆனது? உணர்வின் அறுதி எல்லையில் நான் இருப்பது போலவும், ஒளி மிகு உலகம் தூரத்தில் விலகிப் போவது போலவும் கால இடவெளி. இதோ தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது;காலவிலகலைத் தாண்டியும்.

அரியின் மணிக்கட்டுகளிலும் புஜங்களிலும் நெருக்கமாக குத்தப்பட்டிருந்த உலோக வளையங்கள் வேகமாக அசைவது போலொரு உணர்வு.

வெளியே நீல இருள் பிரியாதிருந்தது. மெல்ல உடல் ஒரு நிதானத்துக்கு வந்தது.

இப்படி பல கதைகளை தனது குடும்பக் கதைகள் எனச்சொல்லியிருக்கிறாள் யதி. கதையின் நிகழ்வுகள் பெரும்போருக்கு முன்னர் நடந்தவை. வான்குடிகளின் வெற்றிக்கதை. இன்று மண்குடிகளுக்கு அவை அனைத்தும் புதிர் மட்டுமே. எட்டாக் கனவு.

**

வஞ்சி எனும் கன்னிகை

பொன்னாலான ஆடைகளை அப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். யம்மேயின் கைகளில் மின்னிய சிறு வெள்ளிச் சரடுகள் வேகமாக நகரும் விண்மீனைப்போல இருளைக் கிழித்துக் கடந்தன. கற்குவியல்களில் கூரானக் கற்கள் அவள் கால்விரல்களைக் கிழிக்கக்கூடும். தோளிலிருந்து கை அறுபடுவதுபோல அவளை இழுத்துச் சென்ற குரம்பேக்களின் பார்வை உச்சிப்பாறையிலிருந்து விலகவில்லை. அவள் அழக்கூடாது. அதற்கு அனுமதியில்லை. தூரத்தில் குவிந்திருந்த செம்மண் மேட்டின் பிளவிலிருந்து நானும் சம்பாவும் திகிலுடன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தோம். சம்பாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. இறுக கண்களை மூடிக்கொண்டு என் கால்களை அணைத்திருந்தாள். அவளது உதடு எதையோ முணுமுணுத்தபடி இருந்தது.

திடீரென ஒரு பிளிறல் சத்தம். மரங்கள் முறிவது போல. என் காலில் துளைபோட்டுவிடுவது போல சம்பாவின் நகம் தோலை ஊடுருவியது. வலியில் என் ஒரு கண் துடித்தபடி இருந்தது. நிதானமாக அவள் அருகே உட்கார்ந்து அழுத்தமாக அவளது கையை விலக்கப்பார்த்தேன்.

`போயிடலாம் வஞ்சி`

அழுது முடித்தவள் போல ஈனஸ்வரத்தில் முணகினாள்.

`ஏ..நம்ம யம்மே டீ..`, என செம்மண் மேட்டைத்தாண்டி சுட்டினேன்.

அவள் என் பிடியை மேலும் இறுகினாள்.

சம்பாவை அணைத்து உட்கார்ந்தேன். என் விரல்களில் சாமந்திப்பூ வாசம். காலையில் அரக்கு போட்டுத் தேய்த்தும் மிச்சம் இருந்தது. சம்பா பிடித்திருந்த பிடியைத் தளர்த்திவிட்டு மண்ணில் புதையப் புதைய விரல்களை பரபரவெனத் தேய்த்தாள். சம்பாவின் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை.

நான் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

என்னை இறுக அணைத்தபடி சம்பா பேச்சை மறந்து கிடந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தோம் எனத் தெரியவில்லை. திடீரென விழித்தபோது வைகறை வெளிச்சத்தில் தூரத்து மலைகுகைகள் துலங்கின.

உடனே எங்கிருக்கிறேன் எனப் புரிந்தது. செம்மண் மேட்டிலிருந்து எட்டிப்பார்த்தேன். இனி பத்து நாட்களுக்கு குகையிலிருந்து யம்மே வெளியே வரமாட்டாள். ஆம், பத்து நாட்கள். வெளியே வந்துதான் என்ன? யம்மே என்றொருத்தி இல்லாமல் இருப்பது போலத்தானே எனும் நினைப்பு வந்ததும் முள் குத்தியது போன்றொரு திடுக்கிடல். முட்புதர் உராய்வுகளைக் கூடத் தாங்கமுடியாதவள் எப்படி குரம்பேக்கள் இழுத்துப்போனபோது அழாமல் இருந்தாள்?

அம்மோம்மா சொல்றதெல்லாம் உண்மையா இருக்குமோ என நினைக்கும் நேரம் என் கண்கள் சுழற்றன. பிடி நழுவியதில் செம்மண் சரிவில் உருண்டோம். எந்த வலியும் தெரியவில்லை. அம்மோம்மா சொன்னது மட்டுமே கடலில் திரண்ட குரலாக ஒலித்தது.

*

FutureCity

[ நன்றி: Fantasy on City Image in the Future (Image by: Yaroslav Shkriblyak)]

நிமிடத்துக்கு ஒரு முறை விழிப்பு தட்டுவதுபோல அரியின் உடம்பு துடித்தபடி இருந்தது. அரைவட்ட வடிவில் சுற்றிலும் இளைஞர்கள் நின்றிருந்தனர். உதறல்களுக்கு இடையே அரியின் உதடு பிரிந்து வந்தது. பாட்டு பாடத் தயார் ஆகுபவள் போல வாயை அகல விரித்து பின்னர் மூடிக்கொள்வாள். மீண்டும் ஒரு துடியாட்டம். அவ்வப்போது நீளமான குடுவையிலிருந்து இளைஞர்கள் அவள் வாயில் நீரை ஊற்றினர். அசைவற்றதும் தீயிட்ட உயிர்ப்பொட்டைப் போன்ற துடிப்பும் மாறி மாறி வந்தன.

அரிக்கு துடிப்பு எனக் கேட்டதும் பால்பிடிக் கிடங்கிலிருந்து ஓடி வந்துவிட்டதில் என் மேலாடை முழுவதும் ஈரமாகியிருந்தது. இளைஞர்கள் நின்றிருந்த விளிம்புக்கருகே யம்மேவைப் பார்த்தும் அவளுடன் இணைந்துகொண்டேன்.

அரியை ஒரு பெரும் சட்டியில் அமரச் செய்தனர். ரெண்டடுக்கு சட்டியில் கீழே கொழுத்த தீ எரிந்துகொண்டிருந்தது. சுற்றிலும் நின்றிருந்த பெரியவர்கள் கண்களில் தெரிந்த உக்கிரம் அரியின் சன்னதத்தை போல தீவிரம் அடைந்திருந்தது.

யாமே பிண்டம்

எஞ்சியதனைத்தும் இவ்விடமே! இவ்விடமே!

உடம்பாலான அலை போல இளைஞர்கள் சீராக ஆடிக்கொண்டிருந்தனர். ஒரே குரலாக மந்திரத்தை முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லார் வாயும் அதை முணுமுணுத்தன. சம்பாவுக்கருகே இருந்தவளின் கையில் அரைவிழிப்பு நிலையில் இருந்த குழந்தையின் உதட்டசைவும் கோர்வையாக இருந்தது. எனக்குப் பின்னால் யாரும் இல்லை எனத் தெரிந்ததும், அக்குழந்தையின் உதடுகளில் தவழும் சிறு சிரிப்பை ரசித்தேன். ஒரே ஒரு நொடிதான். சம்பா என்னை முறைப்பது தெரிந்ததும் என் பார்வையை மாற்றிக்கொண்டேன்.

மந்திரத்தின் முழக்கம் என்னைச் சுற்றியிருந்த மலைப் பிரதேசத்தில் எதிரொலித்துக் கலந்தன. ஒலி அலைகள் பெருகிப் பெருகி கானகத்தின் வசீகரத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து பார்வையை விலக்காமல் ஓரக்கண்ணால் எங்கள் மலைக்குகைகளைப் பார்த்தேன். மண்ணில் செல்லரித்துக் கிடந்த கறையான் குன்றுகள் வெடித்து வெளிவந்தது போல ஆங்காங்கே மேட்டுக்குகைகள். அரி துடித்தடங்கும் மண் சட்டியைப் போல எங்கள் குடியிருப்பு அத்தனையும் மண் வெடிப்புகள்.

கடல் அலை உறைந்தது போல மண் மடிப்புகள்.

யாமே பிண்டம் என முணுமுணுத்த உதடுகள் சொன்னதைக் கேட்டதும் பெரும் திடுக்கிடல் ஏற்பட்டது. உடல் கூசுவதைப் போல, அரியின் கால்களின் வெம்மை என் உடல் முழுவதும் அனலானது. வேகவேகமாக கூட்டத்தின் தாளத்தை மீறி  யாமே பிண்டம், யாமே பிண்டம் எனப் பிதற்றத்தொடங்கினேன். எனக்கு முன்னால் நின்றிருந்த கிழவிக்கு எனது பதற்றம் உறைத்திருக்க வேண்டும். என்னைத் திரும்பிப் பார்த்தாள். சிமிட்டாத எனது கண்கள் அரியை நோக்கி நிலைக்குத்தியிருந்தன.

என்னைச் சுற்றிய மலைகள் சுழன்று மேலே விழுவது போலிருந்தன. நேற்றிரவு இப்படித்தான் இருந்தது. ஒரு வினோதமான நினைப்பு. கரிச்சாம்பலை அள்ளிப் பூசியிருந்த அரியைப் போல மலை முழுவதும் மலர்களால் பூசப்பட்டது போல ஒரு கணத்திடுக்கிடல். சற்றுத் தொலைவில் பெரும் சத்தத்தோடு உறங்கிக்கொண்டிருந்த குரேம்பாவின் உடல் மேலெழும்பி இறங்குவது போலிருந்தது. இவ்விடமே, இவ்விடமே என அவசரம் அவசரமாகச் சொல்லிக்கொண்டேன். படு படு எனச் சொல்வது போல குரேம்பாவின் கைகள் அசைந்தன.

*

Sunset-Mountain

வலக்கையில் மரத்தாலான சின்னமும், இடக்கையில் பாறை வெடிப்புகள் போல் கொப்பளங்களுமாக பெருகடல் முன் அமர்ந்திருந்தாள் அரி. ஆழ்கடல் வினவியதும் வாய் திறவாமல் பதில் சொன்னதும் அவளது அகம் மட்டும் அறியும். சினமற்ற தினங்களில் கடல் அவளுடன் அளவலாவும். இறந்த பெரும் கடல் ஆமைகளும், வேட்டை மீன்களும் எலும்புகளாகக் கரையில் சிதறிக்கிடந்தன. ஆழக்கடல் உள்ளடங்கி தனது அகத்தைக் காட்டும் பருவத்தில் அவள் கைநீட்டி நின்றிருப்பாள். கடும் மழையும், தீப்பிழம்பும் வானிறங்கி வரும்போதும் அசையாது நின்றிருப்பதை மலைமக்கள் கண்டனர்.

கடலுக்கு அடியிலும் விசும்பின் விரிவுக்கு அப்பாலும் கண்டங்கள் உண்டென அவள் அறிவாள். மலை மக்கள் அறியார் என்பதையும் அவள் அறிவாள். புல்லினங்கள் அற்ற வெறுமை கடலின் ஆழம் வரை சென்றது. தனது கூனல் உடலை வளைத்து நின்று, ஏக்கத்தால் நிறைந்த குழிக்கண்களைக்கொண்டு கடலுக்குள் தேடுவாள்.

அரி நின்றிருந்த பச்சைமலை சிவந்தது. பச்சையும் மண்ணுமாயிருந்த பெருங்குவியல் தழல் நிறத்தில் கரைந்தது. நீலக்கடலிலிருந்து வெகுண்டெழுந்த ஜ்வாலை அப்பகுதியையே மூடிவிடுவது போல பற்ற வைத்தது. எல்லையின்றி காணும் திக்கெல்லாம் விரிந்து கிடந்த விசும்பின் மீது நெருப்புப் பொத்தல் விழுந்தது போலக் கண்கூசியது. ஜ்வாலை அரவணைக்கக் காத்திருப்பவள் போல விரித்த கைகளுடன் அரி நின்றிருந்தாள். காற்றின் உப்பு மணம் மறைந்தது. அவளுக்குப் பின்னாலிருந்த மலைகுடிகளின் மண்மேடுகள் சிறு தீப்பந்தங்கள் போலக் காற்றில் துடித்தன.

சருகுகள் மீது ஆவேசமாக மோதும் நெருப்பு மழையை விரித்த கண்களுடன் அரி பார்த்திருந்தாள். பொலபொலவென மரப்பட்டைபோலக்கிடந்த அவளது கூந்தல் பளபளத்தது. விம்மித் தணிந்த மார்பு பிரபஞ்சத்தைக் கும்பியாற்றும் வல்லமையில் செழித்திருந்தன. இதழோரம் குறுநகைப்போடு நெருப்புப் பொத்தலைப் பார்த்திருந்தாள்.


Filed under: எழுத்து, கதை, ரா. கிரிதரன் Tagged: ஆறாம் கயல், ரா.கிரிதரன்
04 Feb 23:37

கவிதையாக்கம் – விக்ரமாதித்யன்

by natarajanv
(1987ஆம் ஆண்டு குற்றாலம் கவிதைப்பட்டறையில் வாசிக்கப்பட்டு நட்புறவுப்பாலம் இதழில் திருத்தி எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி)
வாழ்க்கைப் பார்வையில் மனவேகம் ஆத்மவிசாரமாக மாற்றம் பெறும்போது, உணர்வுகளும் தத்துவக்கோலம் கொண்டு விடுகின்றன என்பது என் அனுபவம்.
 
ஒரு கவிஞன் தன்னியல்பாகவே சிந்தனையாளனாகவும் இருக்கிறான்; தனக்கு வாய்க்கப்பெற்ற உள்ளுணர்வினால் விஷயங்களை ஊகித்து அறிந்து கொள்கிறான்; தர்க்கரீதியாகவோ காரண காரியங்கள் வழியாகவோ அல்லாமல், புலன்கூர்மை காரணமாகவே சூட்சுமமாக உணர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, யதார்த்தங்கள் வெறும் விழுதுகள்தாம் என்று கண்டுகொள்கிறான்; அடிப்படையான உண்மைகள் என்கிற வேர்கள் அவனுக்கு மலைப்பைத் தருகின்றன. அப்போது உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, தத்துவப்பார்வை ஏற்பட்டு விடுகிறது; சமவெளியில் இறங்கிய நதி போல் ஆகிறது அவன் கவிதை. என் சமீபத்திய கவிதைகள் பலவும் அதுபோலத்தான். இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகள்:
 
எழுத்தில் என்ன இருக்கிறது

இதிகாசமும்
வரிகளாலானது

வரிகளையுடைத்தால்
வாக்கியங்கள்

வாக்கியங்களை முறித்தால்
வார்த்தைகள்

வார்த்தைகளைப் பிரித்தால்
எழுத்துகள்

எழுத்தில் 
என்ன இருக்கிறது

(உள்வாங்கும் உலகம், பக்கம் 36)

எதுக்கு
 
செம்பருத்திப்பூவின் நிறம்
செண்பகப்பூவின் மணம்
செவ்வந்திப்பூவின் குணம்

(உள்வாங்கும் உலகம், பக்கம் 36)

உள்ளுணர்வை அதிகம் நம்புகிற ஒருவன், செய்திறனில் அவ்வளவாக அக்கறை காட்டாமல் இருப்பதுதான் இயற்கை; ஆனால் கவிஞன் என்று ஸ்திரப்பட்டுவிட்ட பிறகும் அப்படியே இருக்க முடியாது; மேலும், கவிதையைச் செழுமைப்படுத்தச் செய்திறன் கட்டாயம் தேவை; செய்திறன் இல்லாமல், சோதனை முயற்சிகள் மேற்கொள்வது சாத்தியமில்லை; சமீபகாலமாக செய்திறன் இல்லாமல் நான் எழுதுவது இல்லை.
 
பெரும்பாலும், போதையில், ஒரு மன அவசியத்தில் எழுதுவதே என் இயல்பு என்பதாலும், சமயங்களில், எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற பேராசையினாலும், நிறைய வரிகள் எழுதிவிடுகிறபோது என் கவிதைகளுக்கு ‘எடிட்டிங்’கும் திரும்ப எழுதுதலும் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. பிரதியெடுக்கும் போதெல்லாம் வார்த்தைகளை மாற்றிக் கொண்டிருப்பதோ, திருத்திக் கொண்டிருப்பதோகூட உண்டு.
 
பொதுவாக, உத்திகளிலும் கட்டமைப்பிலும் பெரிதாக ஒன்றும் ஈடுபாடு காட்டுவதில்லை; தன் போக்கில் விட்டுவிடுவதுதான் என் போக்கு; வார்த்தைகளை மட்டுமே நம்பிக் கவிதை சொல்லும் மரபின் செல்வாக்கு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால்தானோ என்னவோ, என் கவிதைகள் நேரடித்தன்மை கொண்டதாகவும், எளிமையானதாகவும், எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் புரியக்கூடியதாகவும் அமைத்திருக்கின்றன.
 
(கங்கோத்ரி, 2012 பக்கம் 97 – 99)

நன்றி: கயல் கவின் புக்ஸ் – இணையத்தில் வாங்க

Filed under: எழுத்துச் சித்தர்கள், விக்கிரமாதித்யன் Tagged: கவிஞர் விக்கிரமாதித்யன்
04 Feb 23:36

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34

by jeyamohan

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 8 ]

விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் விழுந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார்.

சுகசாரியைப்பற்றி அவர் ஒரு சூதர்பாட்டில் கேட்டிருந்தார். அங்கே கிளிகள் மனித மொழிபேசும் என்றார் சூதர். காடெங்கும் பச்சைப்பசுங்கிளிகள் இலைக்கூட்டங்கள் போல நிறைந்திருப்பதனால் அந்தக்காடே பகலெல்லாம் வேள்விக்கொடி ஏறிய சாலை போலிருக்கும் என்றார் சூதர். அங்கு செல்லும் வழியையும் அவர்தான் சொன்னார். ‘விந்தியமலை கங்காஸ்தானத்தை அள்ளிவைத்திருக்கும் உள்ளங்கைபோன்றது. அந்தக்கையின் விரலிடுக்கு வழியாக வழிந்தோடும் சிறிய நதிகளின் பாதையில் சென்றால் தட்சிணத்தை அடையலாம். தட்சிணத்தின் தலையாக இருப்பது விதர்ப்பம்.’

விந்தியனை அடைந்து அந்த சிறிய மலையிடுக்கை கண்டடையும் வரை கீழிறங்க ஒரு வழி இருப்பதையே அவர் உணரவில்லை. காடு வழியாக அருகே நெருங்கிய ஒற்றையடிப்பாதை பெரிய மலையில் முட்டி காணாமல் போயிற்று. ஆனால் காட்டுக்குள் மேயவிடப்பட்டிருந்த பசுக்கூட்டம் ஒன்று தலையை ஆட்டி கழுத்துமணிகளை ஒலிக்கச்செய்தபடி கனத்த குளம்பொலியுடன் இயல்பாகச் செல்வதைக் கண்டு அதை பின்தொடர்ந்தார்.

மழைநீர் வழிகண்டுபிடித்து ஒழுகிச்செல்வது போல பசுக்கள் இரு மலைகளுக்கு நடுவே சென்றன. அங்கே வெண்ணிறச்சரடு போல ஒரு சிறு நீரோடை நூற்றுக்கணக்கான பாறைகளில் விழுந்து விழுந்து நுரைத்து பளிங்கு மரம் கீழிருந்து எழுந்தது போல கீழே இறங்கிச்சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை அறுத்து உருவாக்கிய இடைவெளி கோட்டைவாயில் எனத் திறந்து, பலகாதம் ஆழத்துக்குச் சுருண்டு கீழே சென்று, பச்சைப்படுங்காட்டில் முடிந்தது. காட்டுக்குமேல் வெண்பட்டாக மேகம் பரவியிருந்தது.

பாறைகளின் நடுவே பெரிய பாறைகளைத் தூக்கிப்போட்டு வளைந்து செல்லும் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கோடைகாலத்தில் அப்பாதையை திருவிட நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது ஆங்காங்கே அவர்கள் கட்டியிருந்த நிழல்குடில்களில் இருந்து தெரிந்தது. பாறை இடுக்குகளில் அவர்கள் பொதிகளை ஏற்றிச்சென்ற அத்திரியின் சாணி உலர்ந்து படிந்திருக்கக் கண்டார். உதிர்ந்த தானியங்கள் முளைத்த கதிர்கள் சரிந்துகிடக்க அவற்றில் சிறுகிளிகள் எழுந்து பறந்துகொண்டிருந்தன.

கற்பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி காட்டுப் பழங்களையும் கிழங்குகளையும் ஓடைமீன்களையும் உண்டபடி வியாசர் பகல்கள் முழுக்க பயணம் செய்தார். இரவில் உயரமான மலைப்பாறை மேல் ஏறி அங்குள்ள ஏதேனும் குகையிடுக்கில் தங்கினார். எதிரிகளால் சூழப்பட்டு துரத்தப்பட்டவர் போல சென்று கொண்டே இருந்தார். முதல் இடையர்கிராமத்தில் சுகசாரிமலை பற்றி விசாரித்துக்கொண்டு மேலும் நடந்தபோதெல்லாம் பயணத்தை இயக்கும் இரு விசைகளே அவரை முன்னகர்த்தின. கிளம்பிய இடத்தில் இருந்து வெளியேறும் வேகம், இலக்காகும் இடத்தை எதிர்நோக்கும் ஆவல். ஏதோ ஒரு தருணத்தில் அதை அடைந்துவிட்டோம் என்று உணர்ந்தகணமே கால்கள் தயங்கின.

கீழே இறங்கி அவர் அடைந்த முதல் கிராமம் சதாரவனத்தின் முகப்பு என்றார்கள். சதார வனத்தில் அவர் சந்தித்த ஒரு திருவிடத் துறவிதான் சுகசாரி மலையைப்பற்றி முழுமையான விவரணையை அளித்தார். அவர் இமையமலைக்கு சென்று கொண்டிருந்தார். பாதையோரத்தில் யாரோ ஒரு வணிகன் கட்டிவிட்டிருந்த தர்மசத்திரத்தின் முன்னால் இரவில் வெறும்பாறைமீது மல்லாந்து படுத்து விண்மீன்கள் நிறைந்த வானை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். கன்னங்கரிய நிறமும் நுரைபோன்ற தலைமுடியும் தாடியும் புலிக்கண்களும் கொண்ட நெடிய மனிதர். கைவிரல்களில் இருந்து எப்போதும் ஒரு தாளம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.

சத்திரத்துப் பொறுப்பாளரான மூதாட்டியும் மகளும் கைநிறைய வெண்சங்குவளையல்களும் கழுத்தில் புலிக்கண்கள் போன்ற சோழிகளாலான மாலையும் அணிந்து நெற்றியில் ஒரு கழுகுச்சின்னத்தை பச்சை குத்தியிருந்தார்கள். மாலையில் பயணிகள் அதிகமிருக்கவில்லை. பெரும்பாலும் திருவிடத்து சிறுவணிகர்கள். அவர்கள் மூதாட்டி கொடுத்த தீயில்சுட்ட அப்பத்தையும், தொன்னையில் கொடுக்கப்பட்ட கொதிக்கும் புல்லரிசிக்கஞ்சியையும் வாங்கிக்கொண்டு வந்து ஆங்காங்கே சிறிய குழுக்களாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தனர். அவர்களின் அத்திரிகளும் கழுதைகளும் குதிரைகளும் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டு, கழுத்துமணிகளின் ஒலி சேர்ந்தெழ, முன்னால் போடப்பட்ட உலர்ந்த கோதுமைத்தாளை மென்றுகொண்டிருந்தன.

வியாசர் கையில் உணவுடன் நாற்புறமும் பார்த்தபோது அந்த தட்சிணத்துறவியைப் பார்த்து அவர் அருகே சென்றார். அப்பத்தை கஞ்சியில் தோய்த்து உண்டபின் அருகே ஓடிய ஓடையில் கைகழுவிவிட்டு வந்து அந்தப்பாறையில் அமர்ந்தார். துறவி சற்று ஒதுங்கி இடம் விட்டார். வியாசர் குளிர்ந்த பாறையில் அமர்ந்துகொண்டார். நீண்ட நடைபயணத்தின் அலுப்பை உடல் உணர்ந்தது. ஒவ்வொரு தசைநாரும் மெல்லமெல்ல இறுக்கத்தை இழந்து தளர்ந்து படிந்தது. துறவி விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“இன்னும் மூன்றுநாட்களில் மழைக்காலம் தொடங்கும்” என்றார் வியாசர். அவர் துறவியிடம் பேச விரும்பினார். அவரது கால்களைப்பார்த்தபோது அவர் சென்ற தூரம் தெரிந்தது. “ஆம், அங்கே திருவிடநாட்டில் இப்போதே மழை தொடங்கியிருக்கும்” என்றார் துறவி.

“நீங்கள் திருவிடத்தில் இருந்து வருகிறீர்களா என்ன?” என்றார் வியாசர். “ஆம்” என்றார் துறவி. “எங்கே செல்கிறீர்கள்?” துறவி விண்மீன்களைப் பார்த்தபடி “வடக்கே” என்றார். “ஏன்?” என்றார் வியாசர். “ஏனென்றால்… நான் தெற்கே பிறந்தமையால்” என்றார் துறவி.

வியாசர் மெல்லிய அங்கதத்துடன் “அப்படியென்றால் வடக்கே பிறந்த நான் தெற்குநோக்கிச் செல்லவேண்டுமா என்ன?” என்றார். “ஆம், பாரதவர்ஷம் ஞானியின் கையில் கிடைக்கும் விளையாட்டுப்பாவை. எந்தக்குழந்தையும் பாவையின் அறியாத பகுதியையே திரும்பிப்பார்க்கும்.”

அந்த கவிப்பேச்சு உருவாக்கிய மதிப்புடன் “என் பெயர் கிருஷ்ண துவைபாயனன்” என்று வியாசர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நீங்கள் வேதங்களை தொகுத்தவர் அல்லவா?” என்று அவர் பரபரப்போ வியப்போ சிறிதும் இன்றி கேட்டார். வியாசர் “ஆம், நான்தான். என் தந்தையின் ஆணைப்படி அதைச்செய்தேன்” என்றார்.

“என் பெயர் தென்மதுரை மூதூர் சித்திரன் மைந்தன் பெருஞ்சாத்தன். முதுகுருகு, தண்குறிஞ்சி என்னும் இருநூல்களை நானும் யாத்துள்ளேன்” என்றார் துறவி. “நாம் சந்திப்பதற்கு ஊழ் அமைந்திருக்கிறது. அது வாழ்க!” வியாசர் “பாண்டியநாட்டைப்பற்றி நான் ஓரளவு அறிந்திருக்கிறேன்” என்றார். “கொற்கையின் முத்துக்களின் அழகை பாடியிருக்கிறேன்.”

சாத்தன் புன்னகைத்து “அவை என் முன்னோரின் விழிகள். கடலுள் புதைந்த எங்கள் தொல்பழங்காலத்தைக் கண்டு பிரமித்து முத்தாக ஆனவை அவை. அவற்றின் ஒளியில் இருக்கின்றன என் மூதாதையர் வாழ்ந்த ஆழ்நகரங்கள். ஆறுகள், மலைகள், தெய்வங்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அழியாப்பெருங்கனவையே நாங்கள் உலகெங்கும் விற்றுக்கொண்டிருக்கிறோம்.”

தன்முன் பாரதவர்ஷத்தின் பெருங்கவிஞர் ஒருவர் அமர்ந்திருப்பதை வியாசர் உணர்ந்தார். எஞ்சிய அறிவாணவத்தை அகற்றிவிட்டு அவர் மனம் முழுமையாகவே பணிந்தது.

“கண்ணால் ஞானத்தை அடையவிரும்புபவன் பாரதவர்ஷத்தை காண்பானாக” என்றார் சாத்தன். “வியாசரே, என்றோ ஒருநாள் உங்கள் முதற்சொல்லை அறிய நீங்களும் தென்னகம் ஏகவேண்டியிருக்கும். அங்கே உங்கள் ஊழ்கத்தின் வழிச்சொல்லை உங்கள் தெய்வங்கள் கொண்டுவந்து அளிப்பர்.”

“நான் எப்படி அதைத்தேடிச்செல்வது?” என்றார் வியாசர் பணிவுடன். “வலசைப்பறவைகளுக்கு வானம் வழிசொல்லும்….” என்றார் சாத்தன். வானைச்சுட்டி “விண்மீன்கள் என்னிடம் சொல்லும் வழி ஒன்று உள்ளது. வடக்கே… வடக்கே ஏதோ ஓர் இடம். என் சொல்லைத்தேடி நான் செல்கிறேன்.”

வியாசர் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்தார். கைகூப்பி “குருநாதரே, தங்களை நான் சந்திக்கவைத்த ஆற்றலின் நோக்கத்தை அறியமாட்டேன். அதன் எண்ணம் ஈடேறுவதாக!” என்றார்.

“நீங்கள் உங்கள் மைந்தரைத்தேடிச் செல்கிறீர்கள் அல்லவா?” என்றார் சாத்தன். “இன்னும் நூறுநாழிகைத் தொலைவில் இருவிரல் முத்திரையென எழுந்த இரு பெரும் பாறைகளுக்கு நடுவே செல்லும் பாதை சுகசாரிமலைக்கு வழியாகும்.”

VENMURASU_EPI_34

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“தாங்கள் சுகனை சந்தித்தீர்களா?” என்றார் வியாசர். “ஆம்… நான் தட்சிணமேட்டில் ஏறும்போது ஒரு கிளி இனியகுரலில் வேதமந்திரம் ஒன்றை முழுதுரைப்பதைக் கேட்டேன். வியப்புடன் அக்கிளியைப் பின் தொடர்ந்து சென்றேன். செல்லும்தோறும் வேதமந்திரங்களை உரைக்கும் பல கிளிகளைக் கண்டேன். அவை சுகமுனிவர் வாழும் சுகசாரி மலைக்கிளிகள் என்றனர் ஊரார். நான் அக்கிளிகளைத் தொடர்ந்து சுகசாரிமலைக்குச் சென்றேன். மோனத்தில் அமர்ந்த இளம் முனிவரைக் கண்டு வாழ்த்துரைசெய்து மீண்டேன்” என்றார் சாத்தன்/

“அவன் என் மகன்” என்று வியாசர் முகம் மலர்ந்தார். “அவனுக்கு எட்டு வயதாகும்வரை நானே அவனுடைய ஆசிரியனாக இருந்து வேதவேதாங்கங்களை கற்றுக்கொடுத்தேன். அதன்பின் மிதிலைநகரின் ஜனகமன்னரிடம் அவனை அனுப்பினேன். காட்டிலேயே வளர்ந்த அவன் நாடும் நகரும் அரசும் அமைச்சும் கண்டு தேறட்டும் என்று நினைத்தேன். அரசமுனிவரான ஜனகர் அதற்கு உகந்தவர் என்று தோன்றியது.”

“ரகுகுல ராமனின் துணைவி சீதையன்னையின் தந்தை ஜனகரையே நான் நூல்வழி அறிந்திருக்கிறேன்” என்றார் சாத்தன். வியாசர் “அந்த ஜனகரின் வழிவந்தவர் இவர். கற்றறிந்தும் உற்றறிந்தும் துறந்தறிந்தும் அனைத்துமறிந்த அரசர். அவரது அவையில் சென்று இவன் அமர்ந்தான். ஒவ்வொருநாளும் அங்கே நிகழும் நூலாய்வையும் நெறியாய்வையும் கற்றான்” என்றார்.

வியாசர் சொன்னார். ஒருநாள் ஜனகமன்னர் தன் அவையில் ஓர் அறவுரை நிகழ்த்துகையில் அறம் பொருள் இன்பம் மூன்றையும் அறிபவனுக்கே வீடு திறக்கும் என்றார். அவ்விதி எந்நூலில் உள்ளது என்று சுகன் கேட்டான். அது நூலில் உள்ள நெறியல்ல கண்முன் இயற்கையில் உள்ள நெறி என்றார் ஜனகர். மலர் பிஞ்சாகி காயாகித்தான் கனிய முடியும் என விளக்கினார்.

ஆனால் சுகன் அந்நெறி எளிய உயிர்களுக்குரியது என்றான். கீழ்த்திசையில் நாளும் உதிக்கும் சூரியன் உதித்த மறுகணமே ஒளிவீசத் தொடங்குகிறதல்லவா என்றான். ஜனகர் அதைக்கேட்டு திகைத்தார். பின்பு அறமும் பொருளும் இன்பமும் அறியாத இளைஞன் நீ. நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விடுகதைக்கு பதில் சொல், அதன்பின் நீ சொல்வதை நான் ஏற்கிறேன் என்றார்.

“அந்த வினா பழைய நூல்களில் பலவாறாக சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் வியாசர். உத்தாலகர் என்ற முனிவருக்கு ஸ்வேதகேது என்று ஒரு மைந்தன் இருந்தான். தந்தை தன் ஞானத்தையெல்லாம் அளித்து அந்த மைந்தனை பேரறிவுகொண்டவனாக ஆக்கினார். ஒருநாள் அவர்கள் இருவரும் காட்டில் தவம்செய்துகொண்டிருக்கையில் அங்கே முதிய பிராமணர் ஒருவர் வந்தார்.

அப்பிராமணர் உத்தாலகரின் அழகிய மகனைப்பார்த்து, இந்த வனத்தில் உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகிய மைந்தன் பிறந்தான் என்று கேட்டார். உத்தாலகர், என் மனைவி என்னுடன் தவச்சாலையில் இருக்கிறாள். என் தவத்தை அவளும் பகிர்ந்துகொள்கிறாள் என்றார்.

அந்தப்பிராமணர் அறிவிலும் அழகிலும் குறைந்தவர். கண்பார்வையும் அற்றவர். அவர் சொன்னார். நான் வயது முதிர்ந்தவன். எனக்கு மைந்தர்கள் இல்லை. நீர்க்கடன் செய்ய ஆளில்லாத இல்லறத்தானாகிய நான் நரகத்தீயில் விழுவதற்குரியவன். இந்தவயதில் இனிமேல் எனக்கு எவரும் பெண்ணை தரப்போவதில்லை. ஆகவே உன் மனைவியை எனக்குக் கொடுத்துவிடு. என் குழந்தை ஒன்றை அவளிடம் பெற்றபின் உன்னிடமே அனுப்பிவிடுகிறேன். அதன்பின் அவர் உத்தாலகரின் குடிசைக்குள் நுழைந்து அவரது மனைவியை கையைப்பிடித்து இழுத்துச்செல்லத் தொடங்கினார்.

உத்தாலகரின் மனைவி தவத்தால் மெலிந்தவள், கடும் உழைப்பால் தளர்ந்தவள். அவளுக்கு அந்த முதியபிராமணனை பிடிக்கவுமில்லை. ஆனால் அவள் கூடவே சென்றாள். ஸ்வேதகேது ஓடிச்சென்று அந்தப்பிராமணரைப்பிடித்து நிறுத்தினான். என் தாயை இதற்கு அனுப்பமுடியாது என்று சொன்னான். இது அவளுக்கு துயரத்தை அளிக்கிறது, அவள் பெண்மையை இது அவமதிக்கிறது என்றான்.

பிராமணர் சொன்னார். நெறிநூல்களின்படி எனக்கு ஒரு மைந்தனைப்பெற உரிமை உண்டு. அதற்கு நான் இவளைக் கொண்டுசெல்வதும் சரியே. மகனை ஈன்றளித்தல் பெண்ணுக்கு எவ்வகையிலும் இழிவல்ல, பெருமையே ஆகும். தொல்முறைப்படி ஓர் அரணிக்கட்டையை பதிலுக்குப் பெற்றுக்கொண்டு நீ இவளை விட்டுவிடு.

உத்தாலகரும் அவர் சொல்வது முறைதான், அவர் நரகத்துக்குச் செல்ல நாம் அனுமதிக்கலாகாது என்றார். மைந்தரை பெற்றுவிட்டுச் செல்லாத ஒருவரை இறைசக்திகள் தண்டிக்கும். அந்தத் தூய கடமையை அவர் செய்யட்டும் என்றார்.

ஸ்வேதகேது அந்தப் பிராமணரைப் பிடித்து விலக்கிவிட்டு கடும் சினத்தின் கண்ணீருடன் தன் வலக்கையில் தர்ப்பையை எடுத்துக்கொண்டு “எதன்பொருட்டானாலும் நான் இதை அனுமதிக்கமுடியாது. என் அன்னையை இன்னொருவன் தீண்டுவதை நான் விலக்குகிறேன். இனிமேல் இவ்வுலகில் இந்தப் பழைய நெறிகள் எதுவும் இருக்கலாகாது என நான் வகுக்கிறேன், என் தவத்தின்மேல் ஆணை” என்றான்.

அதைக்கண்ட பிராமணர் “உத்தாலகரே, நீர் நூலறிந்தவர். நீர் சொல்லும், நான் நீர் சொல்வதைச் செய்கிறேன். இவர் சொல்வது பிழை என்றால் நீர் உம் தவ வல்லமையால் இவரைப் பொசுக்கும்” என்று கூவினார். ஆனால் உத்தாலகர் ஒன்றும் பேசாமல் திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டார். திரும்பி வரவேயில்லை.

“நெறிநூல்களான யமசுருதி நாரதசுருதி அனைத்திலும் உள்ளது இக்கதை. இதிலுள்ள கேள்வி என்னவென்றால் ஏன் உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச்சென்றார் என்பதுதான்” என்றார் வியாசர்.

சாத்தன் புன்னகைத்துக்கொண்டு “இதற்கு உங்கள் மைந்தர் என்ன சொன்னார்?” என்றார். “இவ்வினாவுக்கு எவரும் சரியான பதிலை சொன்னதேயில்லை. கதைகேட்ட ஒவ்வொருவரும் அந்தப்பிராமணர்மீது சினம்கொண்டு ஸ்வேதகேது சொன்னவை சரியே என்பார்கள். அது சரி என்பதனால்தான் உத்தாலகர் திரும்பிச்சென்றார் என்று விளக்குவார்கள். அது சரியான விடை அல்ல என்று என் மகன் சொன்னான்” என்றார் வியாசர்.

மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள் என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.

அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான்.

“அன்று ஜனக மன்னர் என் மகனைநோக்கி நீ நூறாண்டு வாழ்ந்து கனிந்தவன் போல் பேசுகிறாய். உனக்கு முதல்மூன்று வாழ்வுமுறைமையும் தேவை இல்லை. நீ சூரியன் போன்று எப்போதும் ஒளியுடையவனாக இருப்பாய் என வாழ்த்தினார்…” என்றார் வியாசர். “அங்கிருந்து அவன் என்னிடம் வந்து சேர்ந்தான். அவனை என்னால் உணரமுடியவில்லை. அவனிடம் மீண்டும் மீண்டும் இல்லறம் பற்றிச் சொன்னேன்.”

“ஆனால் ஒருநாள் நானும் அவனும் நீர்நிலை ஒன்றைக்கடந்து சென்றோம். முன்னால் அவன் சென்றான். நான் பின்னால் சென்றேன். அந்நீர்நிலையில் ஏராளமான இளம்பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனை பொருட்படுத்தவேயில்லை. ஆனால் நான் அருகே சென்றதும் அனைவரும் ஆடைகளை அள்ளி உடலை மூடிக்கொண்டனர். சிலர் ஓடிச்சென்று நீரில் மூழ்கினர்…. அது என்னை அவமதிப்பது என்று எனக்குப்பட்டது. அவர்களிடம் ஏன் அப்படிச்செய்தார்கள் என்று கேட்டேன். உங்கள் மகன் கண்களில் முற்றிலும் காமம் இல்லை, அவன் வந்ததையே நாங்களறியவில்லை என்று சொன்னார்கள். அன்றுதான் அவனை நான் அறிந்தேன்.”

“அன்று உங்களையும் அறிந்துகொண்டீர்கள் இல்லையா?” என்று சாத்தன் சிரித்தார். “அதன்பின் அது நிறுவப்பட்டதையும் அறிந்தீர்கள்.” வியாசர் அதிர்ந்து ஏதும் சொல்லாமல் அவரைப்பார்த்தார். “ஆகவேதான் இத்தனைதூரம் நடந்து உங்கள் மைந்தரைக் காணச்செல்கிறீர்கள்…”

வியாசர் உடலைவிட்டு உயிர் பிரிவதுபோன்ற மெல்லிய துடிப்புடன் “ஆம்…” என்றார். “தாங்கள் அனைத்தையும் அறியும் நுதல்விழிதிறந்தவர் சாத்தரே… குரு அறியாத சீடனின் அகம் என ஏதுமிருக்க இயலாது.” பெருமூச்சுடன் சற்றுநேரம் தன்னில் மூழ்கி இருந்தபின் “முதலிரு நாட்களும் என் காமமும் அகங்காரமும் கண்ணை மறைத்திருந்தன. மூன்றாம் நாள் முழுநிலவு. நானும் முழுமையை அன்று உணர்ந்தேன். அன்றிரவு என் சொற்கள் ஒளிகொண்டிருந்தன. அவை தொட்டவை அனைத்தும் ஒளி கொண்டன…” என்றார்.

“ஆனால் மறுநாள் காலை நான் என்னை வெறும் வெளியில் கிடக்கும் வெற்றுடல்போலக் கண்டு கூசினேன். என்னையே வெறுத்து ஓடிச்சென்று நீரில் விழுந்தேன். நீர் என்னை தூய்மைப்படுத்தவில்லை என்று கண்டு மந்திரங்களில் நீராடினேன்… ஒவ்வொன்றாலும் மேலும் மேலும் அழுக்காக்கப்பட்டேன்.” வியாசர் வேண்டுபவர் போல தன் கைகளை நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார்.

வியாசர் “என் அகம் எரிகிறது சாத்தரே” என்றார். “பிழையையும் சரியையும் பிரித்தறியும் ஆற்றலை இழந்துவிட்டேன்” துயரத்துடன் தலையை கையால் பற்றிக்கொண்டார். “ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன.”

கண்ணீருடன் இரு கைகளையும் விரித்து வியாசர் சொன்னார், “எதற்காக நூல்களைக் கற்றேன்? எளிய மிருகம்போன்ற வாழ்க்கை எனக்கிருந்தால் இந்தத் துயரம் இருந்திருக்காது… ஒவ்வொரு கணமும் அம்மூன்று நாட்களும் பெருநோய் போல பெருகிப்பெருகி என்மேல் படர்கின்றன…என்னுள் வெறுப்பு நிறைகிறது. வெறுப்பு என்பது கொல்லும் விஷம்…சுயவெறுப்போ ஆலகாலம்.”

சாத்தன் மாறுதலற்ற முகத்துடன் விண்மீன்களைப் பார்த்துக்கிடந்தார். வியாசர் “விண்மீன்களிடம் நேரடியாகப் பேசுபவர் நீங்கள். உங்களிடம்தான் நான் சொல்லமுடியும்…அதற்காகவே நான் உங்களை சந்தித்திருக்கிறேன்… இந்த விண்மீன்களுக்குக் கீழே நான் அனைத்தையும் சொல்லவிரும்புகிறேன் சாத்தரே. இக்கணம் இப்புவியில் எனக்கிணையான பெரும் பாவி எவருமில்லை” என்றார்.

கண்ணீரும் கொந்தளிப்புமாக வியாசர் சொல்லிமுடித்ததும் சாத்தன் விண்மீன்கூட்டத்தை நோக்கியபடி புன்னகைசெய்தார். “கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” என்றார்.

வியாசர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். “நீர்வழிப்படும் புணைபோன்றது வாழ்க்கை. ஆகவே பெரியோரை வியக்கவும் மாட்டேன். சிறியோரை இகழ்தலும் மாட்டேன். பிழையை வெறுப்பதுமில்லை. நிறையை வணங்குவதுமில்லை” என்றார் சாத்தன். பிறகு சிரித்துக்கொண்டே திரும்பி “வியாசரே, நீர் இதுவரை செய்தவை ஏதும் உமது பணிகள் அல்ல. செய்யவிருப்பதே உமது பணி” என்றார்.

“என்ன செய்யப்போகிறேன்?” என்றார் வியாசர். “அதை நான் அறியேன். ஆனால் பெருநிகழ்வொன்றின் தொடக்கத்தைக் காண்கிறேன். முதற்புலவன் புற்றுறைவோன் முன்பொருநாள் அன்புடன் அமர்ந்திருந்த அன்றில்பறவைகளில் ஒன்றை வேடன் வீழ்த்தக்கண்டு விட்ட கண்ணீருக்கு நிகரானது நீர் இப்போது விட்ட கண்ணீர்த்துளி” சாத்தன் சொன்னார்.

வியாசர் சொல்லிழந்து பார்த்துக்கொண்டிருந்தார். “எங்கள் தென்னகத் தொல்மொழியில் கடல்கொண்ட பெருங்காவியங்கள் பல உண்டு. கருநிறமும் வெண்ணிறமும் கூர்ந்து இணைந்து ஒளியாவதே காவியம் என முன்னோர் வகுத்தனர். உம்முள் மூன்றையும் உணர்ந்துவிட்டீர்.”

“நான் செய்யவேண்டியது என்ன?” என்றார் வியாசர். “உமது அகம் வழிகாட்டி அழைத்துச்செல்லும் வழியில் செல்க. ஆம், நீர்வழிப்படும் புணை போல” என்று சாத்தன் சிரித்தார்.

இரவில் விண்மீன்கள் வெளித்த முடிவின்மையைப் பார்த்தபடி வியாசர் அக்கரும்பாறைமேல் கிடந்தார். அருகே மெல்லிய மூச்சொலியுடன் சாத்தன் துயின்றுவிட்டிருந்தார். ஒரு மனிதர் அருகிருக்கையில் அவ்வுணர்வே உருவாகாத விந்தையை வியாசர் மீளமீள எண்ணிக்கொண்டார். நேர்மாறாக விண்மீன்களின் பெருவிரிவு ‘இதோ நீ இதோ நீ’ என்றே சொல்லிக்கொண்டிருந்தது. மின்னி மின்னி. திரும்பத்திரும்ப.

காலையில் வணிகர்கள் கிளம்பும் ஒலிகேட்பது வரை அவர் பேசமறுத்து பிரக்ஞையுடன் விளையாடிக்கொண்டிருந்த விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார். நெடுமூச்சுடன் பார்க்கையில் சாத்தன் அருகே இல்லை என்று உணர்ந்தார்.

அன்றும் மறுநாளும் நடந்து சுகசாரி மலையடிவாரத்தில் இருந்த ரிஷபவனம் என்ற இடையர் கிராமத்தை அடைந்தார். அவர்கள் மலையேறிச்செல்லும் வழி ஒன்றைக் காட்டினர். அங்கு இரவு தங்கி காலையில் அவர்கள் அளித்த பால்கஞ்சியை அருந்தியபின் மலையேறத்தொடங்கினார். மலையிறங்கிச் சென்ற கிளி ஒன்று வானிலேயே ஸ்வாஹா என்று சொல்லிச்சென்றதைக் கேட்டு மெய்சிலிர்த்து கைகூப்பி நின்றுவிட்டார்.

மேலும் மேலும் கிளிகள் வந்துகொண்டே இருந்தன. வேதமந்திரங்கள் மரங்களில், செடிகளில், வானூர்ந்த காற்றில் விளைந்தன. கண்களில் நீர் வழிய மலை ஏறிச்சென்றார். அங்கு செல்லச்செல்ல அங்குவருவதற்காகவே அவ்வளவுதொலைவு வந்தோம் என்று உறுதிகொண்டார்.

இனியமலைச்சாரல் அது. பழமரங்களும் பூமரங்களும் செறிந்த பொழில்களின் பசுந்தொகை. காட்டின் பிரக்ஞைபோல நீர் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. கரிய பாறைகள் காலையின் இனிய மென்மழைச்சாரலால் நனைந்து கருமையாக ஒளிவிட்டன. அவற்றின் இடைவெளிகளில் மலை சிரிக்கும் வெண்பற்கள்போல அருவிகள் நுரைத்து வழிந்தன.

மலையிறங்கி காட்டுக்குள் புகுந்த நீரோடை ஒன்றின் கரையில் அவர் நின்றிருக்கையில் மேலே இருந்த மலைக்குகையில் இருந்து படியிறங்கி சுகன் வருவதைக் கண்டார். முதல் அசைவிலேயே அது தன் மகன் என தனக்குள் இருந்த தொல்விலங்கு அறிந்துகொண்ட விந்தையை வியந்தார். சுகன் ஆடையற்ற உடலுடன் இறகு ஒன்று காற்றில் மிதந்திறங்குவதுபோல வந்து, வானத்தால் உள்ளங்கையில் வைத்து மெதுவாக மண்ணில் இறக்கப்பட்டான்.

வியாசர் அவனைநோக்கிச் சென்றார். கணம் கணமாக. மகன் என்ற சொல்லன்றி ஏதுமில்லாதவராக. போதம் அனைத்து சிந்தனைகளையும் இழந்து மடியில் தவழ்ந்த மகனாக மட்டும் அவனைப்பார்க்க ஆரம்பித்தது. “சுகதேவா” என்று அழைத்தார். சுகன் திரும்பி அவரைப்பார்த்து புன்னகைசெய்தான்.

அவன் தன்னை அடையாளம் காணவில்லை என்று உணர்ந்து “சுகதேவா, நான் உன் தந்தை கிருஷ்ண துவைபாயனன்” என்றார். நீரில் பரவும் காலையொளி போல பரவசம் நிறைந்த கண்களுடன் “நானா?” என தன் மார்பில் கைவைத்து கேட்டான். “நீ சுகன்…என் மகன்” என்றார் வியாசர். நெடுநாட்களுக்குப்பின் தன்னை உணர்ந்த சுகன் எக்களிப்புடன் இரு கைகளையும் விரித்து “தந்தையே!” என்றான்.

முதன்முதலில் அவன் அச்சொல்லை சொல்லக்கேட்ட அந்நாள் என மெய் சிலிர்த்து துடித்தோடிச்சென்று அவனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டு மூச்சுமுட்டும்படி இறுக்கிக்கொண்டார் வியாசர். பின்பு விலக்கி அவனது மெல்லிய தோள்களை, இளம் முகத்தில் புகைபோல படர்ந்திருந்த தாடியை, மலரிதழ்போன்ற சிறு உதடுகளை, கைக்குழந்தையின் கண்களை கண்ணீர் மறைத்த தன் கண்களால் பார்த்தார். ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்னும் இனிய மந்திரமாக அவரது அகம் இருந்தது அப்போது.

பின்பு தன்னுணர்வு கொண்டு அவனை விட்டு விலகி இரு கைகளையும் கூப்பிக்கொண்டு “சுகதேவா, நீயே என் ஞானாசிரியன். சாவை அஞ்சி மருத்துவனை நாடி வருவதுபோல உன்னைத்தேடி வந்தேன்… என்னை காத்தருள்க” என்று சொல்லி முழந்தாளிட்டு வேண்டினார்.

சுகசாரி குகைக்குள் அவன் இருக்க அவன் காலடியில் அமர்ந்து விம்மியும் கண்ணீர்விட்டும் வியாசர் அனைத்தையும் சொன்னார். “சுகதேவா, நீ நீதி சொன்ன அந்தக்கதையை இன்று தற்செயலாக நினைவுகூர்ந்தேன். நானறியவேண்டியதும் அதைப்போன்ற ஒரு முடிவே. குலநீதி சொல்லும் நியோகமுறைப்படியே நான் செய்தவை அமைந்தன. ஆனால் என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்றார்.

“தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.

“நான் கருணையோடிருந்தேன் என்றால் ஏன் என் மனம் தவிக்கிறது? தவறு செய்துவிட்டேனா என்று ஒவ்வொரு புல்புழுவிடமும் ஏன் கேட்கிறேன். தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் என்னில் தொடங்கிய தலைமுறையினர்… அவர்கள் சொல்லப்போவதென்ன என்று நான் எப்படி அறிவேன்?” என்றார். “…உன் மனம் ஒரு படிகவெளி…காலங்களை எல்லாம் உன்னால் காணமுடியும்…நீ சொல்!”

“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!”

வியாசர் திடுக்கிட்டு “நானா?” என்றார். “என்ன சொல்கிறாய்?” சுகன் சிரித்தான். “ஆம், உன் சொல் காலத்தின் சொல்…அது நிகழும்” என்றார் வியாசர். பின் நடுங்கும் கைகளைக் கூப்பியபடி “ஆனால் சுகதேவா, இது வரமா சாபமா?” என்றார்.

சுகன் அதைக் கேட்கவில்லை. கிளிகள் வேதமந்திரங்களுடன் குகைக்குத்திரும்ப ஆரம்பித்தன. அவற்றின் கால்களில் இருந்து தானியமணிகள் அவன் மேல் பொழிந்தன. அவன் இன்னொரு கிளிபோல அவற்றைப் பொறுக்கி உண்ணத் தொடங்கியிருந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

04 Feb 23:36

பாடலும் காதலும்

by jeyamohan

தமிழிலும் மலையாளத்திலும் உள்ள இயக்குநர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அனைவருமே சொல்லக்கூடிய ஒரு விஷயமுண்டு, பாடல்காட்சிகளில் காதலை அமைப்பதன் சவாலைப்பற்றி.

முதலில் திரைப்படத்தில் பாடல் என்பதே ஒரு செயற்கையான விஷயம். உலக அளவில் அனேகமாக இந்திய சினிமாவில் மட்டுமே பாட்டு தவிர்க்கமுடியாத அம்சமாக உள்ளது. பிறபகுதிகளில் படத்தின் பல அம்சங்களில் ஒன்றாக ஒரு பாட்டு ஒலிக்கலாம். அல்லது இசைத்திரைப்படங்கள் வரலாம். ஆனால் சாதாரண கதைக்குள் ஒரு பாடல் அமைவதில்லை.

இந்தியசினிமாவில் பாடல் அமைந்ததற்கு ஒரு பின்னணி வரலாறு உண்டு. நம்முடைய நாட்டார் நாடக மரபும் சரி, செவ்வியல் நாடக மரபும் சரி பாடலை ஆதாரமாகக் கொண்டவை. பெரும்பாலானவற்றை இசைநாடகம் என்றே சொல்லிவிடலாம். நாடகக் காப்பியமான சிலப்பதிகாரமே பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுள் வடிவில்தான் உள்ளது.

ஏன் பாடல் அந்த இடத்தைப் பெற்றது? உணர்ச்சிநிலைகளை உச்சத்திற்குக் கொண்டுசென்று நிலைநிறுத்த பாடலால்தான் முடியும். அரிச்சந்திரன் மயானகாண்டத்தில் எந்த வசனமும் அந்த உக்கிரமான துயரத்தைச் சொல்லிவிடமுடியாது. துயரத்தின் உச்சத்தை மேடையில் நிகழ்த்துவதுதான் அங்கே முக்கியமே ஒழிய அதை யதார்த்தத்தில் நிறுத்துவது அல்ல.

கதகளி என்னும் செவ்வியல் நாடகவடிவத்தில் வசனம் ஒலிப்பதைப்பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை. ‘என் தம்பிகள் களத்தில் மாண்டனர், நான் பத்து தலைகளுடன் கைகளற்றவன் ஆனேன்’ என்று ராவணன் பாடத்தான் முடியும்.

அங்கிருந்து நம் நவீன மேடைநாடகமரபு உருவானது. பார்ஸி நாடகங்கள். பின்பு சபா நாடகங்கள். அந்நாடகங்களில் இருந்துதான் சினிமா வந்தது. மேலைநாட்டிலிருந்து நாம் எடுத்துக்கொண்டது சினிமா என்னும் தொழில்நுட்பத்தை மட்டுமே. இந்தியசினிமாவின் நாற்றங்கால் நாடகமே. நாடகத்தில் இருந்த பாடல்கள் சினிமாவில் இடம்பெற்றன. தவிர்க்கமுடியாதவையாக இன்றும் நீடிக்கின்றன.

இன்றுமெல்ல மெல்ல சினிமாப்பாடல்களின் இயல்பு மாறிவிட்டது. துயரத்தின் உச்சத்தில் இன்று பாடல் ஒலிப்பதில்லை. தத்துவார்த்தமான இக்கட்டுகளைச் சொல்ல பாடலை எவரும் பாடுவதில்லை. இன்று காதலுக்கு மட்டுமே பாடல் என ஆகிவிட்டிருக்கிறது.

இயக்குநரான நண்பர் சொன்னார் ‘காதலையும் பாடலையும் இணைப்பதற்காக நம் முன்னோடிகள் பட்ட பாடுகளை யூடியூபில் போய்ப்பார்த்தால் அது ஒரு பெரிய பண்பாட்டு இயக்கம் என்ற எண்ணம் ஏற்படுகிறது’ உண்மைதான். நம்முடைய பாடல்சித்தரிப்பு இரண்டு முன்னுதாரணங்கள் கொண்டது.

ஒன்று, ‘உத்தியானப்படுதா’ காதல். நாடகத்தில் தோட்டத்தில் கதாநாயகியை நாயகன் சந்திக்கிறான். அந்தப் படுதா கறுப்புவெள்ளைப் படங்களில் ஸ்டுடியோ செட் ஆக மாறியது. அதன்பின் உண்மையான உத்தியானங்களில் அதே ஆடல் பாடல். அந்த உத்தியானம் வெளிநாட்டுச்சூழலில் இருப்பதாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கிறது

இரண்டு, நடனஅறை காதல். இதை நம் சினிமா மேலைநாட்டு சினிமாக்களில் இருந்து பெற்றுக்கொண்டது. சாப்பாட்டுக்குப்பின் ‘பால்ரூமில்’ அமர்ந்து பியானோ வாசிக்கிறார்கள். பாடுகிறார்கள். நம் சினிமாவில் பியானோ வகித்த இடம் பற்றி எவராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? இங்கே தேவாலயங்கள் தவிர எங்கும் பியானோ கிடையாது. பியானோ இசைக்கும் நம் இசைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சினிமாக்களில் காதலர்கள் பியானோ வாசிப்பார்கள். எத்தனைபடங்கள்!

விதவிதமான பாடல்காதல்கள். இப்போது யூடியூபில் பார்க்கையில் ஆரம்பகாலப் பாடல்கள்தான் இயற்கையாக இருப்பதாகப் படுவது பெரிய ஆச்சரியம். அதாவது பழையபடங்கள் வசனக்காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன, பாடல்கள் பெரும்பாலும் இயற்கையாக உள்ளன. சும்மா அமர்ந்து பாடுவது போல அவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய படங்களில் காட்சிகள் இயற்கையானவை, பாடல்களில் என்னென்னவோ செய்கிறார்கள்

மிகச்செயற்கையான காட்சியமைப்புக்குள் மிக இயல்பாக காதல் காட்டப்பட்ட பாடல். எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று. பானுமதி காலை ஆட்டிக்கொண்டே இருப்பதிலும் கடைசியில் சட்டென்று திரும்புவதிலும் உள்ள இயற்கையான இளமை அழகு.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2FG5rrmrdoo

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
04 Feb 23:36

மீட்சி – எஸ். சுரேஷ்

by natarajanv
“அவள் போன வருடம் இறந்துவிட்டாள்”
 
என்னுள் நீ என்றோ இறந்துவிட்டாய்
என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,
உன்னுள் நான் முழுவதும் இறந்து விட்டிருந்தேனா?
இனி அறிய முடியாது.
 
—- கல்லூரி செல்லும் வழியில் காத்திருந்து
 பைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்ததும்
 வெட்கத்துடன் நீ அதை வாங்கியதும்
 உன் சிறு புன்னகையும் —-
 
துவக்கங்கள் நினைவில் விரிய எனக்குப் புரிகிறது
மனதைத் தொட்ட எவரும் இறப்பதில்லை.

Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை Tagged: எஸ். சுரேஷ்
04 Feb 23:36

கவியின்கண் – 1 “எத்திசை செலினும் அத்திசைச் சோறே”

by natbas

- எஸ். சுரேஷ்-

​மன்னன் நெடுமான் அஞ்சியின் அரண்மனை வாயிற்காவலனை நோக்கி ஔவை பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

இந்தத் தமிழ் சிலருக்கு சவாலாக இருக்கலாம் – அவர்களுக்காக ஒரு எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு :

O! Sentinel! O! Sentinel!
O! One who guards the gates
that never close for those
with ambition in their heart
living a life of deception
flattering their donors
obtaining gifts and good position

Do you think
Neduman Anji doesnt know himself
Or do you think he doesnt know me

Its not yet the way of this world
that people with fame and talent
die of starvation

So I pick up things,tie my bag
As a skilled son of a carpenter
goes into the woods
with his axe
Any which direction I go
a meal awaits me

புலவர்கள் அரசர்களின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வது வழக்கம் என்பது நமக்குத் தெரியும் – இதையே இந்தப் பாடலில் பரிசில் வாழ்க்கை என்று ஔவை குறிப்பிடுகிறார். புறநானூற்றில் உள்ள பல பாடல்கள் அரசர்களையும் குறுநில மன்னர்களையும் போற்றிப் பாடப்பட்ட துதிப்பாடல்கள்தான். ஆனால், இந்தப் பாடல் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.

தமிழிலோ ஆங்கிலத்திலோ, ஒரு முறை இந்தப் பாடலை வாசித்தால் போதும், ஒரு விஷயம் எளிதில் புரிந்துவிடும். புலவர்கள் தம் பிழைப்புக்காக மன்னனைப் பாடி அவனைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறையை ஔவை நிராகரிக்கிறார் – “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே,” என்று இப்பாடல் முடிகிறது. அரசனை நோக்கி இப்படிப் பாடும் துணிச்சல் ஒரு புலவருக்கு இருந்தது என்று நம் பள்ளிப் புத்தகங்களில் இந்தப் பாடலைச் சேர்த்து அக்காலப் புலவர்கள் சுயமரியாதையுடன் இருந்தார்கள் என்று பாடம் புகட்டலாம். ஆனால் நம் அனுபவம் நமக்கு உணர்த்தும் உண்மை வேறு. நம் வாழ்க்கையைக் கொண்டு இப்பாடலை வாசித்தால் வழமையாக நமக்குக் கற்பிக்கப்படும் உண்மையின் மறுபக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிற புலவர்களைவிட தன் புலமைத்திறம் உயர்ந்தது என்பதை ஔவை அறிவாள். அதனால்தான் மன்னனைப் புகழ்பவர்களுக்கு மட்டும்தான் கதவு திறந்திருக்கிறது என்று அவள் கோபப்படுகிறாள். நம்மைவிட திறமை குறைந்தவர்கள் உயர் பதவிகளைப் பெறும்போது நாம் சொல்வதுதான் இது. ஔவையும் மேலிடத்து ஆதரவு பெற்றவர்களைப் பார்த்து கசந்து போனவளாய் இருக்கிறாள். எத்தனை சமயங்களில் நாம் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறோம். இது போன்றவர்களின் வெற்றி ரகசியத்தை அவள் அறியாதவள் அல்ல.

ஜெயமோகன் தன் சங்கச் சித்திரங்களில், ஔவை இதை வாயிற்காவலனிடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதைக் கண்டு வருந்துகிறார். இதுவும் நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளாத அனுபவம் அல்ல – ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அங்கு என்ன பிரச்சினை என்பதை ஓர் மனிதவளத்துறைப் பிரதிநிதிதான் விசாரிக்கிறார். நாம் சொல்வது அந்த வாயிற்காவலனைத் தாண்டி எங்காவது போகுமா என்ன என்பது யாருக்குத் தெரியும்!

இந்த அநீதியெல்லாம் நெடுமான் அஞ்சிக்குத் தெரிந்தே நடக்கின்றன என்பதை ஔவை அறிந்திருக்கிறாள். “நெடுமான் அஞ்சி தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?” என்று கேட்கிறாள் அவள். அவனுக்குத் தன்னைத் தெரியாதா, இல்லை என்னைத் தெரியாதா? இருந்தாலும் “உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்”தினரை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு ஔவையை இப்படி வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறான்.

ஔவையின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள நம் அனுபவத்துக்கே வருவோம். உயர்பதவிகளில் இருப்பவர்கள் முட்டாள்கள் அல்ல – இருந்தாலும் திறமையானவர்களை ஊக்குவிக்காமல் சாதாரணர்களுக்கும் விசுவாசமானவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு அளித்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் பிரச்சினை பண்ணாமல் சொன்னபடி கேட்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே,” என்று சொல்லி ஔவை தன்னை ஏமாற்றிக் கொள்கிறாள் என்கிறார் ஜெயமோகன். தனக்குத் திறமை இருப்பதாகவும், நெடுமான் அஞ்சியை நீங்கி எங்கு போனாலும் தன் திறமையைக் கொண்டு உயிர் பிழைக்க முடியும் என்றும் ஔவை சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எங்கே போனாலும் அரசனைச் சுற்றி இந்த மாதிரி ஆட்கள்தான் இருப்பார்கள். ஔவை அங்கும் வாசலில்தான் நிற்பாள். ஏனென்றால், முன்னேற வேண்டும் என்ற வெறி இல்லாமல் அதற்குத் தேவையான சமரசங்கள் செய்து கொள்ளாமல் வாழ்க்கையில் யாரும் உயர முடியாது. என்னைச் சுற்றி இருபவர்களில் பலரும் திறமைசாலிகள், ஆனால் அந்த வெறி இல்லாத காரணத்தால் திசை தெரியாமல் தேங்கிக் கிடக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்றால் ஔவைக்கு ஏன் இந்த கசப்பு? “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே,” என்று சொல்கிறாள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அறிவும் புகழும் இருப்பவர்களை மதித்து அவர்களை வாழவா வைக்கிறது இந்த உலகம்? எங்கு போனாலும் இதே நிலைதான் – வேறு இடம் போனால் மட்டும் எதுவும் மாறிவிடவா போகிறது?

ஜாமினி என்ற ஒரு சம்ஸ்கிருத பண்டிதன் சொன்னான், “ந கதாசித் அநித்ருஷம் ஜகத்” – இந்த உலகம் எப்போதும் இப்படிதான் இருந்திருக்கிறது.

oOo

மேற்கண்ட மனப்பதிவுகளை நீங்கள் புறநானூற்றுப் பாடலைக் கொண்டே அடைந்துவிடலாம் என்று நினைக்கிறேன். இன்னமும் சொல்லப்போனால் என் உரை அவசியமே இல்லாத ஒன்று என்றுகூட சொல்வேன், ஆனால் இந்தக் கவிதையை வாசித்தபின் அது குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

என்னுடைய சகாக்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் பேசும்போது ஒரு விஷயம் எனக்குப் புரிகிறது: அவர்கள் எப்போதும் தங்கள் நிலையை நியாயப்படுத்தவே முயல்கிறார்கள், இந்தியர்களானாலும் சரி, அமெரிக்கர்களானாலும் சரி. சிலர் தங்களுடைய சாதனைகள் பற்றி அளந்துவிடுவார்கள், சிலர் ஏன் தாங்கள் படிநிலையில் மேலும் உயர விரும்புவதில்லை என்பதைச் சொல்வார்கள், வேறு சிலர், தாங்கள் ஏன் முன்னேறியிருக்க வேண்டும் ஏன் முன்னேறியிருக்கக் கூடாது என்பதை விளக்குவார்கள். எங்கெங்கும் அனைவருக்கும் தாம் செய்து கொண்டிருப்பதை நியாயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

தன் நிலையை நியாயப்படுத்துவதற்கான தேவை மேலெழுந்தவாரியாக மட்டுமல்ல, அது வெகு ஆழமாக இருக்கிறது. பலர் தங்களுடைய வேலைதான் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வுதான் எல்லாவற்றையும்விட முக்கியம் என்று சொன்னாலும், நம்முடைய இருப்பை நமது வேலை மூலமாகவே நியாயப்படுத்துகிறோம். வாழ்வின் ஒரு கட்டத்தில் இந்த நியாயப்படுத்தலுக்கான தேவை மேலும் முக்கியமாகிவிடுகிறது. நியாயப்படுத்துதல் என்பது உங்களுடைய இன்றைய நிலையை மட்டும் நியாயப்படுத்துவதில்லை, இன்றைய நிலைக்கு வந்து சேர இதுவரை நீங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் நியாயப்படுத்துகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வேலையில் சேர, காதலிக்க, கல்யாணம் பண்ணிக்கொள்ள, குழந்தைகள் பெற்றுக்கொள்ள, வேலையை மாற்றிக்கொள்ள, வேலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்க என்று நீங்கள் எடுத்த அத்தனை முடிவுகளும் தீவிர சோதனைக்கு உட்படுகிறது.

இருப்பை நியாயப்படுத்துவதும், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வதுமே ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான மையப் பிரச்சனை. இந்த மையப் பிரச்சனையைத் தொட்டே பல பேரிலக்கியங்கள் ஏற்ப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நான் சொல்வதை நீங்கள் தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும்). வாழ்வின் குறிக்கோளுக்கான தேவை மனிதர்களை வெவ்வேறு திசைகளில் செலுத்தியிருக்கிறது. ஒருபக்கம், வாழ்க்கை அர்த்தமற்றது என்ற நிலையெடுப்பவர்களையும், இளைஞர்களும் சென்சிட்டிவான கலைஞர்களும் தற்கொலை செய்து கொள்வதையும், மறுபக்கம் மூர்க்கமான யுத்தங்களில் பங்கெடுத்துக் கொண்டு தங்களையே வெடிவைத்துத் தகர்த்துக் கொள்பவர்களையும் பார்க்கிறோம்.

இதற்கு மாறாக, தங்கள் வாழ்வை சேவையில் அர்ப்பணித்துக் கொள்பவர்கள், தங்களுக்கென்று எதற்கும் ஆசைப்படாதவர்கள் இருக்கிறார்கள். கலையாகட்டும், அறிவியலாகட்டும், சமூக சேவையாகட்டும், விடுதலைப் போராட்டமாகட்டும், மனிதர்கள் எவ்வளவு பெரிய தியாகத்துக்கும் தயாராக இருக்கின்றனர்.

வாழ்க்கையின் லட்சியத்தைக் கண்டடைந்து அதில் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ள இதுபோன்ற தீவிரத்தன்மை ஒரு எளிய வழி என்று நினைக்கிறேன். பின்னாளில் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்றும் வாழ்க்கையில் நான் எதையோ சாதித்தேன் என்றும் சொல்லிக்கொள்ள மூடியும்.

இந்தக் கேள்வியை சமாளிக்கத்தான் அத்தனை சமயங்களும் இருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இந்து, பௌத்த சமயங்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்கின்றன. சிலவற்றுக்கு விடை தந்துவிட்டு மற்ற அத்தனைக்கும் நீயாகவே பதில் கண்டுபிடி என்று சொல்கின்றன – இங்கு நான் பேசுவது ஞான மார்க்கம், பக்தி மார்க்கமல்ல. உபநிடதங்கள் எல்லாமே இதையே பேசுகின்றன, அவை அளிக்கும் பதில்கள் நமக்குப் புரிந்திருக்கலாம், புரியாதிருக்கலாம்.

வேறு சில சமயங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விவரமாகச் சொல்கின்றன – அவற்றைச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லி விடுகின்றன. இசுலாமும் கிருத்துவமும் தங்கள் மறைநூல்களில் சொன்ன மாதிரி செய்தால் ஸ்வர்க்கத்துக்குப் போகலாம் என்று சொல்கின்றன, நம் பக்தி மார்க்கமும் அதைச் சொல்கிறது என்று நினைக்க இடமிருக்கிறது. இந்த மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களுக்கு சமயநூல்களில் சொன்னதைச் செய்வதே வாழ்வின் நோக்கமாக இருக்கிறது. இதில் ஒரு வசதியும் உண்டு – வாழ்வின் குறிக்கோள் என்ன என்ற கடினமான கேள்விக்கு பதிலைச் சேகரிக்க வேண்டிய அவஸ்தை இவர்களுக்கில்லை. ஆக, பலரையும் சமயம் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துகிறது, அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு சமாதானம் அளிக்கிறது.

ஆனால் நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம்தான் வேண்டுமா? வாழ்க்கை நம்மிடம் எதையும் கோருவதில்லை, நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்கூட அதற்குக் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்ற தேவை நமக்கு உண்டு, நம் நோக்கத்தை அதைக் கொஞ்சமும் லட்சியமே செய்யாத வாழ்க்கையின் போக்கில் திணிக்கிறோம். ஒரு போராட்டத்தைக் கொண்டே வாழ்வின் அபத்தத்தைக் கடக்க முடியும் என்று காம்யூ (Camus) போன்றவர்கள் நினைக்கிறார்கள். வாழ்ந்தாக வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படியெல்லாம் ஏதாவது ஒரு நோக்கம் நமக்கு இருந்தாக வேண்டுமா என்ன?

இது விடை காணக் கடினமான கேள்வியாகிறது. வாழ்வின் அபத்தம் நமக்கு நன்றாகத் தெரிகிறது, அதில் ஒரு நோக்கத்தைக் கண்டடைவதில் என்ன அர்த்தம் கிடைத்துவிடக்கூடும்? இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் ஒரு நோக்கமும் இல்லை என்று வாழ்கிறவர்களுக்கு, வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளைத் தவிர்த்து நாம் தப்பித்து ஒடுகிறோமோ என்னவோ என்ற ஒரு உணர்வு எழுகிறது.

கண்ணதாசன் ஒரு பெருங்கவிஞன். அவர் ஒரு பாடலில் சொல்வார்-

“காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்”

ஆம், கேள்விகள் மட்டுமே எஞ்சுகின்றன. நாம் சில விசேஷங்களில் செய்யும் ஹோமம் நினைவுக்கு வருகிறது. நெய் ஊற்ற ஊற்ற நெருப்பு மேலும் மேலும் உயரே எழுகிறது, பெரும்பசியுடன் ஆஹுதியை அக்னி விழுங்கிக் கொள்கிறது. இது போல் வாழ்விலும் காலம் ஒரு மாபெரும் யாகமாய் நம் ஆண்டுகளை உட்கொள்கிறது – நாளுக்கு நாள் வீரியம் கொள்ளும் நெருப்பாய் கேள்விகள் நம் உள்ளத்தைத் தகிக்கின்றன. நம் ஆயுட்காலமே இந்த நெருப்பின் ஆஹுதியாகிறது. என்னதான் சமாதானம் சொன்னாலும், எவ்வளவு நியாயப்படுத்தினாலும் அவ்வளவும் நில்லாது அழிகிறது – நெருப்பாய்ச் சுடும் கேள்விகள் நம் காரண காரியங்களால் மேலும் கடுமையாகின்றன.

இங்கே கேதரின் மேன்ஸ்ஃபீல்டின் ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லப் போகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையில் ஒரு இளம் பெண் பால்ரூம் நடனத்துக்கு அழைக்கப்படுகிறாள். அவளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அவளது முதல் பால்ரூம் டான்ஸ் அது. அவள் சென்ற இடத்தின் செல்வச் செழிப்பைப் பார்த்து திகைத்து நிற்கிறாள். அதன் உயர்ந்த கூரைகளில் தொங்கும் அலங்கார விளக்குகள், ரசனையுடன் செய்யப்பட்ட கலை வேலைப்பாடுகள், சுழன்று மேலேறும் மாடிப்படிக்கட்டுகள் – எத்தனை ஆடம்பரம்!

அப்போது ஒரு இளைஞன் அவளைத் தன்னுடன் நடனமாட அழைக்கிறான். அவள் ஆடிக் களைத்து ஒர் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறாள். அப்போது அவளருகில் ஒரு முதியவர் அமர்ந்திருக்கிறார். அவர் பேசத் துவங்குகிறார்.

இதெல்லாம் இப்போது பிரமாதமாக இருந்தாலும், ஆடி முடித்ததும் இங்கே குப்பைதான் இருக்கும் என்கிறார் அவர் – எதுவும் அதனிடத்தில் இருக்காது, அவளுக்கும் இதெல்லாம் அலுத்துப் போகும். யதார்த்தம் என்ன என்று உணர்த்த முயற்சிக்கிறார் பெரியவர். இதைக் கேட்கும் இளம்பெண் வருந்துகிறாள், இத்தனை நேரம் சந்தோஷமாக இருந்தவள் இப்போது யோசிக்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் முடிந்து போகும் என்ற எண்ணத்தின் துயர் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும்போது வேறொரு இளைஞன் அவளைத் தன்னுடன் ஆட அழைக்கிறான். அவள் அவனது அழைப்பை ஏற்கிறாள்.

வெகு விரைவில் அவள் அந்த அறையின் மத்தியில் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறாள், அவளைச் சுற்றிலும் வண்ணங்கள் ஒளிர்கின்றன. அவளது இதயம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, முதியவரின் நினைவு மறக்கப்படுகிறது.

நாமும் நம் வாழ்வை எப்போதாவது நேருக்கு நேர் திரும்பிப் பார்க்க நேர்கிறது. அப்போது கேள்விகள் அவற்றின் மகோன்னதச் சிடுக்கோடு மேலெழக் காண்கிறோம். ஒரு கணம் திடுக்கிட்டாலும், நாம் நம் முகத்தை உடனே திருப்பிக் கொள்கிறோம். தக்க ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டு வாழ்வு எனும் முடிவற்ற ஆடுகளத்தில் நமக்குரிய நியாயங்களைத் தேடி வேறொரு திசைநோக்கிச் செல்கிறோம்.

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே, என்று.


Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், விமரிசனம் Tagged: புறநானூறு
04 Feb 23:36

சிறுகதை: நியூட்டனின் மூன்றாம் விதி

by அருண் நரசிம்மன்

எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது.

முதல் பத்து ஆசைகள் விஞ்ஞானியாவதைச் சார்ந்தது. இரண்டாம் பத்தில் இன்ஜின் டிரைவர் (கரி என்ஜின் மட்டும்), இசைக்கலைஞன், இரக்கமுள்ள சினிமா நாயகன், இந்திரியங்கள் அடக்கிய இறைதூதன் போன்ற ஆதர்சங்கள் ஆக்கிரமிக்கும்.

மிச்ச இருநூற்றியைம்பது சொச்சம் ஆசைகள் பெண்கள் பற்றியவை.

அவை எதற்கு இப்போது. எழுத்தாளனைத் தொடர்வோம். அவனே கதைவிட லாயக்கு.

எழுத்து ஒரு தவம் என்பதை சிறுவயதிலேயே அறிந்துகொண்டேன். ஆனால் பெரியவனாகும் வரை தவம் செய்வதற்கான அவகாசம் அமையவில்லை.

ஏனைய சின்ன சின்ன ஆசைகளில் சிலதை முயன்றதில், தவத்தை தொடங்கவிடாமல் கலைத்தவண்ணம் வாழ்வின் மேனகைகள், லோபமுத்ரைகள்.

லஸ் சர்ச் ரோட்டின் தனி வீடு, பத்மா சேஷாத்ரி, ப்ரில்லியண்ட் டியுட்டோரியல்ஸ், ஐஐடி, நோக்கியா விஃபோன் என்று சமுதாயத்தின் மேட்டிமைச் சக்திகள் போட்டியிட்டுக் கைகள் கொடுக்க, முப்பதைத் தப்பும்முன் கணினித் துறையில் கோலோச்சியிருந்தேன். லகரங்களில் வருடாந்திர வரி ஏய்த்து, இளநரையுடன் முதுகுவலிக்கு ‘யோகமந்திரத்தில்’ பிரத்தியேக டிரெய்னருடன் அப்பாயின்மெண்ட் வாங்கி, வீக்கெண்டில் நகரத்தின் அடுக்ககம் துறந்து, வெள்ளைச்சீருடை சாரதி முடுக்க, டிவி வைத்த ஆபீஸ் வண்டியில் ஜாக் டாட்டீ இயக்கிய பிரெஞ்சுக் காமெடிகளை ரசித்தபடி பயணித்து, சேலம் டாக்டர் நண்பருடன் யெர்க்காட்டு காட்டேஜில் இத்தாலிய அஸ்டி வைன்  (மட்டும்) பகிர்ந்து… எழுத்தாளனவதை கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன்.

அடுத்த ஆண்டுகளில் பணியில் அசுரகதியில் தொடங்கி மந்த கதிக்கு மாறி அதுவும் ஒத்துவராமல் மிகமந்த கதிக்குப் பதவி உயர்ந்து, மாதங்கள் ஓய்வாக சில நாட்கள் மட்டும் இதயம் வாய்வழியே வெளியே வந்துபோகும் மேல்நிலைக்குத் தள்ளப்பட்டு, காரியதரிசியின் கால்சிராயை கண்களால் களைந்திருந்த ஒருநாள், தனிமையின் வெறுமையில் சின்ன சின்ன ஆசைகளை மனம் அசைபோட்டது.

பால்யத்தில் தொடைதட்டியிருந்த கர்நாடக சங்கீதம் கேட்பதில் மையம் பெற்று அதே பால்யத்தில் காதைத் திருகியிருந்த தமிழ்க் காதலில் கரையைக் கடந்தது.

அகர முதல எழுத்தை அளிப்பவன் ஆதிபகவன். மும்மூர்திகளின் வடிவம். படைப்பாளி என்பதால் எழுத்தாளன் பிரம்மன். சிருஷ்டித்த பாத்திரங்களைப் பேணுவதில் பரமன். அவனே விமர்சகனும் ஆவான் ஆகையில் சக எழுத்தாளர்களின் ருத்ரன். வாசகர்பால் கொண்ட பேரன்பினால் தன்னையே கூறுகளாக்கி எழுத்தில் அவர்களுக்கு அளிப்பவன். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரமனுக்கே. இரண்டு விளைவுகளுமே எழுத்தினால்தான். அளித்தவன் படைத்தவன். பெற்றவன் பாக்கியவான். பெற்றவனும் அளித்தவனும் வாசிப்பில் ஒருவனையொருவன் நிரப்பிக்கொள்கிறான். ஒருவனிடம் எழுத்து எனும் செயல்; அதன் தாக்கத்தின் விளைவே அடுத்தவனுக்கு அவன் செய்யும் செயல். ஒருவனின் செயல் ஒருவனின் விளைவாய். செயல் இல்லையேல் விளைவில்லை. விளைவற்ற செயல் செய்யப்பட்டது என்றறிவது எவ்வாறு? நியூட்டனின் மூன்றாம் விதியும் இதுதானே. பரமாத்மனுக்கும் ஜீவாத்மனுக்கும் அகர முதல எழுத்தில்தான் இணைபிரியா பந்தம்.

கதையாடலில் சொற்கள் சுதந்திரப் பொருளுணர்ந்தன.

கணினிகளைக் கசக்கிக் களைத்திருந்த கார்காலம்.

எழுத்தாள வீச்சம் கூடித்தான் இருந்தது.

நான் எழுத்தாளன் ஆவது அத்தியாவசியமாகியது. எழுதப்படவேண்டிய கதைகள்தான் பாக்கி.

***

முதல் கதைக்கு பெண்களே கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அவர்களை எழுதத் தொடங்கினால் முடிவேது. அதுவும் எனக்கு.

புதியதாய் வித்தியாசமாய் எழுதுவதற்கு ஒரு ஆணைத் தேடினேன். என்னைப் பற்றியே எழுதலாம்தான். ஆனால் அது நிஜமாகிவிடும். கதாசிரியன் தன்னைப்பற்றி ‘கதை’ எழுத முடியுமா. உண்மையத்தானே சொல்லமுடியும். பிறகு எப்படி அது கதையாகும்.

சுற்றியிருப்பவர்களை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினேன். தனிப்பட்ட முறையில் கவனித்து எழுத வேண்டும் என்பவர்களை அலைபேசியின் கேமிராவில் சூழ்நிலைக்கேற்ப க்ளிக்கிக்கொண்டேன். அன்றாடங்களில் அலைகிழிந்து அவரைத் தேர்வு செய்தேன். ஒரு கச்சேரியில்.

க்ரீம் நிற முழுக்கைச்சட்டையை சுருக்கமில்லாமல் டெர்லின் பாண்டினுள் டக் இன் செய்து, மடிப்பு கலையாமல் மேடையில் அமர்ந்திருந்தவர், பேச எழுகையில் நெட்டைக்குச்சியான உயரம்தான் என்னை ஈர்த்தது. ஆறேகால் அடியாவது இருப்பார். போடியத்தில் மைக்கை செங்குத்தாக நட்டாலும் குனிந்தே பேசவேண்டியிருந்தது. ஆங்கிலம் கலந்த பிராமணத் தமிழில் தீக்ஷதர் பற்றி அறிவார்த்தமாக அன்று நிறைய பேசினார்.

டாக்டர் பாலகிருஷ்ணன். மருத்துவர் இல்லை; முனைவர். எக்கனாமிக்ஸில். ஐம்பதியைந்திற்குமேல் சொல்ல முடியாத அறுபத்தியிரண்டு வயதானவர். வங்கியில் கடைநிலையில் தொடங்கி சரியான தருணத்தில் சென்னையின் அவுட்டோரில்  ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ஆடிட்டராய் நுழைந்து, நிச்சயமாய் சொந்தத் திறமை குயுக்திகளினால் மட்டுமே அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பொறுப்புவரை உயர்ந்தவர்.

ஒரு கட்டத்தில் தினமும் அதைப்பார்த்தே சவரம் செய்துகொள்ளும் அளவிற்கு பிரபலமாகி தொலைக்காட்சியில் முகம் காட்டியவர், இன்று சற்று அடக்கி வாசிக்கிறார்.

நிறுவனத்தின் நிஜ உரிமையாளர்களின் அஜீரணங்களினால் அடக்கி வாசிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கேள்வி. கிடைக்கும் நிறைந்த ஓய்வில் தன் சங்கீத ஈடுபாட்டை இன்று விருத்தி செய்துகொண்டு வருகிறார்.

சங்கீத சபாக்களின் திறப்பு விழாக்கள், எழுபது வயதைக்கடந்த கலைஞர்களின் பாராட்டு விழாக்கள், இளம் தமிழ் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாக்கள், ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு மரத்தான்’ ஓட்டத்தை தொடங்கிவைத்து உரை, என்று மாதந்தோறும் மேடைகளில் தென்பட்டு சேஷனிலிருந்து சேஷகோபாலன் வரை தோளில் தட்டிப் பேசும் அளவிற்குப் பவிஷு. ஆறுதலாக கர்நாடக சங்கீதத்தில் நிஜமான ஈடுபாடும் உள்ளவர்.

கச்சேரி சர்க்கியூட்டில் அவர் பாலகிருஷ்ணன் இல்லை. பாட்ரன் பாலா.

லகரங்கள் கொடுத்தாலும் கொள்கையாய் கல்யாணக் கச்சேரிகளை ஒப்புக்கொள்ளாத பாடகர்களும் ஒரு தொலைபேசி அழைப்பில் பாட்ரன் பாலாவிற்கு இரவு தூங்கும்முன் வீட்டில் பக்கவாத்தியங்கள் சகிதம் பிரத்தியேகமாய்ப் பாடுவார்கள். தயாள சன்மானம் மட்டும் காரணமில்லை. சென்னையில் தொடங்கி கேரளாவரை பாலா பல சபாக்களின் செயற்குழு உறுப்பினர்.

பாலாவிற்கு தீக்ஷதர் கிருதிகளில் பிரியம் அதிகம். ஈடுபாடு என்றால் அலாதியானது. பாலா முன்னிலையில் “என்ன இருந்தாலும் தியாகையர் போல வருமா. திராட்சை ரசம். தீக்ஷதர் கிருதிகள் வெர்பல் டயேரியா. வார்த்தை வெளிக்கி.” என்ற ரீதியில் மேடையில் முழங்கிய புகையிலை குதப்பும் சங்கீத உபாசகர் மறுநாள் சந்தடியின்றி நகரின் பிரதான சபாவின் காரியதரிசிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டதாய் அங்கத்தினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நிஜக் காரணம் முணுமுணுக்கப்பட்டது.

தீக்ஷதர் பெயரில் ஒரு டிரஸ்ட் தொடங்கி எப்பல்கலைக்கழகத்திலும் முனைவர் ஆய்விற்கு தீக்ஷதர் கிருதிகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் சன்மானம் வழங்குகிறார் பாலா. டர்ன் புல்ஸ் ரோட்டருகில் உள்ளடங்கி இருக்கும் தன் ‘பாலஸ் ஹவுஸ்’ கிரகத்தில் ஆண்டுதோறும் தீக்ஷதர் நினைவுதினக் கச்சேரிகள் நடத்துவார். பாடும் பிரபலங்கள் பாடவேண்டிய கிருதிகள் பட்டியலை ஃபோன்போட்டுக் கேட்டுக்கொள்வர். கேட்பதற்கு அழைப்பு வந்தால் சென்னையில் நீயும் ஒரு ஆளாகிவிட்டாய் என்று உணர்ந்துகொள்.

இதைத்தவிர தமிழில் சிறுகதைகள் எழுதுவதும் பாலாவிற்கு பொழுதுபோக்காம். ஹிண்டுவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சொல்லப்போனால், மேற்படி விபரங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே அவரைப் பற்றிய கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்த பின்புதான் சிறுகசிறுகத்தான் சேகரித்திருந்தேன். அவருக்காக நோட்டுப்புத்தகமே வைத்திருக்கிறேன். அதில் அந்த ஹிண்டு பேட்டியை கத்தரித்து ஒட்டிவைத்துள்ளேன்.அவர் வீட்டில் பாடிய கிருதிகளின் பட்டியல் ஒன்றைக்கூட ஒரு பிரபலப் பாடகரின் சிஷ்யகேடியின் வாயிலாய் தெரிந்துகொண்டு எழுதிவைத்துக்கொண்டேன். கூடவே, பாட்ரன் பாலா பங்குபெற்றாதாய் கிசுகிசுக்கப்படும் ஓரிரு பாடகிகள் விவகாரங்கள்.

என் கதையும் சிறுகச்சிறுக வளர்கிறது.

***

இதோ இந்தப் பாராட்டுவிழாவிலும் இன்று சந்திக்கிறேன். விழாவின் முதல்கட்டத்தில் மேடையில் பேசிமுடித்து, தொடர்ந்த கச்சேரியைக் கேட்பதற்கு வழக்கம்போல முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் பாட்ரன் பாலா.

கச்சேரி தொடங்கியதும் பின்னாலிருந்து எழுந்து இரண்டாம் வரிசைக்கு இடம் பெயர்ந்துகொண்டேன். அவரை அருகில் கவனிப்பதற்கு.

சுற்றும் முற்றும் அவ்வபோது நோட்டம் விட்டபடி இருந்தார். மற்ற விரல்களை கட்டைவிரலுடன் ஒற்றிச் சரியாகத் தாளம் போட்டார். நாற்காலி இடைவெளியில் தெரிந்த நீல டெர்லின் பாண்ட் மடியில் ஐ-பாட் போல தொடுதிரை வஸ்து. மேல் ஓரம் எச்சில் முத்தம்பெற்ற பாலிமர் குச்சியால் அவ்வப்போது நிரடிக்கொண்டிருந்தார். ஓரிரு முறை எங்கள் கண்கள் சந்திக்கையில் புன்னகைத்தார். தலையால் என் இருப்பை ஆமோதித்தார்.

மங்களம் வரையில் அவரது சேஷ்டைகளை கவனித்ததில் எனக்கு ஓரிரு தாள்கள் நிரம்பியது.

கச்சேரி முடிந்தது. எழுந்து மேடைப்பாடகியிடம் சென்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு குனிந்து காதுகளில் ஏதோ சொன்னார். கைகளைக்கூப்பிக் குனிகையில் வகிட்டில் குங்குமத்தைக் கடந்த நரை வெளிப்படும் அப்பாடகியும் நிறைவாய்ச் சிரித்தார். சக பக்கவாத்தியக்காரர்களை காட்டி ஏதோ சொன்னார்.

பாட்ரன் பாலா வாய்விட்டுச் சிரித்தார். பற்களில் வெற்றிலைக் காவி இல்லை. தங்கப்பல் எதுவும் தட்டுப்படவில்லை. எல்லாமேவா வித்தியாசமாக இருக்கவேண்டும். எப்படியும் அவருக்குத் தேவையான இடங்களில் மச்சங்கள் இருப்பதுதான் காட்சிகளில் புலனாகிறதே. பெருமூச்சிக்கொண்டேன்.

மேடையவிட்டு இறங்கி நிமிர்ந்தவரிடம் சென்று “ஹலோ சௌக்கியமா” என்றேன். பேசிப்பார்த்தால் ஏதாவது அக்கப்போர்கள் கிடைக்குமே. கதைக்கு உதவும்.

“உங்களை எங்க…. யு ஆர்… நீங்க யாரு, சாரி எனக்கு செத்த மறதி ஜாஸ்தி.”

பாட்ரன் பாலா வழக்கம்போல என்னை மறந்திருந்தார். அல்லது வழக்கம்போல மறந்துவிட்டதுபோல தோரணை காட்டினார்.

சரியான கதா பாத்திரம். அன்றுதான் அறிமுகமாகும் பாடகியை இறுக்கி அனைச்சு உம்மா தராத குறையாய் பரிச்சயம் பாராட்டுகிறார். நான்கைந்து முறையாவது வெவ்வேறு தருணங்களில் சந்தித்து இதே உரையாடலில் தொடங்குபவனை அந்நியப்பட்டு விசனிக்கிறார். என்ன ஒரு முரண். மவனே, நிச்சயம் இவர்தான் என் முதல் கதை நாயகன். நினைத்துக்கொண்டேன்.

நேரில் புன்னகைத்தபடி (மீண்டும் ஒருமுறை) அவருக்குப் பதிலளித்தேன்.

சில மாதங்கள் முன்புதான் அவர் வீட்டு கல்யாணத்திற்குக்கூட சென்றிருந்தேன். வரவேற்று அரைமணி பேசியிருக்கிறார். ‘உங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்பநாள் பிளான்’ என்றும் கூறியிருந்தார்.

அதை நினைவுறுத்துவதுபோல “உங்க பையன் கல்யாணத்திற்கு வந்திருந்தேன். அப்போ பார்த்தது.” என்று தொடங்கினேன்.

சிவப்புப்பட்டில் அக்குளில் வியர்த்திருந்த காத்திர தேகம், இரட்டைவடம், ரத்னாஹாரம், கோக்குல் சாண்டல், காஷ்மீர் குங்குமம் என்று அருகிலிருந்த அவர் மனைவி அதற்குள் குசுகுசுக்க, சுதாரித்துக்கொண்டார்.

“ஓ… யா. நீங்க சாஃப்ட்வேர் குரு இல்ல. ஹிண்டூலகூட மியூசிக் பத்தி எழுதியிருந்தீங்க ளே. எப்போலேந்து கர்நாட்டிக் கேக்கறீங்க. முப்பது வருஷம் இருக்குமோ? நிறைய நோட்ஸ் வெச்சுருக்கீங்களோ, கே.வி.என். காலத்து கச்சேரிலேந்து? நான் கூட எழுதி வச்சிருக்கேன். வீட்டுக்குப்போய் நாம நோட்ஸ் கம்பேர் பண்ணிக்கனும். நிச்சயம். அடுத்தமுறை நீங்களும் என் வீட்டுக்கு வந்துட்டுத்தான்… அடுத்த முறை என்ன இன்னிக்கே வாங்களேன். இஃப் யு டோண்ட் ஹாவ் அதர் பிளான்ஸ் ஃபார் தி நைட்?”

மேடையில் பேசிக் கேட்பது போலவே, அவரின் ஆறேகால் அடி உயரத்திற்கு சற்றும் தொடர்பில்ல்லாத சன்னமான குரலில் கடகடவென்று பொழிந்தார்.

என் கதையை வளர்த்த நான் அவரை அருகில் கவனிக்கவேண்டும் என்று நினைத்தால், அவரே வீட்டிற்கு அழைக்கிறார். எதிர்பாராமல் அடித்த சான்ஸில் பதில் சொல்ல வாயடைத்து நின்றேன்.

பேச்சில் விழுந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கைகுலுக்கி வேறொரு கண்ணாடிப் பிரமுகர் பாலாவிடம் பேசுவதற்கு இடைபுகுந்தார். வழிவிட்டு வேறு கோணத்தில் திரும்பி, கச்சேரி முடிந்து கலைந்துகொண்டிருந்த சபையை நோட்டம் விட்டேன்.

மிக அருகில் நின்றிருந்தவள் யாருடனோ பேசிமுடித்து என் பக்கமாய்த் திரும்பினாள். ஆத்திக் கட்டியிருந்த அலையும் கூந்தல். அகலமான மையிட்ட விழிகள். நாபிக்கமலம் நாசுக்காய் வெளிப்படும் வகையில் உடுத்தியிருந்த பச்சை பட்டினுள் விம்மியிருந்த நெஞ்சுரத்தில் எனக்கு நெஞ்சு வலித்தது.

விழாவைக் காம்பியர் செய்து தொடக்கத்தில் தெளிவான தமிழில் இறைவணக்கம் கணீரென்று பாடியவள். பார்த்தவுடன் தொட்டுப்பார்க்கவும் அழைக்கும் மிருது. அவள் உணராமல் தொடுவதற்கு மின்திரையில் இல்லை. நேரிலே, முகர்ந்தால் மல்லிகைப்பூ வாசமடிக்க, மிக அருகில் முப்பரிமாணத்தில் நிற்கிறாள்.

அது உன்னைத் தொடாமல் உன்னால் அதைத் தொட முடியாது. நியூட்டனின் மூன்றாம் விதிக்கான உதாரணம். விஞ்ஞானி ஆசையில் தேங்கிய விஷயங்களில் ஒன்று மனத்தில் மல்லிகைப்பூ வாசத்துடன் எழுந்தது. தொடாமல் தொட முடியாது.

புன்னகைத்தேன்.

யா…

வளை குலுங்கத் தலை கோதி, விழிகளில் சிரித்தாள்.

ஹலோ; உங்களுக்குத் தமிழ் தெரியுமா; டு யூ நோ டமில்?

ஷ்யூர். ஏன்யா, என்ன பார்த்தா அப்டியா இருக்கு. தமிழ் பொண்ணுதான் நான்.

ஓ, சாரி. இல்ல பாடறவா சாதாரணமா தமிழ் பேசத்தெரியாதும்பா. அப்பப்போ கவனிச்ருக்கேன். தமிழ்ல கேட்டா இங்க்லீஷ்லதான் பதில் சொல்லுவா. பாராட்டி எழுதிக்கொடுத்தாலும் தமிழ்ல படிக்கமாட்டா. ஏதாவது திட்டினாத்தான் ஆள் வச்சு படிச்சுப்பா. அதான்… நீங்கதான் வித்தியாசம். அதுவும் இவ்ளோ யங்கா, சாரி, சின்ன பொண்ணா இருக்கற நீங்க தமிழ்ல பாடறதோட பேசறீங்களே. ஐம் இம்ப்ரஸ்ட். ரொம்ப சந்தோஷம்.

ஓ, தட்ஸ் நத்திங். கான்வெண்ட்னாலும், வீட்ல தமிழ்தான்னே.

அதானே. நைஸ் டு ஹியர் தட். நான் தமிழ்ல சங்கீதம் பத்தி ஓரளவு எழுதுவேன். இந்த நிகழ்சிகளைத் தொகுத்து தமிழில் கட்டுரை எழுதலாம்னுட்டு. காம்பியர் பண்ணீங்களே. உங்ககிட்ட பர்மிஷன் வாங்கத்தான் கேக்கறேன். ஃபோட்டோஸ் கிடைக்குமா. விடியோ வேணாலும் எடுக்கறேன். அந்த தமிழ் பாட்ட இன்னொரு தடவ நீங்க பாடினீங்கன்னா கேட்டுண்டே இருக்கலாம் மிஸ்…

கலை.

வ், வாட். என்ன?

இல்ல. என் பேர் கலை. கலைவாணி. மிஸ் இல்ல…

ஓ, கலை. பேர்கூட பொருத்தமா. களையா. நீங்களேதான் இங்க நடக்கப்போற மத்த கச்சேரிகளையும் தொகுப்பீங்களா. மத்த கச்சேரிலலாமும் ‘பிரேயர் சாங்’ நீங்கதானா. அந்தப் பாட்ட இன்னொரு தடவை நீங்க பாடனும் நான் கேக்கனும். எப்ப பாட ரெடியோ சொல்லுங்க அப்ப வந்து விடியோ எடுத்துக்கறேன். என் ஸ்டுடியோவில கூட பாடலாம். உங்க சௌர்யம். நானே வீட்டுக்கு வந்து பிக் அப் பண்ணிக்கறேன்…

குறுக்கிட்ட மேனகையை கவனித்ததில் மீண்டும் எழுத்து என்னும் தவம் கலைந்தது. பாட்ரன் பாலாவை கவனிக்கத் தவறிவிட்டேன். என் கதை நாயகன் காரில் ஏறிப் போய்விட்டார்.

***

எப்படியோ அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டை அடைந்தேன். என் வீட்டிற்கு போகும் வழியில்தான் ஏதோ ஒரு வளைந்த சாலையின் உள்மடிப்புகளில் அவர் வீடு.

வாட்ச்மேன் ஃபோன் மூலம் உள்ளே அழைத்துச் சரிபார்த்துக்கொண்டு சல்யூட்டுடன் பிரதான கோட்டைக்கதவைத் திறந்துவிட, வெள்ளை மாளிகையினுள் நுழைந்தேன்.

பாட்ரன் பாலாவின் சன்னமான வரவேற்பு அவ்வீட்டின் மிடுக்கைக் கூட்டியது. கூச்சமாய் செருப்பை குரோட்டன்ஸ் செடிகளுகிடையே கழற்றி, மிதியடியில் வெற்றுக்கால்களை ஓரிருமுறைத் தேய்த்து, வராண்டாவைக் கடந்து ஹாலில் நுழைந்தேன்.

அன்னாந்து பார்க்கும் உயரம்வரை பளீரென்று வெள்ளை. தேக்கு மர ஜன்னல்கள் கருஞ்சிவப்பில். ஹாலில் சட்டென்று கண்ணில் பட்டது அங்கு இல்லாதது. டிவிப் பெட்டி இல்லை. சோபாக்கள் இல்லை. பழங்கால மர மற்றும் பிரம்பு நாற்காலிகள்தான். ஆளுயர வெங்கடாஜலபதிப் படம். தஞ்சாவூர் பெயிண்டிங். சுத்தமான பிரேம். சுவரில் பதிந்திருந்த பெரிய அலமாரியை மூடியிருந்த தேக்கு மரத்தினாலான கதவுகள் ஜன்னல் சட்டத்தையொத்த கருச்சிவப்பில்.

பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். என் வீட்டிலும் அவ்வகை நாற்காலி ஒன்று உண்டு.

சற்று நேரம் சங்கீதம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அன்று நடந்த கச்சேரி. பாடகிகள். படோடோபங்கள். அக்கப்போர்கள்.

ஹாலின் ஒரு பக்கம் சிறு அறையைக் காட்டி அதுதான் அவர் எழுதும் இடம் என்றார் பாலா.

ஓ, சிறுகதைகள் எழுதுவது பொழுதுபோக்கு என்றது நிஜம்தானோ. அப்ப பேரிளம்பெண் பாடகியிடம் வழிவது வேறு சங்கதிகளுக்கா? மனதினுள் கருவி முகத்தினில் சிரித்தேன்.

“கொஞ்சம் இருங்கள். வேலையாள் போய்விட்டான். பத்மா தூங்கிட்டா. ஏதாவது ரிஃப்ரெஷ்மெண்ட்ஸ் கொண்டு வரேன்.”

பாலா ஹாலின் மறுபுறமாய் உள்ளே சென்றார்.

கொட்டாவியை அடக்கிக்கொண்டேன். எழுந்து கைகால்களை முறுக்கிவிட்டு, மனம் குறுகுறுக்க, சட்டென்று முடிவுசெய்து, பாலாவின் தனியறைக்குள் எட்டிப்பார்த்தேன். பெரிய தேக்கு மர மேஜயின் மீது புத்தகங்கள் கலைந்திருந்தன. மேலே சுவரில் நாற்புறமும் ‘போஸ்’ ஸ்பீக்கர்கள். ஒரு சுவர் முழுவதும் கண்ணாடிக் கதவுகளுடனான புத்தக அலமாரி. உள்ளே வழியும் புத்தகங்கள். மேஜையில் ஐ-பாட் உயிர்பெற்றிருந்தது. கச்சேரியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாரே. அருகில் திறந்திருந்த நோட்டுப் புத்தகத்தில் குண்டு குண்டாய் தமிழ் எழுத்து.

அவர் எழுதும் கதையா? ஆவலை அடக்கமுடியவில்லை.

கதையின் தலைப்பு “நியூட்டனின் மூன்றாம் விதி” என்றது.

வாசிக்கத்தொடக்கினேன்.

“ராம்போ ரமேஷிற்கு எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது. முதல் பத்து ஆசைகளில் சினிமா நடிகன், இறைதூதன் சேர்த்து ராம்போ புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் போல ராஜா காலத்திய கிராப்பு வைத்துக்கொள்வதும் அடங்கும். நிறைவேற்றிவிட்டான். மிச்ச ஆசைகள் பெண்கள் பற்றியவை. அவை எதற்கு இங்கே. எழுத்தாளனைத் தொடர்வோம். அவன்தானே கதைகள் செய்பவன். எழுத்து ஒரு தவம் என்பதை பால்யத்தில் அறிந்துகொண்ட ரமேஷ், வயதிற்கு வந்தபின்பும் தவம் செய்ய முனையவில்லை. குறுக்கிட்ட மேனகைகளை கவனிக்கவே நேரமில்லை அவனுக்கு. ஆனால் சங்கீதத்தில் கெட்டி…”

சொல்வனத்தில் மேய்ந்து சம்பவங்களில் ஊடாடுகையில் ஆளுமை திரண்டது. மோட்டு நெத்தியாம், வசீகர முகமாம், மயக்கும் புன்னகையாம், கலகல பேச்சாம்… இது பாலாவேதானா? கதை சாக்கில் சுயமைதுனமா? இல்லையே நான்தான் அவரை கவனித்து நிஜம்போல எழுதி வருகிறேனே. என் கதையில் அவருக்கு மோட்டு நெத்தி கிடையாதே. வயதான வெள்ளை முடி கிராப் ஆயிற்றே…

ஓரிரு பத்திகள் தவ்வி வாசித்தேன்.

“அகர முதல எழுத்தை அளிப்பவன் மும்மூர்திகளின் வடிவம். பேரன்பினால் தன்னையே கூறுகளாக்கி எழுத்தில் அளிப்பவன். விளைவாய், வாசிப்பவன் அச்செயலை பூர்த்திசெய்கிறான். செயல் இல்லையேல் விளைவில்லை. விளைவற்ற செயல் செய்யப்பட்டது என்றறிவது எவ்வாறு? நியூட்டனின் மூன்றாம் விதியும் இதுதானே. பரமாத்மனுக்கும் ஜீவாத்மனுக்கும் அகர முதல எழுத்தில்தான் இணைபிரியா பந்தம்…”

பாலாவின் கற்பனையா? இவர் எப்போது இத்தனைத் தீவிரமாகத் தவம் செய்தார்?

வாசிப்பைத் தொடர்ந்தேன்.

கண்ணாடியில் படர்ந்திருந்த நீராவி மெள்ளக் குளிர்ந்து, பிம்பங்கள் புலனாகத் தொடங்கியது.

“அவனுக்குக் கலையை கவனிக்கும் கண்கள். அதுவும் கலைகளின் உறைவிடங்களான கலைவாணிகளைக் கண்டவுடன் களையும் கண்கள்…வெள்ளைக்கதர் சட்டையில், கிரீம் கலர் பாண்டின் பாக்கெட்டுகளில் ஸ்டைலாய் கைகளை நுழைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறானே, அவளை எப்படியும் ஓரிரு கச்சேரிகளுக்குள் கட்டியிருக்கும் பச்சைப்பட்டு நெகிழ தன்னிடம் வீணையை மீட்டவைத்துவிடுவான்.”

அட இது என்ன? கூட இருந்து பார்த்த மாதிரி…

பளாரென்று இருகன்னங்களிலும் ஒருசேர அறைவாங்கி ஜிவ்வென்றானது.

 

நடுங்கும் கைகளால் நோட்டுப்புத்தகத்தை மூடி மேஜையில் முன்பிருந்தபடியே வைத்தேன். மூச்சைப்பிடித்தபடி தத்தித் தத்தி வந்து என் பிரம்பு இருக்கையினுள் பூதானமாய் அமர்ந்தேன்.

திக்திக்கென்றது. உள்ளே ஏதோ விழித்துக்கொண்டது போலானது. வெளியே மழை ஓய்ந்தது எப்போது? வீட்டில் என் அபிமான பிரம்பு நாற்காலியில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தவமிருக்கிறேன். வியர்த்தாலும், உடலை லேசான பெருமிதத்துடனான நிம்மதி நனைக்கிறது.

என்னிடம் அவர் வரவை எதிர்நோக்கினேன்.

***

கதை முடிந்த களைப்பில் பாலகிருஷ்ணன் பிரம்பு நாற்காலியிலேயே தூங்கிப்போனார்.

drawing-hands

http://www.wikipaintings.org/en/m-c-escher/drawing-hands

 

04 Feb 23:35

சிறுகதை – பிறகு பார்க்கவே இல்லை – அரவிந்தன்

by malaigal

 

 

download (26)

 

 

 

 

 

இந்தக் கதையைப் படிப்பதற்கு முன் 2007இல் நான் எழுதிய உருமாற்றம் என்னும் கதையைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கான இணைப்பையும் இங்கே கொடுத்திருக்கிறேன். உருமாற்றம் தீராநதியில் வந்தது.

உருமாற்றம்: http://aravindanwritings.blogspot.in/

 

அவரை அதன் பிறகு பார்க்க முடியாமலேயே போகும் என ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அழகும் வீரியமுமாய்ச் சுடர் விட்டுப் பிரகாசித்த ஒளி தன் சோபை இழந்து மங்கி நெருப்பின் சிறு தீற்றலை மட்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நிலையைக் காணச் சகியாத என் ஆழ்மனம் போட்ட திட்டமாக இருக்கலாம். ஆனால் புற்று நோயைச் சுமந்துகொண்டு அவர் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட பிறகும் பார்க்க முடியாமல் தடுத்தது எது? துளியும் வெறுப்போ கசப்போ இல்லாத ஆழ்ந்த வருத்தத்திற்கு இத்தனை வலிமை உண்டா? அன்றாட வாழ்வின் பிடுங்கல்களில் நாம் தவறவிடும் அரிய அனுபவங்களிலும் செய்யத் தவறும் கடமைகளிலும் ஒன்றா இது? இப்படியெல்லாம் புறக் காரணங்களைச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியுமா?

அவருடைய பெண்ணுக்குக் கல்யாணம். குழந்தையாக இருக்கும்போது அவளைப் பார்த்திருக்கிறேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்க்கிறேன். தந்தையை நினைவுபடுத்தும் அழகிய முகம். இளம் வயதிலேயே மன முதிர்ச்சி வெளிப்படும் அமைதியான தோற்றம். இதமான நடத்தை, பணிவு, அறிவின் தீட்சண்யம், கூர்ந்து கவனிக்கும் காதுகள், அளவான பேச்சு. எனக்குத் தொண்டை அடைத்தது. இந்த முகம் எனக்கு மிகவும் அறிமுகமானது. இந்தப் பார்வை, இதே புன்னகை. 23 ஆண்டுகளுக்கு முன்பு இளமாலைப் பொழுது ஒன்றில் நண்பர்களுடன் சென்று பார்த்து வியந்த அதே முகம். காலம் அசையாமல் நின்றது. மனம் நழுவியது. உதடுகள் சொற்களை உதிர்த்துக்கொண்டிருந்தன. அந்தப் பெண்ணின் பார்வையில் மாற்றம் தெரிந்தது. நான் சுதாரித்துக்கொண்டு நிகழ்கணத்துக்கு வந்தேன்.

திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கையில் எதிர்பாராத சம்பவம் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது. அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த இந்தத் திருமணம் தள்ளிப்போவது அவரது விருப்பத்துக்கு விரோதமானதாக இருக்கும் என்பதால் திருமணத்தைத் திட்டமிட்டிபடி நடத்த இரு வீட்டாரும் முடிவுசெய்து விட்டார்கள். அவருடைய மனைவி என்னுடைய முகவரியைத் தேடிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு உடனே அவர் முகவரியைப் பெற்றுப் பார்க்கச் சென்றுவிட்டேன். கேயார் இறந்தபோது நான் ஊரில் இல்லை. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இதே ஊரில்தான் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் தனியாகச் செல்ல வேண்டும். பிறகு மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

அந்தச் சந்திப்பைப் பற்றிப் பலவாறாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துச் சலிக்கச் சலிக்கப் பேசிக்கொண்டிருந்த நாட்கள் மன அரங்கில் உயிர்பெற்றன. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் செய்த பயணங்களை அவரிடம் சொல்லவே ஒரு நாள் போதாது. அவர் முற்றில் எதிர்பாராத ஒரு இடத்தில் இன்று நான் இரப்பதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்ற கேள்வி என்னுள் எழுந்தபடி இருந்தது. அரசியலில் அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்த் திசையில் அல்லது நெருங்க முடியாத தொலைவில் நான் நிற்கிறேன். இதை அவர் எப்படிப் பார்ப்பார்? ஒருவேளை அவரும் மாறியிருப்பாரா? மாறவில்லை எனில் என்னோடு விவாதிப்பாரா? வாதம் செய்து பிறரை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர் அல்ல அவர். என்னுடைய மாற்றத்தின் காரணிகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தியிருப்பார். சில கேள்விகளை மட்டும் கேட்டிருப்பார்.

தத்துவங்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. படித்ததை வைத்து என் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். தத்துவங்களுக்கிடையேயான சிக்கலான முரண்பாடுகளை அழகாக நீவிவிடுவார். குழம்பிய பாதைகள் தெளிவடையத் தொடங்கும். படித்த வரிகளின் மேல் புதிய வெளிச்சம் பாயும். புதிய நோக்கின் பரவசத்தில் நான் ஆழ்ந்திருக்கும்போது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து அவர் சொல் என்னைக் கலைக்கும்.

தத்துவங்களைப் படிப்பதுடன் அந்தத் தத்துவ நூல்களை எழுதிய ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படி. அவர்கள் வந்து சேர்ந்த இடத்திற்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்பதை அவை உனக்குக் கற்றுத்தரும். இந்தத் தத்துவங்களை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கும் வாய்ப்பை இவை உனக்குத் தரும்.

வாழ்க்கை வரலாறுகள் மீது அதிக ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. அவர் சொன்னதை உடனே ஏற்றுக்கொள்வதில் எனக்கு மனத்தடை இருந்தது. நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் அவரைச் சந்தித்திருந்தால் நான் எங்கே இருக்கிறேன் என்பதை விட எப்படி அங்கே வந்தேன் என்பதில்தான் அவர் கவனம் குவிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவர் கேட்பதாக அனுமானித்துக்கொண்டு அந்தக் கேள்விகளை எனக்குள் நான் பலமுறை எழுப்பிக்கொண்டிருக்கிறேன். படித்த சில நூல்கள், சந்தித்த சில நபர்கள், உரையாடல்கள், அனுபவங்கள் நாட்டு நடப்புகள், அவை சார்ந்த பல தரப்பட்ட செய்திகள், அலசல்கள், விவாதங்கள் எனப் பல சலனங்கள மன வெளியில் அசையத் தொடங்கின. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நுணுகி நுணுகி ஆராய்ந்ததில் என் கேள்விகளினூடான பயணம் ஒரு புள்ளியில் குவிமையம் கொண்டது.

கேயார் ஒருமுறை ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் நூலைக் கொடுத்தார். என் அணுகுமுறையைப் பெருமளவில் அந்த நூல் மாற்றியது நினைவிருக்கிறது. முடிவுகளை முன்வைத்தோ, தரப்புகளை வலியுறுத்தியோ வாதிடும் பழக்கத்திலிருந்து விடபட்டுக் கேள்விகளினூடான பயணமே உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை உணர்ததிய நூல் அது. உண்மையின் மீது ஏற்றப்பட்டுள்ள பாவனைகள், படிமங்கள் சுயநலம் சார்ந்த கற்பனைகள், எதிர்பார்ப்புகளின் சுமைகள், ஆசைகளின் சுமைகள் ஆகியவற்றை ஊடுருவிச் செல்லக் கேள்விகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்தந்த நூல் அது. பார்க்கப் போனால் கேயாரின் அணுகுமுறையும் அதுதான். அந்த அணுகுமுறை கூர்மையும் வலிமையும் பெற்றுவந்ததன் விளைவாகவே என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது புரிந்தது.

உன் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று கேயார் கேட்டிருந்தால் அதன் தொடக்கப் புள்ளி நீங்கள்தான் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் பாதையும் என் பாதையும் இன்று வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அந்த மாற்றத்திற்கு விதை போட்டது நீங்கள்தான் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த வாக்கியம் தந்த பரவசத்தில் சில கணங்கள் மிதந்துகொண்டிருந்தேன்.

ஆனால் இந்தப் பரவசம்கூட என் நேரத்தை அவருக்காக ஒதுக்க உதவவில்லை. பெரும் நெருக்கடியில் உழன்ற நாட்கள். லெளகீக வாழ்வைத் தாண்டிய திட்டங்களையும் கனவுகளையும் அரித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. நாளை நாளை எனத் திட்டங்கள் பின்வாங்கிக்கொண்டிருந்த காலம் அது. விரைவில் விரைவில் என மனம் அரற்றிக்கொண்டிருந்தது. ஆனால் முயற்சிகள் முனைப்புக்கொள்ளவில்லை. உண்மையிலேயே நினைத்திருந்தால் நடந்த்திருக்கக்கூடிய சந்திப்புதான் அது என்பது என் ஆழ் மனத்துக்குப் புரிந்தே இருந்தது. எப்படியும் சந்தித்துவிட வேண்டும் என்ற வேட்கையும் சந்திப்பைத் தள்ளிப்போடும் தயக்கமும் ஒருசேர எனக்குள் இயங்கிக்கொண்டிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். உடல் நிலை சரியில்லாதவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றால் அதைத் தள்ளிப்போடவே கூடாது என்பதை மிகக் கொடூரமான அனுபவங்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்த நிலையிலும் இந்த ஊசலாட்டத்தை வெல்ல முடியவில்லை. மாறுபட்ட இந்த சக்திகள் இருபுறமும் அழுத்தியதில் என் செயலாக்கமும் அசைவின்றி நின்றுவிட்டதா?

ஏதோ ஒரு புள்ளியில் தயக்கம் உடைபட்டு அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம். அவரோடு பேசியிருக்கலாம். என் தற்போதைய மாற்றத்திற்கு மட்டுமல்ல, என் வாழ்வின் பல விஷயங்களுக்கும் நீங்களே காரணம் என்ற நன்றியைச் செலுத்தியிருக்கலாம். பெரும் துயரத்துக்கு நடுவில் சிறு ஆறுதலை அவருக்கு இந்தச் சொற்கள் தந்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்த வாய்ப்பு நிரந்தரமாக என்னை விட்டு நழுவிவிட்டது. அந்தக் குற்ற உணர்விலிருந்து நான் தப்பவே முடியாது.

அப்பாவுடன் பொது விஷயங்கள், அரசியல் பற்றியெல்லாம் பேசுவாயா என்று கேட்டேன். சிறு புன்னகையுடன் தலையாட்டினாள். நான் மணிக்கணக்கில், நாட்கணக்கில் பேசியிருக்கிறேன் என்றேன். ஆச்சரியத்தில் அவள் கண்கள் விரிந்தன. பல விஷயங்களை அவரிடமிருந்ததுதான் கற்றுக்கொண்டேன் என்றேன். அந்தப் பெண்ணின் முகத்தில் அவள் தந்தையின் முகம் தோன்றி மறைந்தது. கடைசி மூச்சுவரை மறக்க முடியாத முகம் அல்லவா அது. கேயாரின் மனைவியின் கண்கள் பனித்தன. நான் பேச்சை மாற்றினேன்.

தயக்கத்தை உடைத்துப் போயிருந்தாலும் கேயாரிடம் பேசியிருக்க முடியாது என்பதை அவர் இறந்து பல மாதங்கள் கழிந்த பிறகே அறிந்துகொண்டேன். கேயாரின் கடைசி மாதங்களில் அவரை அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வந்த கிருஷ்ணாவைச் சந்தித்தேன். கேயார் எப்படி இருந்தார், பழையபடி பேசினாரா என்று கேட்டேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவரால் உட்காரவோ பேசவோ முடியவில்லை. கண்களை மூடிப் படுத்துக்கொள்வார். நான்தான் பேசிக்கொண்டிருப்பேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்னாலும் பேச முடியாது. அவர் நிலைமை அப்படி இருந்தது என்றார் கிருஷ்ணா.

என்னால் அந்தக் கேயாரைக் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. தொண்டை அடைத்தது. மனம் வெறுமையானது. நீங்கள் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே என்றேன். கிருஷ்ணா இதுபோன்ற கேள்விக்கெல்லாம் அசர மாட்டார். உன்னையே ரெண்டு வருஷம் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன் என்றார். அவர் அடையாறில் இருந்தது உனக்கு தெரியாதா என்று கேட்டார். உன் அண்ணன் சொல்லவில்லையா என்றார். நான் பேசாமல் இருந்தேன். நான் கேயாரைப் பார்க்காமல் இருந்ததற்கு நான் மட்டும்தான் காரணம் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணாவை மேலும் பேசவிட்டால் என் குற்ற உணர்வைக் குத்திக் கிளறிப் பெரிதாக்கிவிடுவார். அவரது தர்க்கத்துக்கு முன் பாவனைகளோ உணர்ச்சிகளோ உயிரிழந்துவிடும். நான் பேசாமல் இருந்தேன்.

போக வேண்டும் என்று நினைத்தபோது பேச முடியாது என்ற சாத்தியத்தை நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. புற்றுநோய் வந்த யாரையும் நான் பார்த்ததில்லை. 15 ஆண்டுக் கதையை விஸ்தாரமாகப் பேசக்கூடிய எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்ட முட்டாள்தனத்தைப் பின்னாளில் உணர்ந்தேன். இப்படி இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாகப் போய்ப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். இதுவும் குற்ற உணர்விலிருந்து தப்பிப்பதற்காக மனம் போடும் நாடகம் என்பது புரிய வெகுநேரம் ஆகவில்லை. கேயார் போன்ற ஒருவர், பல ஆண்டுக்காலம் வெளியூரில் இருந்தவர் இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்றால் அவரைப் பார்ப்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. அவரோடு நெருங்கிப் பழகாதவர்கள்கூட இந்தச் சமயத்தில் அவரைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். வேறு யாரைவிடவும் அவருக்கு நெருக்கமானவனாக என்னைக் கற்பித்துக்கொண்ட நான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதைத் தவிர்த்திருக்கக் கூடாது எந்த நியாயமும் இதில் இல்லை.

மனதில் சுய வெறுப்பும் விமர்சனமும் பொங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆழ் மனதின் சலனங்கள் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இருந்ததை உணர முடிந்தது. அணுகிப் பார்க்கையில் அந்தச் சலனங்களின் தோற்றங்கள் முற்றிலும் புதிய முகம் காட்டின. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் மட்டும்தான் காரணமா? அவரைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட தயக்கத்துக்கும் அவருடனான என் நெருக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அவர் ஊரை விட்டுப் போவதற்கு முன் அவர் ஆளுமையில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆழமான நெருக்கம், ஆழமான ஏமாற்றம் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் ஒரே விதமான வலிமையுடன் உயிர்ப்புடன் இருந்ததுதான் தயக்கத்துக்குக் காரணமா?

அச்சிடப்பட்ட நூலின் பிழைகளை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் இந்தக் கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி இந்தக் கேள்விகள்தான் மிச்சம். கேள்விகளினூடே உண்மையை உணரும் பயணம்கூட இவ்விஷயத்தில் சாத்தியமில்லை. சுடருடன் பிரகாசித்த திரியை மங்கிய தணலாகவோ கருகலின் எச்சமாகவோ பார்க்க விரும்பவில்லையா நான்? புற்றுநோய்தான் அவருக்கு வந்த பெரிய அபாயமா? யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கண் காணத இடத்திற்குக் கிளம்பிச் சென்று 15 ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் புரிய வைத்த காரணி எது? அந்தக் காரணிக்கும் அவருடனான என் உறவின் ரசாயனத்துக்கும் தொடர்பு இல்லையா? முதுகெலும்பு வளையாமல், மடித்த கால்கள் நெளியாமல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவரைத் தலைகுனிய வைத்த காரணி எது? இரண்டு மணிநேரமே தூங்கினாலும் ஒளி குன்றாத முகத்துடன் விடியலை வரவேற்ற முகம் தன்னை ஒளித்துக்கொள்ளத் தூண்டிய காரணி எது?

அவருடய முகம் மிகவும் சுருங்கி, சுண்டியிருந்தது என்று கிருஷ்ணா கூறியது நினைவுக்கு வருகிறது. அந்த முகத்தை என்னால் பார்த்திருக்கவே முடியாது. இறுதிச் சடங்கு நடந்தபோது நான் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதுதான் எனத் தோன்றியது.

கிளம்பும்போது அந்தப் பெண் வாசல்வரை வந்து வழியனுப்பினாள். அப்பாவின் பண்பு. வாசலில் நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திருமணத்திற்குப் பிறகு எங்கே வாசம் என்று கேட்டேன். அமெரிக்கா என்று பதில் வந்தது. மீண்டும் அந்தப் புன்னகை. உன்னைப் பார்க்கும்போது உன் அப்பாவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்றேன்.

கேயார் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். 23 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே முகம். அதே புன்னகை.

 

 

04 Feb 23:35

காற்றில் மிதந்த நாட்கள் – சிபிச்செல்வன்

by malaigal

sibi& bala

 

 

சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது கடந்த பதினைந்து வருடங்களாக எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அங்கே புத்தகங்களை வாங்க முடியும் என்பது மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. பல இலக்கிய நண்பர்களை அங்கே ஒரே சமயத்தில் சந்தித்து உரையாடலாம், அவர்களோடு சேர்ந்து போட்டோக்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் காரணங்கள். அதுவும் மலைகள் இணைய இதழைத் தொடங்கிய பிறகு , மலைகள் இதழுக்குப் பரவலான ஒரு கவனிப்பு கிடைத்த பிறகு, உலகின் பல பாகங்களிலிருந்தும் அதன் எழுத்தாளர்கள்,வாசகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரைச் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சந்தித்து உரையாடும் இடமாக அமைந்து விட்டதற்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்த வருடம் எனக்குப் புத்தகக் காட்சி டிசம்பர் 2013 கிறிஸ்துமஸ் நாளிலேயே தொடங்கி விட்டது.ஆம் மலைகள் பதிப்பக பணிகளைத் தீவிரமாகத்  தொடங்கிய நாளாது. உண்மையில் 2013 மார்ச்சிலேயே அதற்கான பணிகள் தொடங்கியிருந்தாலும் அது வேகமெடுத்தது கிறஸ்துமஸ் நாளுக்குப் பிறகுதான். சென்னைக்கு மலைகள் பதிப்பக பணிகளுக்காக நான் கிளம்பிய நாளிலிருந்து ஏறக்குறைய ஒரு மாதம் (புத்தக காட்சி நாட்களும் சேர்த்து ) நான் காற்றில் மிதந்த நாட்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. புத்தக உருவாக்கப் பணியில் திட்டமிடுதலாலும், அதை உருவாக்கப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாலும்  தினசரியும் அது என்ன கிழமை என்பதோ அல்லது அது என்ன தேதி என்பதோ எனக்கு நினைவிலிருந்து நழுவிப் போயிருந்தது என்றே சொல்லலாம்.  

முதலில் முரகாமியின் புத்தகத்தை மட்டும் கொண்டு வரவதாகதான் திட்டமிருந்தது. அதற்காக அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தைக்கூட ஒரு 90 சதவீதத்திற்குத் தயாரித்து வைத்திருந்தோம். புத்தக லே அவுட் போட்டும் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 41 ஆவது மலைகள் இதழில் உலக சினிமா இயக்குநர்களின் நேர்காணல்கள் வரிசையில் தோழி தீபா ஸ்டான்லி குப்ரிக்கின் நேர்காணலைச் செய்திருந்தார். அந்த நேர்காணலுக்கு மலைகள் இதழில் கிடைத்த வரவேற்பு பிரமிப்புக்குரியதாக இருந்தது. ஒரு நாள் மாலை தோழி தீபா அழைத்து குப்ரிக்கின் நேர்காணலை மலைகள் இதழின் முகப்புத்தகப் பக்கத்தில் 89 பேர் லைக் போட்டிருக்கிறார்கள் என்ற தகவலைச் சொன்னார். அவர் சொல்லி ஒரு மணி நேரம் கழித்துதான் அதைப் பார்ப்பதற்கு கணிணிக்குள் நுழைந்து பார்த்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் 126 பேர் அதை விரும்பியிருந்தார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதற்கு முன் மஜித் மஜிதியின் நேர்காணலைத் தோழி தீபா மலைகள் இதழில் செய்திருந்த போது இதே போல ஒரு அங்கீகாரத்தை வாசித்து வழங்கியிருந்தார்கள். ஆனால் இந்த வேகத்திற்கான அல்லது இந்த பரவலுக்கும் பரபரப்பிற்கும் காரணம் என்னவெனத் தோழி தீபாவிற்கு போன் செய்து விசாரித்தேன். ஒளிப்பதிவாளர் செழியன் தன் முகப்புத்தகப் பக்கத்தில் மலைகள் இதழில் வெளியான குப்ரிக்கின் நேர்காணல் பக்கத்தை ஷேர் செய்திருந்ததால் அது வேகமாகப் பரவி சினிமா சம்பந்தமான நண்பர்கள் மத்தியில் பரவி அதை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது.

செழியனைத் தொடர்பு கொண்டபோது அவர் உற்சாகமூட்டும் விதமாகப் பேசினார். மஜித் மஜிதிக்கு கிடைத்த வரவேற்பைத் தாண்டிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால் இந்த நேர்காணல்களை ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் போலிருக்கிறதே எனச் சொன்னேன். அந்தக் கருத்தை அவர் வலியுறுத்தி அப்படி ஒரு புத்தகம் கொண்டு வந்தால் அது நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் அதை உடனே செயல்படுத்தும்படியும் ஆர்வமூட்டினார்.

இந்த நிகழ்வுகள் நடந்து இரண்டு நாளில் மலைகள் இதழில் வெளியான குப்ரிக்

நேர்காணல் 200 லைக்குகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. இது மேலும் நம்பிக்கையூட்டியது. உடனே இந்த நேர்காணல்களைப் புத்தகமாக்கும் திட்டத்தை நண்பர் அய்யப்பன் மற்றும் அவருது மனைவி தீபாவுடன் உரையாடியதில் அதுவரை 12 பேருடைய நேர்காணல்கள்தான் வெளிவந்திருப்பதால் குறைந்தது 15 பேரின் நேர்காணல்களையாவது தொகுத்து வெளியிடலாம் என்று நண்பர் அய்யப்பன் சொல்ல அந்தக் கருத்தை படு உற்சாகமானதாக எடுத்துக்கொண்டு இரவு பகல் என உழைக்க தொடங்கினார் தோழி தீபா. கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 3 பேரின் நேர்காணல்களை ஒழுங்கு செய்து அவற்றை மொழிபெயர்த்து, புத்தகம் கொண்டு வர மிகக்கடுமையாக உழைத்தார் தோழி தீபா. அவரின் இந்தப் பணி மேதைகளின் குரல்கள் புத்தகம் சிறப்பாக அமைந்ததற்கான காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரே நாளில் பலமுறை போனிலும் மெயிலிலும் தொடர்பு கொண்டு நேர்காணல்களின் வடிவங்களில் தொடர்ந்து மாற்றங்களையும் ஒழுங்குகளையும் செய்து புத்தக வடிவமைப்பிற்கான பணிகளை வேகமாக செய்யத் தொடங்கினார்.

தோழி தீபாவுன் இந்த ஆத்மார்த்தமான பணியும் அதற்கு உற்சாகமூட்டும் வகையில் நண்பர் அய்யப்பன் செயல்பட்டதும் மலைகள் பதிப்பகத்தின் இரண்டாவது புத்தகம் விரைவாக அதுவும் முரகாமியின் புத்தகத்தோடு சேர்த்தே கொண்டு வர உதவியது.

அட்டையின் வடிவமைப்பிலும் புத்தக லே அவுட்டிலும் நான்கு முழு நாட்கள் வேறு எந்தப் பணிகளையும் செய்யாமல் நண்பர் பஷீர்  செய்தார். அவர் மலைகள் பதிப்பகம் கொண்டு வருகிற புத்தகங்கள் நன்றாக வரவேண்டும் என்ற அக்கறையை விட பாவப்பட்ட , அப்பிராணியான சிபி ( இது அவரின் அபிப்பிராயம் ) ஏதோ கஷ்டப்பட்டு செய்கிற ஒரு காரியத்திற்கு  நம்மாலான உதவிகளைச் செய்யலாம் என்ற அர்த்தத்தில் உழைத்துக் கொண்டிருந்தார். ( இது உண்மை . ) இல்லையென்றால் அவரின் போக்கில்தான் அட்டை வடிவமைப்பார், வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பார். ஆனால் சிபி சொன்ன ஆலோசனைகளைக் கேட்டு வண்ணங்களையும் படங்களையும் போட்டு வடிவமைத்ததால் இது பஷீர் வடிவமைத்த அட்டை எனச் சொன்னாலும் யாரும் நம்ப முடியாத அளவிற்குத் தன்னுடைய ஈடுபாட்டால் அட்டைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அதாவது அவரின் வளமையான பாணியைக் கைவிட்டு மலைகள் பதிப்பக அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்தார் என்பது நிச்சயமாக அவர் சிபி என்ற நண்பரின் மேல் பரிதாபப்பட்டு நட்பு அடிப்படையில் கொடுத்த ஒத்துழைப்புதான் என்பதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.  

இப்படிப் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் மலைகள்  பதிப்பக பணிகள் பல்வேறு கட்டங்களைக் கடந்து புத்தக உருவாக்கப் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. புத்தகக் கண்காட்சிக்கான புத்தகங்களை எல்லா அச்சகங்களும் தொடங்கியிருந்ததால் மலைகள் பதிப்பக புத்தகப் பணிகள் அச்சிற்கு முன்பான பணிகள் நிறைவு பெற்றிருந்தாலும் அது அச்சிட்டு பைண்டிங் செய்து புத்தகக் காட்சிக்கு வருவதில் காலதாமத்தை ஏற்படுத்துவிதமான சூழல் இருந்ததை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம் நானும் நண்பர் பஷீரும். அட்டை அச்சிடுகிற பிரிண்ட் ஸ்பாலிட்டி அச்சக உரிமையாளர்கள் நண்பர் கிருஷ்ணகுமாரும் , கிருஷ்ணனும் எனக்கு கடந்த பதின்மூன்று வருடங்களாக அறிமுகமும் நட்பும் இருந்ததால் அவர்களைச் சந்தித்து மலைகள் பதிப்பகம் கொண்டு வருகிற புத்கங்களைப் பற்றி பேசியதும் புதுப்பதிப்பகத்திற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளைச் சிறப்பாகச் செய்து கொடுப்பதாகச்  சொன்னதோடு உடனே அட்டைகளை அச்சிட்டும் கொடுத்து விட்டார்கள்.


download

அட்டை அச்சிட்டு முடித்தால் போதுமா? அடுத்ததாக மணி ஆப்செட்டில் தொடர்பு கொண்டால் சண்முக சுந்தரம் ( உரிமையாளர் ) போனில் தொடர்பு கொள்ள முடியாக நிலைமை இருந்தது.  எப்படியோ அவரிடம் நான் மலைகள் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்க இருப்பதையும் அந்தப் புத்தகங்கள் மணி ஆப்செட்டில்தான் அச்சிட வேண்டும் என்பதையும் தரத்தில்  கொஞ்சம்கூட குறைத்து கொண்டு வர நான் நினைக்கவில்லை என்றும் சொன்னேன். மணி ஆப்செட் சண்முக சுந்தரம் புதிய பதிப்பகத்திற்கு ஆதரவினைக் கொடுத்தார். என்னை அவருக்கு ஏற்கனவே நன்றாக அறிமுகம் இருந்ததும் மலைகள் பதிப்பக புத்தகங்களை அச்சிட்டு கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதற்கான கூடுதல் காரணங்கள். இது தவிர இந்தப் புத்தகங்களை உருவாக்க கிட்டதட்ட பத்து நாட்கள் நண்பர் பஷீர் என்னோடு இருந்து வேறு எந்தப் புத்தக பணிகளையும் செய்யாமல் முழுமையாக மலைகள் பதிப்பக பணிகளையே செய்ய ஒத்துழைத்ததை வெறும் நன்றி என்ற வார்த்தைகளைச் சொன்னால் அது நிறைவு பெறுமா எனத் தெரியவில்லை.

புத்தகம் அச்சகத்திற்குப் போன பிறகு நான்கு நாட்கள் சென்னைக்கும் சேலத்திற்கும் அலைந்தேன். புத்தகக் காட்சி ஜனவரி 10 தேதி தொடங்கிவிட்டது. மலைகள் புத்தகங்கள் அச்சகத்தில் இருக்கிறது. மூத்த பதிப்பாள நண்பர்களிடம் மெல்ல மலைகள் பதிப்பகம் கொண்டு வர இருப்பதைச் சொன்னேன். புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய புத்தகங்களை உருவாக்கும் பணியில் இரண்டு மாதங்களாக அச்சகத்தில் வரிசைகட்டி நிற்கிற புத்தகங்களைப் பற்றி சொல்லி பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ( கிட்டத்தட்ட மலைகள் பதிப்பக புத்தகங்கள் இரண்டும் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்ற பிறகுதான் கிடைக்கும் என்ற ரீதியில்தான் இருந்தன ) இதனால் பரபரப்பும் பதட்டமும் எனக்கேற்பட்டன. ஆனால் எனக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

ஜனவரி 13 போகிப் பண்டிகையன்று புத்தகங்களைக் கொடுப்பதாக மணி ஆப்செட் சண்முக சுந்தரம் உறுதியளித்திருந்தார். அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். அவர் சொன்னதைப் போலவே தயாரித்துப் புத்தகங்களை ஒரு லாரியில் ஏற்றி புத்தகக் காட்சிக்கு அனுப்பி வைத்திருப்பதாகப் போனில் தகவல் சொன்னார். ஆனால் நேரில் புத்தகங்களைப் பார்க்கிற வரையில் அதை நான் முழுதாக  நம்பவில்லை. சொன்னபடி அதாவது எனக்கு வாக்குகொடுத்தபடி புத்தகங்கள் வந்திருந்தன. அவற்றைப் பிரித்து என் கைகளால் ஆசையால் தடவித் தடவிப் பார்த்தேன். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அந்தக் கணத்தின் சந்தோஷத்தை எழுத்தில் கொண்டு வரும் வல்லமை எனக்கில்லை. பல ஆண்டுக் கனவு அது. நான் ஒரு பதிப்பாளராக வேண்டும் என்பது , அது நிறைவேறிய தருணத்தை நான் எப்படி கொண்டாட வேண்டும். ஆனால் உண்மையும் காலமும் அவசரப்படுத்தியது. அப்போது மாலை 5 மணி. புத்தகங்களை உடனே கண்காட்சியில் கொடுக்க வேண்டிய பணியைத் தொடங்கினால்தான் பலருக்கும் போய்ச் சேரும்.

download (13)

•••

சென்னைப் புத்தகக் காட்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட  என் நண்பர்கள் தங்கள் கடைகளை அமைத்திருந்தார்கள். அவர்களின் கடைகளைத் தேடித் தேடி ஒவ்வொரு கடையாக இரண்டு புத்தகங்களின் கட்டுகளைச் சுமந்தபடி நான் ஒருவனாகவே ஓடிக்கொண்டிருந்தேன். புத்தகங்களைப் பார்த்த மூத்த பதிப்பாள நண்பர்கள் அதன் அட்டைகளையும் வடிவமைப்பையும் பார்த்து பாரட்டுகளை வழங்கினார்கள். மலைகளின் நண்பர்களும், வாசகர்களும் இரண்டு புத்தகங்களைப் பற்றியும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அன்று புத்தகக் காட்சி முடியும் போது சுமார் இரண்டு மணி நேரத்தில்  புதுப்புனல் ஸ்டாலில்   மட்டும் 20 புத்தகங்களை நண்பர்  அகநாழிகை பொன். வாசுவும் , துறையூர் சரவணணும் விற்றிருந்தார்கள். இந்தத் தகவல் எனக்குப் பெரும் நம்பிக்கையையும் தன்னெழுச்சியையும் ஊட்டியது.புத்ககக் காட்சியில் புதுப்புனல் (அகநாழிகை வாசு ) ,உயிர் எழுத்து, நாதன் ( பாதரசம் சரவணணும் அவருடைய தம்பிகளும்.  அவர்களுக்குத் தனித்தனியாக நன்றிகள் ),டிஸ்கவரி புக் பேலஸ்.சந்தியா, விருட்சம், பரிசல், அந்திமழை,பனுவல்,கயல்கவின்,புலம்,அகநி,புக்லேண்ட்ஸ் ஆகிய புத்தகக் கடைகளில் மலைகள் பதிப்பக புத்தகங்களை விற்பனைக்கு வாங்கிக்கொண்டு அதை அக்கறையோடு விற்றுக்கொடுத்தார்கள் . அவர்களுக்கும் நன்றிகள்.

 

அதன் பிறகு புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நாட்கள் ஒவ்வொன்றும் என்னை உற்சாகத்தில் காற்றில் மிதக்கிற ஒரு பறவையின் இறகைப் போன்ற பரவசத்தில் பறக்க வைத்தது.

மலைகள் பதிப்பகம் பதிப்பித்த இரண்டு புத்தகங்களும் முக்கியமானவை என்ற பேச்சை வாய்மொழியாகவும் முகப்புத்தக உரையாடல்கள் வழியாகவும் நண்பர்கள் பரப்பினார்கள். எழுத்தாள நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வருடமாகவே. தொடர்ந்து புத்தகங்கள் கொண்டு வர உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய இணைய தளத்தில் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய முக்கியமான 50 புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார் . அதில் 32 மற்றும் 33 வரிசையில் மலைகள் பதிப்பகத்தின் இரண்டு புத்தகங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அதை அச்சிட்டு கண்காட்சியில் கொண்டு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற நண்பர்களையும் வாசகர்களையும் காண முடிந்தது. புத்தகம் வெளியான இரண்டாவது நாளில் தி இந்து ( தமிழ் ) நாளிதழில் சென்னைப் புத்தகக் காட்சி பற்றிய சிறப்புப் பக்கங்களில் கவனிக்கத் தக்க 5 புத்தகங்களின் வரிசையை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டு எழுதி வந்த வரிசையில் மேதைகளின் குரல்கள் புத்தகத்தை வரிசைப் படுத்தியிருந்தார்கள். அதே நாளில் தினமணியில் மறுபதிப்புக் காண வேண்டிய புத்தகங்கள் என்ற இடத்தில் என் புகைப்படத்தைப் போட்டு நான் சொன்ன சேலம் பகடாலு நரசிம்ம நாயுடுவின் தட்சின் இந்திய சரித்திரம் மற்றும் விட்டல்ராவின் போக்கிடம் , நதிமூலம் நாவல்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுருந்தார்கள். மீண்டும் இரண்டு நாள் கழித்து தினமணியும், தினமலர் நாளிதழும் மலைகள் பதிப்பக புத்தகங்களை கவனப்படுத்தியிருந்தார்கள்.

இதற்கிடையே சென்னைப் புத்ககக் காட்சிக்கென தொடங்கியிருந்த முகப்புத்ககப் பக்கத்தில் மலைகள் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களாக மலைகள் வெளியிட்ட புத்தகங்களைப் பற்றி சொல்லியிருந்தார்கள். கவிஞர் குட்டி ரேவதி தன் முகப் புத்தகத்த்தில் மலைகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். நண்பரும் கவிஞருமான சமயவேல் தொடர்ந்து முரகாமி பற்றியும் மலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ள முரகாமியின் புத்தகம் பற்றியும் தன் முகப் புத்தகத்தில் எழுதியவாறிருந்தார். எழுத்தாளர் லட்சுமி சரவணணும் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். இப்படி பரவலான கவனிப்பு கிடைக்க தொடங்கியவுடன் புத்தகங்களின் விற்பனையில் வேகம் கூடியதைக் காண முடிந்தது. இவர்கள் தவிரவும் நண்பர்கள் எழுதியிருக்கலாம். ஆனால் அந்தச் சமயத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் என்ன நடந்தது என்பதை நான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் விடுபடல் இருந்தால் நண்பர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.

வெளியூர்களிலிருந்து வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. அவர்கள் மலைகள் பதிப்பக புத்தகங்களை வாங்கி விட்டோம் எனச் சொன்னதை நான் கனவில் நடந்ததைப் போலதான் உணர்ந்தேன். நண்பர் கருணாகரன் ( இலங்கை ) மூத்த படைப்பாளி யேசுராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் ஒ எனக்கு சிபியைத் தெரியுமே என்று சொன்னதோடு அல்லாமல் மலைகள் பதிப்பக புத்தகங்களை வாங்கியிருப்பதையும் காட்டினார். எப்படி என்பதை மலைகள் இணைய இதழும் முகப்புத்தகமும் அதை சாத்தியப்படுத்தியருப்பதைச் சொன்னார். சுவிஸ்ஸிலிருந்து சயந்தன் வந்திருந்தார்.சேமீதரன்,தமிழ்க்கவி,தமிழ்நதி,தீபச்செல்வன்,நளாயினி போன்ற புலம்பெயர்ந்த படைப்பாளிகளையும் சந்திக்க முடிந்தது. இவர்கள் எல்லோருமே மலைகள் பதிப்பித்த புத்தகங்களை வாங்கிச்சென்றதைக் காண முடிந்தது.

1513294_614030858633987_246614726_n

தினசரி புத்தகக் காட்சியில் நண்பர் அய்யப்பனும் தோழி தீபாவும் என்னைச் சந்தித்து உற்சாகத்துடன் பிரபலங்களையும் சந்திக்க வைத்தார்கள். தோழி தீபாவின் புத்தகம் மலைகள் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருந்ததும் அது அவருக்கு ஒரு நல்ல கவனத்தைப் பெற்றுக்கொடுத்திருந்ததாலும் அவர் பரவசமானதொரு மனநிலையிலேயே இருந்தார். பதிப்பாளரும் படைப்பாளியும் ஒரு சேர மகிழும் தருணங்கள் தமிழ்ப்பதிப்புலகில் வெகு அபூர்வமானதாகவே இருந்து வருகிறது.

புத்தகக் காட்சி நிறைவினை அடைந்த நாளில் மலைகள் பதிப்பக புத்தகங்கள் விற்ற தொகையும் ,  விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் நன்றிக்குரியவர்கள் பட்டியல் ஒன்றைப் போட்டால்தான் அது ஒரு மனநிறைவைத் தரும் என நினைக்கிறேன்.

காலச்சுவடு மற்றும் உலகத் தமிழ் இதழ்களில் பணி வாய்ப்பை வழங்கி எனக்கு அச்சு மற்றும் மின்னிதழ் ஊடகங்களில் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் காலச்சுவடு கண்ணணுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் வழங்கிய அந்த சென்னை வாழ்க்கைதான் என்னுள் ஏராளமான அனுபவங்களை ஏற்படுத்திக்கொடுத்தது. பதிப்பகம் மற்றும் விற்பனை துறையிலும் அனுபவங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு பல்துறை நண்பர்களையும் உருவாக்கிக்கொடுத்தற்கு நண்பர் காலச்சுவடு கண்ணன்தான் முழுக் காரணம். ஆகையால் அவருக்குதான் என் முதல் நன்றிகள்.

அப்போது எனக்கு இதழியல் துறையில் அனுபவங்களைக் கற்றுக்கொடுத்த என் ஆசிரியர் அரவிந்தனுக்கும் நன்றிகள்.

மலைகள் பதிப்பகம் தொடங்க தங்கள் உற்சாகமூட்டல்களை வழங்கிய சே.பிருந்தா,அல்லி வெங்கடாசலம்,தாமோதர் சந்துரு,செங்கதிர்,முத்தமிழ்விரும்பி,செல்வராஜ் ஜெகதீசன், கோபி சரபோஜி, மற்றும் கார்த்திக்பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாச ராமநுஜன், திருவேங்கடம்,ஆர்.வெங்கடேஷ் போன்ற நண்பர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

மலைகள் பதிப்பக புத்தகங்கள் வெளிக் கொண்டு வர தீவரமாக ஆர்வமூட்டிய ஒளிப்பதிவாளர் செழியன், ஜெரால்டு மற்றும் பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் , ஆகியோருக்கும் நன்றிகள்.

மூத்த பதிப்பாள நண்பர்கள் தமிழினி வசந்தகுமார்,சந்தியா நடராஜன் மற்றும் சந்தியா சௌந்திர ராஜன், வ.உ.சி பதிப்பக இளைய பாரதி, கிழக்கு பதிப்பக பத்ரி, ஆகியோருக்கும் நன்றிகள்.

மலைகள் பதிப்பகத்தைப் பத்திரிகைகளில் கவனப்படுத்திய நண்பர்கள் சமஸ், அரவிந்தன்,ஆசை,கவிதா முரளிதரன்,ஷங்கர் ராமசுப்பிரமணியன், ஆதி வள்ளியப்பன், த.அரவிந்தன்,மலர் அமுதன்,ராஜா திருவேங்கடம்,கதிர்பாரதி,நக்கீரன்கோபால்,கோவி.லெனின்,ஆர்.வெங்கடேஷ் மற்றும் அமிர்தம் சூர்யா,நா.கதிர்வேலன்,கே,என்,சிவராமன் மற்றும் ஏராளமான பத்திரிகை நண்பர்களுக்கு நான் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

சென்னைப் புத்தகக் காட்சியில் ஓவியர் மருதுவும் செழியனும் இயக்குநர் பாலாவுக்கு என்னையும் மலைகள் பதிப்பகத்தையும் மலைகள் இணைய இதழையும் அறிமுகப்படுத்தினார்கள்.ஆனால் பாலா என்னையும் என் மலைகள் இணைய இதழையும் ஏற்கனவே அறிவேன் எனச் சொல்லி புத்தகங்களை வாங்கிக்கொண்டார். அவர்களுக்கும் நன்றி. மலைகள் லோகோவை வரைந்து கொடுத்த ஒவியர் மருதுவிற்கு மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் பி.சி,ஸ்ரீராம் கண்காட்சியில் வந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு போனதற்கு அவருக்கும் நன்றிகள்.

இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி பேசியும் வாங்கியும்,வாங்கப் போகும், வாய்மொழியாக விளம்பரங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஏராளமான வாசக நண்பர்களுக்கு எவ்வளவு நன்றிகளைச் சொன்னாலும் அது குறைவானதாகவே இருக்கும்.

இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை விரிந்துகொண்டே போகிறது என்பதையும் நான் மறக்காமல் சொல்ல வேண்டியவர்களின் பட்டியலும் வளர்ந்து கொண்டியிருப்பதும் மலைகள் வளர்ச்சியைக் காட்டுகிறது.

download (25)

இந்த வெற்றிக்குப் பின்னால் இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது தனிப்பட்ட ஒரு சிபிச்செல்வனால் நிகழ்ந்ததாக நான் நம்பவில்லை. எல்லாப் புகழும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என எல்லாத் துறையினருக்கும் சேரும். மீண்டும் அனைவருக்கும் நன்றிகளைச் சொல்லி மலைகள் இணைய இதழும் மலைகள் பதிப்பகமும் வளர மேலும் உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி பல கோடி நன்றிகளோடு …….

03/02/2014

•••

புத்தகங்கள் கிடைக்குமிடம்

மலைகள் பதிப்பகம்

119 முதல் மாடி

கடலுர் மெயின் ரோடு

அம்மாப்பேட்டை

சேலம் 636 003

செல் எண் . 892 555 44 67

malaigalpublications@gmail.com

sibichelvan@gmail.com

      

 

 

04 Feb 23:35

BAPASI-ன் கவனத்திற்கு

by கிருஷ்ண பிரபு

பபாசிக்கு கவலையே வேண்டாம். “ஒன்னுக்கு போற எடம் சரியில்ல... கப்பு தாங்கலன்னு...” எதையும் நான் சொல்ல வரல. இந்த மேட்டரே வேற.

புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேன் வேலையுடன், காலச்சுவடு பதிப்பகம் சார்ந்த சிறு ஆராய்ச்சியும் செய்ததால் எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. “இலக்கிய ஆக்கங்களைப் படிப்பதில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்களா?. போலவே, இதர தமிழ்ப் புத்தகங்களையும் படிக்க முன் வருகிறார்களா?” என்பது தான் ஆய்வின் பிரதான நோக்கம். ஆனால் மற்றொரு விதத்தில் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலக் கூட இருந்தது. ஏனெனில் பத்து நாட்களில் ஏறக்குறைய 1,000 இளைஞர்களைக் காலச்சுவடு பதிப்பக அரங்கில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சாரை சாரையாக இளைஞர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் பலரும் முதன் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முதன்முறையா புத்தகம் வாங்க வரோம் எதாச்சும் புக்ஸ் ரெஃபர் பண்ணுங்களேன்” என்று கேட்டார்கள்.

“இங்க தமிழ் லிட்டரரி புக்ஸ் தான் கெடைக்கும்...” என்று சொல்லியது தான் தாமதம் “அந்த மாதிரி புக்ஸ் தான் தேடிட்டு வந்திருக்கேன்.” என்று பலரும் கூறினார்கள். பொறியியல், மருத்துவம், பொருளியல், கணிதம், ஆராய்ச்சி என பல்துறை மாணவர்களும் இதில் அடக்கம்.

சந்தித்தவர்களில் சுமார் 700 நண்பர்களாவது ஏதேனும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தான் சென்றார்கள். எல்லோரும் “டிவி விளம்பரம், டிவி நியூஸ், நாளிதழ் செய்திகள், முகநூல் பகிர்தல்” போன்ற ஏதேனும் ஒன்றைப் பார்த்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். சந்தித்த இளைஞர்களுடன் பேசியதில் – அவர்களுடைய இருப்பிடமானது பெரும்பாலும் சென்னையாகத் தான் இருந்தது. ஒருசிலர் “காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர், பாண்டிச்சேரி, மதுரை, சேலம், பெங்களூர்” போன்ற இடங்களிலிருந்தும் வந்தவர்களாக இருந்தார்கள். (இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.)

“திருவற்றியூர், கத்திவாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு” போன்ற இடங்களிலிருந்தும், அவ்வளவு ஏன்...! “அம்பத்தூர், ஆவடி, ரெட்டில்ஸ், ஊத்துகோட்டை, திருவள்ளூர்” போன்ற இடங்களிலிருந்தும் யாரேனும் நண்பர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒருவரையும் காணவில்லை. மீஞ்சூரிலிருந்து “பொன்தமிழ்” என்ற தரமணி திரைத்துறை மாணவர் வந்திருந்தார். திருவற்றியூரிலிருந்து திரைப்படங்களைப் பற்றி எழுதும் பதிவர் பிரபா வந்திருந்தார். ஆயிரத்தில் இரண்டு பேர் என்பது மிகமிகக் குறைவான விகிதம். ரயில் பயணத்தில் கூட புத்தக சந்தைக்குச் சென்று திரும்பிய ஒருவரையும் பார்க்க முடியவில்லை. “எங்கோ இடிக்கிறதே...!” என்று மண்டையே வெடித்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-க்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ஒருநாள், மதியம் போல உணவு நேரத்தில் அந்த கல்லூரிக்குச் சென்றிருந்தேன். ஆகவே, ஏராளமான மாணவர்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஐம்பது நண்பர்களிடம் பேசினேன். உனக்கென்ன இவ்வளவு அக்கறை என்ற சந்தேகம் வரலாம். புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர்களில் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-யும் ஒன்று. ஆனந்த விகடன் போலவே, இந்தக் கல்வி நிறுவனத்தின் பேனர்களையும் பெரிது பெரிதாக கண்காட்சியின் பல இடங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவேதான் இந்தக் கேள்விகள்:

“ஒரு ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?”

“ம்... சொல்லுங்க...”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மவுன்ட் ரோடு, நந்தனம் YMCA கிரவுண்டுல சென்னை புக் ஃபேர் நடந்துச்சு... அதப்பத்தி உங்களுக்குத் தெரியுங்களா?” என்றேன். (45 மாணவர்களும் 5 மாணவிகளும் இதில் அடக்கம்)

“ஹூஹூம்... எங்களுக்குத் தெரியாதே...” என்று 43 மாணவர்கள் தெரிவித்தனர். இரண்டு மாணவர்களுக்குத் தெரிந்திருந்தும் கண்காட்சிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. தேர்வு இருந்ததால் செல்ல முடியவில்லை என்ற காரணத்தைக் கூறினார்கள். மாணவிகளில் ஒருவருக்குத் தான் கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்திருந்தது. விடுதியில் தங்கிப் படிப்பதால் அந்தச் சகோதரியால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தாள். மற்ற நான்கு மாணவிகளும் “புத்தகக் கண்காட்சியைப் பற்றி எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்றார்கள். ஸ்டூடன்ஸ் எப்பவுமே இப்படித்தானே. படிக்கிற விஷயத்துல அவங்களுக்கு ஆர்வம் இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம். அதற்கடுத்து அவர்களிடம் நான் கேட்ட கேள்வி முக்கியமானது:

“சரி... புத்தகக் கண்காட்சி நடந்தது உங்க கவனத்திற்கு வரல... அப்படி நடக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா விசிட் பண்ணி இருப்பீங்களா?” என்றேன்.

“காலேஜ் டேஸ்ல போக முடியாது.” என்றார்கள்.

“பொங்கல் விடுமுறை நாட்களிலும், சனி ஞாயிறுகளிலும் முழு நாட்கள் புத்தகக் கண்காட்சி நடக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. மற்ற நாட்களில் மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும்” என்றேன். “ஓ எஸ்... லீவ் டேஸ்ன்னா கண்டிப்பா பிரெண்ட்ஸ் கூட விசிட் பண்ணி இருப்போம்.” என்றார்கள்.

“அப்படின்னா... எந்த மாதிரி புக்ஸ் எடுத்து இருப்பீங்க...” என்றேன்.

“அதெப்படி இப்பவே சொல்ல முடியும். அங்க போனா தானே சொல்ல முடியும். எந்த புக் புடிச்சி இருக்குதோ அத வாங்குவோம். சப்ஜெக்ட் புக், ஆங்கில நாவல், தமிழ் புக்ஸ்” என ஏகப்பட்ட பதில்கள் வந்தன. “நாங்க எதுக்கு அங்க போகணும்?” என்ற பதிலும் ஒருசிலரிடமிருந்து வந்தது. ஒருசிலர் என்னை துச்சமாகக் கடந்து சென்றார்கள்.

“புக் ஃபேர் பத்தி - டிவி விளம்பரம், டிவி நியூஸ், பேப்பர் செய்தின்னு எல்லாத்துலையும் போட்டாங்களே நீங்க பாக்கலையா?” என்றேன்.

“இல்லியே... அதுக்கெல்லாம் எங்களுக்கு டயம் இல்ல...” என்ற பதில் தான் பெரும்பாலும் வந்தது. “நியூஸ் எல்லாம் மனுஷன் பார்ப்பானா? அதுக்கு மெகா சீரியல் எவ்வளவோ மேல்” என்ற பதிலும் தான் வந்தது. “காலைல காலேஜுக்கு வந்தா ஈவினிங் தான் வீட்டுக்குப் போறோம். ஏரியா பிரண்ட்ஸ் கூட சேட், சாங்க்ஸ் கேக்குறது, முடிஞ்சா மூவீஸ் பாக்குறதுன்னு ரிலாக்ஸ் பன்றதுக்கே நேரம் சரியா இருக்கும்.” என்றார்கள்.

“அப்போ புக்ஸ் வாங்கினா எப்படி படிப்பீங்க?” என்றேன்.

“டெய்லி பஸ்ல வரும்போதும், போகும்போதும் சப்ஜெக்ட் புக்ஸ் தானே படிக்கிறோம். போர் அடிச்சா மொபைல்ல பாட்டு கேக்குறோம். அதுவும் போர் அடிச்சா வேற புக்ஸ் படிப்போம் இல்ல...” என்ற பதிலும் வந்தது.

இதில் முக்கியமான விஷயம், இந்த மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரி தான் புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. நான் சொல்லியதை வியப்பாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஸ்டார் ஸ்பன்சராக இருக்கும் விஷயத்தை, கல்லூரி அலுவலக நிர்வாகத்தினர் மாணவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அல்லது தேவையில்லாத விஷயம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் பபாசி மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செலுமாறு வேண்டுகோள் வைக்கலாம் இல்லையா? ஏனெனில் சென்னையைச் சுற்றிலும் உள்ள இதர வேலம்மாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏறக்குறைய 30, 000 மாணவர்களுக்கு மேல் படிப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம். அண்ணா நகர், முகப்பேர் வேலம்மாள் உயர்நிலைப் பள்ளியில் மட்டும் ஏறக்குறைய 12,000 பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள். சூரப்பட்டு, பஞ்ஜெட்டி உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் தலையைச் சுற்றும். சூரப்பட் & பொன்னேரியிலுள்ள வேலம்மாள் கல்லூரிகளில் ஏறக்குறைய 7, 000 மாணவர்கள் படிப்பார்கள்.

இந்த ஒரு கல்லூரியின் நிலைமை இதுவாக இருப்பின் பரவாயில்லை. “மீஞ்சூர் ஜெயின் கல்லூரி, பொன்னேரி உலகநாத நாராயணஸ்வாமி அரசினர் கல்லூரி, கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி” போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களை “பொன்னேரி ரயில் நிலையம், பொன்னேரி பேருந்து நிலையம், பழவேற்காடு பஜார்” போன்ற இடங்களில் சந்தித்துப் பேசினேன். ஒருவருக்கும் புத்தகக் கண்காட்சி நடந்ததைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. சிலமுறை உ.நா அரசு கல்லூரிக்கு நேரிலும் சென்று பல்துறை மாணவர்களையும் சந்தித்தேன்.

“இன்னாது... புத்தகக் கண்காட்சியா...? அப்படியெல்லாம் கூட நடக்குமா...?” என்று மாணவர்கள் வியப்புடன் கேட்டார்கள். எனினும் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்குவதிலுமுள்ள ஆர்வத்தையும் தெரியப்படுத்தினார்கள். இதில் பலரும் புனைவு சார்ந்த புத்தகம் வாங்குவதில் ஆர்வமுடனே இருக்கிறார்கள். எனினும், 50 மாணவர்களில் 20 மாணவர்கள், “நாங்க எதுக்கு புக் ஃபேர் போகணும். அதெல்லாம் போக மாட்டோம். லீவ் நாளுன்னா ப்ரண்ட்ஸ் கூட விளையாடுவோம்.” என்றார்கள்.

வடசென்னை மற்றும் நகரத்திற்கு வெளியிலுள்ள கல்லூரிகளில் தான் இந்த நிலைமை இருக்கக்கூடும். சென்னை கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் படுசுட்டிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆகவே “பச்சையப்பன் கல்லூரி, D.G வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி” போன்ற மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஒருசிலரை “நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கீழ்பாக்கம் பச்சையப்பன் பேருந்து நிறுத்தம்” போன்ற இடங்களிலும் சந்தித்துப் பேசினேன். மூன்றாவது வருடம் படிக்கும் மாணவர்கள் ஒருசிலருக்கு புத்தகக் கண்காட்சி பற்றி தெரிந்திருந்தது. ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்துள்ளதால் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

லயோலா கல்லூரி மட்டும் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய குறிப்பையும், கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியையும், பேருந்துத் தடங்களையும் குறிப்பிட்டு காலேஜ் நோட்டிஸ் போர்டில் செய்தி வெளியிட்டிருந்தார்களாம். ஒருசில மாணவர்கள் தெரிவித்தனர். அதையும் கூட பல மாணவர்கள் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. “S. A. என்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் என்ஜினியரிங் காலேஜ்” போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒருசில மாணவர்களிடமும் பேசினேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

சரி கல்வி நிறுவனங்களில் தான் இந்த நிலைமை எனில், பொன்னேரி கிளை நூலகத்தில் ஏராளமான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் அணுகி “புத்தகக் கண்காட்சி” பற்றிய அதே கேள்விகளைக் கேட்டேன். சரிபாதி நபர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பபாசி இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஏதேனும் யுக்தியைக் கையாண்டு “புக் ஃபேர்” பற்றிய விவரங்களை முன்கூட்டியே மாணவர்களிடம் கொண்டு சென்றால் “Actual Audience & Visitors” விகிதத்தை அதிகரிக்கலாமே.

சென்னையைச் சுற்றிலுமுள்ள கல்லூரிகளுக்குக் கண்காட்சி சார்ந்த ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம். போலவே, சென்னை நகர்புரதிற்கு வெளியிலுள்ள தலைமை கிளை நூலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையைப் போன்ற A4 SIZE அளவுள்ள சுவரொட்டிக் கூட அனுப்பி வைக்கலாம். மிஞ்சிப் போனால் 25 தலைமை கிளை நூலகங்கள் இருந்தாலும் அதிகம் தான். (சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்க வவுச்சர் கொடுப்பார்கள். அதனைப் புத்தகச் சந்தைகளில் அவர்கள் கொடுத்து புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். டெல்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தது. சென்னை போன்ற நகரத்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு இதுபோன்ற சலுகைச் சீட்டைக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.) எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனில், பபாசி அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு – சென்னையைச் சுற்றிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பலாமே. மாணவர்களை புத்தகச் சந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாமே. வருவார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். புத்தகச் சந்தையைப் பற்றிய விவரம் மாணவர்களுக்குச் சென்று சேர்வதே ஒருவகையில் நல்லது தானே...!

சென்னையைச் சுற்றிலும் ஏறக்குறைய 100 அரசுக் கல்வி நிறுவனங்களும், தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் இருக்கும். கல்லூரிக்கு இரண்டாயிரம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் எண்ணிக்கை லட்சங்களில் செல்லும். இதில் 90% சதவீத நபர்கள் டிவி விளம்பரம், செய்திகள், நாளிதழ்களை வாசிக்காதவர்கள். இவர்கள் தான் முக்கியமான ஆடியன்ஸ். “ஜோசியம், சமையல் குறிப்பு, தாம்பத்திய டிப்ஸ்” தவிர்த்த இதர புத்தகங்களை வாங்கக் கூடிய ஆடியன்ஸ் இவர்கள் தான். இவர்களிடம் சினிமா, விளையாட்டு தவிர்த்த மற்ற விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. எனினும் கொண்டு செல்வதில் தான் சாதுர்யம் இருக்கிறது.

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதும் ஷாஜி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதாக ஞாபகம். ஷாஜி சோனி கம்பெனியின் ஆடியோ விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபொழுது ரகுமான் பகர்ந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். இசை தயாரிப்பாளர் எ. ஆர். ரகுமான் பின்வருமாறு சொல்லி இருக்கிறார்: “யங் ஆடியஸ் வாங்கனும்னு நெனைக்கறத கண்டிப்பா வாங்கிடுவாங்க. இசை ஆல்பத்த அவங்ககிட்ட எப்படி எடுத்துட்டு போயி சேக்கறதுன்னு பாருங்க”

ரகுமானின் வார்த்தைகள் இசைத் தகட்டிற்கு மட்டுமல்ல. செல்போன், ஐபேட், கூலிங் கிளாஸ், பைக், கார், ரீபாக் ஷூ, அடிடாஸ் ஷர்ட், பார்ன் வீடியோஸ் போலவே புத்தகத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பபாசி கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி.
04 Feb 23:33

லௌகீக ஞானம்

by noreply@blogger.com (Muthu Kumaraswamy)

குறிப்பு 1: 


'முனைவர்' 'பேராசிரியர்' சாருநிவேதிதா தம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் நிர்மல் 
கூகுலில் தேடினால் எளிதில் கிடைக்கக்கூடியதான மிலோரெட் பாவிச்சின் நாவலின் 
பெண் பிரதியிலும் ஆண்பிரதியிலும் உள்ள வித்தியாசங்களை எனக்குச் சுட்டிக்காட்டி நான் தகவல் பிழை செய்ய நேரிட்ட போது மடக்கிவிட்டதாக பெருமிதம் அடைந்திருக்கிறார். பேராசிரியருக்கும் மாணாக்கருக்கும் கூகுல் தொடர்ந்து துணையிருக்க வாழ்த்துகள். பதினாறே வரிகளின் வித்தியாசத்தினால் ஒரே நாவலின் ஒரு பிரதி எப்படி பெண் பிரதியாயிற்று, இன்னொரு பிரதி எப்படி ஆண் பிரதியாற்று என்று கற்றுணர்ந்த மாணவர் விளக்கினால் நல்லது. மாணாக்கரின் இலக்கிய பிரயாசைக்கு பேராசிரியரும் மனமுவந்து உதவலாம்.




குறிப்பு 2: 


‘உன்னிடம் தவறாக நடந்துகொண்டதற்காக என்னை நானே விளாறிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதுகிற தருண் தேஜ்பாலுக்கு பதிலெழுதுகிற இளம்பெண் ‘ நீ என்னுடைய தந்தையின் நண்பனில்லையா (எனவே தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவனில்லையா) என்று சொல்லி உன்னிடம் எத்தனை முறை கெஞ்சினேன்’ என்கிறாள். 

தன் பிள்ளை-பிறர் பிள்ளை- ஊரார் பிள்ளை அனைவரும் சமம் என்பதே தன் ஞானம் என்று பறைசாற்றுகின்ற ஞானவான் சாருநிவேதிதாவுக்கு தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண் தன் பிள்ளையாகக் கண்ணில் தெரியவில்லை. தொடர்ந்து தருண் தேஜ்பாலுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், ஷீரடி சாய் பாபாவின் அருள் கிடைத்து அவருடைய புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகிறதோ இல்லையோ தருண் தேஜ்பாலின் தயவு இருந்தால்தான் புத்தகம் ஆங்கிலத்தில் பிரசுரமாகும். இந்த ‘லௌகீக ஞானம்,’ சாருநிவேதிதா என்னுடைய ‘சாதனைகளாக’(-சம்பாதித்து வீடு கட்டியது, கல்யாணம் செய்துகொண்டது, பிள்ளைகளைப் பெற்று படிக்கவைப்பது, சர்வதேச பல்கலைக்கழகங்ககளில் பயிற்றுவிப்பது என) பட்டியலிட்டிருக்கும் லௌகீக வெற்றிகளை ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்ததே. தன் படிப்பு, எழுத்து ஆகியவற்றின் மூலம் சாருநிவேதிதா அடைந்திருக்கும் இந்த லௌகீக ஞானாம்ருதசாகரத்தில் அவர் வாசகர்கள் இன்புற்று திளைப்பார்களாக. நிற்க.

மிலொரெட் பாவிச் எழுதிய ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ 1988 ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. அந்த வருடமோ அதற்கு அடுத்த வருடமோ நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் கவிஞர் பழமலை அவர்களுக்கு நான் ‘டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ்’ நாவல் பற்றி ‘பாடம் எடுத்ததாக’ சாரு நிவேதிதா பிரசித்தமாக முன்பு எழுதியிருக்கிறார். 

இப்போது அவர் பாவிச்சின் நாவலை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே -நாவல் ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு முன்பே-வாங்கிவிட்டதாக சொல்கிறார். அப்போது நான் பாலகன் என்றும் எழுதுகிறார். அப்படியெல்லாம் மாயங்கள் நம் உலகில் நடக்கும்தானே.

போகட்டும். இப்போதாவது நிர்மலோ அவருடைய ஞானத்தந்தையான சாருநிவேதிதாவோ ‘டிக்‌ஷனரி ஆஃப் காஸார்ஸ்’ நாவலின் ஆண் பிரதி பெண் பிரதி விவகாரத்தை விளக்கலாம். 

நண்பரே சாருநிவேதிதா நான் எதற்காக இதையெல்லாம் எழுத நேரிட்டதென்றால் நான் உங்களை முட்டாள் என்று எந்தக் காலத்திலும் சொல்லவில்லை என்பதை விளக்குவதற்காக. லௌகீகத்தில் தேர்ந்த நீங்கள் எப்படி முட்டாளாக இருக்க முடியும்? 

இதில் எங்கிருந்து வருகிறது படித்தவனின் சூதும் வாதும் என்பதினை அவரவர் புரிதலுக்கு விட்டு விடுகிறேன்.


குறிப்பு 3:

லட்சுமி மணிவண்ணனின் கவிதை ஒன்று;

"எனது பெண்ணைக் 
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து 
நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே 
படுகின்றன"

இந்த லட்சுமி மணிவண்ணனின் கவிதை சாருநிவேதிதாவிற்காகவே எழுதப்பட்டதோ?


குறிப்பு 4:

சதா சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று சாரு நிறுவவேண்டும்









© M.D.Muthukumaraswamy
04 Feb 23:33

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 36

by jeyamohan

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 2 ]

அடர்காட்டில் தனித்தபிடியானை போல சென்றுகொண்டிருந்த அன்னையை சிகண்டினியும் நிருதனும் தொடர்ந்துசென்றனர். அன்று பகலும் அவ்விரவும் அவள் சென்றுகொண்டே இருந்தாள். காலையொளி காட்டுமீது பரவியபோது நடுவே வட்டமாகக் கிடந்த வெற்றிடமொன்றைச் சென்றடைந்தாள். அடியில் பெரும்பாறை இருந்ததனால் மரங்கள் முளைக்காதிருந்த அந்த நிலத்தில் மண்ணிலிருந்து எழுந்த நீராவியில் விழுந்த இளவெயில் குளமெனத்தேங்கியிருந்தது. அதில் சிறுபூச்சிகள் ஒளியுடன் சுழன்றுகொண்டிருந்தன. செழித்த புற்களின் இலைகளில் இருந்த சிறுசிலந்திவலைகளில் நீர்த்திவலைகள் ஒளிவிட்டன. மெல்லிய சிலந்திவலைக் குகைகளுக்குள் இருந்து அன்னைச்சிலந்திகள் வெளிவந்து அசைவை கவனித்தன.

அங்கிருந்த சிறிய பாறையில் அன்னை அமர்ந்தாள். வழக்கம்போல முன்னும் பின்னும் ஆடாமல் தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை மறைத்துத் தொங்கிய சடைவிழுதுகள் இளங்காற்றில் அவ்வப்போது ஆடின. அருகே ஒரு மரத்தடியில் கைகூப்பியபடி நிருதன் அமர்ந்திருந்தான். சிகண்டினி விலகிச்சென்று காய்கனிகளையும் கிழங்குகளையும் தேடிச்சேமித்து அவள்முன் கொண்டுவந்து வைத்தாள். அவற்றை அவள் உண்ணவில்லை. நிருதனும் எதையும் உண்ணவில்லை. மாலைவரை அவ்விடத்தில் இருவரும் இரண்டு தொன்மையான சிலைகள் போல அமர்ந்திருந்தனர். காட்டுக்குள் வெயில்வட்டங்கள் அணைந்து இருள் பரவத்தொடங்கியதும் அன்னை நிமிர்ந்தாள். கையசைவால் நிருதனை அருகே அழைத்தாள்.

நிருதன் அருகே சென்று வணங்கியதும் அந்த நிலத்தில் தெற்கு மூலையில் இருந்த பாறைமேட்டை சுட்டிக்காட்டினாள். அவன் அவள் சொல்வதை புரிந்துகொண்டதுபோல தலையசைத்தபின் காட்டுக்குள் சென்றான். சற்று நேரத்தில் உலர்ந்த மரம் ஒன்றை இழுத்துவந்தான். அதை கற்பாறைகளால் அடித்து ஒடித்து சுள்ளிகளாக ஆக்கி அந்தப் பாறைமேல் நீளமாக குவிக்கத்தொடங்கினான். அதை பொருளறியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிகண்டினி ஏதோ ஒரு தருணத்தில் புரிந்துகொண்டு திகைப்புடன் எழுந்து நின்றாள். ஆனால் அன்னையை நெருங்க அவள் துணியவில்லை. அவள் அவ்விறகுக்குவியல் சிதையாக ஆவதை அசையாவிழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின்பு அன்னை திரும்பி அவளைப்பார்த்தாள். சிகண்டினி சென்று அன்னையின் அருகே நின்றாள். முதலில் அவளை அடையாளம் காணாததுபோல அன்னையின் சுருங்கிய செவ்விழிகள் அதிர்ந்தன. பின்பு கண்களுக்குள் வாசல் திறந்தது. சுருண்ட கரிய நகங்களும் வெந்துசுருங்கிய சருமமும் கொண்ட அன்னையின் கை அவளை நோக்கி நீண்டது. அவள் நெருங்கியதும் அந்தக்கையை அவள் தலைமேல் வைத்தாள். மெல்லச்சரிந்து அவள் தோளைத் தழுவி இடையை அடைந்து நின்றது கரம். “மகனே சிகண்டி” என்றாள் அன்னை.

முதன்முதலாக அவள் பேச்சைக் கேட்ட சிகண்டினியின் பிடரியிலும் முதுகிலும் மயிர்க்கூச்செறிந்தது. அந்தக்குரல் அவளறிந்த அன்னையின் மிருக ஓசை அல்ல. பொன்மணியும் வேய்ங்குழலும் கலந்த இனிமை அதிலிருந்தது. பாறைமுகட்டின் கரிய தேன்கூடு கனிந்து துளித்துச் சொட்டுவதுபோல அவளிலிருந்து அது வந்தது. “மகனே, சிகண்டி…நீதானா?” என்றாள். “நீ என்னுடன்தான் இருக்கிறாயா?”

தெய்வச்சிலை கண்திறந்து பேசியதைக் கண்டவள் போலிருந்த சிகண்டினி அன்னையின் உடலை நெருங்கி நின்று “அன்னையே நான் பெண்…என் பெயர் சிகண்டினி” என்றாள். இல்லை இல்லை என்பதுபோல தலையசைத்தாள் அன்னை. “சிகண்டி…நீ சிகண்டி…நீ என் மகன்” என்றாள்.

சிகண்டி ஒருமுறை இமைத்தபின் திடமான குரலில் “ஆம்” என்றான். நெய்கொதித்து ஆவியாவதுபோலஅன்னை உடலில் இருந்து அவள் உயிர் பெருமூச்சுகளாக வெளிவந்துகொண்டிருந்தது. “நான் காசிமன்னன் மகள் அம்பை. அஸ்தினபுரியின் பீஷ்மனால் ஆன்மா அழிக்கப்பட்டு பித்தியானவள். அகத்தின் கனலில் எரிந்து பேயானவள்” என்றாள் அன்னை.

மெல்லமெல்ல அவள் உடலில் இருந்த மிருகத்தன்மை ஒழுகிச்சென்றதை, கருகிச்சுருண்டு சேறும் அழுக்கும் படர்ந்த உடலிலேயே பெண்மை குடியேறியதை சிகண்டி வியப்புடன் பார்த்தான். “மகனே, நீ எனக்காகச் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கிறது” என்றபோது அது கைவிடப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகவே ஒலித்தது.

“சொல்லுங்கள்” என சிகண்டி தலையசைத்தான். முதன்முதலாக அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தான். மட்கிய மரப்ப‌ட்டைபோன்ற கன்னங்களில் விழுந்த கண்ணீர் சுருக்கங்களில் பரவி தாடையில் சொட்டியது. “இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”

அவள் சொல்லாமலேயே அனைத்தையும் அவன் அறிந்துகொண்டான். சொற்களில்லாமலேயே அனைத்தையும் சொல்லிக்கொண்டும் இருந்தான். அன்னை தன் கரங்களை நீட்டி அவற்றைப்பார்த்தாள். திகைத்தவள்போல சிலகணங்கள் விழிமலைத்து அமர்ந்திருந்தபின் நெஞ்சை உலைத்த விம்மலுடன் மீண்டாள். “மகனே, இந்த நெருப்பு என் இப்பிறவியை எரித்துவிட்டது. அடுத்த பிறவியிலாவது எனக்கு விடுதலைவேண்டும். அதை நீயே எனக்கு அளிக்கவேண்டும்.”

“செய்கிறேன்” என்றான் சிகண்டி. “நீ பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று அன்னை சொன்னாள். சிகண்டி அவள் கையைப்பற்றி “கொல்கிறேன்” என்றான்.

திடுக்கிட்டவள்போல அம்பை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உனக்கு அவர் யாரெனத்தெரியுமா?” என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன?” என்றான். அவள் கைகள் மேல் தன் கைகளைவைத்து மெல்லிய குரலில் “அது நிகழும்” என்றான் .

“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள். அவள் கைகள் சிகண்டியின் கைகளைப்பற்றியபடி நடுங்கின. சிகண்டி “ஆம்” என்றான்.

அன்னையின் பேய்முகத்தில் அழகியபுன்னகை ஒன்று எழுவதை சிகண்டி பார்த்தான். அவள் அவன் இருதோள்களையும் பிடித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள்.

சிகண்டியின் தலையில் கைவைத்து அன்னை சொன்னாள் “மகனே, நீ பாஞ்சாலனிடம் செல். காசி இளவரசியின் மகன் நீ என்று சொல். அவன் உன்னை தன் மகனாக ஏற்றுக்கொள்வான். கற்கவேண்டியவற்றை எல்லாம் கற்றுக்கொள். உன் கை வில்லுக்கு முன் பாரதவர்ஷத்தின் எந்த மன்னனும் நிற்கலாகாது. பீஷ்மர் அறிந்த நீ அறியாத ஏதுமிருக்கக்கூடாது” என்றாள். சிகண்டி தலையசைத்தான்.

பெருமூச்சுடன் அன்னை சொன்னாள் “என்கதையை சூதர்கள் பாடிக்கேள். அன்னையை நீ அறிவாய்.” “நான் பிறிதொன்றல்ல”என்று சிகண்டி சொன்னான். அன்னை கண்ணீருடன் பெருமூச்சுவிட்டாள். “இப்பிறவியை எனக்களிக்கிறாய் மகனே. கடன் இனி என்னுடையது. இனிவரும் ஏழுபிறவிகளில் உனக்கு மகளாகி என் கடனைக் கழிப்பேன். உனக்களிக்க இவ்வன்னையிடம் இருப்பது இந்தக்கண்ணீரன்றி ஏதுமில்லை.”

அவன் தலைமேல் கைவைத்து அன்னை சொன்னாள், “உன்னுடன் அன்னையின் கண்ணீர் என்றுமிருந்து வழிகாட்டும். அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்றும் சொல்லில் வாழ்வாய்” என்றாள். சிகண்டி தலைவணங்கி அன்னையின் அருட்சொல்லை ஏற்றுக்கொண்டான்.

நிருதன் வந்து வணங்கினான். அன்னை அவனை நோக்கித்திரும்பினாள். “நிருதரே, இதன்பின் உங்கள் இல்லம் திரும்புங்கள். என் சிதைச்சாம்பலைக் கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறுதங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்” என்றாள். நிருதன் “தங்கையே, அது என் தவப்பயன்” என்றான்.

கற்களை உரசி நிருதன் ஏற்றிய நெருப்பு மெல்லச்சிவந்து படபடவென்ற ஒலியுடன் பொற்சிறகுகள் கொண்டு எழுந்தது. அண்டபேரண்டங்களை துப்பும் ஆதி நாகத்தின் செந்நா என தழல் மேலெழுந்து பொறிகிளப்பியது. அலகிலா எல்லைவரை நிறைந்த இருளில் பொறிகள் விழுந்து மறைய காடு மெல்லிய காற்றோடும் மூச்சொலியாகச் சூழ்ந்திருந்தது. அன்னை எழுந்து சிகண்டியின் தலையைத் தொட்டாள். நிருதனின் பாதங்களைத் தொட்டபின் மெல்ல நெருப்பைநோக்கிச் சென்றாள். காதலனை அணுகும் பெதும்பை என தளரும் காலடிகளுடன். பின்பு பசித்தழும் குழந்தையை நோக்கிச்செல்லும் அன்னைபோல.

தீ அவள் உடலில் பிரதிபலித்து அவள் செவ்விழிகள் சுடர்ந்த இறுதிக்கணத்தை சிகண்டி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான். அருகே சென்ற கணம் அவளில் நெருப்பு தழலாடியது. அவளே ஒரு செந்தழலாகத் தெரிந்த மறுகணத்தில் நெருப்பின் இதழ்கள் விரிந்து அவளை உள்ளே அள்ளிக்கொண்டன. செந்திரை அசையும் பல்லக்கிலேறுவது போல அவள் எரிசிதைமேல் ஏறிக்கொண்டாள்.

தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி நிருதன் தரையில் விழுந்தான். புற்பரப்பில் முகத்தைப்புதைத்து இருகைகளாலும் செடிகளைப்பற்றியபடி மண்ணுக்குள் புதைந்து விடமுயலும் மண்புழு போல உடல் நெளிந்தான்.

நின்ற இடத்தில் அசையாமல் சிகண்டி நின்றிருந்தான். அவன் முகத்தில் சிதைநெருப்பின் செம்மை அலையடித்தது. நெருப்புக்குள் அன்னையின் கரிய கைகால்களின் அசைவை, கருஞ்சடைகள் பொசுங்கும் நாற்றத்தை, அவள் உடல் எம்பி விழுந்து எரிவிறகில் மெல்லப்படிவதை, தசை திறந்து ஊன்நெய் சொட்டி சிதை நீலச்சுவாலையாவதை, உண்டுகளித்த செந்தழல்கள் நின்று நடமிடுவதை இமையா விழிகளுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் களம்படும் கணம் வரை விழிமூடவில்லை என்றனர் சூதர். அவன் துயிலறிந்ததே இல்லை. அவன் கண்ணிமைத்ததேயில்லை என்று அவர்களின் பாடல்கள் பாடின.

VENMURASU_EPI_36

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

இரவெல்லாம் இடியோசையுடன் முழங்கி அதிர்ந்த வானம் மறுநாள் காலை பொழியத்தொடங்கியது. சிதை எரிந்த சாம்பலில் கரியும் வெள்ளெலும்புகளும் நீரில் கரைந்து வழிவதைக் கண்டபின் சிகண்டி திரும்பி காட்டுக்குள் சென்றான். கொடிபின்னிச்செறிந்த அடர்காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கோ அக ஆழத்திலிருந்து அவன் செல்லவேண்டிய இலக்கை கால் அறிந்திருந்தது என நடந்தான்.

காலகம் என்ற அந்த அடர்வனத்தின் நடுவே ஸ்தூனகர்ணன் என்னும் யட்சனின் ஆலயம் இருந்தது. அப்பகுதியில் வேடரும் மேய்ப்பரும் மூலிகைதேடும் மருத்துவரும் செல்வதில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நாற்பத்தொருநாள் நோன்பிருந்த சூதர்கள் பந்தங்களுடனும் குடைகளுடனும் அக்காட்டுக்குள் புகுந்து ஸ்தூனகர்ணனின் சிற்றாலயத்தை அடைந்து பூசை செய்தனர். செங்குருதித் துளிகள் போன்ற செவ்வரளிமலர்களை சூட்டி, வறுத்த தானியப்பொடியில் மனிதக்குருதி சொட்டி உருட்டி ஆறு திசைக்கும் வீசி அவனுக்குப் படையலிட்டு வணங்கி மீண்டனர்.

மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தது. நீரோடைகளன்றி வழியில்லாத அக்காட்டுக்குள் குகைகளில் இரவு தங்கியும் மலைக்கிழங்குகளை உண்டும் ஏழுநாட்கள் பயணம்செய்து சிகண்டி ஸ்தூனகர்ணனின் ஆலயத்தைச் சென்றடைந்தான். அப்பகுதியில்  பாறையின் கரிய வாய் எனத் திறந்த குகையிடுக்குக்குள் ஊறித்தேங்கிய சிறுசுனையின் மறுகரையில் ஸ்தூனகர்ணனின் சிறுசிலை இருந்தது. ஒருபகுதி தாமரை ஏந்திய பெண்ணாகவும் மறுபகுதி சூலமேந்திய ஆணாகவும் இருந்த சிலை மழையீரத்தில் களிபடிந்திருந்தது.

சிலையைநோக்கி சில கணங்கள் நின்றபின் அருகே இலைகளைப்பறித்துப்போட்டு இருக்கை அமைத்து சிகண்டி அமர்ந்துகொண்டான். இருகைகளையும் மடியில் கோர்த்தபடி இமையா விழிகளால் சிலையை நோக்கி அமர்ந்தான். நாட்கள் கழிந்தபோது சிலை கண்விழித்து அவனை நோக்கத் தொடங்கியது. அதன் பார்வையைச் சந்தித்த அவன் பிரக்ஞை நடுங்கியது. நெற்றியில் உந்தப்பட்ட கடா என எம்பி முன்சென்றது. உச்ச கட்ட அழுத்தத்தில் செயலிழந்து அசைவழிந்தது. பின்பு அந்தச்சிலை மட்டும் அங்கே இருந்தது.

நீர்சுழித்த சிறுதடாகம் படிகம்போல அசைவற்றிருக்க அதில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். மணிமுடியும் செங்கோலும் ஏந்திய அரசனாக வந்து நின்று “பெண்ணே நீ கோருவதென்ன என நீ அறிவாயா?” என்றான். “ஆம்” என்றான் சிகண்டி. “பிறவி என்பது முடிவற்றசங்கிலியின் ஒரு கண்ணி என்றறிக. இப்பிறவியை நீ மாற்றிக்கொண்டால் உன் வரும் பிறவிகளனைத்தையும் சிதறடிக்கிறாய். சென்ற பிறவிகளின் ஒழுங்கை குலைக்கிறாய். உன்னையும் உன் முன்னோர்களையும் வரும் தலைமுறைகளையும் இருளில் ஆழ்த்துகிறாய்” என்றான் ஸ்தூனகர்ணன்.

“என் சித்தத்தின் ஒரு சொல்லிலும் மாற்றமில்லை” என்றான் சிகண்டி. “ஒருகணத்தில் என் அகம் ஆணாகிவிட்டது. நான் உன்னிடம் ஆணுடலை மட்டுமே கோருகிறேன்.” ஸ்தூனகர்ணன் நீரில் மூழ்கிமறைந்தான். மீண்டும் சிகண்டி தன் கண்முன் கற்சிலையைக் கண்டான். பாறைப்பரப்பை முட்டிமுட்டித் துளைக்கமுயலும் கருவண்டுபோல அதன் முன் தவமிருந்தான். அச்சிலையின் விழிகளில் தன் பிரக்ஞையின்  வேகத்தால் மோதிமோதித்திறந்தான்.

மலர்முடி அணிந்த அணங்கின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினாள். “நீ இழப்பது ஒவ்வொரு கணமும் வளரும். அந்த மலையின் அடியில் சிறுகூழாங்கல்லாக ஒருநாள் உன்னை நீ உணர்வாய்” என்றாள். “ஆம், நான் அடைவதற்கொன்றுமில்லை” என்றான் சிகண்டி.

மூன்றாம்முறை கனிந்த பார்வையும் நீண்டவெண்தாடியும் கொண்ட தாதையின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். “குழந்தை, நான் சொல்வதை நீ புரிந்துகொள்ளவில்லை. யுகயுக மடிப்புகளில் இம்மாற்றத்தைச் செய்த எவரும் நலம்பெற்றதில்லை. துயரத்தின் மீளாப்பெருநரகில் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை” என்றான் சிகண்டி. திகைத்து நின்ற ஸ்தூனகர்ணன் நீரில் மறைந்தான். மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழாங்கல்லை அடைகாக்கும் பறவைபோல சிகண்டி அமர்ந்திருந்தான்.

மூதன்னை வடிவில் தோன்றிய ஸ்தூனகர்ணன் “நீ என் புதல்வி. உன்னிடம் இறுதியாகச் சொல்கிறேன். உன் வாழ்நாளெல்லாம் ஒரு நற்சொல்லைக்கூட நீ கேட்டறியமாட்டாய்” என்றாள். “நான் அதை எதிர்நோக்கவுமில்லை” என்று சிகண்டி பதில் சொன்னான். “என் அன்னையின் ஆணைக்கு அப்பால் சிந்தனை என்ற ஒன்று எனக்கில்லை.” துயரம் நிறைந்த புன்னகையுடன் ஸ்தூனகர்ணன் தன்கையை நீட்டினான். அதில் ஒளிவிடும் வைரம் ஒன்றிருந்தது.

அவன் ஆணைப்படி அதை வாங்கி விழுங்கிய சிகண்டி தனக்குள் அதன் கூரியமுனைகள் குத்திக்கிழிப்பதன் வலியை அறிந்தான். அவனிடமிருந்து ஒழுகிய குருதி அந்தத் தடாகத்தில் நிறைந்தது. அவனுக்குள் காலம் பொறித்திருந்த குழந்தைகள் துடிக்கும் சதைத்துண்டுகளாக, மெல்லிய வெள்ளெலும்புகளாக, மென்கரங்களாக, குருத்துக்கால்களாக, பூவிரல்களாக வெளிவந்து குளத்தில் தேங்கின. அவற்றின் பதைபதைத்த கண்கள் மீன்களாக குருதிநீரில் துள்ளின. அவற்றின் அழுகை வண்டுகளின் ஒலியென அவனைச்சூழ்ந்தது. கடைசியாக அவன் கருப்பை தோலுரிந்த சர்ப்பம் போல வெளியே வந்து குருதிச்சுழிப்பில் விழுந்து அமிழ்ந்தது. அதில் தோன்றிய ஸ்தூனகர்ணன் துயரம் நிறைந்த புன்னகையுடன் மறைந்தான்.

பன்னிரண்டாவது நாள் மெலிந்துலர்ந்த உடல் வற்றிய கால்கள்மேல் நிற்கமுடியாது ஊசலாட, குகைச்சுவர்களைப் பற்றியபடி நடந்து வெளிவந்தான் சிகண்டி. அருகே நின்ற கிழங்கொன்றைப் பிடுங்கித்தின்றபோதுதான் தன் வயிற்றை, அவ்வயிற்றை ஏந்திய உடலை, அவ்வுடலில் வாழும் தன்னை உணர்ந்தான். நீர் அருந்துவதற்காக அங்கிருந்த ஓடைச்சுனையில் குனிந்தபோது தன் முகத்தைப்பார்த்தான். அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

04 Feb 23:33

வாசித்துக்காட்டும் செயலி

by jeyamohan

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் சில நாட்களாக தமிழ் text to speech மென்பொருளை படிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன். வேலையிலும் கணினியை பல மணி நேரம் உபயோகித்துவிட்டு, வாசிக்கும் போதும் கணினி திரையை பார்த்து படிப்பது கண்களை வருத்துகிறது. இந்த மென்பொருள் வாசிப்பதை எளிதாக்குகிறது, இதில் பதிவும் செய்து கொள்ளலாம். கிட்டதட்ட கட்டுரைகளை ரேடியோவில் கேட்பது போல் கேட்டு வருகிறேன். எழுத்துக்களை ஒலியாய் மாற்றிய பின் அதை கேட்கும் சாத்தியங்களும், தருணங்களும் வாசிப்பதை காட்டிலும் அதிகம். இசையை கேட்பது போல் இந்த பதிவுகளையும் கேட்கலாம்.

eSpeak [ http://www.youtube.com/watch?v=JaC1QZjhiGc

நன்றி,
ஹரீஷ்

பேரா. கோ. கண்ணன் தருமபுரி

அன்புள்ள ஹரீஷ்

ஏற்கனவே என் நெடுநாள் நண்பரும் விழியற்றவருமான கோ.கண்ணன் [ அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் தருமபுரி] ஒரு பென்பொருளைப் பயன்படுத்தி தமிழை ஒலியாக வாசிக்கிறார். என்னுடைய தளத்தை அவர் தினமும் வாசிக்கிறார். நான் தருமபுரியில் இருந்தபோது அவர் முனைவர் பட்ட ஆய்வுமாணவர். அன்று அவருக்கு வாசித்துக்காட்ட ஆள் தேவைப்பட்டது. பெரிய வாசகர் என்பதனால் எவ்வளவு வாசித்தாலும் தீராது அவருக்கு. நான் அவருக்காக நாவல்கள் வாசித்துப் பதிவுசெய்துகொடுத்திருக்கிறேன். நாவலாசிரியர் பா.வெங்கடேசன் அவருக்காக வாசித்திருக்கிறார். இப்போது அவரே கேட்கமுடிகிறது. உங்கள் மென்பொருள் அவ்வகையில் மிக உதவியானது.

எனக்கு இந்த மென்பொருளின் உச்சரிப்பு வெள்ளைக்காரர் பேசுவதுபோல ஒலித்தது. ஆனால் இதையெல்லாம் மிக விரைவிலேயே சரிசெய்துகொள்ளமுடியும். மானசீகமாகக்கூட. என்ன சிக்கல் என்றால் மனிதர்கள் இருவகை. காதுசார் நுண்ணுணர்வு கொண்டவர்கள், கண்சார் நுண்ணுணர்வுகொண்டவர்கள். காதுசார்ந்தவர்களே ஒலிவடிவில் நூல்களை எளிதில் வாசிக்கிறார்கள். எனக்குத்தான் காதில் கவனமில்லை என தெரியுமே. என் நண்பர்கள் ஷாஜி, சுகா, ராமச்சந்திர ஷர்மா கெ.பி.வினோத் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அவர்கள் பெரிய இசை ரசிகர்களும்கூட

ஜெ


கண்ணன் – பிரெயிலி முறையின் எதிர்காலம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
04 Feb 23:31

வலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்

by jeyamohan

அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல்களில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் ஒருவகையான நம்பிக்கை அலை உருவாகியிருக்கிறது. கேரளத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு புதியதாக ஒரு கிளை உருவாக்கப்பட்டது. அந்த தொண்டர்கள் அனைவரும் உற்சாகமான படித்த இளைஞர்கள். ஆம் ஆத்மி கட்சியின் பிரத்யேகபாணி குல்லாய்களை அணிந்துகொண்டு மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவதை தொலைக்காட்சியில் கண்டேன்.

கேஜிரிவால்

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி அனைவருக்குமே ஆச்சரியம்தான். அது பெரும்பாலும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. அதற்கு மதம்,சாதி, இனம்,வட்டாரம் சார்ந்த அரசியல் ஏதும் இல்லை. அத்தகைய குறுகியஅரசியல்கள் இல்லாத எந்தக் கட்சியும் இந்தியாவில் சமீபகாலங்களில் இந்தியாவில் மக்களாதரவைப் பெற்றதில்லை. அதோடு ஆம் ஆத்மி கட்சிக்கு திட்டவட்டமான அரசியல் கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லை. அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த நீண்டகாலச் செயல்திட்டங்களும் அவர்களுக்கில்லை. அவர்கள் உடனடியாக நிர்வாகமுறையில் சில மாறுதல்கள் தேவை என்று கோரும் இளைஞர்கள் மட்டுமே. அதாவது அவர்கள் உயர்நிர்வாக அமைப்பில் ஊழல் இருக்கக்கூடாதென நினைக்கும் ஒரு குழு, அவ்வளவுதான்.

ஏன் அது இத்தனை பரபரப்பை உருவாக்குகிறது? சென்ற கால்நூற்றாண்டாகவே இந்திய அரசியலில் படித்த,நவீன இளைஞர்களுக்கு இடமே இல்லை என்ற நிலை உள்ளது. அரசியலுக்குள் நுழைவதற்கான வழிகளாக இங்குள்ளவை இரண்டுதான். ஒன்று வாரிசுகளாக. இன்னொன்று ஏற்கனவே அரசியலில் இருக்கும் ஒருபிரமுகரின் அடிப்பொடிகளாக. இரண்டாவதுதான் சாமானியனுக்குத் திறந்திருக்கும் ஒரே வழி. அது குறைந்தபட்சத் சுயமரியாதை கொண்ட ஓர் இளைஞருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. ஆகவே பெரும்பாலும் இங்கே அரசியலில் நுழைபவர்கள் கிராமப்பின்புலம் கொண்ட, அதிகம் படிக்காத இளைஞர்கள். சிறியதொழில்கள் செய்பவர்கள் அல்லது வழக்கறிஞர்கள். அவர்களின் தொழிலுக்கே கொஞ்சம் அரசியல் இருந்தால் நல்லது. அதற்காக எந்தச் சமரசத்தையும் செய்யக்கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

அதாவது இங்கே அரசியல் செயல்படுவது நிழல் உலக குற்றக்குழுக்களின் பாணியில்தான். பெரும்பாலும் நேரடியாகவே குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள்தான் அங்கே மிகவெற்றிகரமாகச் செயல்பட முடிகிறது, மேலே செல்லமுடிகிறது. ஆகவே இந்தியாவில் இன்றைய கட்சி அரசியல் என்பது குற்றப்பின்னணிகொண்டவர்களுக்கு மட்டுமே உரியதாக மெல்லமெல்ல ஆகிவிட்டிருக்கிறது. கொஞ்சமேனும் விதிவிலக்காக இருப்பவை வலதுசாரி இடதுசாரி அமைப்புகளான பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்டுகளும். ஆனால் அவற்றில்கூட எங்கெல்லாம் அரசதிகாரம் கையில் இருக்கிறதோ அங்கெல்லாம் குற்றப்பின்னணிகொண்டவர்கள் அதிகமாக ஊடுருவிவிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசியலை மாற்ற படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்ற கோஷம் அடிக்கடி எழுகிறது. ‘அரசியல் என்ற சாக்கடையைச் சுத்தம் செய்ய’ இளைஞர்கள் இறங்கவேண்டும் என அவ்வப்போது ‘சான்றோர்கள்’ மேடையில் சொல்லிவிட்டு இறங்கிச்செல்வார்கள். அதை நம்பி அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. அவையெல்லாமே மக்களால் கேலிக்குரியவகையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நேர்மையான படித்த நல்ல நோக்கமுள்ள இளைஞர் தனியாகவோ அல்லது ஒரு தங்களுக்கான கட்சி சார்பிலோ தேர்தலில் போட்டியிடுகிறார் என்று கொள்வோம். அவருக்கு எதிராக ஒரு குற்றப்பின்னணிகொண்ட, ஊழலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, படிக்காத ஒருவர் சாதி,மத, இன,மொழி, வட்டாரவாத அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்திய வாக்காளர் இரண்டாவது நபருக்குத்தான் வாக்களிப்பார். இன்றுவரை அதுதான் இங்கே நிகழ்ந்து வருகிறது.

உடனடி உதாரணம், கான்பூரிலும் மும்பையிலும் ஐஐடி மாணவர்களால உருவாக்கப்பட்ட அரசியலமைப்பான லோக் பரித்ரன். அது தேர்தலில் நின்று படுதோல்வியடைந்தது. அத்தகைய ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். இந்தச்சோர்வுச்சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒரு நம்பிக்கையை படித்த இளைஞர்களுக்குக் கொடுக்கிறது. தங்களுக்கென ஓர் அரசியல் சாத்தியமென்ற எண்ணம் உருவாகிறது. இன்று உருவாகியிருக்கும் உற்சாகத்திற்கான காரணம் இதுவே. ஆனால் இந்த உற்சாகத்திற்கான நடைமுறைவாத அடிப்படை என ஏதேனும் உண்டா? இன்று ஆம் ஆத்மி கட்சிமேல் வைக்கப்படும் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? அது ஏதேனும் வெற்றிகளை அடையுமா?

அதற்கு முன் நாம் கேட்டுக்கொள்ளவேண்டியது ஒன்றுண்டு. இந்திய வாக்காளர் தன்னுடைய வாக்கை ஏன் ஒரு குற்றப்பின்னணிகொண்டவருக்கு, ஊழல்வாதிக்கு போடத் தயாராக இருக்கிறார்? ஏனென்றால் அந்த நபருக்கு அவர் வாக்களிக்கவில்லை. அந்நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சி மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த கட்சி தன்னுடைய, தன் சாதியின், தன் குழுவின் நலத்தைப்பாதுகாக்கக்கூடியது; அதற்காகப் போராடக்கூடியது என அவர் நினைக்கிறார். சராசரி இந்திய வாக்காளர் இன்று எந்த இலட்சியத்துக்காகவும், எந்தக் கொள்கைக்காகவும் வாக்களிக்கவில்லை. முழுக்கமுழுக்க தன் சுயநலத்துக்காகவே வாக்களிக்கிறார். பல்வேறு அடையாளங்கள் சார்ந்து மக்களின் சுயநலங்களைத் திரட்டிக்கொள்ளும் அமைப்புகளே இன்று வெற்றிகரமான கட்சிகளாக ஆகின்றன.

இந்தியாவின் சுதந்திரப்போராட்ட காலத்தில் இந்திய சமூகத்தில் இருந்த இலட்சியவாதம் சுதந்திரம் நெருங்கியபோதே அழிய ஆரம்பித்தது. மாகாணத்தேர்தல்களில் போட்டியிட்டு அரசமைக்க காங்கிரஸுக்கும் பிற கட்சிகளுக்கும் வாய்ப்புகிடைத்தபோதே சுயநல அரசியல் ஆரம்பித்துவிட்டது. ஆங்கில அரசு சாதி மதம் சார்ந்து இடஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்க ஆரம்பித்ததுமே இந்திய சமூகத்தில் குழுசார்ந்த அரசியல் பிறந்துவிட்டது. சுதந்திரத்துக்குப்பின் இந்திய மக்கள் மொத்தமாகவே பல்வேறு அதிகாரஅலகுகளாக தங்களப் பிரித்துக்கொண்டனர். முதல்பிரிவினை மொழிவழி மாநிலங்களுக்கான கோரிக்கையை ஒட்டி இந்தியாவெங்கும் உருவான வட்டாரவாதம் மற்றும் மொழிவாதம். அதன்பின்னர் இட ஒதுக்கீட்டுக்காக உருவான சாதியவாதம். இவ்வாறு பல்வேறு பிரிவினைகள்.

இன்றைய இந்திய அரசியலென்பது இத்தகைய ஒவ்வொரு குழுவும் தன்னை வாக்குவங்கிகளாக ஆக்கிக்கொண்டு தேர்தலரசியலில் செல்வாக்கு செலுத்தி, அரசதிகாரத்தில் பங்கு பெற்று, தங்களுக்கு முடிந்தவரை அதிக லாபங்களைப் பெற்றுக்கொள்வதுதான். இந்த லாபங்களின் பங்குக்காகவே சாதாரண மக்கள் முண்டியடிக்கிறார்கள். எவரும் எந்த இலட்சியத்தையும் பெரியதாக நினைப்பதில்லை. ஆகவே ஊழல் எவருக்கும் ஒரு பிரச்சினையே அல்ல. ஊழல் மூலம் தன் குழு லாபம் தேடியிருந்தால், அந்த லாபம் ஓரளவேனும் தனக்கும் அளிக்கப்பட்டிருந்தால் சராசரி இந்தியக்குடிமகனுக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

பொது உரையாடல்களில் அடிக்கடி மக்கள் ஊழலுக்கு எதிராக மனம் கசந்து பேசுவதைக் கேட்கலாம். சினிமாக்களில் அரசியல்வாதிகளை வில்லன்களாக காட்டுவதை, கதாநாயகர்கள் அவர்களை அடித்துத் துவைப்பதை மக்கள் ரசிப்பதைக் காணலாம். ஆனால் அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள், காரணம் அவர்கள்தான் அரசியலில் தங்களுக்காக போராடுவார்கள், தங்கள் சுயநல நோக்கங்களுக்கு உதவுவார்கள் என மக்கள் நினைக்கிறார்கள். தேர்தல்காலங்களில் மக்களின் மனநிலை வியப்பூட்டும்படி மாறுவதைக் காணலாம். அதுவரைப் பேசிவந்த நேர்மை, கொள்கை சார்ந்த அனைத்தையும் மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். தங்கள் அதிகாரக்குழுவுக்குள் யார் மிகச்ச்செல்வாக்காக இருக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்பார்கள். அவர்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளவர், அவருக்கு வாக்களித்தால் மட்டுமே வாக்கு வீணாகாது என அதற்கு அவர்கள் ஒரு நியாயத்தையும் சொல்வார்கள்.

இந்தியாவின் அரசியல்வாதிகளின் நேர்மையின்மை இந்தியமக்களின் நேர்மையின்மையின் சரியான பிரதிலிப்பு மட்டுமே. அரசியல்வாதிகளின் ஊழல் இந்தியமக்களின் ஊழலேதான். இந்தியாவின் சீரழிந்த தன்மை இந்தியமக்களின் சீரழிவுமட்டுமே. இந்தியா மிகச்சரியாகவே அதன் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்கிறது. அரசியல்வாதிகளை இந்தியமக்கள் வசைபாடுவது தங்கள் சொந்த அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ளும்பொருட்டே. தங்களுக்கு திருடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அடுத்தக்கணமெ ‘இங்க யார் சார் யோக்கியன்?’ என நியாயப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

சுக்ராம்

ஆகவேதான் இந்தியாவில் அப்பட்டமாக ஊழல்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் அனைவருமே மக்களால் மீண்டும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த ஏ.ஆர்.அந்துலே நிலமோசடியை ஊக்குவித்து ஊழல்செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்டு பதவியிழந்தார். தேசமே அவரைப்பற்றி பேசியது, வெட்கப்பட்டது. சில வருடங்களுக்குள் அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலுவான அரசியல்வாதியாக மீண்டு வந்தார். 2002ல் இந்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம் கோடிக்கணக்கான ஊழல் பணத்தை கட்டுகட்டாக வீட்டிலேயே வைத்திருந்து மாட்டிக்கொண்டார். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்குத் திரும்பி வந்தார். தமிழகத்திலும் ஊழலுக்காக குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அனைவருமே மக்களால் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.அந்துலே

இந்தியா என்ற பிரம்மாண்டமான ஜனநாயகம் இன்று செயல்படும் விதம் இதுதான். நூற்றுக்கணக்கான ஆதிக்கவிசைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சமன்செய்துகொண்டு ஒரு சமரப்புள்ளியைக் கண்டடைவதைத்தான் இங்கே ஜனநாயகம் என்கிறோம். மதம், சாதி,இனம்,மொழி,வட்டாரம் சார்ந்த குழுக்களுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான தொழில்வட்டங்கள் உள்ளன. மும்பையின் சர்க்கரைஉற்பத்தியாளர் வட்டம் போல. குஜராத்திய பருத்தி உற்பத்தியாளர் வட்டம்போல. இதற்குமேல் இந்தியாவின் பிரம்மாண்டமான நிர்வாகஇயந்திரமான அதிகாரிகளின்கூட்டு ஒரு பெரிய அதிகாரவிசை. தொழிற்சங்கங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்னொரு விசை.இந்த அதிகாரவிசைகள் எவற்றுக்கும் எந்தக் கொள்கையும் கிடையாது, சுயநலம் தவிர.

இந்த விசைகள் நடுவே தொடர்ச்சியாக சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இந்தியாவில் உள்ள அத்தனை அரசுகளும் செய்துவரும் பணி என்றால் அது மிகையல்ல.உண்மையில் ஜனநாயகத்தில் ஓர் அரசின் வேலை என்பதே அதிலுள்ள அதிகாரவிசைகள் நடுவே சுமுகமான அதிகாரப்பங்கீடு நிகழும்படிப் பார்த்துக்கொள்வதுதான்.அந்த அதிகாரப்பங்கீட்டில் வன்முறை நுழைக்கப்படும்போதே அரசு வன்முறையை கையிலெடுக்கிறது. இந்தப் பங்கீட்டுவேலையை ஆற்றும் அரசியல்வாதிகள் அதற்கான வெகுமானமாக ஊழல்பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். குறைவான கல்வியறிவுள்ள இந்தியமக்களிடையே தேர்தலில் தங்களைப் பிரச்சாரம் மூலம் கொண்டுசென்று சேர்க்க இங்கே அரசியல்வாதிகளுக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. ஆகவே மேலும் ஊழல் பெருகுகிறது. விளைவாக ஊழல் இங்கே அரசநிர்வாகத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது.

அண்ணா ஹசாரே

அரசு என்பது ஊழலில்லாமல் நிகழ முடியுமா என்றே ஐயமாக இருக்கிறது. மன்னராட்சியில் ஊழல் செய்வது மன்னர்கள் மற்றும் அவரது குடுமப்த்தினரின் உரிமை. அது ஊழலாக மக்களால் கருதப்படுவதில்லை. சவூதி அரேபிய மன்னர்குடும்பமோ புரூனேயின் சுல்தானோ அரசுப்பணத்தை தனக்காகச் செலவிடுவது ஊழல் என்று சொல்லப்படுவதில்லை. அரசும் மன்னரும் வேறுவேறல்ல.சர்வாதிகார அரசுகளில் ஊழல் மக்களின் பார்வைக்கே வருவதில்லை. வந்தாலும் செய்தியாக ஆவதில்லை. ஜனநாயகத்தில்தான் ஊழல் மக்களால் கண்காணிக்கப்படுகிறது. செய்திகளில் இடம்பெறுகிறது, விவாதிக்கப்படுகிறது. சரியான ஜனநாயகம் உள்ள இட்ங்களில் மக்களின் பிரதிநிதிகளின் அமைப்புகளால் ஊழல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் இன்றையசூழலில் ஊழல் மிகப்பெரிய பிரச்சினை என்பதை மறுப்பதற்கில்லை. மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை பரவியிருக்கும் ஊழல் தேசத்தை கிட்டத்தட்ட சேற்றில் சிக்கிய யானைபோல அசைவற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. அடிமட்ட ஊழலால் இங்கே அடிப்படைக்கட்டுமானங்கள் அனைத்தும் சீரழிந்துவிட்டன. குப்பையே அள்ளப்படாமல் சாக்கடைக்குழி போன்று ஆகிவிட்டன இந்தியக்கிராமங்கள். பாசனமுறை அழிந்துவிட்டது. சாலைகள் இடிபாடுகளாகக் கிடக்கின்றன. உயர்மட்ட ஊழலால் தேசத்தின் செல்வம் அன்னியசக்திகள் கைக்கு அளிக்கப்படுகிறது. கோடானுகோடி பணம் அன்னியவங்கிகளுக்குச் சென்று முடங்குகிறது. இந்நிலைக்கு எதிரான கோபம் இளைஞர்கள் நடுவே எழுந்திருப்பது மிக இயல்பானது, அது ஓர் ஆக்கபூர்வ சக்தி என்பதில் ஐயமே இல்லை.

ஆனால் அதற்கு தேர்தலரசியலில் ஈடுபடுவது சரியானதாக இருக்குமா? இன்றைய இந்திய ஜனநாயகம் என்பது அதிகாரவிசைகளின் மோதலும் சமநிலையும்தான் என்னும்போது தேர்தலரசியல் வழியாக அடையப்படுவது என்ன? தேர்தலில் ஈடுபடும்போது முதலில் செய்யவேண்டியது அதிகாரவிசைகளில் வலுவானவற்றை தங்கள் தரப்பில் சேர்த்துக்கொள்வதுதான். ஆம் ஆத்மி அரசியலில் ஈடுபட்டதுமே செய்யநேர்ந்தது அதைத்தான். அது தன்னளவில் ஓர் அதிகாரவிசையை ஏற்கனவே சேகரித்துக்கோண்டிருந்தது. அதில் டெல்லியின் படித்த நடுத்தரவர்க்கம் ஒருங்கிணைந்தது. ஆகவே அந்தவர்க்கத்தின் நலன்களை ஆம் ஆத்மி பேணியாகவேண்டும். அவர்களுடைய அதிகாரப்பிரதிநிதியாகச் செயல்பட்டு அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அவர்களுடைய அத்துமீறல்களை கண்டுகொள்ளக் கூடாது. அவர்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்தியாகவேண்டும்.

தேர்தலரசியலில் ஈடுபட்டிருப்பது வரை இதுதான் விதி. டெல்லியின் நடுத்தரவர்க்கம் நூற்றுக்கணக்கான விதிமீறல்கள் வழியாகவே வாழ்ந்துகொண்டிருப்பது. வாடகைக்கு ரசீது கொடுத்தாகவேண்டும் என்பதுபோல நடுத்தரவர்க்கத்தைப்பாதிக்கக்கூடிய ஒரு சாதாரண சட்டநடவடிக்கை வரட்டும், நடுத்தர வர்க்கம் பொங்கி எழும். ஆம் ஆத்மி அவர்களுக்காக மட்டுமே பேசமுடியும், நியாயத்துக்காக அல்ல. சிறந்த உதாரணம் இடதுசாரிகள். அவர்கள் எல்லா நியாயமும் பேசுவார்கள், ஆனால் தொழிற்சங்க அரசியலின் ஊழலை நியாயப்படுத்துவார்கள். ஊழியர்களின் தவறுகளை ஆதரிப்பார்கள், வேறுவழியில்லை அவர்களுக்கு.

தேர்தலில் வெல்வதற்கு மேலும் மேலும் அதிகாரவிசைகளை ஆம் ஆத்மி கூட்டுச்சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கும். இந்தத் தேர்தலிலேயே ஆம் ஆத்மி அந்தச் சமரசங்களை ஆரம்பித்துவிட்டது. டெல்லியில் நாற்பது சதவீதம் இருக்கும் இஸ்லாமியர் மிக வலுவான வாக்குவங்கி. அவர்களின் வாக்கு எப்போதுமே காங்கிரஸுக்குத்தான் சென்றுகொண்டிருந்தது. இந்திய இஸ்லாமியர் ஒரு குறிப்பிட்ட மனநிலை கொண்டவர்கள். அவர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை அவர்கள் கிட்டத்தட்ட ’விடுவிக்கப்பட்ட’ பகுதிகளாக எண்ணுவார்கள். அங்கே காவலர்கள் வந்து சோதனைசெய்வதையே அநீதியாகவும் அத்துமீறலாகவும் எடுத்துக்கொள்வார்கள். டெல்லி தலைநகரம் என்பதனாலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசு சமரசம் செய்துகொள்ளமுடியாது. ஆகவே அவர்களுக்கும் காங்கிரஸ் அரசுக்குமிடையே எப்போதுமே பூசல் இருந்தது.

காங்கிரஸ் அரசின் சோதனைகள் இஸ்லாமியரை அதிருப்தி கொள்ளச்செய்தன. 2008 செப்டம்பரில் பாட்லா ஹவுஸ் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வைக்கச் சதி செய்ததாக சையத் முகமது அகமது காஸ்மி என்ற இதழாளர் 2012 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சிகளில் அதிருப்தி கொண்டிருந்த இஸ்லாமியரின் வாக்குகளைக் கவர ஆம் ஆத்மி கட்சி முயன்றது. பரேலியின் மௌலானா தக்பீர் ரஸா கான் என்ற மத அடிப்படைவாதியின் உதவியை ஆம் ஆத்மி நாடியது. எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனைக் கொல்வதற்காக ஃபத்வா விதித்தவர் இவர். அவருடைய ஆதரவுதான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்றுகூடச் சொல்லலாம்

இன்னும்பாதிக்கிணறுதான் தாண்டப்பட்டிருக்கிறது. ஆட்சிக்குவருவதற்கு இன்னும் பல அதிகார விசைகளை சேகரித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வாறு ஆட்சிக்கு வந்தபின் அந்த அதிகாரவிசைகளின் நலன்களைத்தான் ஆம் ஆத்மி கவனிக்கமுடியும். அதை முன்வைத்து மற்ற அதிகார விசைகளுடன் பேரம்பேசி சமரசத்தை எட்டுவதே அதன் வழியாக இருக்கும். அதில் என்ன ஊழல் ஒழிப்பைச் செய்யமுடியும்? ஊழலை அவர்கள் தனிப்பட்டமுறையில் செய்யாமல் இருக்கலாம். அதிகார இயந்திரம் ஊழலை நடைமுறையாக்கிக் கொண்டிருப்பதை தடுக்கமுடியாது. மிகச்சிறந்த உதாரணம் கேரளத்தில் ஏ.கே.அந்தோணி போன்றவர்களின் ஆட்சிதான். அந்தோணி ஊழலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவரது அரசு எப்போதுமே ஊழலரசாகவே இருந்துள்ளது. அச்சுதானந்தனின் இடதுசாரி அரசும் அப்படித்தான்.

அப்படியென்றால் ஊழலரசியலை கட்டுப்படுத்த என்ன செய்திருக்கலாம்? ஊழலுக்குக் காரணமாக அமைந்திருப்பது நம் மக்களின் அடிப்படை மனநிலைதான். ஊழல் தனக்கு தன்குழுவுக்குச் சாதகமானதென்றால் அதை ஏற்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த மனநிலையில் மாறுதலை உருவாக்குவதே முதற்பெரும் பணி. ஊழலின் விளைவாக ஒட்டுமொத்தமாக தேசத்துக்கும் அதனூடாக ஒவ்வொருவருக்கும் நிகழும் இழப்புகளை அவர்கள் உணரும்படிச் செய்யலாம். பெரும் பிரச்சார இயக்கங்களே அதற்கான வழிமுறைகள். போராட்டங்களைப்போல சிறந்த கருத்தியல்பிரச்சாரம் வேறில்லை. சென்றவருடம் அண்ணா ஹசாரே நிகழ்த்திய உண்ணாவிரதப்போராட்டம் அத்தகைய வலிமையான ஒரு பிரச்சார இயக்கம். இந்திய மக்களிடையே ஊழலுக்கெதிரான கசப்பை உருவாக்கியது அது. அதன் விளைவுகள் வட இந்திய அரசியலில் நேரடியாகவே பிரதிபலித்தன. பொது வாழ்க்கையில் நேர்மையை முன்வைக்கும் அரசியல்வாதிகள் அரசியல்தளத்தில் மேலதிக முக்கியத்துவம் பெறவும் ஊழலரசியல்வாதிகள் பின்னடைவுபெறவும் அது காரணமாகியது.

ஊழலை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்ற செய்தியை அரசியல்வாதிகளிடையே கொண்டுசென்றது அண்ணா ஹசாரேவின் இயக்கம். அத்தகைய இயக்கங்கள் தொடர்ந்து நாடெங்கும் நிகழுமென்றால் அது அரசியல்வாதிகளை அச்சுறுத்தும். ஊழலைக் கட்டுப்படுத்தும் புதிய அதிகார விசை ஒன்றை அரசியலில் உருவாக்கும். பங்கீட்டு அரசியல் உடனடியாக நின்றுவிடாது. உயர்மட்ட ஊழலும் இருக்கும். ஆனால் இன்றுபோல அனைத்து நலப்பணிகளிலும் ஊழல் இருக்காது. அனைத்து விதிகளையும் ஊழல் ரத்து செய்யாது. அதுவே பிரமிப்பூட்டும் மாற்றமாக அமையும்

ஐரோப்பிய , அமெரிக்க அரசுகளெல்லாமே பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஊழலில் மூழ்கித்தான் கிடந்தன. அங்கே மாற்றத்தைக் கொண்டுவந்தவை ஊழலுக்கெதிராக மக்களின் மனநிலையை கட்டமைத்த வலுவான கருத்தியல் இயக்கங்கள்தான். மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்காவில் உருவாகிவந்த முன்னகர்வு காலகட்டம் [Progressive Era] 1890 முதல் 1920 வரை கால்நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த இக்காலகட்டத்தில் பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக ஏராளமான இயக்கங்கள் உருவாகி வந்தன. ஊழல்வாதிகள் தொடர்ந்து மக்கள்முன் வெளிப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாகவே அமெரிக்காவில் ஊழலுக்கெதிரான மனநிலை மக்கள் நடுவே உருவானது. இன்றும் அமெரிக்காவில் அடிப்படைத்தளங்களில் ஊழல் இல்லாமலிருப்பது அவ்வியக்கத்தால்தான். அதற்கிணையான ஒன்றை இந்தியாவிலும் உண்டுபண்ணுவதே ஊழலுக்கெதிரான உண்மையான நடவடிக்கையாக இருக்கமுடியும்.

அமெரிக்க முன்னகர்வு அலை 1912 ஒரு கூட்டம்

அதற்காக எல்லாவிதமான அமைப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நீதிமன்றங்கள், இப்போது போராடிப்பெறப்பட்டிருக்கும் லோக்பால் போன்ற அமைப்புகள், தகவலறியும் உரிமைச்சட்டங்கள் எல்லாவற்றையும். உதாரணமாகச் சொல்கிறேன், இந்தியாவில் ஒரு சாலைபோடப்படுகிறதென்றால் அதன் 80 சதவீதம் ஊழலுக்குச் சென்றுவிடுகிறது. அந்த பணத்தை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று அச்சாலையை ஒரு பொதுவான பொறியாளர் பரிசோதனைசெய்யவேண்டும் என்று ஏன் கோரக்கூடாது? நாடெங்கும் அவ்வளவு திட்டங்களிலும் அவ்வாறு தரத்தை சோதனையிடும் ஒரு மக்களமைப்பை ஏன் உருவாக்கமுடியாது? அது ஊழலைக் கட்டுப்படுத்துமளவுக்கு எந்த அரசியல் கட்சி செயல்படமுடியும்?

மிகச்சிறந்த உதாரணம், அமெரிக்காவில் ரால்ஃப் நாடர் உருவாக்கிய நுகர்வோர் இயக்கம். அமெரிக்காவின் கழுத்தறுப்பு வணிகத்தைக் கட்டுப்படுத்தும் வலுவான அதிகாரவிசையாக அது உருவாகி வந்தது . அரசியலதிகாரம் மூலம் அல்ல. நீதிமன்றங்கள் போன்ற ஏற்கனவே இருக்கும் அமைப்புகளை கையில் எடுத்துக்கொள்வதன் வழியாகவே , மக்களியக்கம் வழியாகவே அது நிகழ்ந்தது. உலகமெங்குமுள்ள பசுமை இயக்கங்களின் பணியும் அத்தகையதே.

ரால்ஃப் நாடர்

இந்தியாவில் இன்று தேவையாக இருப்பவை ஊழலுக்கெதிரான அத்தகைய ஏராளமான சட்டபூர்வ,ஜனநாயக, மக்கள் அமைப்புகள், அரசியலுக்கு அப்பாற்பட்டு கருத்தியல்தளத்தில் செயல்படும் அதிகாரவிசைகள். அத்தகைய செயல்பாடுகளைச் செய்யும் தனிமனிதர்கள் இன்று ஏராளமாக உருவாகியிருக்கிறார்கள். கேரளத்தில் நவாப் ராஜேந்திரன் தமிழகத்தில் டிராஃபிக் ராமசாமி போன்ற ‘எக்ஸெண்டிரிக்’ தன்மை கொண்ட தனிமனிதர்கள் வெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் வழியாகவே அரசமைப்புகளின் ஊழலை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். நாடெங்கும் அத்தகைய பலநூறு செயல்பாட்டாளர்களைச் சுட்டிக்காட்டமுடியும். தனிமனிதர்கள் என்பதனாலேயே அவர்கள் பாதுகாப்பற்றவர்கள், நிதிவல்லமையற்றவர்கள். அவர்களை இணைக்கும் பெரிய இயக்கங்கள் அவர்களின் விசையை பலமடங்கு பெருக்கமுடியும். தனிமனிதராக அண்ணா ஹசாரே இன்று லோக்பால் அமைப்பை வென்றெடுத்திருக்கிறார். அந்தவெற்றியை மேலும் மேலும் முன்னெடுக்கமுடியும்

அரசியல்கட்சியும் தேர்தல்வெற்றியும் அரசைக்கைப்பற்றுவதும் அல்ல ஊழலை எதிர்ப்பதற்கான வழி. ஊழலை தன் செயல்விசையாகக் கொண்டிருக்கும் அரசமைக்கு நேர்எதிரான அமைப்புகளை உருவாக்குவதுதான். சமூகத்தின்மேலும் அரசின்மேலும் அந்த விசையைச் செலுத்துவதுதான். சமூகத்தையும் அரசையும் அவ்வாறு ஊழல்மயமாக்கியிருக்கும் காரணிகள் என்ன என்ற எந்த அறிதலும் இல்லாமல் அவற்றின் ஒருபகுதியாக மாறுவது அல்ல. அப்படி மாறிய பல அரசுகள் இந்திய சமகாலவரலாற்றில் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் அஸாமில் எண்பதுகளில் உருவான அஸாம் கணபரிஷத் இயக்கம். அதை வழிநடத்தியவர்கள் மாணவர்கள். அஸாமின் தன்னுரிமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் போராடிய ஒரு மக்களியக்கம் அது. அது அரசியல்கட்சியாக ஆகி ஆட்சியைப்பிடித்தது. பிரஃபுல்லகுமார் மகந்தா தலைமையில் அரசமைத்தது. அதிகாரப்பங்கீட்டுக்கான கருவியாக மாறி ஊழலில் மூழ்கி முகமிழந்து அழிந்தது. அதற்கெதிரான அடுத்த மக்களியக்கம் அங்கே தேவைப்பட்டது

இந்தியாவுக்குச் சொல்லபபடும் இந்த ஒவ்வொரு வார்த்தையும் ஏதேனும்வகையில் ஜனநாயகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மூன்றாமுலக நாட்டுக்கும் பொருந்துவதாகும். இலங்கைக்கும். சாரைப்பாம்பைத் தின்னும் ஊரில் நடுக்கண்டம் எனக்கு என கேட்டுவாங்கிச் சாப்பிட்டால்தான் பிழைக்கமுடியும் என்பது ஒரு மலையாளப்பழமொழி. அதிகார அரசியலில் ஈடுபடுபவர்கள் உச்சகட்ட அதிகாரத்தை நோக்கி மட்டுமே செல்லமுடியும். நடுக்கண்டம் தின்பவர்கள் ஒருபோதும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. விலகிநிற்பவர்களே அதைச்செய்யமுடியும்


[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் எழுதிவரும் தொடர். வீரகேசரி நாளிதழின் வெளியீடு ஜனவரி 15 அன்று வெளியான இதழில் பிரசுரமான கட்டுரை]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
04 Feb 03:51

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா

by jeyamohan

அலக்ஸாண்டர், ஜோ, இபா

பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல்.

இந்திரா பார்த்தசாரதி கொற்கையைப்பற்றிய ஓரு சிறந்த உரையை ஆற்றினார். அதன் அமைப்பும் மனிதர்கள் நிறைந்துவழியும் பெரும் வாழ்க்கைப்பரப்பும் போரும் அமைதியும் நாவலை நினைவூட்டுகிறது என்றார். போரும் அமைதியும் நாவலைப்பற்றி தல்ஸ்தோய் அது ஒரு நாவல் அல்ல, கதை அல்ல, ஆவணப்படுத்தப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் என்றார், அதையே கொற்கைக்கும் சொல்வேன் என்றார் இ.பா.

நான் தமிழ் வாழ்க்கை என்பது எவ்வாறு எழுத்தால் திரட்டி உருவாக்கப்படுகிறது என்று விவரித்தேன். அந்த எழுத்துருவ தமிழ் வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிச்சேர்ப்பதே எழுத்தாளர்கள் செய்வது. ஜோ தன் மக்களின் வாழ்க்கையை எழுதியதனூடாக தமிழ் வாழ்க்கையை, வரலாற்றை முழுமையாக்க பங்களிப்பாற்றியிருக்கிறார் என்றேன்.

ஜோ விருதுபெற்ற செய்தி டிசம்பர் 22 அன்று, விஷ்ணுபுரம் விருதளிக்கும் கூட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது வந்தது. உடனடியாக முதல் பாராட்டுக்கூட்டத்தை நாங்கள் நடத்த திட்டமிட்டோம். ஜோவிடம் பேசி அனுமதி பெற்று அரங்கும் பதிவுசெய்தோம். பேச்சாளர்களையும் அழைத்தோம். ஆனால் ஜோ பின்பு நண்பர்களிடம் விழாவை நடத்தவேண்டாம் என்று கோரினார். நான் அழைத்தமையால் மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தயக்கமாக இருப்பதாகவும் சொன்னார்.

’பெரும்படைப்பாளிகள் இருக்க இவ்விருது எனக்குக் கிடைத்துள்ளது. அதை நான் கொண்டாடுவது அடக்கமின்மையாகவே ஆகும். என் சமுதாயத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்பதனால் நான் இதை ஏற்கும்போதே இதை தனிப்பட்ட வெற்றியாக எண்ணவோ கொண்டாடவோ விரும்பவில்லை’ என்றார் ஜோ. அந்த அடக்கம் தமிழில் மிக அபூர்வமான ஒன்று என்று எனக்கும் பட்டது. தன் சமூகத்தால் எடுக்கப்பட்ட விழாவிலும் ஜோ அதையே சொன்னார்.

நிறைவூட்டும் ஒரு விழா. விருதுகள் பெரும்பாலும் ஓர் அங்கீகாரம் என்பதற்குமேல் பொருள்பெறுவதில்லை. அபூர்வமாகவே அவற்றுக்கு இவ்வளவு சமூகம் சார்ந்த அழுத்தம் உருவாகிறது.



மேலும்படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

04 Feb 03:51

Produce inexpensive, good translations of Burke, Locke and other thinkers, and spread the texts widely

by Bala Subra
Walter Russell Mead: A Strategy to Counter Democracy's Global Retreat - WSJ.com:



Global democracy is crumbling. Translating and distributing the writings of political philosophers would give more power to the people
04 Feb 03:51

பதினைந்தாயிரம் ரூபாயும் ஓர் அப்பாவி கோயிந்தும்

by என். சொக்கன்

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொலைபேசி அழைப்பு. நண்பர் ஒருவர், ட்விட்டரில் பழக்கம், ஓரிருமுறை சந்தித்துள்ளேன், பெங்களூர்க்காரர்தான்.

ஃபோனை எடுத்தவுடன், ’அரவிந்தன் (பொது நண்பர்) ஊர்ல இல்லைங்களா?’ என்றார்.

‘ஆமாங்க, அவர் இப்போ வெளிநாட்டுல இருக்கார்’ என்றேன்.

கொஞ்சம் தயங்கி, ‘ஒரு விஷயம் கேட்டாத் தப்பா நினைக்கமாட்டீங்களே’ என்றார்.

‘சொல்லுங்க.’

‘அவசரமா பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்.’

நான் பேசுவதற்குள் அவரே, ‘எனக்கில்லை, என் மனைவிக்கு’ என்றார். ‘இப்ப நான் ஊர்ல இல்லை, அவங்களுக்குப் பணம் Withdraw செஞ்சு தரமுடியலை,அதான்.’

’நீங்க அவங்க அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சா, அவங்க எடுத்துக்குவாங்க, நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்ததும் உங்களுக்குப் பணம் தந்துடறேன்.’

’அதை நீங்களே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமே’ என்று கேட்டிருக்கலாம். கணவன் ஊரில் இல்லாதபோது மனைவிக்குப் பணத்தேவை என்ற செண்டிமெண்ட், விழுந்தேன்.

தவிர, நண்பர் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், ஃபாரினில் வேலை பார்த்துத் திரும்பியவர், வெற்றுப் பத்தாயிரமா ஏமாற்றப்போகிறார்?

ஆகவே, அவரிடம் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கொண்டேன். அனுப்ப முயன்றபோது மறுபடி ஃபோன், ‘சார், பதினஞ்சாயிரமா அனுப்பமுடியுமா?’

அப்போதாவது சுதாரித்திருக்கலாம். நாந்தான் வள்ளலாச்சே, சரி என்று ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘பணம் வந்துடுச்சு சார், ரொம்ப தேங்க்ஸ், நாலு நாள்ல உங்க பணத்தை நேர்ல பார்த்துக் கொடுத்துடறேன்.’

அவ்வளவுதான். அதோடு அவர் என்னை அழைப்பது நின்றது. நானும் அதை மறந்துவிட்டேன். சில நாள் கழித்து ஏதோ சமயத்தில் ஞாபகம் வர, ஃபோன் செய்தேன்.

’பிஸியா இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடறேன்’ என்று வைத்தார். அதுதான் அவர் குரலைக் கேட்ட கடைசித் தருணம்.

அதன்பிறகு இன்றுவரை குறைந்தது 50 முறை அவருடைய எண்ணை அழைத்திருப்பேன். பதில் இல்லை, எடுக்கமாட்டார்.

’வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமே’ என்றார் மனைவி.

லாம்.ஆனால் அவர் இப்படி மௌனமாக இருக்க வேறு நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.

அது ஆச்சு மூன்று மாதங்கள், பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை, நானும் வேறு எண்ணிலிருந்து (பிடிவாதமாக) அழைக்கவில்லை.

இதுபற்றி ஒருநாள் நண்பர் நாகராஜனிடம் புலம்பினேன். ‘நீங்க லூஸா?’ என்றார். ‘லட்டுமாதிரி அக்கவுண்ட் நம்பர் இருக்கு, அதை வெச்சு அட்ரஸைப் பிடிங்க. நடவடிக்கை எடுங்க!’

செய்யலாம். ஆனால் இப்போதும் நான் கிறுக்கன்மாதிரி அவர் என் ஃபோன் காலை எடுத்துவிடுவார் என்றே நம்பினேன்.

ஆகவே, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுவரை.

என் கட்டுரை ஒன்றுக்குத் தரவேண்டிய ரூ 4000ஐ ஏமாற்றினார் ஒருவர். அவருக்கு (நீண்ட காத்திருப்புக்குப்பின்) இன்று ஒரு சூடான மெயில் எழுதினேன்.

அப்போது, அவர் ஞாபகம் வந்தது. ஃபாரினில் வேலை செய்தவர், இங்கேயும் நல்ல நிறுவனத்தில் வேலை. 15000 ரூபாய்க்காக ஓடி ஒளியும்படி என்ன பிரச்னையோ!

பதினைந்தாயிரம் ரூ எனக்கு அற்பக் காசு இல்லை, மூலையில் உட்கார்ந்து அழும் அளவு காசும் இல்லை.

நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது அசட்டுத்தனம் என்றாலும் நியாயம் அதுதானே?

ஆகவே, இதுகுறித்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. (என் மனைவிக்குதான் ஏக டென்ஷன்).

இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன். இனி யாருக்கும் கடன் தரக்கூடாது என்ற பாடத்துக்கான கட்டணம் ரூ 15000!

***

என். சொக்கன் …

03 02 2014


Filed under: (Auto)Biography, Bangalore, Change, Characters, Money, People, Pulambal
04 Feb 03:49

ஈழம் - ஒரு முஸ்லிம் கதையாடல்

by மிதக்கும்வெளி
(சும்மா இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த கட்டுரை. ஒரு முஸ்லீமின் பார்வையிலிருந்து தமிழ்ப்போராளி இயக்கங்கள் குறித்தும் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் குறித்தும் எழுதப்பட்ட பதிவு. ஒரு அரசியல் கட்டுரையின் இறுக்கம் இல்லாமல் ஒரு புனைவின் சுவாரசியத்தோடும் வாழ்வியல் பதிவுகளோடும் இருந்த இந்த பதிவு எனக்குப் பிடித்திருந்தது. வாசித்துத்தான் பாருங்களேன்....)

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. - யஹியா வாஸித் -




புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.
1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.




இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.



அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7.15 க்கு தமிழ் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு. ( இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம் )

நன்றி : http://www.muthalmanithan.com/2009/11/blog-post_05.html
உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.
04 Feb 03:49

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 35

by jeyamohan

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 1 ]

கங்காத்வாரத்தின் காட்டில் வந்து தங்கும் பயணிகளின் மிச்சிலை உண்டுவாழும் தெருப்பன்றி ஒன்று புதர்க்காட்டுக்குள் நான்கு குட்டிகளைப்போட்டது. அவற்றில் மூன்றுகுட்டிகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றன. எஞ்சிய குட்டியை அது புதரிடுக்கில் குழிதோண்டி புதைத்துவைத்தது. அக்குழிக்கு சற்று அப்பால் புதர்மூடிக்கிடந்த கல்மண்டபத்தில் கைவிடப்பட்டு மனம்கலங்கிய பெண் ஒருத்தி தன் குழந்தையுடன் தங்கியிருந்தாள். இடையில் ஒரு குழந்தை இருப்பதை அவள் ஆன்மா அறியவில்லை. அவள் உடலே அக்குழந்தையை தூக்கிக்கொண்டது, முலையூட்டியது. எந்நேரமும் கலங்கிவழிந்த கண்களுடன் வாயிலிருந்து ஓயாமல் உதிரும் சொற்களுடன் அவள் கங்காத்வாரத்தில் அலைந்தாள். கையில் கிடைப்பவற்றை எல்லாம் அள்ளித்தின்றாள். இரவில் அந்த மண்டபத்தின் வெம்மையான புழுதியில் வந்து சுருண்டுகொண்டாள். அவள் உடலின் ஓர் உறுப்புபோல பெரிய கண்கள் கொண்ட பெண்குழந்தை அவளை தன் உயிர்ச்சக்தியால் கவ்விக்கொண்டு அமர்ந்திருந்தது.

ஒருநாள் காலையில் அவள் எழவில்லை. முந்தையநாள் அவள் கால்வழியாகச் சென்ற நாகம் அவள் கட்டைவிரலின் ஆட்டத்தை பிழையாகப்புரிந்துகொண்டு கவ்விச்சென்றிருந்தது. நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. பேன்கள் குருதி வாசனைதேடியதுபோல தானும் தன் முதல்விசையால் பாலுக்காகத்தேடியது. புதருக்குள் கிடந்து தன் ஒற்றைக்குட்டிக்கு பாலூட்டிக்கொண்டிருந்த தாய்ப்பன்றியை கண்டுகொண்டது. தவழ்ந்து சென்று அந்தமுலையை தானும் கவ்வி உண்ணத் தொடங்கியது. முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது.

கண் திறக்காத அக்குட்டியுடன் சேர்ந்து சுருண்டுகொண்டு குழந்தை தூங்கியதும் பன்றி தன் உணவுக்காகக் கிளம்பியது. பசித்து குரலெழுப்பிய பன்றிக்குட்டியுடன் சேர்ந்து அதேபோல குரல் எழுப்பியபடி குழந்தை காத்திருந்தது. பன்றி திரும்பிவந்ததும் அக்குட்டியுடன் சேர்ந்து முட்டிமோதி முலையுண்டபின் அன்னையின் அடிவயிற்று வெம்மையில் ஒண்டிக்கொண்டு தூங்கியது.

மூன்றுமாதம் பன்றி குழந்தைக்கு உணவூட்டியது. பெற்றகுழவியை அது துரத்திவிட்டபின்னரும் கூட மனிதக்குழந்தைக்குக் கனிந்தபடியே இருந்தது. பின்பு அதன் ஊற்று வற்றியது. பசித்த குழந்தை எழுந்தும் விழுந்தும் தன் சகோதரன் சென்ற பாதையில் சென்றது. திசையறியாமல் திகைத்து அழுதபடி சென்றபோது தன் அன்னை கிடந்ததுபோன்று படுத்திருந்த ஒரு பித்தியை கண்டுகொண்டது. அவள் தன் நெஞ்சில் எரிந்த சிதையுடன் துயிலற்று அலைந்து ஒரு கட்டத்தில் உடல் களைத்து அமர்ந்து சரிந்து அவ்வண்ணமே தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே சென்றகுழந்தை தானறிந்தவிதத்தில் அவளருகே படுத்து இடக்காலை அவள்மேல் போட்டு அணைத்துக்கொண்டு அவள் முலைக்கண்ணை தேடிக்கவ்வி சுவைக்கத் தொடங்கியது.

பித்தி நீலநீர் விரிந்த நீர்வெளியைநோக்கி எழுந்த அரண்மனையின் செம்பட்டுத்திரை நெளியும் உப்பரிகையில் நின்றிருந்தாள். மணிமுடிசூடி, பட்டும் நவமணிகளும் அணிந்து, ஒளிமின்னும் விழிகளுடன் நதியைப்பார்த்தாள். நீரலைகளைக் கொஞ்சிக்கொண்டிருந்த பறவைகளைக் கலைத்தபடி நூறு அணிநாவாய்கள் கரைநோக்கி வந்தன. இளஞ்செந்நிறப் பாய்கள் விரித்த நாவாய்வரிசை நீரில் மிதந்துவரும் செந்தாமரைக்கூட்டம் எனத் தோன்றியது. முன்னால் வந்த படகில் சூதர்கள் இசைத்த மங்கல இசையும் பின்னால் வந்த படகில் ஒலித்த பெருமுழவொலியும் இணைந்து அரண்மனை சுவர்களை விம்மச்செய்தன.

படகுவரிசையை எதிர்நோக்கிச் சென்ற அவள் அரண்மனைக்குழுவினர் நதிக்காற்றில் உப்பி எழுந்த செம்பட்டுப் பாவட்டங்களும் சிறகடித்த செம்பதாகைகளும் ஏந்தியிருந்தனர். வாழ்த்தொலிகள் முழங்க, மங்கலத்தானியங்களும் மலர்களும் பொழிய, இசையால் அள்ளி இறக்கப்படுபவனைப்போல நெடிய நிமிர்வுடனும் கலைந்து பெருந்தோளில் விழுந்த குழல்களுடனும் தாடியுடனும் அவள் தேவன் வந்திறங்கினான். படிகளில் ஏறி அவள் அரண்மனைக்குள் புகுந்தான்.

வெண்பட்டுவிதானம் விரிந்த பந்தலில் அவள் அவனுக்கு மாலையிட்டாள். நிலா எழுந்த சாளரம் கொண்ட அறையில் அவனுடன் இருந்தாள். யானையை அள்ளிஓடும் வல்லமை கொண்ட உள்ளோட்டங்களுடன் அசையாது நிற்கும் பாவனை காட்டும் பெருநதியில் நீந்தித்திளைப்பவளாக அவனை அறிந்தாள். அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள். முலைசுரந்து வழிகையில் மீண்டும் சாளரவிளிம்பில் நின்று அவன் வந்திறங்குவதைக் கண்டாள். மீண்டும் மீண்டும் அவனை அடைந்தாள்.

கண்விழித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கி எறிந்தாள் பித்தி. அது மல்லாந்து மண்ணில் விழுந்து கரிய இதழ்கள விரித்துக்கொண்டு கைகால்களை அசைத்து வீரிட்டழுதது. உடல்நடுங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள்.

அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். வணிகரும் ஆயரும் வேடரும் வேளிரும் கூடிய அங்காடிகளின் நடுவே சென்று வெற்றுடலுடன் நின்று இருகைகளையும் தூக்கி மொழியற்ற மூர்க்கத்துடன் கூச்சலிட்டாள். வீரர் கூடிய சதுக்கங்களில் சென்று நின்று அவள் ஆர்ப்பரித்தபோது அந்த வேகத்தைக்கண்டே காவலர் வேல்தாழ்த்தி விலகி நின்றனர்.

அவள் இடையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தது குழந்தை. பின்னர் அது நடக்கத்தொடங்கியது. பிறமனிதரைப்பார்த்து தானும் ஒரு மனிதப்பிறவி என உணரத்தொடங்கியது. குப்பைகளில் இருந்து ஆடைகளை எடுத்து அணிந்தது. கண்ணில் படும் ஒவ்வொருவரிடமும் கையேந்தியது. உலகமென்பதே வந்துவிழும் பொருட்களுக்கு அப்பால் தெரிந்த கண்களும் கால்களும் கைகளும் முகச்சுளிப்புகளுமாக இருந்தது அதற்கு. வணிகர்கள் அதற்கு கைக்குச்சிக்கிய எதையாவது விட்டெறிந்தனர். உலர்ந்த அப்பத்துண்டுகள், வற்றலாக்கிய இறைச்சித்துண்டுகள், மீன்கள். எது கையில் வந்தாலும் அக்கணமே ஓடி தன் அன்னையை அடைந்து அவள் முன் நீட்டி நின்றாள். அவள் வாங்கி உண்டு எஞ்சியதையே அவள் உண்டாள்.

அவள் தலையின் சடைமுடி நீண்டு கனத்து வேர்க்கொத்து போல தொங்கியது. அவளிடம் பேசிய வணிகர்கள் ’உன் பெயரென்ன?’ என்று கேட்டபோது அவள் பிரமித்த கண்களால் பார்த்தாள். அவர்களில் ஒருவர் எப்போதோ அவளிடம் “உன்னைவிட நீளமாக இருக்கிறது உன் சடை. சடைச்சி என உன்னை அழைக்கிறேன்” என்றார். அவ்வாறு சிகண்டினி என்ற பெயர் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எவர் கேட்டாலும் அவள் தன் பெயரை சிகண்டினி என்று சொன்னாள். அவள் சொல்லிய ஒரே சொல்லும் அதுவாகவே இருந்தது.

அவளிடம் மொழி இருக்கவில்லை. அவளறிந்த மொழி அவள் உதட்டுக்கு வரவேயில்லை. தன்னுள் தொலைந்துவிட்டிருந்த அவள் அன்னை சிகண்டினியிடம் ஒரு சொல்கூடப் பேசியதில்லை. பகலும் இரவும் கால் மடித்து அமர்ந்து தோளிலும் முதுகிலும் முலைகள் மேலும் கருஞ்சடைகள் தொங்க, சிவந்த கண்கள் கனன்று எரிய, கரிய பற்களைக் கடித்தபடி, நரம்புகள் தெறிக்கும்படி கைகளை இறுக முறுக்கிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடியவளாக அவள் உறுமிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல.

ஏதோ ஒரு தருணத்தில் அவள் எழுந்து எவரையோ கொல்லப்போகிறவள் என, எங்கோ ஆழ்குழியில் விழப்போகிறவள் என, ஓலமிட்டபடி ஓடுவாள். அன்னை ஆடிக்கொண்டிருக்கையில் சிகண்டினி அருகே இயல்பாக அமர்ந்திருப்பாள். அவள் ஓடுகையில் சிகண்டினியும் பின்னால் ஓடுவாள். ஏதேனும் ஒரிடத்தில் திகைத்து பதைத்து நின்று பின் இரு கைகளையும் தூக்கி அன்னை ஓலமிடுவாள். கண்கள் கலங்கி வழிய மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி அலறுவாள். சிகண்டினி அன்னையைக் காண ஆரம்பித்தநாள் முதல் அவள் அந்த மார்பை அறைந்துகொண்டிருந்தாள். அவ்வளவு அறைந்தும் உடையாததாக எது உள்ளே இருக்கிறது என்று சிகண்டினி வியந்துகொண்டாள்.

அன்னையுடன் குப்பைகள் சேரும் இருண்ட சந்துகளிலும் ஈரச்சதுப்புகளிலும் சிகண்டினி தங்கினாள். அங்கே மதம்பரவிய சிறுகண்களுடன் வரும் பன்றிகளுடன் தன்னால் உரையாடமுடிவதை அவள் கண்டுகொண்டாள். அவற்றின் சொற்கள் அவளுக்குப்புரிந்தன. அவள் சொல்லும் சிறு ஒலியையும் அவை அறிந்துகொண்டன. அவள் தன் அன்னையுடன் கிடக்கையில் அப்பால் படுத்திருக்கும் கரியபெரும்பன்றிகளுடன் பேசிக்கொண்டிருப்பாள். பன்றியிடமிருந்து வலிமையே மிகத்தெளிவான மொழி என சிகண்டினி கற்றுக்கொண்டாள். கங்காத்வாரத்தில் அவள் சென்றுகொண்டிருக்கையில் அவள் உடல் தன்மீது பட்டதனால் சினம் கொண்ட ஒரு வீரன் தன் வேலைத்தூக்கியபோது தலையைச் சற்று தாழ்த்தி மெல்லிய உறுமலுடன் அவள் முன்னகர்ந்தபோது அவன் அச்சத்துடன் பின்னகர்ந்தான்.

எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். சிறிய முனகலுடன் அவள் கடைவீதியில் சென்று நின்றால் அனைவரும் அஞ்சி வழிவிட அவளைச்சுற்றி வெற்றிடம் பிறந்து வந்தது. ஒருகாலை அவள் மெல்லத்தேய்த்து தலையைத் தாழ்த்தினால் எந்த ஆயுதமும் அவளை எதிர்கொள்ளச் சித்தமாகவில்லை.

வராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன.

VENMURASU_EPI_35_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கங்கைக்கரையில் நடந்து காசி, காசியிலிருந்து மீண்டும் கங்காத்வாரம், அங்கிருந்து மீண்டும் காசி என அன்னை அலைந்துகொண்டிருந்தாள். காசியின் நெரிசல்மிக்க தெருக்களிலும் படித்துறையின் மனிதக் கொப்பளிப்பிலும் அனைவரையும் சிதறடித்தபடி ஓடும் அவளை அடையாளம் வைத்துக்கொண்டு சிகண்டினியும் பின்னால் ஓடினாள். மிரண்ட பசு ஒன்று அன்னையை தன் கனத்த குறுங்கொம்புகளால் குத்தி தூக்கித்தள்ளியபோது உறுமியபடி வந்து அப்பசுவை தலையாலேயே முட்டிச் சரித்து விழச்செய்து துரத்தினாள். பாதையோரம் அன்னையை இழுத்துச்சென்று போட்டு நீரும் உணவும் கொடுத்து அவள் எழுவது வரை அவளருகே துயிலாமல் மூன்றுநாட்கள் அமர்ந்திருந்தாள்.

காசியின் அன்னசாலைகள் சிகண்டினிக்காகத் திறந்துகொண்டன. உணவுக்குவைகளை அவள் திமிர்குலுங்கும் நடையுடன் அணுகியபோது அவள் விரும்புவதையெல்லாம் அள்ளிப்பரப்பிவிட்டு விலகிக்கொண்டனர் சேவகர்கள். அவள் அனைத்தையும் அன்னைமுன் படைத்து உண்டாள். இரவில் கங்கைநீரில் குதித்து அன்னை நீந்தி நீரோட்டத்தில் செல்கையில் எதையும் சிந்திக்காமல் சிகண்டினியும் குதித்தாள். சிந்திக்காததனாலேயே அவளால் நீந்த முடிந்தது. இரவெல்லாம் நீரில் மூழ்கித்துழாவும் அவளருகே மிதந்தபின் அவள் கரையேறியதும் சிகண்டினியும் வந்து சேர்ந்தாள். மணிகர்ணிகா கட்டத்தில் எரியும் சிதைகள் அருகே அன்னை குளிர்காய்ந்தபோது அந்த நெருப்பை அவளும் அறிந்தாள்.

பேரன்னசாலையின் பின்பக்கம் அன்னையும் அவளும் உண்ணும்போது முன்பக்கம் அரண்மனைச் சேவகர்கள் வந்து குறுமுரசறைவித்து அன்றிலிருந்து பதினைந்துநாள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என அறிவித்தனர். நகரத்தெருக்களில் அலங்கரித்துக்கொண்ட பெண்களும் குடிவெறியில் கண்சிவந்த ஆண்களும் வண்டிகளில் ஏறி குதிரைகளை வேகப்படுத்தி கூச்சலிட்டபடி சென்றனர். படகுகளில் பலவண்ணக் கொடிகளுடன் முழவும் கிணையும் பறையும் முழக்கியபடி நடனமிட்டுச்சென்றனர் கிராமத்தினர். வண்ணச்சுண்ணங்களை உயர்ந்த மாளிகைகள் மீதிருந்து அள்ளி கீழே செல்பவர்கள் மேல் பொழிந்தனர். சிரிக்கும் பற்களின், நடனமிடும் கால்களின், சுழலும் கைகளின், வண்ணங்களின் அலையடிப்பின் பெருநகரம் ஆயிற்று காசி.

நெய்கலந்த இனிப்பும் ஊன்சோறும் மாட்டுவண்டிகளில் மலைமலையாக வந்து இறங்கின. சிகண்டினி எழுந்து சென்று பார்த்துக்கொண்டு நின்றாள். காசிமன்னர் பீமசேனரின் பட்டத்தரசி மறைந்து நீர்க்கடன் நிறைவடைந்துவிட்டதென்றும் அவர் வங்கமன்னனின் இரண்டாவது மகளை மணந்து அவளை அரசியாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசிக்கேட்டாள். வங்கன்மகளின் அழகையும் நூறு ரதங்களிலும் நூறு வண்டிகளிலும் அவள் கொண்டு வந்த சீதனத்தையும்பற்றி மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவளை பேரழகி என்றனர். காசிநகரம் வெற்றியுடனும் செல்வத்துடனும் பொருந்தியது என்றனர். எவரோ எங்கோ மறைந்த பட்டத்தரசியைப்பற்றியும் அவள்பெற்ற மூன்று இளவரசிகளைப்பற்றியும் சில சொற்கள் சொன்னார்கள். ஆனால் நகரமே களிவெறிகொண்டிருந்தபோது அதை எவரும் நின்று கேட்கவில்லை.

இனிப்புகளையும் அப்பங்களையும் பெற்றுக்கொண்டு அவள் தன் அன்னையிடம் வந்தாள். அவளிடம் அவற்றைக்கொடுத்தபோது அனைத்தையும் ஒன்றென பெற்றுக்கொள்ளும் நெருப்பைப்போல அவள் அதையும் வாங்கிக்கொண்டாள். இருண்ட வான்வெளியில் இருந்து வந்து ஓர் மனித உடலில் குடிகொண்ட பிடாரி என ஆடிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தாள். பின்பு இருகைகளையும் தூக்கி அலறியபடி நகரத்துத் தெருக்களில் ஓடி சதுக்கத்தில் நின்று ஓலமிட்டாள். அவள்மேல் செவ்வண்ணப்பொடியைக் கொட்டி உரக்கச்சிரித்தபடி குதிரைகள் இழுத்த ரதங்களில் பாய்ந்து சென்றனர் இளைஞர்கள் சிலர்.

காசியிலிருந்து வழக்கம்போல மீண்டும் கங்காத்வாரம் நோக்கிச் செல்லாமல் கீழ்த்திசை நோக்கி செல்லத்தொடங்கினாள் அன்னை. சிகண்டினி அவளைப் பின் தொடர்ந்துசென்றாள். இம்முறை அன்னையின் வேகமும் கூச்சலும் அதிகரித்திருக்கின்றனவா என்று அவளுக்கு ஐயமாக இருந்தது. ஒவ்வொரு ரதத்தை நோக்கியும் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தாள். ஒவ்வொரு படகை நோக்கியும் கரையில் இருந்து எதையோ எடுத்து வீசினாள். புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். ஒருகட்டத்தில் சிகண்டினி ஓடிச்சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சிகண்டினி பிடித்திருப்பதை அறியாமல் அவள் கைகள் மார்பை அறைந்தன. பித்து மட்டுமே உருவாக்கும் பெருவல்லமையை அக்கைகளில் சிகண்டினி கண்டாள்.

அஸ்தினபுரிக்குச் செல்லும் பெருவாயில்முகம் கங்கைக்கு அப்பால் தெரிந்தது. அன்னை ஒருபோதும் கங்கையைக் கடப்பதில்லை என சிகண்டினி அறிவாள். ஆனால் அன்று அவள் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினாள். சிகண்டினியும் பின் தொடர்ந்தாள். நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். மறுபக்கம் குறுங்காட்டில் ஏறி ஈரம் சொட்ட, அவளை திரும்பிக்கூட பாராமல் அன்னை துறை நோக்கிச் சென்றாள்.

செங்கல்லால் கட்டப்பட்டு வண்ணச்சுதையால் அழகூட்டப்பட்ட விதானவளைவுக்கு மேல் அமுதகலசச்சின்னம் பொறிக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. ரதசாலையில் வரிசையாக அவிழ்த்துப்போடப்பட்ட ரதங்கள் காத்திருக்க அப்பால் குதிரைகள் ஆலமரத்துவேர்களில் கட்டப்பட்டு வாயில் கட்டப்பட்ட கூடைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. செம்மண்சாலை எழுந்து காட்டுக்குள் வளைந்து சென்றது. அதன் வழியாக புழுதிச்சிகை பறக்க ரதங்கள் வந்து நிற்க அவற்றில் இருந்து வணிகர்களும் மறவர்களும் இறங்கி படித்துறைக்கு வந்தனர். அவர்களின் மூட்டைகளைச் சுமந்து படித்துறைக்குக் கொண்டுவந்த ஏவலர்கள் அங்கே கங்கைக்குள் கால்பரப்பி நின்றிருந்த மரத்துறைமீது அவற்றை அடுக்கினர். துறைமேடையை முத்தமிட்டும் விலகியும் கொஞ்சிக்கொண்டிருந்த படகுகளில் ஏவலர் பொதிகளை ஏற்றும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

கரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். கரைகளில் இருந்து ஏவலர் துறைமேடை நோக்கிச் சென்றனர். அன்னை முன்னால் செல்ல மனமே கண்ணாக மாறி சிகண்டினி பின் தொடர்ந்தாள்.

துறைமேடைக்கு மிகவும் தள்ளி ஆலமரத்துவேரில் கட்டப்பட்ட தனிப்படகு ஒன்று நீரால் கரைநோக்கி ஒதுக்கப்பட்டு நின்றிருந்தது. மேலே எழுந்த ஆலமரக்கிளைகளின் சருகுகளும் பழுத்த இலைகளும் உதிர்ந்து பரவி மட்கி அதன் மூங்கில்வளைவுக்கூரை மூடப்பட்டிருந்தது. அதன் தீபமுகத்திலும் சிறுமுற்றத்திலும் எல்லாம் சருகுகள் மட்கியிருக்க அணில்கள் மரம் வழியாக கூரைமேல் தாவி கீழே தொற்றி இறங்கி அச்சருகுப்படலம் மேல் ஓடிவிளையாடின. அப்படகில் நீண்ட தாடியும் பித்து ஒளிரும் கண்களுமாக தோணிக்காரன் அமர்ந்திருந்தான்.

நிருதன் என்னும் அந்தத் தோணிக்காரன் என்றோ ஒருநாள் அங்கே வந்தபின் அந்தத் தோணியிலேயே அமர்ந்துவிட்டான் என்றனர் துறையில் வசித்தவர்கள். அவன் யார் எவன் என்ற எவ்வினாவுக்கும் பதில் சொல்லவில்லை. தோணியின் தீபமுகத்தில் கையில் துடுப்புடன் அமர்ந்தபடி செந்நிறச்சால்வைபோலக்கிடந்த அந்தப்பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எவருக்காகவோ காத்திருப்பதாக நினைத்தனர். நாட்கள் செல்லச்செல்ல அவன் சித்தம் கலைந்துவிட்டது என்றறிந்தனர். சுங்கமேலாளனாகிய சக்ரதரன் அவனுக்கு ஒவ்வொருநாளும் அப்பமும் நீரும் கொண்டுசென்று கொடுத்தான்.

கையில் வருவதை உண்டு கங்கை நீரைக்குடித்து அங்கேயே அவன் இருந்தான். இரவும் பகலும் அந்தச்சாலையை அவன் கண்கள் விழித்து நோக்கிக்கொண்டிருந்தன. உடல் மெலிந்து பாம்புத்தோல் கொண்டு சடைவிழுந்து கண்கள் குகையாகி பேயுருக்கொண்டான். இரவுகளில் தன் சாளரத்தினூடாக அவனைப்பார்த்த சக்ரதரன் இருளில் மின்னும் அவ்விரு விழிகளைக் கண்டு சித்தழிந்து நோக்கிக்கொண்டிருந்தான். முதல்நாள் முதற்கணம் அவன் அக்கண்களில் கண்டு திகைத்த அந்த எதிர்பார்ப்பு கற்சிலையில் செதுக்கப்பட்டதுபோல அப்ப‌டியே இருந்தது.

அன்னை அஸ்தினபுரிக்குச் செல்லும் செம்மண்பாதையை அடைந்து அத்திசை நோக்கி சிலகணங்கள் நின்றபின் திரும்பிநடந்தபோது சிகண்டினி பின்னால் சென்றாள். நெடுந்தொலைவிலேயே அன்னையைக்கண்டு நிருதன் எழுந்து நின்றான். கைகளைக்கூப்பியபடி படகிலிருந்து முதல்முறையாக இறங்கி நிலத்திற்கு வந்து முன்னால் நடந்து வந்தான். அவன் நடப்பதைக்கண்டு பின்னால் துறையிலிருந்த சேவகர்களும் அதிகாரிகளும் பெருவியப்புடன் கூடினர். சிகண்டினி முதல்முறையாக அன்னை ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்வதைக் கண்டாள்.

தன் முன் வந்து நின்ற அன்னையின் முன்னால் மண்ணில் அமர்ந்து அவள் பாதங்களை வணங்கினான் நிருதன். அவள் அவன் முன்னால் ஓங்கி நின்றிருந்தாள். பின்பு மெல்லக்குனிந்து அவன் தலையை தன் கைகளால் தொட்டாள். அவன் உடல் குறுகியது. சிலகணங்களுக்குப்பின் அன்னை ஓலமிட்டபடி புதர்காட்டுக்குள் நடந்தாள். சிகண்டினி அவள் பின்னால் ஓடும்போது தன்பின்னால் நிருதனும் வருவதைக் கண்டாள்.

தொடர்புடைய பதிவுகள்

04 Feb 03:48

வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்

by jeyamohan

1980-களின் இறுதியில் நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது ஒரு பேச்சுப் போட்டிக்கு பள்ளி சார்பில் அனுப்பப்பட்டேன். எனக்கு பேச்சினை எழுதித் தந்த தமிழாசிரியர் “அறிஞர் அண்ணா” வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் எப்படி அவர்களே வியக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் பேசி டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை உணர்ச்சிகரமாக எழுதித் தர, நான் அதை விட உணர்ச்சிகரமாக அதைப் பேசி மாவட்டக் கல்வி அலுவலரிடம் பரிசும் பெற்று வந்தேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, பல வாசிப்புகளுக்குப் பின்னர் தெரிகிறது ஒரு நடக்காத சம்பவத்தை எப்படி தமிழ்நாடே இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது என. எப்படி சாத்தியம் இது? நான் என்னை அவதானித்ததில் ஒன்று உணர்கிறேன். வாசிப்பும், அதனை ஒட்டிய சுய சிந்தனையும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் வரை எனக்கு புனைவையும், வரலாறையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. எனது கல்லூரிக் காலங்களெல்லாம் முடிந்த பிற்பாடுதான் இந்த மெல்லிய கோட்டை பார்க்கும் கண்கள் திறந்தன. அதுவரை புனைவெல்லாம் எனக்கு வரலாறுதான். முதிரா இளமைக் காலத்தில் மிகு புனைவும், வீர வழிபாடும் சரியாகப் பொருந்தும் சரித்திர புருஷர்களே நமக்கு முன்னுதாரணங்கள். வாசிப்பையும், அறிதலையும் அக்கணத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டோமானால் நமது வாழ்க்கை முழுவதற்கும் அவர்களே நாயகர்கள், அவர்கள் குறித்த மிகு புனைவே நமக்கு வரலாறு. அவ்வாறானால் புனைவையும், வரலாறையும் இணைக்கும் எழுத்தின் கடமை என்ன?

தமிழில் நமக்கு மிகுதியும் வரலாறும், புனைவுகளும் தனித்தனியே வாசிக்கக் கிடைக்கின்றன. வரலாற்று பாடப் புத்தகங்களிலும், புனைவுகள் சராசரி படைப்புகளாகவும். இரண்டும் இணைந்து நிற்கும் புள்ளி சார்ந்த படைப்புகள் தமிழில் சற்று குறைவே என்கிறது என் வாசிப்பு. ஏன் புனைவும், வரலாறும் இணைந்து நிற்கும் எழுத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று?

வரலாறு எப்போதும் அறிவியலின் முறைகளைக் கையாளக் கூடியது. உறுதியான ஆதாரங்களும், அழுத்தமான தரவுகளும், நிரூபிக்கப்பட்ட சான்றுகளும், அறுதியான உறுதிப்பாட்டு முறைகளும் கொண்ட அமைப்பாக வரலாறு இருக்கிறது. வரலாறு விடுபடல்களை அனுமதிக்கிறதே தவிர தவறான தகவல்களை வெகு நாட்கள் தன்னிடம் அனுமதிப்பதில்லை. வரலாறு ஒவ்வொரு நாளும் உருவாவது மட்டுமல்ல, தன்னைத் தானே ஒவ்வொரு நாளும் சீர்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறது. தவறான வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொரு தினமும் மறுக்கப்பட்டு வரலாறு தன்னை புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. புனைவோ இத்தகைய நிர்பந்தங்கள் ஏதுமில்லாதது. படைப்பூக்கத்தின் நேர்மை ஒன்றை மட்டுமே கைக்கொண்டு புனைவு எந்த எல்லைகளையும் சென்றடைய முடியும். வரலாறு அதற்கே உரிய காலத்தை எடுத்துக் கொள்ளும்போதோ, அல்லது அதற்கான தரவுகளின் கண்டடைதலுக்கு காத்திருக்கும்போதோ உருவாகும் இடைவெளிகளை புனைவு இட்டு நிரப்பிவிடும். வாசிப்பின் மொழியில் சொல்வதானால் வரலாற்றின் வழியே ஒரு இலக்கியம் சாத்தியமாகிறது. அதே நேரம் புனைவின் வழி வரும் வரலாறு, தகவல்களாக இல்லாமல் வாசிப்பவரை அந்த நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களாகவே உணரச் செய்கிறது. ஒரு கணமேனும் வரலாற்றில் நம்மையும் வாழச் செய்து விடும் வல்லமை புனைவுக்கு உண்டு. இதனாலேயே உலகம் முழுவதும் வரலாறும், புனைவும் இணையும் வரலாற்றுப் புனைவுப் படைப்புகள் பெரும் புகழ் அடைகின்றன. இரண்டின் விகிதாச்சாரங்கள் குறித்த விமர்சனங்களும் அதிகம்.

தமிழில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கவனித்தால் இப்படி வகைப்படுத்தலாம். ஒன்று நமது மரபின் தொடர்ச்சியாகப் பயின்று வரும் புராண, இதிகாசங்களின் மீதான புனைவுப் படைப்புகள். பெரும் கதைக் களஞ்சியமாகத் திகழும் அவற்றின் ஊடுபாவுகளுக்குள் நுழைந்து அச்சிறு இடைவெளிகளில் தனது படைப்பின் தாக்கத்தை ஒரு எழுத்தாளன் காட்டிவிட முடியும். கம்பனில் தொடங்கி இப்போதைய எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்த மரபு தமிழில் உண்டு. இரண்டாம் வகை, நிறுவப்பட்ட வரலாற்று மூலங்களில் இருந்து படைப்பினை புனைய எழுத்தாளன் முயல்வது. அதாவது தரவுகளும், ஆதாரங்களும் கொண்ட ஒரு வரலாற்று நிகழ்வை ஆதாரமாகக் கொண்டு தனது படைப்பை உருவாக்குவது. இந்த முயற்சி எழுத்தாளனுக்கு மிகுந்த சவாலானது. புனைவின் சுதந்திரம் வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்களால் வரையறை செய்யப்படும் என்பது மட்டுமன்றி படைப்பு செல்ல வேண்டிய திசையின் வழிகாட்டியும் வரலாறுதான். இங்கே புனைவின் வழியே படைப்பினைக் கொணர எழுத்தாளனுக்கு வரலாற்றில் இல்லாத மாந்தரை உருவாக்கி படைப்பினுள் நுழைக்கும் சுதந்திரம் உண்டு. ஏனெனில் அதன் வழியேதான் வரலாறும், புனைவும் இணையும் புள்ளி உருவாகி வரலாற்றுப் புனைவிலக்கியப் படைப்பு என்ற ஒன்று சாத்தியமாகிறது.

இரண்டாம் வகை முயற்சிகள் பெரும்பான்மையும் கடும் உழைப்பைக் கோருபவை. ஆதாரங்களும், தரவுகளும் தரும் நிகழ்வின் சட்டகத்திற்குள் ஒரு கதையினை உருவாக்கி இணைக்க வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு. இந்த சவாலை சந்திப்பதில் இரு நிலைகள் இருக்கின்றன. வரலாற்றுப் புனைவிலக்கியம் என்ற நிலைப்பாட்டை கவனமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றை கதைக் களமாக மட்டுமே கொள்ளும் வரலாற்றுக் கதையாடல் என்பது ஒரு நிலை. இங்கு எழுத்தாளருக்கு வழக்கமான புனைவின் முழு சுதந்திரம் கிடைத்து விடுவதோடு மட்டுமல்லாமல் வரலாற்றுப் புனைவு என்கிற கூடுதல் தனி முத்திரையும் கிடைக்கும். அதாவது கதைக்கும், வரலாற்றுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாமல் வரலாறு வெறுமே கதைக்கு கட்டியம் கூற மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வகை எழுத்துகளே தமிழில் வரலாற்றுப் புனைவுகளின் வரிசையில் அதிகம். கல்கி, சாண்டில்யன் தொடங்கி பாலகுமாரன் வரை ஒரு பட்டியல் இட முடியும் இவ்வரிசை எழுத்தாளர்களில். ஆனால் வெகு குறைவான படைப்பாளிகளே இந்த சவாலை வெற்றிகரமாக கையாள முடிந்திருக்கிறது. பொதுவான உதாரணமாகக் கூற வேண்டுமென்றால் கல்கியின் “அலை ஓசை”. தேச விடுதலைப் போராட்டத்தின் பின்புலத்தைக் கொண்டு உருவான இக்கதை தேச விடுதலைப் போராட்ட சம்பவங்களும், அவை நடுத்தர வர்க்க பிராமண குடும்பங்களில் உருவாக்கிய பாதிப்புகளையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டு நெய்யப்பட்டிருந்தது. கல்கியின் இவ்வாறேயான மற்றுமொரு படைப்பு “தியாக பூமி”. ஆனால் அவை இன்று வரலாற்றுப் புனைவு என்று வகைப்படுத்தப்பட்டாலும் உருவாக்கப்படுகையில் அவை சமகால நிகழ்வுகளையே பேசியிருக்கின்றன. காலத்தால் வயதாகி விட்டதால் வரலாற்றுப் புனைவு எனும் அடையாளம் அவற்றுக்கு இயல்பாகவே உருவாகிவிட்டிருக்கிறது.

மெய்யாகப் பார்த்தோமானால் தனது காலத்திற்கு வெகு முன்பு நடந்து வரலாறாக நிலை பெற்றுவிட்ட சம்பவங்களின் இடையே உள்ள நிரப்பப்படாத அல்லது சொல்லப்படாத இடைவெளிகளில் வெளிச்சம் வீசும் வரலாற்றுப் புனைவுகள் வெகு குறைவே. அவ்வகையில் காவல் கோட்டம், புயலிலே ஒரு தோணி போன்றவற்றை சுட்ட முடியும். இந்த வகைப்பாட்டில் உள்ளடங்கக் கூடிய அதே நேரம் இலக்கியப் படைப்பாகவும் முன்னிற்கும் ஒரு படைப்பாகத்தான் ஜெயமோகனின் “வெள்ளையானை” யை சொல்லலாம்.

உலகின் பெரும் பஞ்சங்களில் ஒன்று நமது மாநிலத்தைக் கடந்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கூட முடியவில்லை. அதன் சுவடுகள் கூட மறக்கடிக்கப்பட்டு விட்டன. 2002-இல் கால்டுவெல் குறித்த ஒரு வாசிப்பில்தான் இப்படி ஒரு பஞ்சம் இங்கு நிகழ்ந்ததையே வாசித்தேன். அதுவரை நான் அறிந்ததெல்லாம் பாடநூல்களில் கண்ட “கிரேட் பெங்கால் பேமைன்” தான். தமிழில் தாது வருடப் பஞ்சம் என்று குறிப்பிடப்படும் இது உலகின் மிகப்பெரிய செயற்கைப் பஞ்சம் என்பதை வாசித்தபோது மிகுந்த அதிர்ச்சி. பஞ்ச காலத்தின் மழை அளவு அதற்கு முந்தைய காலங்களின் மழை அளவுக்கு குறைந்ததல்ல. பஞ்ச காலங்களின் போது இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான தானிய ஏற்றுமதி அளவு குறையவே இல்லை என்பதற்கான தரவுகளை (பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் – காலச்சுவடு) காண மனம் வெம்பி விட்டது. இப்படி ஒன்றை உணர 20 வருட வாசிப்பு தேவை என்றால் அப்படி இல்லாதவர்களுக்கு இந்த பஞ்சம் நிகழ்ந்ததே தெரியாமல் போனதில் வியப்பென்ன?

வெள்ளை ஆட்சியாளர்களுக்கு இப்பஞ்சம் உருவாக்கி அளித்த தொழில் வாய்ப்புதான் சோற்றுக்கு வழியின்றி கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்ந்த பெரும் மனித மந்தைகள். அவர்களில் பெரும்பான்மையும் தாழ்த்தப்பட்ட இனம். மொத்தப் பஞ்சத்தின் சுமையும், அழுத்தமும் அந்த இனத்தினராலேயே தாங்கப்பட்டது. அவர்களே அச்சுமையால் நசுங்கி செத்தவர்கள். கரும்புத் தோட்டங்கள், தேயிலைக் காடுகள், ரப்பர் தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், அவுரி வயல்கள் என உலகின் அனைத்து பணப் பயிர்களுக்கும் உரமாகிச் சிதைந்தவர்கள் அவர்கள்தாம். வெள்ளையானை படைப்பின் மையம் இப்பஞ்சமும், உடல் ஆரோக்கியம் சுரண்டப்பட்டு புண்ணுடலுடன் வாழுமாறு பஞ்சத்தால் நிர்பந்திக்கப்பட்ட தலித் மக்களும், அவர்கள் முயற்சித்த முதல் வேலைநிறுத்தமும், அதைச் சிதறடித்த ஆளும் வெள்ளை அதிகாரம் மற்றும் உள்ளூர் சமூக அதிகாரங்களின் கூட்டும்.

ஒரு படைப்பாக வெள்ளையானையைக் காண்போமானால் அதன் கதை அமைப்பு, சொல்லப்பட்ட விதம், காட்சி/நிகழ்வுகளின் சித்தரிப்புகள், கதை மாந்தர்கள், உரையாடல்கள் என ஒவ்வொரு கூறையும் விரிவாகப் பேச முடியும். புனைவின் மொழி ஜெயமோகனுக்கு வசப்பட்டிருக்கிறது என்று சொல்வது தமிழிலக்கிய உலகில் 20 வருடங்களைத் தொடப்போகும் பழைய சொல். அம்மொழியை வெள்ளையானையிலும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் எனலாம். மொத்த படைப்புமே இங்கு பணிபுரிந்து வரும் ஐரிஷ்காரனான எய்டனின் பார்வையில் நகர்கிறது. எய்டனின் பார்வைக்கோ, கவனத்துக்கோ வராத எதுவும் படைப்பில் வாசகனுக்கு நேரடியாகத் தரப்படவில்லை. ஏன் எய்டன் வழியே கதை சொல்லப்பட வேண்டும்? ஜெயமோகனே சொல்வது போல எய்டனின் பார்வையில் கதை நகர்வது அன்றைய வட்டார மொழி வழக்கு கதையில் பயன்படுத்தப்படுவதிலிருந்து ஒரு ஆசுவாசம் தருகிறது. ஆனால் எய்டன் பிரிட்டனுக்காக, மகாராணியாரின் சேவையில் இருந்தாலும் அவன் மனதளவில் தன்னை ஆங்கிலேயனாக உணர்ந்தவனல்லன். அவன் பிரிட்டனை தனது தாய்நாடாகக் கருத முடியாத இடத்திலிருந்து வருகிறவன். அதனால்தான் அவனால் ஒரு சிறு விலக்கத்துடன் இங்கு நடப்பவற்றை கவனிக்க முடிகிறது. அவனது கதாபாத்திரம் எப்போதுமே ஒரு மனவிலக்கம் கொண்டதாகத்தான் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே தனது குடும்பத்துடன், தந்தையுடன் ஒரு அடி விலகியே இருக்கும் அவன் தனது பயிற்சிக்குப் பின்னர் வீடு திரும்பும்போது தனது விலகி நிற்கும் மனோபாவத்தை நேரடியாக உணர்கிறான். ஆனால் அந்த விலக்கம் அவனது சராசரித் தன்மையிலிருந்து அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கு வலிமையானதில்லை. தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அதை மாற்ற முயற்சிக்கும் தருணம் தோறும் அவன் கையறு நிலையில் சென்று நிற்பதை உணரும் பொழுதுகளில் மதுவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு ஷெல்லியைப் புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையில்தான் எய்டன் கதை முழுதும் வருகிறான். ஐஸ் ஹவுஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் பிரச்சினையில் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து பதவி உயர்வு என்ற சமரசத்துடன் தென்காசியில் பதவி ஏற்று கதிரவனின் ஒளிக் கீற்றை பனிக்கட்டியில் பார்த்து, “ஏசுவின் ரத்தத் துளி” யை அருந்தி, கழிவிரக்கத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்வதுடன் முடிந்தே போகிறான் எய்டன். ஒப்பு நோக்க எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் வண்டியிலிருந்து இறங்கி ஓடிய ஆண்ட்ருவே கதை நாயகன்.

காட்சி சித்தரிப்புகள் மிகச் சிறந்த முறையில் அமைந்திருக்கின்றன. ஒரு சித்தரிப்பு வாசகனுக்கு என்ன உணர்த்தும்? நிகழ்விடத்தை, அதன் ஓசைகளை, கால நிலையை, கதாபாத்திரங்களின் செயல்களை, உடல் மொழியை – இதன் வழியே சம்பவத்தின் காட்சி வாசகனுக்கு அகக்கண்ணில் புலனாகும். எழுத்தாளன் தான் கண்டதை வாசகனும் காணவேண்டி சித்தரிப்புகளை உருவாக்குகிறான். ஆனால் எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்களின் சிறப்பே அவர்களது சித்தரிப்பு வெறும் காட்சியை மட்டும் உருவாக்காமல் வேறொன்றையும் வாசகனுக்கு உணர்த்தி விடும் வல்லமைதான். ஜெயமோகனின் சித்தரிப்புகள் இவ்வகையில் முதன்மையானவை. சாதி அமைப்பு இந்தியரிடையே ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதை எப்படிச் சொல்வது? ஒரு காட்சிப்படுத்தலில் இந்த இடம் வாசகனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. எய்டன் ஆணையிட்டால் அவனது காலணியைக் கூட முத்தமிடத் தயாராக இருக்கும் ஒரு கங்காணி; பணமோ, படிப்போ, தொழில் நுட்ப அறிவோ இல்லாத வெறும் மந்தை மேய்ப்பன். ஆனால் எய்டன் எவ்வளவு ஆணையிட்டும் விழுந்து கிடக்கும் தொழிலாளியை நீலமேகம் தொட மறுக்கிறான். மறுப்பை அவன் வெளியிடும் இடம்தான் மிக நுட்பமானது. அசைவற்ற சிலையாக நின்று, கண்களில் கூட எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுகி நிற்கிறான். எய்டனின் கூவல்கள், உறுமல்கள், சீறல்கள், முறைப்புகள் அனைத்துக்கும் அந்த சிலைத் தன்மையே பதில். அந்த உடல்மொழி வழியே கங்காணி சொல்வதென்ன? நீ கொலையே செய்தாலும் மௌனமாய் ஏற்றுக்கொள்வேனேயன்றி அவனைத் தொட மாட்டேன் . திகைத்து நிற்பது எய்டன் மட்டுமல்ல, வாசிக்கும் நானும்தான். சாதி எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை இக்காட்சிச் சித்தரிப்பு நல்ல வாசகனுக்கு அதிர்ச்சியுடன் உணரச் செய்கிறது. இப்படியான சித்தரிப்புகள் நிறையவே காணக் கிடைக்கின்றன படைப்பில்.

எய்டனின் கதாபாத்திரத்தை மட்டுமே கொண்டு படைப்பைப் பார்த்தோமானால் ஒரு இலக்கியப் படைப்பின் வெற்றியாகவே காண முடிகிறது. தனது தவிப்பையும், தீரா மனச் சலனங்களையும் ஷெல்லியின் கவிதை வரிகள் வழியாகக் கடக்க முயலும் ஒருவன், தாங்கவொண்ணா மனப்பாரத்தை மதுவால் மூழ்கடிக்க முயலும் ஒருவன், அவன் மனதின் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சி அற்ற ஆண்டான் மனோபாவத்தை உணர்ந்து அவனை ஒதுக்கித் தள்ளும் காமக் கிழத்தியை அதிகாரத்தால் வெல்ல முடியாத அளவு நீதி உணர்ச்சிக்கு ஆட்படுகிற ஒருவன், காத்தவராயனின் கம்பீரத்தை மனதால் உணர்ந்து பாராட்டும் ஒருவன் – எய்டனின் பாத்திரப்படைப்பு கதையின் போக்கிற்கு ஏற்ப மட்டுமல்ல, வாசிக்கும் நாம் அந்த நிலையில் இருந்தால் எப்படி யோசிப்போமா அப்படி யோசித்து படைக்கப்பட்டிருக்கும் ஒன்று. எய்டன்தான் நாவலின் வாசகனும் கூட. காத்தவராயனை, ஆண்ட்ரூவை சிலாகிக்கும் நாமெல்லாம் எய்டனின் நீட்சியே. தென்காசி விருந்தின் உரையாடல்களே நாம் இப்படியான சமூகக் குற்றத்தின் மீது எப்படி மனசாட்சியை முகமூடியிட்டு வைத்திருக்கிறோம் என்பதற்கான சரியான உதாரணங்கள். அந்த விருந்தின் உரையாடல்களே இப்படைப்பை வெறும் வரலாற்றுப் புதினம் எனும் இடத்திலிருந்து வரலாற்றுப் புனைவிலக்கியம் என்ற இடத்திற்கு நகர்த்துகிறது.

படைப்பில் வரும் நுண்தகவல்கள் மற்றொரு சிறப்பு. அதுவும் இந்த நுண்தகவல்கள் பயன்படுத்தப்படும் இடம் ஜெயமோகனின் அழுத்தமான எழுத்துத் திறனை வெளிப்படுத்துகின்றன. ஸ்டேஜ் கோச் வண்டிகள் பற்றி வரும் வர்ணனைகள் சிறப்பானவை. அனேகமாக தமிழில் ஸ்டேஜ் கோச் குறித்து இவ்வளவு விவரங்கள் முதல்முறையாக பதிவாகி இருக்கின்றன எனலாம். நுண் தகவல்களைப் பயன்படுத்துவதில் வழு நிகழும் வாய்ப்புகள் அதிகம். அது தகவல்களின் நுட்பங்களால் கவரப்படும் எழுத்தாளன் அதனைப் பயன்படுத்த வேண்டி அவற்றை படைப்பில் இட்டு நிரப்ப முயல்வதுதான். இவ்வழுவையும் வெள்ளையானை வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறது எனலாம். ஸ்டேஜ் கோச் வண்டிகள் அனைத்தும் எய்டனால் “கோட்டைக்குள்” மட்டுமே பார்க்கப்படுகிறது. மரிசாவை அவன் கோச்சில் ஏற்றும்போதும் கோச் ஒரு அதிகார அந்தஸ்தின் குறியீடாகத்தான் நிற்கிறது. சுற்றிலும் சோற்றுக்குச் சாகும் கும்பலின் நடுவே எய்டன் பதுங்கி ஒளிந்திருப்பது “கோச்”ச்சுக்குள்தான். மரத்துப் போன மனதுடன் இருக்கும் வழிகாட்டி ஜோசப் கூட சாரட்டின் வெளியே அமர்ந்து வண்டியோட்டி வருபவன்தான். சாரட் வண்டி அதிகாரத்தின், அந்தஸ்தின் குறியீடாக சித்தரிக்கப்பட்டிருப்பது அருமை.

ஒரு இலக்கியப் படைப்பாக வெள்ளையானை பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் சில கேள்விகள் தோன்றாமலில்லை. புனைவையும், வரலாறையும் இணைப்பதன் அபாயம் என்ன? ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை புனைவால் கட்டி எழுப்பும்போது புனைவையும், வரலாறையும் பிரிக்கக்கூடிய கோடு மிக மெல்லியதாவதுதான். அதுவும் ஜெயமோகன் போன்ற புனைவின் மொழி சரளமாக வரக் கூடிய ஒருவரின் எழுத்தில் இந்த எல்லைக் கோடு மங்கி மறைந்தே போகும். அப்படியான சில இடங்கள் இப்படைப்பில் இருக்கின்றன. ஒரு கடுமையான குற்றச்சாட்டு ஒரு கதாபாத்திரத்தின் முன் வைக்கப்படுகிறது. இதில் கதாபாத்திரங்கள் வரலாற்று மாந்தர்கள். ஆனால் குற்றச்சாட்டும், அது வைக்கப்படும் விதமும் புனைவின் மொழியில். இப்போது வாசகனுக்கு வரலாற்றுக் கதாபாத்திரங்களின் மீதான ஆதாரம் புனைவிற்கான நம்பிக்கையையும் கொண்டு வந்து விடும். மொத்த சம்பவமும் வரலாறாகி விடும்.

எந்தக் கதாபாத்திரமும் உண்மையான வரலாற்றுப் பாத்திரங்களின் உண்மைப் பெயர்களில் சுட்டப்படாவிட்டாலும் அக்கதாபாத்திரம் யாரைச் சுட்டுகிறது என்பது வாசகனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. உணர்த்தப்படுவதுதான் இலக்கியம் சொல்லப்படுவதல்ல எனும் வாக்கிலிருந்து பார்த்தோமானால் இந்தக் கூற்று பொருள் தரும். புனைவின் சுதந்திரம் அந்த வரலாற்றுக் கதாபாத்திரத்திற்கு என்ன செய்கிறது என்ற கேள்வி நேர்மையான ஒன்று எனவே நினைக்கிறேன்.

இந்தப் படைப்பின் மீதான ஒரு விமர்சனமாக இதன் தலித் சார்பு நிலை வைக்கப்படுகிறது. உண்மையாகவே பார்த்தோமானால் தலித் மக்கள் சுரண்டப்பட்டதன், வஞ்சிக்கப்பட்டதன் பெரும் பரப்பிலிருந்து ஒரு சிறு வரலாற்று நிகழ்வே புனைவின் உதவியுடன் படைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. ஆக படைப்பின் நோக்கம் எதுவோ அதை ஒட்டியே சம்பவங்கள், நிகழ்வுகள் விளக்கப்படுகின்றன. இதன் மற்றொரு தரப்பை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி படைப்பாளனை நோக்கி கேட்கப்பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதை படைப்பாளனின் சுதந்திரம் என்றே கொள்வோமானால் அக்கேள்வி என்ன பொருள் பெறும்? படைப்பினை ஒட்டி, அதன் மீதான அடுத்த கட்ட விவாதம் எனும் அளவில் அக்கேள்விக்கான விடை இருப்பது நலம். இல்லையெனில் இப்படைப்பு பேசும் நீதியுணர்ச்சி ஒரு தரப்பின் தர்க்கமாகவே மட்டும் முடிந்து போகும் அபாயமும் உண்டு.

வரலாற்றுச் சமநிலை என்ற ஒரு வாதம் வந்து பொருந்தும் அளவுக்கு வெள்ளையானையில் இடமில்லை என்பதே என் கருத்து. நாளை ஜெயமோகனே மொத்த தமிழக சாதி வரலாறை எழுதுவாரானால் அந்த வரலாற்றுச் சமநிலை படைப்பின் நோக்கமாக கேட்கப்படலாம். வெள்ளையானை வரலாற்று நிகழ்வுகளின் சட்டகத்துள் குறுக்கப்பட்ட, வரலாற்றின் ஒரு மின்னல் கீற்றே. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டுமே. அனைத்துப் பரிமாணங்களும் இந்தப் படைப்புக்குள் அடைபட்டிருக்கவேண்டியதில்லை. அவற்றை மேலதிக விவாதங்களின் வழியே முன்னெடுக்கலாம் என்பதே என் எண்ணம்.

வெள்ளையானை வரலாற்றுச் சம்பவங்களின் தூண்களால் கட்டப்பட்டுள்ள மண்டபத்துக்குள் நிற்கும் யானை. எல்லைகளற்ற காட்டில் திரியும் கொம்பன் யானை அல்ல. ஆனால் வஞ்சிப்பின் அங்குசத்தாலும், சுரண்டலின் சங்கிலியாலும் கட்டிப் போடப்பட்டுள்ள யானை. யானையை கட்டி மேய்க்கும் பாகனின் துயரம் தனிக் கதையில் வரலாமே தவிர வெள்ளையானை யானையின் பின்காதுப் புண்ணையும், கால்களின் ரணத்தையுமே பேசுபொருளாகக் கொண்டிருப்பதால் அந்தச் சட்டகத்திற்கு உட்பட்டே வாசிக்கப்பட வேண்டும்.

வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீதான அபிப்ராயங்களை கலைத்து அடுக்கும் படைப்புதான்.

தொடர்புடைய பதிவுகள்